ஆசுபத்திரில இருந்து வந்ததுல இருந்தே பலமாசமா மனசு செரியில்ல. ஈழத்துல நம்ம சனங்கள அந்த நாசமாப் போறவனுக கொத்துக் கொத்தா குண்டப் போட்டுக் கொல்றாங்கன்னு வர்ற சேதிகளக் கேட்டா சோறு கூட உள்ள எறங்க மாட்டேங்குது. யாரு கூட எதப் பத்திப் பேசிகிட்டு இருந்தாலும் நெனப்பு அங்க கொண்டு போயி உட்டுருது.
இதுக்கெடையில எவனாவது அந்தப் படம் பாத்தியா? இந்தப் படம் பாத்தியா?ன்னு கேட்டா…… கால்ல இருக்குறத கழட்டி அடிக்கலாமான்னு கோபம் கோபமா வருது.
அவ்வளவு ஏன்….. எனக்கு உங்க [...]
November 11, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..., பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 18 Comments
நெசமாவே தசாவதாரம் மாதிரி ஒரு படத்தை என் வாழ்நாளுல பார்த்ததேயில்லீங்க….
அதுவும் ராமசாமி, பூவராகவன், நாயுடு, சிங்கு, புஸ்சு, அப்பறம் ….. அதென்ன புளிச்சரோ…….பிளிச்சரோ…… ன்னு நீங்க பத்து வேசத்துல கலக்குன கலக்கு இருக்குதே அதப் பாக்க கண் கோடி போதாதுங்க.
அதுவும் ஆராய்ச்சி பண்ணுற எடத்துல அநியாயத்துக்குச் சாகிற அந்தக் கொரங்கப் பாத்து கூட நீங்க படுற பாடு இருக்கே….. அடடா அதப் பாத்ததும் கண்ணுல தளுக்குன்னு தண்ணீ வந்துடுச்சுங்க. நீங்க வெறும் அந்தக் கதாபாத்திரம் மட்டுமில்ல……. நீங்க [...]
November 5, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..., பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 13 Comments
கண்மணி….. வம்போட…. பாமரன்
நான்…. நான்…. எழுதும் கடிதம்…..
இல்ல லெட்டர்ன்னு வெச்சுக்கலாமா……
வேணாம் கடுதாசியே இருக்கட்டும்…..
ஊடால…… ஊடால….. ஆஸ்கர்…… ஐ.நா…….. சாக்ரடீஸ்…..
நீட்ஷே…… கிரகாம்பெல்…. சீமைக்கருவ….. அய்யனாரு…… எல்லாம் சேர்த்திக்குங்க…….
அய்யோ……. உண்மையச் சொல்லீர்றன் சாமீ…….. உங்கள மாதிரி எல்லாம் யோசிக்க நம்மால செத்தாலும் முடியாது. ஆனா….. சின்ன வயசுல இருந்தே உங்க படம் பார்த்துப் பாத்து வளந்த ஒடம்புங்க இது.
நீங்க சிகரெட் புடிச்சுகிட்டே சுமித்ராவோட திமிர அடக்குற ஸ்டைலுக்காக ”நெழல் நெசமாகிறது” படத்த பதினேழு தடவை பாத்திருக்கேன்…..
சொல்லாம கட் அடிச்சுட்டு மன்மதலீலை [...]
October 29, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..., பகிரங்கக் கடிதங்கள் . . Author: pamaran . Comments: 14 Comments
அந்த மனிதர் கம்பீரமாகக் கிடத்தப்பட்டிருந்தார்.
ஒரு ஒப்பாரி…. அழுகை…. ஏன் சின்ன விசும்பல் கூட இல்லை அந்த இடத்தில். வந்திருந்த நண்பர்கள் அந்த மனிதரது கடந்த கால சாதனைகளை….. ஓயாது உழைத்த உழைப்பை… ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டபடி இருந்தனர். முதலில் உடலைப் பார்க்க வேண்டும் என்ற போது ”செருப்பைப் போட்டுக் கொண்டே போங்க” என்றனர் அங்கிருந்த நண்பர்கள். கோயம்புத்தூரின் தெற்குக் கோடியில் இருக்கும் போத்தனூரில் வைக்கப்பட்டிருந்த அந்த மனிதனுக்குத்தான் எத்தனை நண்பர்கள்…… தமிழகம் மட்டுமில்லை….. இந்தியாவில் மட்டுமில்லை…… உலகம் [...]
October 13, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல... . . Author: pamaran . Comments: 14 Comments
இதை விட தமிழுக்கும், தமிழருக்கும் யார் முதல் மரியாதை தந்துவிட முடியும்? நம் தமிழக அரசைத் தவிர?
முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் கொச்சைப் படுத்திய சிவாஜி சிறந்த படமாம். இதற்கு விருது வேறு. தொல்காப்பியத்திற்கு உரையும், குறளுக்கு ஓவியமும் தீட்டியவரின் அரசு அறிவித்திருக்கிறது.
பேத்தி வயதில் உள்ள சிறுமிகளைப் பார்த்து ரஜினி ”வாங்க பழகலாம்” எனப் பல்லிளிப்பதும்……
அழகுமிகு தமிழ்ப் பெயர்களைக் கொண்ட அச்சிறுமிகளை கேடுகெட்ட முறையில் விவேக் கிண்டல் செய்வதும்……..
