புதுப் புது “அர்த்தங்கள்”…

பத்தாம் தேதி இரவு பத்தரை மணிவரைக்கும் எழுத
எண்ணியிருந்த கட்டுரை வேறு.
அதற்கான ‘தயாரிப்புகள்’ வேறு.
ஆனால் எதிரேயிருந்த நண்பன் கேட்ட கேள்வியில்
எழுத இருந்த கட்டுரையே திசைமாறிப் போனது.
தீவிரவாதிகள் – அகிம்சாவாதிகள் – தியாகிகள் – துரோகிகள் -
என்கிறார்களே அது யார் யார்? என்றான் அப்பாவியாக.
கொஞ்சம் யோசித்தால் தலை சுற்றுகிறது நமக்கு.
இந்தக் குழப்பம் குருதிப்புனல் எடுத்த கமலகாசனுக்கே..
மன்னிக்க…கமல் ஹாஸனுக்கே இருந்தால்
இந்தச் சிறுவனுக்கு எப்படி இல்லாது போகும்?
உண்மைதான்…
தீவிரவாதிகள் யார்?
அடிப்படைவாதிகள் யார்?
போராளிகள் யார்?
பயங்கரவாதிகள் யார்?
இவர்களுக்குள் என்ன அடிப்படை வேறுபாடு?
அதைக் காட்டிலும் இவர்கள் எதன் பொருட்டு…?
ஏன் [...]

நான் தேசபக்தன் அல்ல…

“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்…? கொண்டாட மாட்டீர்களா…?” என்றது தொலைபேசிக்குரல்.
அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.
எதற்காகக் கொண்டாட வேண்டும்…? என்றேன்.
“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை…” என்றார்.
ஜெயித்தால் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை.
தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.
இரண்டுமே எனது வேலையில்லை…” என்றேன்
“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது…’ என்று வாழ்த்தி இருக்கிறாரே…?”
அப்படியானால்…
ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’
என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்…? என்றேன்.
“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்…
இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை…”என்று
தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் [...]

வயாகரா வேண்டாம்… பாடலாசிரியர்களே போதும்!

தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் இயங்குபவர்கள் பலர் உண்டு. ஆனால் பாமரன் இத்தளங்களிலிருந்து விலகி கடித வடிவில் எழுதினார். சினிமா, அரசியல் என்று இவர் எழுதிய பாமரனின் பகிரங்கக் கடிதங்களால் எரிச்சலுற்றவர்கள் பலருண்டு. ஒருமுறை இயக்குனர் கே.பாலசந்தர் படங்களைப் பற்றி குமுதத்தில் இவர் எழுதிய கடிதம் தமிழ் சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெகுண்டெழுந்த திரையுலகம் ‘குமுதம்’ பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமரனை மன்னிப்புக் கேட்கச் சொன்னது. இப்படி இவர் [...]

திரை – புலம்பல் பக்கம்

திரை
Perfection is Death – ஓஷோ.
அப்போது எனக்குத் தெரியாது,இன்னொரு சக உயிரை இழிவுபடுத்துகிறேன் என்பது… என்னைச் சுற்றியிருந்த சகல சூழலும் அதை நியாயமெனவே கூறின. அத்தகைய பாடல்களை அவர்களை நோக்கிப் பாடுவதற்காக அவமானப்பட்டதில்லை நான். அவர்கள் அனைவருமே அவமானப்படுத்துதல்களுக்கும்,இழிவுகளுக்கும் பொருத்தமானவர்கள்தான் என்கிற வகையில் அமைதி காத்தது சுற்றுப்புறம்.
கல்லூரி நாட்களில் அவர்களை போலவே பேசுவது…
‘பொழுதோட கோழி கூவுற வேளை’ என்று பாடுவது…
சில அடிகள் நகர்ந்ததும் ‘ஒம்போது’ என்று குரல் கொடுப்பது…
ஆனால் நாய்களோடு மல்லுக்கு நிற்பதை எப்போதும் விரும்பியதில்லை [...]

தே.தி.சேரன் ஐயா சமூகத்துக்கு- கிளைமேக்ஸ்

சரி சரி நீ தண்ணீ குடி..ன்னேன்.
“தண்ணியும் வேண்டாம்… ஒரு மண்ணும் வேண்டாம். உன்ன ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு”ன்னான்
கேளுன்னேன்.
“பள்ளிக்கூடத்துல எதுக்காக சாதி கேக்கறாங்க? அதுக்குக் காரணத்த சொல்லு.”
எதுக்கோ…அதெல்லாந் தெரியாது எனக்கு. நாம ஜாதி இல்லேன்னுதானே சொல்றோம்…அப்புறம் எதுக்கு பள்ளிகோடத்துல மட்டும் ஜாதி கேக்கறாங்க…?ன்னேன்.
“முட்டாளே…ஒண்ணே ஒண்ணப் புரிஞ்சுக்க. எல்லாரும் ஒளர்ற மாதிரி நீயும் ஒளறாதே….
பள்ளிக்கூடத்துல சாதி கேக்கறதுக்குக் காரணம்…சாதிச் சங்கம் வெச்சுக் குடுக்கறதுக்காக இல்ல.
பத்துப் புள்ளைக கவுண்டர்ல சேந்தாச்சு…
நீங்க கவுண்டர் சங்கம் ஆரம்பீங்க…
பதினேழு [...]

