சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….

  
ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.
 
கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.
 
ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து கொள்கிறதாம்.
 
அடப் பாவிகளா…. ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ”இனவெறி” என்று கூச்சல் போட்டால்..…. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட..…. மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்….  என்று எந்த இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?
 
ஆஸ்திரேலிய சாராயக்கடையில் குடித்துவிட்டு அலப்பரை செய்தபோது விழுந்திருக்கிறது முதல் உதை.
அதற்கே குய்யோ…. [...]

நீங்களும் ஒரு தேசத்துரோகிதான்….

 ஒரு துப்பறியும் மர்ம நாவலைப் படித்ததைப் போலிருக்கிறது. ஆனால் இதில் வரும் அத்தனை  வரிகளும் அப்பட்டமான நிஜம். அதுவும் இந்திய அரசியலின் மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் புத்தகம்தான் : “சீனாவின் முற்றுகையில் இந்தியா”. ஈழத்தின்  இன்றைய இனப்படுகொலைகளுக்கு அன்றைக்கே அச்சாரம் போட்ட அரசியல் சதிகளை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.
 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியான சந்திரிகா இனப்படுகொலையை தங்கு தடையின்றி நடத்தவும்… போராளிகளை ஒடுக்கவும் நேரடி யுத்தம் இன்றி வேறு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என [...]

மயிர் நீப்பின் உயிர் வாழா……

ஓரிரு மாதங்கள் முன்பு நண்பர்களோடு  மதுரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் பல்வேறு விவாதங்கள்…… கலந்துரையாடல்களோடு தொடர்ந்து கொண்டிருந்தது பயணம். விவாதம் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் குறித்து நகர…… இடையில் குறுக்கிட்டார் வழக்குரைஞர் பாலமுருகன்.
“நாடு பிடிக்க…… இளவரசியை சிறை பிடிக்க…… என எது எதற்கோ நடந்த யுத்தங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு காதுக்காக நடந்த யுத்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றார் நண்பர்.
என்னது……? காதுக்காக நடந்த யுத்தமா? என்ன எங்கள் காதில் பூ சுற்றுகிறீர்களா? என்றோம் ஆச்சர்யம் [...]

மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு…

அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு.
கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததின் மூலம். அகிம்சை……… அணி சேராக் கொள்கை……… பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை……… என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது.
சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் ஈழ மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள [...]