“கற்றது தமிழ்”….

  
தமிழ் சினிமாவுக்கு என்றும் அழிவில்லை   இயக்குனர் பாலுமகேந்திரா பேச்சு   
                                                                                                                                                                கோவை, அக்.29: ‘‘தமிழ் சினிமாவுக்கு அழிவு என்பது என்றும் இல்லை. புதிய இளைஞர்களின் வருகையால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்,’’ என இயக்குனர் பாலுமகேந்திரா கோவை விழாவில் பேசினார்.
கோவை நாய்வால் திரைப்பட இயக்கம் சார்பில் ‘கற்றது தமிழ் எம்.ஏ’ இயக்குனர் ராமுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. வழக்கறிஞர் சிவக்குமார் வரவேற்றார். இதில், இயக்குனர் பாலுமகேந்திரா பேசியதாவது:
சினிமா வாழ்வில் என்னை முதலில் பாதித்த படம் பாரசக்தி. ரத்தகண்ணீர், மனோகரா, திரும்பிப்பார் [...]

திரையுலக தருமி – ‘மேதை’ மணிரத்னத்துக்கு,(கிளைமேக்ஸ்)

நேற்றைய பதிவின் தொடர்ச்சி 
‘பம்பாய்’ உனக்கு விஷமா? உன்னையெல்லாம் விஷம் வெச்சுத்தான் காலி பண்ணனும்னு கோபத்துல அவன் சட்டையவே எகிறிப் புடுச்சிட்டேன்.
‘அய்யோ… என் சட்டைய உடு…
என் முதுகெலும்பு… முதுகெலும்பு’ன்னு கத்தறான்.
முதுகெலும்பப் பத்தி நீ பேசாத… இந்தக் கோடம்பாக்கத்துலயே எங்காளுக்கு மட்டும்தான் இருக்கு அது… மொதல்ல சொல்லு அதுல என்ன விஷம்ன்னு…?
“சரி… சொல்றேன்… சொல்றேன்…
இப்போ
குப்புசாமி மயக்கம் போட்டு விழுந்தான் – சுப்ரமணி சோடா குடுத்தான் அப்படீங்கிறத… திருப்பிப் போட்டு படி…
சுப்ரமணி சோடா குடுத்தான் – குப்புசாமி மயக்கம் போட்டு விழுந்தான்னுவரும். [...]

திரையுலக தருமி – ‘மேதை’ மணிரத்னத்துக்கு,

செளக்யம்களா…?
இப்பெல்லாம் யாருக்காவது கடுதாசி எழுதறதுன்னாலே கையெல்லாம் கிடுகிடுன்னு நடுங்குதுங்க. எந்த மகராசரு எதுக்குப் பெட்டிசன் குடுப்பாங்களோன்னு ஒரே பயம்மா இருக்குதுங்க…
அப்புறம்… உங்க ‘தேசபக்தி வியாபாரமெல்லாம்’ நல்லபடியா நடக்குதுங்களா…? நம்முளுக்குப் பொழுதுபோக்கே படம் பாக்குறதுதாங்க. மொதல்ல எல்லாம் ‘ஜகன் மோகினி’, ‘அபூர்வ சக்தி 369’ மாதிரிப் படங்கன்னா எனக்குக் கரும்பு தின்ன மாதிரிங்க. ‘ஆட்டுக்கார அலமேலு’வ பதிமூணு தடவ பாத்தேன்னா புரிஞ்சுக்கங்களேன். நான் எந்தளவுக்கு சினிமாவெறியன்னு.
இப்புடி இருந்த என் வாழ்க்கைல…
திடீர்னு ஒருநாள்…
கீழ்வானத்துல ஒரு வால் நட்சத்திரம் தெரிஞ்சுதுங்க… வெளில [...]

அன்புத் தோழிக்கு,

 
உனது மடல் கிடைத்தது.
இம்முறையும் குழம்பிப் போனேன்.
எதைத்தான் எழுதுவது…?
‘நீ இங்கு சுகமே. நான் அங்கு நலமா?’  என்று எழுதிக் கொண்டிருந்தால் நிச்சயம் நீ என்னை மனநல மருத்துவமனையில்தான் சேர்ப்பாய் என்று தெரியும்.
இருப்பினும் குழப்புவது எனக்கு மட்டுமேயான பிறப்புரிமை என்று எண்ணிக் கொண்டிருந்தால்…
உனக்கும் அதுதான் என்பது போல உனது மடல் மேசையின் மீது கிடந்தது.
“எங்கள் பிரச்சனைகளைப் பற்றி யார் எப்போழுது எழுதினாலும் ஒன்று ‘வரதட்சணைக் கொடுமை அல்லது மாமியார் மருமகள் பிரச்சனை’  என்று எழுதுவதே பலரது வாடிக்கையாகிவிட்டது.
பெண்கள் என்றாலே செக்கு [...]