தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் அருகிலிருக்கும் கடையில் செய்தித்தாள்களை லேசாக மேய்ந்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எதேச்சையாக நாளிதழைக் கையில் எடுக்கிறேன். நெஞ்சில் பேரிடி ஒன்று இறங்குகிறது.
“இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!”
“தமிழ்க் கைதிகளை கொடூரமாகக் கொன்ற கோரம்!!”
என விரிந்து கொண்டே போகிறது செய்தி. என்னை அறியாமல் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை அறை [...]
