சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

போனமுறை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களையே புரட்டிக்கூட பார்க்காவிட்டாலும், இந்தமுறையும் போயிருந்தேன் புத்தகக் கண்காட்சிக்கு. எல்லாம் ஒரு அரிப்புதான். புத்தகக் கண்காட்சிக்குப் போகாவிட்டால் எங்கே நம்மை “அறிவுஜீவி இல்லை” என்று அறிவித்து விடுவார்களோ என்கிற பயத்திலேயே பலபேர் போகிறார்கள் போலிருக்கிறது.
இலவசக் கடலையோடு சில புத்தகங்களையும் இலவசமாக வாசலிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திலகவதி புண்ணியத்தில் அடியேன் திருமுகத்துக்கும் ஒதுக்கீடு வழங்கியிருந்தார்கள் அம்ருதா பதிப்பகத்தினுடைய பேனரில்.
புத்தகக் கண்காட்சிக்கு வெளியே இருக்கிற கேண்டீனில் வயிறு புடைக்கத் தின்றது போதாதென்று உள்ளேயும் தர்ப்பூசினி…… வடை…… [...]

எங்கே செல்லும் இந்தப் பாதை?

இன்றைக்கு இந்தியாவிலேயே தலையாய பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள் நீங்கள்….?
திசை மாறிப் போன விவசாயக் கொள்கைகளால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நிலையா?
“சுதந்திரம்” பெற்று 59 ஆண்டுகளாகியும் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நிறைவேறாமல் இழுத்துக்கொண்டு கிடக்கும் சமூக நீதி குறித்தா?
உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதிய கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு மகுடம் சூட்டுகின்ற “தாராள”தொழிற் கொள்கைகள் பற்றியா?
இப்படித் தேவையற்ற சாதாரணச் சிக்கல்கள் குறித்தெல்லாம் நீங்கள் [...]

நிபந்தனைகளுக்கு உட்பட்டது….*

பாலாவையே பிதாமகன் என்று சொல்லலாம் 2000 ல் எழுந்த புதிய அலைக்கு. “சேது”வில் துணிச்சலாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி இன்று “கற்றது தமிழ்” வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
 
                மகேந்திரன்களாலும்……..பாலுமகேந்திராக்களாலும்……..                                     துளிர்த்திருந்த திரைத்துறை சகலகலாவல்லவன்களால் சகதியில் அமிழ்த்தப்பட்டது. அதற்கும் முன்னர் நாடகபாணிப் படங்களுக்கு ஆப்படித்து ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே சுழன்று கொண்டிருந்த காமிராவை வயல்வெளிகளுக்கும்……..புழுதிக்காட்டுக்கும் சுமந்து சென்றதில் பாரதிராஜாவுக்கு பிரதான பங்கிருந்தது. மெல்லிய -நுண்ணிய உணர்வுகளைப் பிரதிபலித்த தமிழ்த் திரையுலகம் மசாலாக்களில் மூழ்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் உருவான மிக நீண்ட [...]

அப்பாலே போ சாத்தானே……

ஒரு முன் குறிப்பு:
வெள்ளைக்கார துரைகள் கணக்காய் படங்களுக்கு இங்கிலீஷ் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள்  தமிழுக்கு இறங்கி வர….இந்த நேரம் பார்த்து “அகம் பிரம்மஸ்ய” என்று சமஸ்கிருதத்தில் துணைத் தலைப்பை வைத்திருக்கிறார் பாலா. சமஸ்கிருதத்துக்கும் தமிழக அரசின் வரி விலக்கு உண்டா என்ன?

“நான் கடவுள்” படத்திற்காக ஏகப்பட்ட பிச்சைக்காரர்களை திரட்டி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்தி.
இதைக் கேள்விப்பட்டதும் சட்டென்று ஒரு பொறி தட்டியது. ஏற்கெனவே ஆசிய வங்கி, ஐ.எம்.எப், உலக வங்கி, பரலோக வங்கி என ஒவ்வொரு வங்கிகளாய் [...]

புதிதாய்(?) சில……

சோத்துக்கு வக்கில்லாம எட்டாங் கிளாஸ் தாண்ட முடியல…
தாண்டினாலும் கல்லூரிக்குள் கால் வைக்க வக்கில்ல…
கிழிந்த தாவணிக்கும் – சட்டைக்கும் மாற்றுத் துணிக்கு வழியில்லை…
எந்தக் கம்பெனிய எப்ப மூடுவான் தெரியாது….
இப்படிக் கணக்கிடமுடியாத சுய துன்பத்தில் மக்கள் இழுத்துக் கொண்டு கிடக்கையில்…. சுய இன்பத்தைப்  பற்றி  பல  மேதைகளுக்கு வந்திருக்கும் கவலை சொல்லி மாளாதது. மனித உடலில் எத்தனை விதமான துளைகள் இருக்கின்றன என்கிற அறிவியல் ஆய்வுகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. சமூகத்தில் இது ஒன்றுதான் இப்போது மிச்சமிருக்கிற பிரச்சனை.
இனி யாரும் [...]

