ராஜீவ் காந்தியும் நானும்…

(ஈழத்து இளைஞர்களும்… தமிழகத்துத் தாத்தாக்களும் – 2 )
(கட்டம் கட்டி ஆசிரியர்தான் முழங்க வேண்டுமா? என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன? ஆக…… இந்தக் கட்டத்துக்கான காரணம் யாதெனில்…… போன இதழில் என்னைக் கட்டம் கட்டிப் போட்டதில் மாபெரும் பிழை ஒன்று நடந்திருக்கிறது என்பதுதான். சொற்குற்றமாயின் பொருத்தருளலாம்…… ஆனால் பொருட் குற்றத்தை……?
ஒரு பேப்பருக்கு உலகெங்கிலும் உள்ள விரிவுரையாளர்கள் மீது என்ன கோபமோ நானறியேன். ஆனால்…… பி.காம். படிப்பையே இன்றைய நொடி வரை முடிக்காத என்னைப் [...]