‘Religion is regarded by the Common People as True,
by Wise as False and by Rulers as Useful’
– Seneca
பிறப்பால் நான் ஒரு கிருஸ்துவன்’ என்றார் எதிரிலிருந்த நண்பர்.
அவரது அறியாமையை நினைத்துப் பரிதாபமாக இருந்தது எனக்கு.
குழந்தை குழந்தையாகத்தான் பிறக்கிறது.
இங்கு எவரும் பிறக்கும்போதே ‘இந்து’வாகவும்,
‘இசுலாமிய’ராகவும்,
‘கிருஸ்தவ’ராகவும் பிறப்பதில்லை.
நான் பிறக்கும்போது என்னுடைய அப்பா
‘காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசில்’ (குமரி அனந்தனின் பழைய கட்சி) இருந்தார் என்பதற்காக நான் பிறக்கும்போதே கா.கா.தே.கா.வாகத்தான் பிறந்தேன் என்பது
எவ்வளவுக்கெவ்வளவு அபத்தமோ
அவ்வளவுக்கவ்வளவு அபத்தம்
நான் [...]
July 19, 2007
Categories: என் புத்தகங்களில்.. . . Author: pamaran . Comments: 10 Comments
‘Suspect Everybody’ – சேகுவேரா
‘அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே
நீங்க தடுக்கவில்லையா?’ என்றேன் நண்பரிடம்.
‘அது அவருடைய நம்பிக்கை.
நான் மற்றவர்களுடைய நம்பிக்கைகளில்
குறுக்கிடுவதில்லை’ என்றார் வெகு அமைதியாக.
அடப்பாவிகளா…
எது நம்பிக்கை?
எது மூட நம்பிக்கை?
எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது.
முதலில் ‘தன்னம்பிக்கை’ப் பிரியர்களைப் பார்ப்போம்.
இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.
‘மேலதிகாரியைத் திருப்திபடுத்துவது எப்படி?’,
‘நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?’,
‘கொழுந்தியாளைக் கோணாமல் பார்த்துக் கொள்வது எவ்வாறு?
என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள்.
‘பல் விளக்குவது எப்படி?’ [...]
July 17, 2007
Categories: என் புத்தகங்களில்.. . . Author: pamaran . Comments: 2 Comments
தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும்…
இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும்…
சனநாயகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில்
மூன்றாவதோ, நான்காவதோ தூணான பத்திரிக்கைத் துறையின்
‘பிதாமகன்’களில் ஒருவருமான…
அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
சந்திக்கும் பாக்கியம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை.
அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ‘ஆபத்து’ வந்தபோது
தமிழகத்துப் பத்திரிக்கையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில்
பேசும்போது கூட….
இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது
என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது.
சுற்றி வளைப்பானேன்…?
அவர்தான் ‘இந்து’ ராம்.
காரல்மார்க்சுக்கு [...]
July 10, 2007
Categories: என் புத்தகங்களில்.. . . Author: pamaran . Comments: 3 Comments
சொக்கலிங்கம்தான் ‘ஆச்சி மெஸ்ஸை’அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போதெல்லாம் முன்பணம் கட்டாமல்
எங்கேயும் சாப்பிட விடமாட்டார்கள்.
தொலைகாட்சியில் கமல்ஹாஸனோ – ரஜினிகாந்த்தோ எழுந்தருளி
‘ஒழுங்காக வருமானவரி கட்டுங்க’ என்றெல்லாம்
தொண்டை கிழியக் கத்தினாலும் கட்டாத ஜாதி நான்.
காரணம் அந்தளவு ‘செம’ வருமானம்.
‘அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க வாங்க’ என்று
ஆச்சியிடம் கூட்டிப்போய் ‘ஆச்சி இவுரு நம்ம நண்பர் பாத்துக்கங்க’ என்று ‘கணக்கு’ ஆரம்பித்து வைத்தவர் சொக்கலிங்கம் தான்.
அதற்கு முன்பு வரைக்கும் சுரேஷ்பாபு – ரமேஷ் இருவரது புண்ணியத்தில் ‘மரணவிலாஸில்’ இரவுச் சாப்பாடு ஒரு வழியாக ஒடிக் கொண்டிருந்தது.
‘வாய்யா… எப்ப [...]
July 4, 2007
Categories: என் புத்தகங்களில்.. . . Author: pamaran . Comments: 12 Comments