கல் தோன்றி மண் தோன்றா….

முன் தோன்றிய மூத்த குடியின் நெடிதுயர்ந்த வரலாறுகளும்….
விட்டு வந்த தடங்களும்….
இமயம் சென்று மீன் கொடி பொறித்த வீரங்களும்….
காகிதங்களில் மட்டுமே மின்னிக் கொண்டிருக்க….
இக்குடிகளின் இன்றைய வாழ்வோ “சிறப்பிதழ்”
போட்டுச் சொல்லவேண்டிய லட்சணத்தில் இருக்கிறது.
தமிழர்களது மனோ நிலையை அலசுவதில் மட்டுமில்லை….முதலில் யார் தமிழர் என்பதிலேயே ஏகப்பட்ட சிக்கல்கள். தமிழ் பேசும் மக்கள் ஆளுக்கொரு மார்க்கங்களைத் தத்தெடுத்துக் கொண்டாலும் அனைவருமே அடிப்படையில் தமிழர்கள்தான் என்கிற புரிதல்கூட பலரிடம் தொலைந்து போயிருக்கிறது.
பானிப்பட்டு போர்களையும், அசோகர் நிழல் தரும் மரங்களை நட்டதையும், சோமநாதபுரப் படையெடுப்புகளையும் படித்த தமிழர்கள் [...]

அப்ஜக்சன் யுவர் ஹானர்……

இது மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட வேண்டுமானால் நாம் சட்டத்தை நினைக்கக்கூடாது. நாம் எடுத்துக் கொண்ட காரியம் நியாயமானதா? அநியாயமானதா? முயற்சி எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்றுதான் யோசிக்க வேண்டுமேயொழிய சட்டத்தைப் பற்றி நினைக்கக்கூடாது. அதைப் பார்த்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
- 23.10.1960 திருச்சியில் நடைபெற்ற அய்க்கோர்ட் நீதிப்போக்குக் கண்டன நாள் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.
 
 
 
அப்ஜக்சன் யுவர் ஹானர்
-பாமரன்
ஆக -
நீதி அரசர் அகர்வாலுக்கு நன்றி சொல்ல வேண்டிய வேளை இது.
ஆண்டாண்டு காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக [...]

செயல் மறந்து வாழ்த்துதுமே……

 

“தமிழ் படிச்சா இதுதான் கதி என அச்சுறுத்துகிறது படம்…”
“எம்.ஏ தமிழ் படிச்சா வேலை கிடைக்காதுன்னு எவன் சொன்னது?”
“தமிழ் படிச்சவன இப்படி வன்முறையாளனாவா காட்டறது?”
என ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்கள்
ஆனால் கற்றது தமிழ் அலசுவது அதைப்பற்றி மட்டும்தானா?
‘இந்து’ தொடங்கி ‘இந்தியா டுடே’ வரைக்கும் கிழித்துக் காயப் போட்டு விட்டார்கள் படத்தை. அடுத்த படமாவது சிறப்பாக அமைய ஆசி வேறு வழங்கியிருக்கிறது ஆ.வி.
அப்படியானால் இந்தப்படம் ?
‘கற்றது தமிழை’ யார் யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைவிடவும் யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்பதில் மட்டும் [...]

“சோ”பா சக்தி….

போப் ஆக நினைப்பவன் புரட்சி செய்ய மாட்டான்
புரட்சி செய்ய நினைப்பவன் போப் ஆக மாட்டான்

நண்பன் மகேஷ் பரிசாகக் கொடுத்திருந்த அந்த நூலை மீண்டும் ஒரு முறை எடுத்து வாசித்தேன். எத்தனை முறை வாசித்தாலும் சலிப்புத் தட்டாத சுவாரசியமான நடையும் விறுவிறுப்பான ஓட்டமும், வரிகளுக்கும் ஊடாக ஓடுகிற மானுட நேயமும் அனிதா பிரதாப்புக்கே சொந்தமானவை. அப்படி அநேகமுறை படித்த புத்தகம்தான் ‘Island of Blood’.
தனது மகன் சுபின் பிறப்பிலிருந்து தொடங்கும் நூல் மெள்ள வளர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் [...]