இது முன்னுரை அல்ல…

appa_final.gif

15 வேலம்பாளையம்.

இதுதான் அவனது ஊர். தமிழக வரைபடத்தில் தேடிப்பார்த்தாலும்
தென்பட்டுவிடாத கிராமம் அது. எண்ணி எழுபதே வீடுகள். ஆறேழு
கிலோ மீட்டர்கள் நடந்தேதான் போக வேண்டும் அவனது ஊருக்கு.

அவனது அப்பன் செங்கோடன், தானே நெய்த துணிகளைத்
தலையில் சுமந்து ஊர் ஊராய் விற்று வயிறு வளர்த்து வந்தவன்.
கணக்கய்யர் பையனும், மணியகாரர் மகளும் வண்டி கட்டிக் கொண்டு
போய் படித்து வர – அவனோ அந்த ஆறேழு கிலோ மீட்டரும்
நடையாய் நடந்து டவுனிலுள்ள பிஷப் ஸ்கூலுக்குப் படிக்கப் போனான்.

அப்போதுதான் திராவிட இயக்கங்கள் திரைப்படத் துறையில் தூள்
கிளப்பிக் கொண்டிருந்த நேரம்.

“தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால்
தீயைத் தாண்டியிருக்கிறேன்”

‘கருணாநிதின்னு உங்கள மாதிரி ஒரு பையன் எப்புடி எழுதீருக்கான்
பாருடா’ என்று அவனது தமிழாசிரியர் ஊட்டிய உணர்வுகளினூடே
அவன் வளர்ந்தான்.

அதுதான் அன்றைக்கு அவனுக்கு ஊட்டப்பட்ட அடிப்படை
அரசியல். காவிக்கு கறுப்பு காவடி தூக்காத காலம் அது.

தேர்வு முடிவுகள் வந்தபோது அந்தக் கூட்டத்துக்கே பெருங்கொண்டாட்டம்.

15 – வேலம்பாளையத்தில் பத்தாவது பாஸென்பது
லேசுப்பட்ட விஷயமா என்ன? ராசுக்குட்டி பாசானது அந்த கிராமத்துக்கே
‘கலேக்கட்டரு’ பதவி கெடைச்சாப்பல.  “வள்ளியம்மா பையன்
பத்தாவது பாசாயிட்டானாமா….” செங்கோடம் பையன் பாசானது
தெரியுமா உனக்கு?”

அவனது நெருங்கிய உறவுகளில் சிலர் சாராயம் குடிப்பவர்களல்ல –
காய்ச்சுபவர்கள். சோறில்லாவிட்டாலும் சுயமரியாதையையே
சொத்தாகக் கொண்டிருந்தவர்கள் பலர்.

“……புள்ளைக்கு படிப்பெதுக்கு?” என்ற காலத்தில் பத்தாவது
பாசானவனாயிற்றே…உச்சி முகர்ந்தது ஊர். பத்தாதற்கு விவசாய
டிப்போவில் வேலைக்கும் போய்ச்சேர…தேடி வந்தது ‘பெரிய’ இடத்து
சம்பந்தம். திருப்பூரின் திசையை மாற்றி கொத்திக் கொண்டது கோவை
அவனை.

திருமணத்திற்குப் பிற்பாடு புகுமுக வகுப்புத் தேர்ச்சியும், பி.காம்
பட்டமும் அவனது துணிச்சலுக்கு முன்னே தூசாயிற்று. விவசாய
டிப்போவிலிருந்த அவனை விவசாய பல்கலைக் கழகம் தனது
ஊழியனாக வரித்துக் கொண்டது. பின்னர் அப்பல்கலையின் முதல்
கணக்கு அலுவலர்களுக்கான பட்டியலில் அவனது பெயரும் இடம்
பெறுவது தவிர்க்க முடியாததாயிற்று அன்றைக்கு.

