“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”

நல்லது.
மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது.
ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்……
என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது.
அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம்.
முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது [...]

சுதந்திரம் என்பது……

(ஈழத்து இளைஞர்களும்…… தமிழகத்துத் தாத்தாக்களும்…… 4)
எம்மவர்கள் தமிழகத்தின் கரைகளில் தடம் பதித்தபோது எதிர்கொண்ட வினாக்களுக்கே ஒரு பெரும் நாவல் எழுதலாம்.
“இங்கிருந்து போயி……..நீங்க நாடு கேட்கலாமா?” என்பதில் தொடங்கி……..
“தம்பி…….. இடையில இந்தக் கடல் மட்டும் இல்லேன்னா……..அந்த ஜெயவர்த்தனாவை அப்படியே……..” என்பதில் தொடரும்.
கேப்டன் ஹென்றி பேர்ட் காலத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலித் தொழிலாளிகளாக அழைத்துச் செல்லப்பட்ட மலையக மக்களைத் தாண்டி…….. ஏற்கெனவே அங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து வரும் பல லட்சம் புராதனத் தமிழர்களைப் பற்றிய வரலாற்று அறிவை ஊட்டுவதற்கே [...]