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -3

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி
திடீன்னு கேட்டதால தடுமாறிட்டேன். புரியலையேன்னேன்.
“சும்மா சொல்லு…சிவப்புச் சாயம் வெளுத்துப் போனா…எந்த நெறத்துல இருக்கும்…..?”
யோசிச்சு…யோசிச்சு….
‘காவி’தான் தண்டபாணீன்னேன்.
“கரெக்ட் புண்ணாக்கு…அதுதான் உங்க சேரன் நேசிக்கிற நிறம். அந்தக் காவிக் கொடிக்காரர்களோட பிரதிநிதிதான் சேரன்.
படத்துல ‘கோட்டையூர்’ல குண்டுவெடிப்புகளுக்கு முன்னமே கத்திக் குத்துல பலியான பத்தொன்பது
அப்பாவி உயிர்களப் பத்தி வாயே திறக்காமல் இருப்பதும்…
குங்குமத்த கீழிருந்து மேலா நெத்தீல வெச்சுகிட்டு முதல்வர கடத்தப் போறதும்….
தாடி வெச்ச ஆள கூண்டுக்குள்ள வெச்சு காவி டிரஸ் போட்டுட்டு ‘கனவினைக் கேளம்மா’ன்னு பாடறாங்களே…
அப்ப வெளுக்குது உங்காளோட சாயம். [...]

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -2

முதல் பாகத்தின் தொடர்ச்சி…
நீங்க ரசிகர் மன்றமே வேண்டாம்னு சொல்லீட்டு ‘காந்தி, காமராசருக்கு அடுத்தபடி ரஜினிதான்’ன்னு சொன்னமாதிரி…
“போயி உங்க அப்பன் ஆத்தாவப் பாருங்கடா”ன்னு முரளி வசனம் பேசறப்ப பாத்து ஒரு இந்தியன் ‘இளம் புயல் முரளி வாழ்க’ன்னு தியேட்டர்ல கத்தறான். எனக்கு மகா கடுப்பாயிடுச்சு.
சரியான ஆசுபத்திரி இல்லாம சனங்க அலையறதும்…நெற மாச புள்ளத்தாச்சி பஸ்சுலயே உசுர உடறதும்… பாக்கறப்ப உண்மையிலேயே உங்களுக்கு உள்ள நல்ல மனசு புரியுதுங்க. அதுக்குக் காரணமான
அரசாங்கத்தைத் தட்டிக் கேக்கணும்னு இளைஞர்கள் பொங்கி எழறதும் [...]

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு

“நீங்கள் அனாவசியமாக கூச்சல் போட்டு அமளி செய்தால், மேலும் சில உண்மைகளை வெளியிட வேண்டியிருக்கும். அது உங்களுக்கு சாதகமாக இருக்காது.
நமது நாட்டில் நாள் ஒன்றுக்கு மூன்று அணா (18 பைசா) வருமானத்தில் காலந்தள்ளுபவர்களின் எண்ணிக்கை 27 கோடி. மொத்த ஜனத்தொகையில் 30 சதவிகிதம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறது. இது ஒரு பக்கம். மறுபடியும் குறிப்பிட்ட ஒரு முதலாளியின் குடும்ப வருமானம் நாள்
ஒன்றுக்கு மூன்று லட்ச ரூபாய். பிரதம மந்திரி நேருவுக்காக ஒவ்வொரு நாளும் ரூ.25,000 செலவழிக்கப்படுகிறது. [...]

இது முன்னுரை அல்ல…

15 வேலம்பாளையம்.
இதுதான் அவனது ஊர். தமிழக வரைபடத்தில் தேடிப்பார்த்தாலும்
தென்பட்டுவிடாத கிராமம் அது. எண்ணி எழுபதே வீடுகள். ஆறேழு
கிலோ மீட்டர்கள் நடந்தேதான் போக வேண்டும் அவனது ஊருக்கு.
அவனது அப்பன் செங்கோடன், தானே நெய்த துணிகளைத்
தலையில் சுமந்து ஊர் ஊராய் விற்று வயிறு வளர்த்து வந்தவன்.
கணக்கய்யர் பையனும், மணியகாரர் மகளும் வண்டி கட்டிக் கொண்டு
போய் படித்து வர – அவனோ அந்த ஆறேழு கிலோ மீட்டரும்
நடையாய் நடந்து டவுனிலுள்ள பிஷப் ஸ்கூலுக்குப் படிக்கப் போனான்.
அப்போதுதான் திராவிட இயக்கங்கள் திரைப்படத் துறையில் [...]

காதலர் தினம்.. சில்பா ஷெட்டி …

மொத்தத்தில் “காதலர் தினம்” வந்தாலும் வந்தது…..யாருக்கு எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் குழப்பமோ குழப்பம். கலாச்சாரக் காவலர்கள் “கூடவே கூடாது” என்று நின்றால்…… கட்டுடைப்பாளர்களோ “கொண்டாடியே தீருவோம்” எனக் கும்மி அடிக்கிறார்கள். எதிர்ப்பவர்களாகட்டும்…. ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரே விசயம் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஊதிப் பெருக்கப்பட்ட இக் கொண்டாட்டம் அவர்களது கல்லாப் பெட்டியை நிச்சயம் நிரப்பும் என்பதே. காதல்..கீதல் செய்து தொலைத்தால் நம்ம சாதிக்கும்-மதத்துக்கும் சிக்கல் வந்து சேருமே…அப்புறம் நம் பிழைப்பு என்னாவது என்கிற கவலையில் பா.ஜ.க, [...]