ஆனால்…’ரைஸ்மில்காரரின் மச்சினன்’ என்பதோ…’அக்ரி
காலேஜின் கணக்கதிகாரி’ என்பதோ…எதுவும் ஏற்புடையதில்லை
அவனுக்கு. சுள்ளி பொறுக்கியும், சாராயம் காய்ச்சியும் வாழ்க்கையை
ஓட்டி வந்த தனது உறவுகளும், உற்றார்களும் உயர வேண்டுமே என்ற
உறுத்தல்தான் அவனுக்குள் என்றும் இருந்தது.

அநேக கனவுகளினூடே கல்யாணம் பண்ணிக் கொண்டவனுக்கு
மகன் பிறந்தபோது மட்டும் தலைகால் புரியவில்லை. பேர்
வைப்பதற்குக் கூட பெரும்பொழுது ஆயிற்று. சுத்தமான தமிழ்ப்
பெயராய்…அதுவும்…இதுவரை எவரும் வைக்காத தமிழ்ப் பெயராய்…
கவுந்தப்பாடி தமிழாசிரியர் குழந்தைசாமியும், அவனும் யோசித்து
யோசித்து பெயரிடுவதற்குள் நான்கு 365 நாட்கள் நகர்ந்து போயிற்று.

தனது தந்தை செங்கோடனைத் ‘தூக்கிக் கொண்டு’ போன போதுகூட
அழுகை வரவில்லை அவனுக்கு. ஆனால், அண்ணாதுரை இறந்தபோது
வீட்டிலிருக்கிற ‘மர்பி ரேடியோ’ முன்பு அவன் குலுங்கிக் குலுங்கி
குமுறியது அவன் மகனுக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது.

மனைவியோடு கோயிலுக்குப் போனாலும் வாசற்படியோடு
நின்றுவிடுவான் அவன். கோயில் திண்ணையிலும் ‘முரசொலி’ விரித்து
அமருவதுதான் அவனுக்கு அலாதி சுகம். நூர்தீன் பெரியப்பாதான்
அம்மாவை கோயிலினுள்ளே கூட்டிப்போய் ஒவ்வொன்றாக
விளக்குவார். அவன் தனது தலைமுறைக்கு சாதி கடந்தும், மதம் கடந்தும்
மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தான்.

அவன் தனது மகனை நூர்தீனைப் பெரியப்பா என்றும், தலித் பாலசுந்தரத்தை சித்தப்பா என்றும்
அக்கிரகாரத்து முத்துராமனையும், ஆலிவரையும் மாமாவென்றும் அழைக்கப் பழக்கப்படுத்தினான்.

ஆனால் சொந்தங்களை சார் என்று அழைத்தான் அவனது மகன். “என்னடா சம்பு இப்புடி உன் பையனை வளத்திருக்கே?” என்பவர்களது கேள்விக்கு ஒரு நமட்டுச் சிரிப்புதான் அவனது பதிலாக இருக்கும். சிறுபான்மையினர் மீதான நேசம்…தலித்துகளுடனான தோழமை….பிற்படுத்தப்ட்டவர்களுடனான பாசம் என வளர்ந்தவன் அதன்படியே அவனது வாரிசையும் வளர்த்தான்.

ஆயினும் அவனது பொறுமைக்கு நேரெதிராய் ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட அவனது மகன்.
அவனது அமைதிக்கு நேரெதிராய் ஆர்ப்பாட்டத்தைத் தவிர வேறெதுவுமறியாத அவனது மகன்.
இருப்பினும் எல்லாவற்றையும் அனுமதித்தான் அவன். கருத்துச் சுதந்திரத்திற்கு கடிவாளமிடவில்லை
அவன். மகனைத் தோழனாய்ப் பார்த்தான் அவன்.

