சோறா?…. மானமா?….

 
இந்தக் கதி ஏற்பட்டிருக்க வேண்டாம்……… உலகப் பொதுமறையைத் தந்த வள்ளுவருக்கு.
கடைசியில் பண்டமாற்று முறையில் திறக்கப்பட இருக்கிறது வள்ளுவரது சிலை. கடந்த 18 ஆண்டுகளாய் முக்காடிட்டு மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை ஒருவழியாக திறக்க இருப்பது ஆறுதல் அளிக்கும் செய்திதான். ஆனால் அதுவும் எந்த அடிப்படையில் என்பதுதான் சற்று மனதை நெருடும் விசயம்.
நாம் வேண்டுமானால் வள்ளுவரை எந்த சமயத்துக்கும், எந்த இனத்துக்கும் ஏன் எந்த ஒரு தேசத்துக்கும்கூட‌ சாராத மனித குலத்தின் பிரதிநிதி் என பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளலாம் [...]