அப்பா பொறுப்பில் இருக்க [...]
October 6, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல... . . Author: pamaran . Comments: 6 Comments
காங்கிரஸ் தலைகளைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில்பட ஓடுகிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள். பின்னே வேலியில் போகிற டைனோசரை எடுத்து வேட்டியில் விடுவதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? ஏனெனில் காங்கிரசுக்கும் கலை உலகுக்குமான ”லட்சிய உறவு” அப்படிப்பட்டது. அதில் சேர்ந்த நடிகர்களில் ஒருவர் கூட ”வாழ்ந்ததாக” வரலாறு கிடையாது.
ஒருகாலத்தில் காங்கிரசில் சேர்ந்து ”தேசபக்த”த் தொண்டாற்றப் போன ”தேசிய நடிகை” மாயா கூட பொதுக்குழுவிலோ செயற்குழுவிலோ சிக்கி சின்னாபின்னமாகி உதைபட்டு கடிபட்டு கடைசியில் ”நடிகை மாயா கடிபட்ட இடம் இதுதான்” என்று [...]
September 25, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல... . . Author: pamaran . Comments: 7 Comments
கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் இருந்து நேர்காணலுக்காக வந்திருந்தார்கள். அவர்கள் கேட்கவந்த சேதி இன்றைக்குப் பலரையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சல் பற்றித்தான்.
ஏற்கெனவே மக்கள் மிரண்டு போயிருக்கும் சூழலில் ஆக்கபூர்வமாக எதை சொல்வது என்பதுதான் எனது யோசனையாக இருந்தது.
”இத்தகைய தொற்று நோய்க் கிருமிகளையும், உயிருக்கே உலை வைக்கும் வைரஸ்கள் பற்றியும் ஆராய்வதற்கென்றே ஒரு நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறது. அதைப் பற்றியும் விசாரித்துவிட்டு பேட்டி கொடுங்கள்” என்றார் டாக்டர்.ரமேஷ்.
அவர் சொன்னபடி விசாரணையில் இறங்கிய எனக்குக் காத்திருந்ததோ அதிர்ச்சி மேல் [...]
September 18, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல... . . Author: pamaran . Comments: 1 Comment
சர்வகட்சிப் பிரமுகர்கள், இடதுசாரிகள், தமிழ்த்தேசியவாதிகள், திரையுலகினர் என அத்திருமண மண்டபமே களைகட்டியிருந்தது. இப்படி சகல முகாம்களில் இருப்பவர்களும் ஒரே இடத்தில் கூடும் நிகழ்வு எப்போதாவதுதான் வாய்க்கிறது. இந்தமுறை அதற்கான வாய்ப்பை வழங்கியவர் தோழர்.மணிவண்ணன். அவரது மகள் ஜோதி திருமணத்தில்தான் இப்படி சகலரும் கூடி அசத்திக் கொண்டிருந்தார்கள்.
காலையில் ஏறக்குறைய இரண்டுமணி நேரம் பல்வேறு இயக்கப் பிரமுகர்களும், திரையுலகினரும் மணமக்களை வாழ்த்திப் பேச….. அனைவரது பேச்சையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள். மேடையில் பெண்விடுதலை…… பெரியார் சிந்தனைகள்…… என [...]
September 11, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல... . . Author: pamaran . Comments: 7 Comments
இந்தக் கதி ஏற்பட்டிருக்க வேண்டாம்……… உலகப் பொதுமறையைத் தந்த வள்ளுவருக்கு.
கடைசியில் பண்டமாற்று முறையில் திறக்கப்பட இருக்கிறது வள்ளுவரது சிலை. கடந்த 18 ஆண்டுகளாய் முக்காடிட்டு மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை ஒருவழியாக திறக்க இருப்பது ஆறுதல் அளிக்கும் செய்திதான். ஆனால் அதுவும் எந்த அடிப்படையில் என்பதுதான் சற்று மனதை நெருடும் விசயம்.
நாம் வேண்டுமானால் வள்ளுவரை எந்த சமயத்துக்கும், எந்த இனத்துக்கும் ஏன் எந்த ஒரு தேசத்துக்கும்கூட சாராத மனித குலத்தின் பிரதிநிதி் என பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளலாம் [...]
August 26, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல... . . Author: pamaran . Comments: 7 Comments
மனதைப் பிசையும் நூல் ஒன்றினை அனுப்பியிருந்தார் நண்பர் வைகறை. பிரான்ஸ் நாட்டில் அகதியாய் உழலும் நண்பர் கி.பி.அரவிந்தன் எழுதிய “இருப்பும் விருப்பும்” என்கிற நூல்தான் அது. ”பாட்ஷா” படத்தில்…..….. ” அண்ணே எனக்கு இன்னொரு பேர் இருக்குண்ணே” என வருவதைப்போல கி.பி.அரவிந்தனுக்கு பல பெயர்கள். அன்றைக்கு போராட்ட உலகில் சுந்தர் ஆக அறியப்பட்ட எமது தோழரேதான் பிற்பாடு கி.பி.அரவிந்தனாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் ஆனவர்.. கி.பி.அரவிந்தனாக அவரைத் தெரிந்த பலருக்கு அவர் ”:போராளி சுந்தராக” ஆற்றிய பல [...]
July 14, 2009
Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல... . . Author: pamaran . Comments: 5 Comments