நம்ம ‘பாய்ஸ்’ படத்த எப்படியாவது பாத்தர்லாம்ன்னு பார்த்தா
அப்பப் பாத்து வேலைக்கு மேல வேல வந்துகிட்டே இருக்கு.
சரி எப்படி இருந்தாலும் நம்மாளுது இருநூறு நாளைக்கு முன்னாடியேவா எடுத்தறப் போறான்…னு அசால்ட்டா இருந்தா ரெண்டாவது நாளே…
‘பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு ஒரு விளம்பரம்
அப்புறம் அடுத்த நாளு…
‘மகளிரின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு இன்னொரு விளம்பரம்…
இதென்னடாது வம்பாயிருக்குன்னு யோசிக்க யோசிக்கவே…
‘டாக்டர்.கிருஷ்ணசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு மறுபடியும் ஒரு விளம்பரம்
கொஞ்சம் உட்டா நம்ம ஷ்ஷ்ஷ்ஷங்கரோடதையே வெட்டீருவாங்களோன்னு…
அடச்சே நம்ம ஷங்கருக்குப் புடிக்காதுன்னு [...]
June 27, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: Leave a Comment
கும்புட்டுக்கறனுங்கோ…
ஊட்ல எல்லாரும் செளக்கியம்களா…?
நமைச்சல் புடிச்ச நம்ம கைக்கு கொஞ்ச நாளா வேலையே இல்லாம இருந்துச்சுங்க…
ஆனா அரிசி தின்ன வாயும்…..
ஊர் மேயப் போன ….ம்
சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க நம்ம ஊர்ல.
ஏதோ உங்கள மாதிரி நாலு ‘நல்ல’ மனுசனுக இருக்கறதுனாலதான்
நம்ம ‘பொழப்பு’ ஓடுதுங்க.
உங்களொட மொதல் படத்தப் பார்த்ததுல இருந்தே
எப்படியாவது உங்கள ‘பலமாப்’ பாராட்டணும்ன்னு
தவியாத் தவிச்சுக்கிட்டு இருந்தேனுங்க…
ஆனா இப்பத்தான் அதுக்கு வசமா வேல வந்திருக்கு.
சமீபத்துல உங்க சமாச்சாரம் ஒண்ணு
சினிமாவா வந்திருக்குதுன்னு கேள்விப்பட்டதும் தலகால் புரியல.
கந்தசாமி! போலாமாப்பா படத்துக்கு…?ன்னேன்.
“என்ன படத்துக்கு…?”ன்னான் கலாரசனையத்த கந்தசாமி.
“பாய்ஸ்…”ன்னேன்
“எனக்கு [...]
June 26, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 11 Comments
திரைகடலோடியும் தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு!
இந்தக் கடுதாசிய எழுதற இந்த நேரத்துல
நீ எந்த நாட்டுல…
எந்த ஊர்ல…
எந்த வீதில…
எவன்கிட்ட ஒதக்கு மேல ஒதை வாங்கீட்டு இருக்கியோன்னு ரொம்பக் கவலையா இருக்கு.
திரைகடலோடியும் திரவியம் தேடூன்னு உன்ன அனுப்புனா…
போன பக்கமெல்லாம் கண்ட கண்ட கழுதைககிட்டயெல்லாம்
தர்ம அடி வாங்கறதே உன் பொழப்பாய் போச்சு.
காலைல பேப்பர் படிச்சதுல இருந்து
மனசே சரியில்லேன்னு சத்தமில்லாம…
அப்படியே ஆனந்த் ஒயின்ஸ் பக்கம் நைசா ஒதுங்குனா…
அப்பப் பாத்து வர்றான் நம்ம அறிவொளி அப்பாசு.
அதுவும்… ‘அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் [...]
June 15, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 7 Comments
நீங்க மனசுக்குள்ள திட்டறது கேக்குது…
என்ன செய்ய…திடீரென குமுதம் தொடர்… “படித்ததும் கிழித்ததும்”. வேலை வெளுத்து வாங்குது…
போதாக்குறைக்கு கம்ப்யூட்டர் வேற பொகைஞ்சு போச்சு… அதுக்கு நாயா அலைஞ்சு ஒரு வழியா இன்னைக்குத்தான் வந்து சேர்ந்தது.
இன்னும் ஒரிரு நாளில் வழக்கம் போல் கச்சேரி ஆரம்பமாகும்.
மன்னிக்க.
அன்புடன்
பாமரன்.
June 11, 2007
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 10 Comments