கருத்தடை டாட் காம்

“பொதுவாக  புளுகுகளை
இப்படிப் பிரிக்கலாம்.
ஒன்று     :   அண்டப்புளுகு.
அடுத்து :   ஆகாசப்புளுகு.
ஆனால்
இவை எல்லாவற்றையும் தாண்டி
மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது.
அதுதான் புள்ளிவிவரப் புளுகு.”
- காட்கோ வாலிஸ்.****
மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா? அல்லது காணாமல் போயிற்றா?
என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு ‘புள்ளி’ விவரத்தை வெளியிட்டிருக்கிறது  “தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம்” அதாவது N.S.S.O (National Sample Survey  Organization).
இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் [...]

கல் தோன்றி மண் தோன்றா….

முன் தோன்றிய மூத்த குடியின் நெடிதுயர்ந்த வரலாறுகளும்….
விட்டு வந்த தடங்களும்….
இமயம் சென்று மீன் கொடி பொறித்த வீரங்களும்….
காகிதங்களில் மட்டுமே மின்னிக் கொண்டிருக்க….
இக்குடிகளின் இன்றைய வாழ்வோ “சிறப்பிதழ்”
போட்டுச் சொல்லவேண்டிய லட்சணத்தில் இருக்கிறது.
தமிழர்களது மனோ நிலையை அலசுவதில் மட்டுமில்லை….முதலில் யார் தமிழர் என்பதிலேயே ஏகப்பட்ட சிக்கல்கள். தமிழ் பேசும் மக்கள் ஆளுக்கொரு மார்க்கங்களைத் தத்தெடுத்துக் கொண்டாலும் அனைவருமே அடிப்படையில் தமிழர்கள்தான் என்கிற புரிதல்கூட பலரிடம் தொலைந்து போயிருக்கிறது.
பானிப்பட்டு போர்களையும், அசோகர் நிழல் தரும் மரங்களை நட்டதையும், சோமநாதபுரப் படையெடுப்புகளையும் படித்த தமிழர்கள் [...]

அப்ஜக்சன் யுவர் ஹானர்……

இது மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட வேண்டுமானால் நாம் சட்டத்தை நினைக்கக்கூடாது. நாம் எடுத்துக் கொண்ட காரியம் நியாயமானதா? அநியாயமானதா? முயற்சி எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்றுதான் யோசிக்க வேண்டுமேயொழிய சட்டத்தைப் பற்றி நினைக்கக்கூடாது. அதைப் பார்த்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.
- 23.10.1960 திருச்சியில் நடைபெற்ற அய்க்கோர்ட் நீதிப்போக்குக் கண்டன நாள் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.
 
 
 
அப்ஜக்சன் யுவர் ஹானர்
-பாமரன்
ஆக -
நீதி அரசர் அகர்வாலுக்கு நன்றி சொல்ல வேண்டிய வேளை இது.
ஆண்டாண்டு காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக [...]

வயாகரா வேண்டாம்… பாடலாசிரியர்களே போதும்!

தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் இயங்குபவர்கள் பலர் உண்டு. ஆனால் பாமரன் இத்தளங்களிலிருந்து விலகி கடித வடிவில் எழுதினார். சினிமா, அரசியல் என்று இவர் எழுதிய பாமரனின் பகிரங்கக் கடிதங்களால் எரிச்சலுற்றவர்கள் பலருண்டு. ஒருமுறை இயக்குனர் கே.பாலசந்தர் படங்களைப் பற்றி குமுதத்தில் இவர் எழுதிய கடிதம் தமிழ் சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெகுண்டெழுந்த திரையுலகம் ‘குமுதம்’ பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமரனை மன்னிப்புக் கேட்கச் சொன்னது. இப்படி இவர் [...]

சி.பி.எம்-FM… பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க

(தமிழக இளைஞர்கள் சிலரால் நடத்தப்படும் “விழிப்புணர்வு” என்கிற மாத இதழில் வெளிவந்த எனது கட்டுரை இது. மார்க்சிஸ்டு தலைவர் ஒருவர் எப்படி தப்பும் தவறுமாக திராவிட இயக்க வரலாற்றை எழுதினார் என்பதற்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை அச்சாகி வெளிவந்தபோது நான் மயக்கம் போட்டு விழாதது ஒன்றுதான் மிச்சம். மூன்று பக்கமே வந்திருந்த அக்கட்டுரையில் முப்பத்தி ஒன்பது எழுத்துப் பிழைகள். ஒருவேளை அந்தத் தலைவரின் புத்தகத்துக்குப் புரூப் பார்த்தவர்தான் இதற்கும் பார்த்தாரோ என்று கூட சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. எனவே [...]