ஓரிரு மாதங்கள் முன்பு நண்பர்களோடு மதுரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் பல்வேறு விவாதங்கள்…… கலந்துரையாடல்களோடு தொடர்ந்து கொண்டிருந்தது பயணம். விவாதம் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் குறித்து நகர…… இடையில் குறுக்கிட்டார் வழக்குரைஞர் பாலமுருகன்.
“நாடு பிடிக்க…… இளவரசியை சிறை பிடிக்க…… என எது எதற்கோ நடந்த யுத்தங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு காதுக்காக நடந்த யுத்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றார் நண்பர்.
என்னது……? காதுக்காக நடந்த யுத்தமா? என்ன எங்கள் காதில் பூ சுற்றுகிறீர்களா? என்றோம் ஆச்சர்யம் [...]
June 12, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 12 Comments
அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு.
கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததின் மூலம். அகிம்சை……… அணி சேராக் கொள்கை……… பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை……… என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது.
சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் ஈழ மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள [...]
June 5, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 14 Comments
தமிழகமே “கொந்தளித்துப்” போயிருந்த வேளையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.ஒரு மனிதனது தூக்கம் அவனது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் என்பதற்கு ஏகப்பட்ட நீதிக்கதைகளும் , பல்லாயிரம் சினிமாப் பாடல்களும் இருக்கின்ற நிலையில்
நான் அப்படி தூங்கித் தொலைத்திருக்கக் கூடாதுதான்.
அதுவும் பகல் தூக்கம்.
“ஒருவேளை வெளிநாடு போய் வந்த களைப்பாக இருக்கும்”……
“அல்லது இரவு முழுக்க எழுத்துப் பணியாக இருந்திருக்கும்”……
என்றெல்லாம் அநாவசியத்துக்கு கற்பனைக் குதிரையை தட்டி விடவேண்டியதில்லை யாரும்.
சும்மாவே நினைத்த மாத்திரத்தில் தூங்கக் கூடியவன் நான். இந்தத் தூக்கம் எந்த அளவிற்கு எனக்குள் [...]
May 1, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 22 Comments
தி.மு.க.வை ஆதரித்தால்
அது இனப்படுகொலைக்கு துணை போகும் காங்கிரசை ஆதரிப்பதாக ஆகி விடும்……
தனியாக தி.மு.க.வை யும் வி.சிறுத்தைகளையும் ஆதரிக்கலாமா?
அல்லது இரண்டையும் சேர்ந்து எதிர்க்கலாமா?
வை.கோ.வை ஆதரித்தால் அது இதுவரை எதிராக இருந்த அம்மா தி,மு,க.வை ஆதரிப்பதாக ஆகி விடுமே……
தனியாக வலது “கம்யூனிஸ்ட்”டையும், வை.கோவை மட்டும் ஆதரிக்கலாமா?
அல்லது அந்த அணியையே எதிர்க்கலாமா?
என ஆளாளுக்கு ஒரு பக்கம் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க…… மாணவர்கள் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். தங்களை வரவேற்பதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்த வைகோ விற்கு “சிறப்பான” வரவேற்பு கொடுத்து [...]
April 22, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 8 Comments
அன்பிற்குரிய “தமிழக அரசியல்” வார இதழின் ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கத்துடன் பாமரன்.
தமிழகமும், தமிழக அரசியலும் நெஞ்சை விட்டு நீங்காமல்தான் இருக்கின்றன. கட்டுரை எழுத வேண்டும் என்கிற நினைவு இருந்தாலும் இங்கிலாந்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலுள்ள நேர மாற்றம் சட்டென்று நினைவுக்கு வராததால் இம்முறை எழுதுவது இயலாததாகி விட்டது. (தமிழகத்தில் இருந்தாலே சரியான நேரத்தை நாம் தொலைபேசியில் நினைவூட்டினால்தான் உண்டு. இந்த லட்சணத்தில் அயல் நாட்டிற்குப் போயா நீ நேரத்தைக் கடைபிடிக்கப் போகிறாய்? என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.)
எங்கெங்கு காணினும் நம் [...]
April 14, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 10 Comments
முலாயம்சிங் கட்சியோடு சோனியா காங்கிரஸ்
கூட்டணி வைத்துக் கொள்ளாததற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.
ஆனால் “இன்னமும் காத்திருக்கிறேன். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் குறுந்தலைவர்களிடம் விடாமல் தலையாய தலைவராய் இருக்கிற சோனியாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்கிறார் முலாயம்சிங்.
அதற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.
“விஜயகாந்த் தேர்தல் புறக்கணிப்பையோ அல்லது தி.மு.க, அ.தி.மு.க.வோடு கூட்டு சேருவதை கைவிட்டு பா.ஜ.க.வோடு கூட்டு சேருவதுதான் நல்லது” என இல.கணேசன் கதறுகிறாரே… எதற்காக?
நாட்டு நலன்தான்.
சாலைப் பணியாளர் போராட்டம்……
விவசாயிகள் போராட்டம்……
நெசவாளிகள் போராட்டம்……
அரசு ஊழியர் போராட்டம்……
எனச் சகலரின் போராட்டத்துக்கும் [...]
April 12, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 7 Comments
உலகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். இப்பூவுலகை விட்டுப் புறப்படுவதற்கு முன் தான் பயணப்படுவதற்கான காரணங்களை மிகத் தெளிவாக அச்சிட்டு……. நிதானமாக ஒவ்வொருவர் கையிலும் அளித்துவிட்டு……. மூடியைத் திறந்து ஊற்றினால் பெட்ரோல் பரவலாகத் தன் உடலில் பரவாது என்று அதன் அடிப்பகுதியை அறுத்து தன்னை முழுதாகக் குளிப்பாட்டிக் கொண்டு பற்ற வைத்திருக்கிறான் தோழன் முத்துக்குமார்.
அந்தத் தோழனின் மரண சாசனத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரியும் இதயமுள்ள எவரையும் கண்ணீர் விட்டு அழ வைக்கும். உள்ளூர் [...]
March 10, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 17 Comments
ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட…… அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்னப்பட்ட பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக ஷேமார்த்தமான ஸப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். லோகோபகாரமாக வந்த ஸப்தங்களை வைத்தே அதற்கு grammer முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவ ஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள்.
- ஜகத்குரு சிறீ காஞ்சி காமகோடி சந்திரசேகேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாம்களின் “அருள்” உரை.
ஆக [...]
March 4, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 26 Comments
காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான் மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்…… சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்…… உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. -தந்தை பெரியார் – 1927.
ஊருக்கு மூணே பேர் இருந்தாலும் இந்தக் காங்கிரஸ் அலப்பரைக்கு மட்டும் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காகிதப்பஞ்சமே வந்துவிடக் கூடிய அளவிற்கு அறிக்கைப் “போர்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதன் சர்வ கோஷ்டித் தலைவர்களும். சீமான் – [...]
January 17, 2009
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 29 Comments
முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.
வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?
91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் [...]
December 9, 2008
Categories: Uncategorized . . Author: pamaran . Comments: 33 Comments