தி.மு.க.வை ஆதரித்தால்
அது இனப்படுகொலைக்கு துணை போகும் காங்கிரசை ஆதரிப்பதாக ஆகி விடும்……
தனியாக தி.மு.க.வை யும் வி.சிறுத்தைகளையும் ஆதரிக்கலாமா?
அல்லது இரண்டையும் சேர்ந்து எதிர்க்கலாமா?
வை.கோ.வை ஆதரித்தால் அது இதுவரை எதிராக இருந்த அம்மா தி,மு,க.வை ஆதரிப்பதாக ஆகி விடுமே……
தனியாக வலது “கம்யூனிஸ்ட்”டையும், வை.கோவை மட்டும் ஆதரிக்கலாமா?
அல்லது அந்த அணியையே எதிர்க்கலாமா?
என ஆளாளுக்கு ஒரு பக்கம் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க…… மாணவர்கள் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். தங்களை வரவேற்பதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்த வைகோ விற்கு “சிறப்பான” வரவேற்பு கொடுத்து [...]
April 22, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 8 Comments
அன்பிற்குரிய “தமிழக அரசியல்” வார இதழின் ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கத்துடன் பாமரன்.
தமிழகமும், தமிழக அரசியலும் நெஞ்சை விட்டு நீங்காமல்தான் இருக்கின்றன. கட்டுரை எழுத வேண்டும் என்கிற நினைவு இருந்தாலும் இங்கிலாந்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலுள்ள நேர மாற்றம் சட்டென்று நினைவுக்கு வராததால் இம்முறை எழுதுவது இயலாததாகி விட்டது. (தமிழகத்தில் இருந்தாலே சரியான நேரத்தை நாம் தொலைபேசியில் நினைவூட்டினால்தான் உண்டு. இந்த லட்சணத்தில் அயல் நாட்டிற்குப் போயா நீ நேரத்தைக் கடைபிடிக்கப் போகிறாய்? என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.)
எங்கெங்கு காணினும் நம் [...]
April 14, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 10 Comments
முலாயம்சிங் கட்சியோடு சோனியா காங்கிரஸ்
கூட்டணி வைத்துக் கொள்ளாததற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.
ஆனால் “இன்னமும் காத்திருக்கிறேன். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் குறுந்தலைவர்களிடம் விடாமல் தலையாய தலைவராய் இருக்கிற சோனியாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்கிறார் முலாயம்சிங்.
அதற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.
“விஜயகாந்த் தேர்தல் புறக்கணிப்பையோ அல்லது தி.மு.க, அ.தி.மு.க.வோடு கூட்டு சேருவதை கைவிட்டு பா.ஜ.க.வோடு கூட்டு சேருவதுதான் நல்லது” என இல.கணேசன் கதறுகிறாரே… எதற்காக?
நாட்டு நலன்தான்.
சாலைப் பணியாளர் போராட்டம்……
விவசாயிகள் போராட்டம்……
நெசவாளிகள் போராட்டம்……
அரசு ஊழியர் போராட்டம்……
எனச் சகலரின் போராட்டத்துக்கும் [...]
April 12, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 7 Comments