இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும்
அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல்.
இதனை எழுதும்போது கூட….
சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான்
ஆரம்பிக்கிறேன் இதனை.
நினைவு தெரிந்த நாளிலிருந்து….
‘…திரை இசை இத்தோடு முடிந்தது.
மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு’
என்பதோடு என் வீட்டு வானொலியின்
கழுத்து திருகப்பட்டு விடும்.
ஹம்சத்வதனியோ..கல்யாணியோ..
கரகரப்ப்ரியாவோ..கரகரப்பில்லாத ப்ரியாவோ…
அணுவளவும் அறிந்ததில்லை நான்.
உன்னை இசைஞானி என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில், படத் தயாரிப்பாளனில்லை நான்.
உன்னை ராகதேவன் என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை நான்.
உன்னை மேஸ்ட்ரோ என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில் விநியோகஸ்தனுமில்லை நான்.
எனவே… [...]
