தமிழகமே “கொந்தளித்துப்” போயிருந்த வேளையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.ஒரு மனிதனது தூக்கம் அவனது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் என்பதற்கு ஏகப்பட்ட நீதிக்கதைகளும் , பல்லாயிரம் சினிமாப் பாடல்களும் இருக்கின்ற நிலையில்
நான் அப்படி தூங்கித் தொலைத்திருக்கக் கூடாதுதான்.
அதுவும் பகல் தூக்கம்.
“ஒருவேளை வெளிநாடு போய் வந்த களைப்பாக இருக்கும்”……
“அல்லது இரவு முழுக்க எழுத்துப் பணியாக இருந்திருக்கும்”……
என்றெல்லாம் அநாவசியத்துக்கு கற்பனைக் குதிரையை தட்டி விடவேண்டியதில்லை யாரும்.
சும்மாவே நினைத்த மாத்திரத்தில் தூங்கக் கூடியவன் நான். இந்தத் தூக்கம் எந்த அளவிற்கு எனக்குள் [...]
