சுதந்திரம் என்பது……

(ஈழத்து இளைஞர்களும்…… தமிழகத்துத் தாத்தாக்களும்…… 4)
எம்மவர்கள் தமிழகத்தின் கரைகளில் தடம் பதித்தபோது எதிர்கொண்ட வினாக்களுக்கே ஒரு பெரும் நாவல் எழுதலாம்.
“இங்கிருந்து போயி……..நீங்க நாடு கேட்கலாமா?” என்பதில் தொடங்கி……..
“தம்பி…….. இடையில இந்தக் கடல் மட்டும் இல்லேன்னா……..அந்த ஜெயவர்த்தனாவை அப்படியே……..” என்பதில் தொடரும்.
கேப்டன் ஹென்றி பேர்ட் காலத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலித் தொழிலாளிகளாக அழைத்துச் செல்லப்பட்ட மலையக மக்களைத் தாண்டி…….. ஏற்கெனவே அங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து வரும் பல லட்சம் புராதனத் தமிழர்களைப் பற்றிய வரலாற்று அறிவை ஊட்டுவதற்கே [...]