நவீன சிறைகள்…

‘மரம் அமைதியை நாடினாலும்
காற்று விடுவதாயில்லை’
                                       - மாவோ
பள்ளியிலிருந்து வீடு திருப்புகிறேன் என்பது பல கிலோ மீட்டருக்கு முன்னமே எனது வீட்டாருக்குத் தெரிந்துவிடும்.
வழியில் கிடக்கும் பெரிய மரக்கிளை ஒன்றைத் ‘தர தர’வென இழுத்துக் கொண்டோ… புத்தகங்கள் வைப்பதற்கு வாங்கிக் கொடுத்த பெட்டியில் கற்களைப் போட்டு நிரப்பி, கைப்பிடியில் ஒரு நீளக் கயிற்றைக் கட்டி ‘தடதடதட’வென இழுத்துக் கொண்டோ… திரும்பிக் கொண்டிருப்பேன்.
‘ஓட்ட ஸ்க்கூல்’ பத்மா டீச்சர், தான் பார்த்து வந்த ‘சிவந்த மண்’ கதையைச் சொல்லும்போது நாங்களெல்லாம் டேபிளுக்கு அடியில் உட்கார்ந்து [...]

காயமே இது…

 
‘Patriotism is the last resort for the Culprits.’ 
                                                   -மார்டின் லூதர் கிங்.
“என் தாய் நாடு இந்தியா…
இந்தியர் அனைவரும் எனது உடன்பிறப்புகள்…”படித்துக் கொண்டே போனான் மகன்.
அவன் படிக்கப் படிக்க சிரிப்பு வந்தது.
இது கர்நாடக இந்தியர்களுக்குப் புரிபடவில்லையே என்று.
காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனை வந்தாலே போதும் நமது ‘தேசியக்’ கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக திரண்டு ‘சொட்டு நீர்கூட கொடுக்கக்கூடாது’ என்று போடுவார்கள் தீர்மானம்.
கர்நாடக காங்கிரஸ் சொல்வது சரியா… 
தமிழக காங்கிரஸ் சொல்வது [...]

என்றென்றும் தாடி….

 
தாடி மீதான காதல் எனக்கு எப்போது ஏற்பட்டது என்று துல்லியமாக யூகிக்க முடியவில்லை.
ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது கிளாஸ் லீடர் அரவிந்தனின் அடர்த்தியான மீசையும் அவனுடைய கிடார் வாசிப்பும் ரொம்பப் பிடிக்கும். போண்டா சிவாதான் சொன்னான்… ‘கன்னத்துக்கு சோப்புப் போடாம வெறும் பிளேடுல சொரண்டி உட்டா போதும் சீக்கிரம் மொளச்சிரும்’….
போண்டாவின் பேச்சைக்கேட்டு அப்பாவுடைய ஷேவிங் செட்டை எடுத்து… மேலும் கீழுமாக இழுத்துப் பார்த்ததில் அழுக்கு வந்ததுதான் மிச்சம்.
ஒரு வழியாக……
அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி எட்டிப்பார்க்கும்போது வயது இருபதை எட்டிக் கொண்டிருந்தது.
பி.எஸ்.ஜி. [...]

இது பகிரங்கக் கடிதம் அல்ல…

 முன் குறிப்பு: குமுதத்தில் வந்து கொண்டிருக்கும்
எனது “படித்ததும்….கிழித்ததும்” தொடரை
வாசிக்கிறீர்களா?
அது பற்றி உங்கள் விமர்சனங்களைச் சொன்னால்
என்னை மேலும் செழுமைப் படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
எழுதுங்களேன் ஓரிரு வரியாவது….
இனிய நண்பர்களுக்கு,
முதலில் மன்னியுங்கள் என்னை.
சும்மாவே எனது “சுறுசுறுப்பு” சொல்லிக் கொள்ள வேண்டாம்.
போதாக்குறைக்கு கொஞ்சம் எழுத்து வேலையும்…
அவ்வப்போது வெளியூர்ப் பயணங்களும்
கூட சேர்ந்து கொண்டால் சொல்லவா வேண்டும்?.
நண்பர் கனகராஜ் கட்டுரைகள் அனைத்தையும்
யுனிகோடில் அடித்துக் கொடுத்து
எமது பெரும் சுமையைக் குறைத்திருக்கிறார்.
பதிவே போடாவிடினும் கூட ஒவ்வொரு நாளும் இத் தளத்தை
வந்து பார்வையிட்டுச் சென்ற எண்ணற்ற உள்ளங்களிடம்
மீண்டும் எனது [...]