கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.
எமது “புளுக்கையின் கதை” பதிவின் இறுதியில்
பின்னூட்டம் இடுபவர்களுக்கு மட்டும்
மீதமுள்ள அக்கவிதையை அனுப்பி வைப்பதாக
எழுதி இருந்தேன்.
ஆனால் அதைப் பார்த்துவிட்டு
அனுப்பச் சொல்லி பின்னூட்டமிட்டவர்கள் வெகு சிலரே.
என்ன செய்ய….ஆனாலும் எதார்த்த நிலை இதுதான்.
அந்த எளிய மனிதர்களின் அன்புக்கு செவி சாய்த்து கவிதையின் மீதி இதோ……..
அரசியல் சாரா அறிவு ஜீவிகள்
Otto Rene Castillo (Gautemala)
1
ஒருநாள்
என் நாட்டு
அரசியல் சாரா அறிவு ஜீவிகள்
எளிமையான எம் மக்களால்
குறுக்கு விசாரணை செய்யப்படுவர்.
தன்னைச் சிறுகச் சிறுக இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென மெதுவாக
அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது
அவர்கள் என்ன செய்து [...]
September 25, 2007
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 15 Comments
எழுபதுகளின் இறுதிப் பகுதி – புகுமுக வகுப்பில் கோட்டைவிட்டு ஊரையே பூகோள ரீதியாக அலசிக் கொண்டிருந்த நேரம்.
என்னோடு சுற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு திடீரென்று மண்டைக்குள் ஏதோ ரசாயன மாற்றம் நிகழ்ந்து ‘குறியீடு… படிமம்…’ என்றெல்லாம் பேச ஆரம்பிக்க… என்னமோ ஏதோ என்று பதறிப் போய்விட்டேன் நான்.
‘என்னடா ஏதேதோ பேசுறீங்க… என்னாச்சு உங்களுக்கு?’ என்றால்…
‘அதெல்லாம் ஒனக்குப் புரியாது. வேலையைப் பாரு’ என்று சொல்லிவிட்டு வானத்தையோ, மரத்தையோ வெறித்துப் பார்ப்பார்கள்.
கொஞ்ச நாள் முன்பு வரை…
‘வறுமைக்குக் கோடு
போட்டுக் கொண்டிருக்கும்
நேரத்தில்
எங்கள் வீடுகளுக்கு [...]
September 17, 2007
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 11 Comments
நினைவிருக்கிறதா நண்பா உனக்கு…?
ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு…
சில பழந்துணிகளைத் தோளில் தொங்கும் மூட்டையில் திணித்துக்கொண்டு
மலையாள தேசம் நோக்கி நடைபோட்ட நம் நண்பனை…?
அவன் போன காரியம் என்னவென்பது புரியுமா உனக்கு?
அந்த நண்பன் போய்ச் சேர்ந்த பிற்பாடு
தனது துணைவியையும் துணைக்கு அழைத்துக்கொண்டான்.
அது போதாதென்று அவனது தங்கையும் அப்புறம் போய்ச் சேர்ந்தாள்.
அவன் போனது…
கள்ளிக்கோட்டையின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக அல்ல.
அவன் துணைவி போனது எர்ணாகுளக் கரையோரங்களில் படகுகளில் பவனி வருவதற்கும் அல்ல.
அவனது தங்கை பயணப்பட்டது அவர்கள் இருவருக்கும் பேச்சுத் துணைக்காகவும் அல்ல.
அந்த [...]
September 11, 2007
Categories: பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 7 Comments
கிரகாம்பெல் என்றதும்…
இன்றைக்கு பயங்கரவாத எதிர்ப்பு அவதாரம் எடுத்திருக்கும் காந்தியின் மறு உருவான புஷ்ஷின் சித்தப்பா என்றோ…
அல்லது,
அமெரிக்காவினது வெளியுறவு அமைச்சராகவே ஆகிவிட்ட டோனி பிளேயரது பேரன் என்றோ…
மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை யாரும்.
இந்த ‘பெல்’…
நீங்கள் நினைக்கும் அதே ‘பெல்’ தான்.
அந்த பெல் உருவாக்கிய ‘பெல்’லால் வந்ததுதான் இத்தனை வம்பும்.
எதை நினைத்து இதைக் கண்டுபிடித்தாரோ கிரகாம்பெல். ஆனால் அதை நினைத்து இங்குள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை என்பது மட்டும் உறுதி.
மக்களது அவசர… அத்தியாவசிய தகவல் பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட இக்கருவி இன்றைக்கு சினிமாக்காரர்கள் [...]
September 5, 2007
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 9 Comments