மகனது கல்லூரி லீலைகளையும், கலாட்டாக்களையும்கூட சுற்றுப்புறத்தில் சீரழிந்திருந்த
கலாச்சாரச் சூழலினையும் கவனத்தில் கொண்டே கண்டித்தான் அவன்.
மகனது கிறுக்குத்தனங்களையும், குறும்புகளையும் களையச் சொன்னான் கனிவோடு.

மகனும் பிற்பாடு தமிழ் மீதும் , திராவிடத்தின் மீதும் தனது பார்வையைத் தழையவிட….அவனுக்குள் ஒரு பெருமிதம்.

‘ஆறுமுறை மின்சாரம் தாக்கியும் உயிரிழக்காத அர்ஜன்டைனா மனிதர் அலெக்ஸ் இவர்தான்’ என
அவனது மகன் எழுதிய அபத்தத் துணுக்குகள் அவனுக்கு ஏற்புடையதில்லையாயினும்….
துவக்கம் துவண்டாலும் தொடரத் தொடர துளிர் விடக்கூடும் எனத் தெரிந்து வைத்திருந்தான் அவன்.

நேரடியாக ஊக்குவிக்காவிடினும் மறைமுகமாக மனதுக்குள் ரசித்தான் அவன்.
மகன் எழும் முன்னரே வாசகர் கடிதத்தில் அவனது பெயர் தென்படுகிறதா எனத் தேடிப்பார்த்த பின்னரே தேநீர் அருந்தினான்.

அவன் தன் மகனுக்கு விட்டுச் சென்றதெல்லாம்…சாதி…மத…மொழி…இனம்…நிலம் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்ததுதான்.
அவன் போய்ச் சேர்ந்த பிறகு அந்த வேலம்பாளைய வீட்டை பதினேழாயிரத்துக்கு விற்றுவிட்டு
ஊர் வந்து சேர்ந்தார்கள் அவனது மனைவியும் மகனும்.

“வெல்டன் Mr. கோமல், தூள் கிளப்பிவிட்டீர்கள்” என வாசகர் கடிதம் எழுதுபவனாய்….
பூவாளிக்கும், முத்தாரத்திற்கும் துணுக்கு எழுதுபவனாய்….
‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்று அச்சடித்து பத்திரிக்கை நடத்துபவனாய்….
பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டு சிறுசிறு புத்தகங்கள் வெளியிடுபவனாய்….
வளர்ந்த மகன் பிற்பாடு வெகுஜனப் பத்திரிக்கைகளால் ஈர்க்கப்பட்டு சினிமா, அரசியல் விமர்சகனாய்
“வளர்ந்த” போது சூட்டிக் கொண்ட பெயர் பாமரன்.

மகனுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் துயரமெல்லாம் தனது எழுத்தை மறைந்திருந்தாவது படிக்க…

அந்த 15 – வேலம்பாளையத்து

‘ராசுக்குட்டி’ என்கிற

‘சம்பு’ என்கிற

செ.சண்முகசுந்தரம், பி.காம்., இல்லையே என்பதுதான்.

69 thoughts on “இது முன்னுரை அல்ல…

 1. உங்களின் எழுத்துக்களை வாரப்பத்திரிக்கைகளின் வாயிலாகப் படித்திருக்கிறேன். உண்மையான, அதே சமயம் செவிட்டில் அறையும் படியான வார்த்தைகள். ஆனால் உங்களுக்கு 15 வேலம்பாளையம் சொந்த ஊர் என்பது புதிய தகவல். உங்கள் கிராமம் இப்போது நகராட்சியாக உயர்ந்து விட்டது தானே!

  தொலைக்காட்சிப் பெட்டியை “வீட்டு நடுவில் அமர்ந்திருக்கும் சனியன்” என விமர்சித்து ஒரு கடிதம் உள்ளதே! அதையும் இதில் போடலாம்.

  • தொலைக்காட்சியையே சனியன் என்றால் செல்போனை என்ன சொல்வாரோ

 2. paamaran pattanam vanthu ezhilai petra ezhil paamaranai valarnthathai ariyamale sendru vitta sambuvukku ayiram ayiram paamarargal vaazhthum vanakkamum sollum kaalam vanthu kondullathu

 3. அருமையாக எழுதியுள்ளீர்கள்,
  “துவக்கம் துவண்டாலும் தொடரத் தொடர துளிர் விடக்கூடும் எனத் தெரிந்து வைத்திருந்தான் அவன்” – பலித்துவிட்டது
  அவன் தன் மகனுக்கு விட்டுச் சென்றதெல்லாம்…சாதி…மத…மொழி…இனம்…நிலம் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்ததுதான் – இந்த தந்தை இந்த நாட்டின் தந்தையாக இருந்திருக்க கூடாதா? – நாகூர் இஸ்மாயில்

 4. anbu pamaran, ikkatturai patri pudhiyadhaga nan ondrum solvatharku illai. anegamaga idhupatri mudhanmudhalil parattiyavan naanagathan iruppen ena ninaikkiren. MOHUNRAJ

 5. உங்கள் வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன். இணையத்திலும் உங்கள் எழுத்துக்களையும் கருத்துக்க்ளையும் பதிக்க முன் வந்துள்ள ‘நவீன’ பாமரனை மகிழ்வோடு வரவேற்கிறேன் – ஒரு வாசகனாக
  அன்புடன்
  மாலன்

 6. வணக்கம்,
  இன்று தான் முதன் முதலாக உங்களோட எழுத்துக்களை பார்க்கின்றேன். தூர தேசத்தில் இருப்பதால் பத்திரிகைகளும் வருவதில்லை. உங்கள் எழுத்தை பார்க்கும் போது மிகவும் சுவாரசியமான ஒரு எழுத்தாளர் என்பது மட்டும் புரிகின்றது. மேலும் அறிந்துகொள்ள ஆவல் உண்டு. அடிக்கடி உங்கள் வலைப்பூவிற்கு வந்து அறிந்துகொள்கின்றேன்.
  உங்களோட அப்பா இல்லாதது குறித்து..மனம்வருந்துகின்றேன்.

 7. நண்பர் பாமரன் அவர்களே வணக்கம்!
  கிட்டத்தட்ட நான் எனது தந்தைக்கு எழுத நினைத்ததை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய உணர்வுகளை முழுமையான அலைவரிசையில், அதே கோணத்தில் என்னால் உணர முடிகிறது. என்ன செய்வது? தோழனாய் தோள் கொடுக்கும் தந்தைகள் எப்போதும் தன் தோளளவுக்குப் பிள்ளைகள் வளர்ந்து சாதிக்கும்போது, இருந்து பெருமைப்படுவதில்லை, நாம் தந்தையை இழந்தோம் என்பதைவிட ஒரு தரமுள்ள விமர்சகனை இழந்தோம் என்பதுதான் வேதனை…இது ஒவ்வொரு படைப்பாளனுக்கும், எழுத்தாளனுக்குமே உள்ள வலி.
  வலியுடன் – மனுநீதி, கலிபோர்னியா (அமெரிக்கா)

 8. நண்பர் பாமரன் அவர்களுக்கு வணக்கம்!
  நான் நிலாச்சாரல் இணைய சஞ்சிகையில் இருந்து நவின், தங்களை ஒரு செவ்வி எடுக்கலாம் என நினைக்கிறேன். தங்கள் சிரமம் பாராது, அதற்கான தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கித் தந்தால் நான் மின்னஞ்சலின் மூலமாகத் தங்களுக்குக் கேள்விகளை அனுப்பி வைக்கிறேன். பதில்களை நீங்களும் மின்னஞ்சல் வழியாகவே அனுப்பி விடலாம். தங்களின் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரி எனக்குத் தெரியாததால் நான் இவ்வாறு அனுப்பவேண்டியதாகிவிட்டது. தயவு செய்து தாங்களின் மின்னஞ்சலையும், கூடவே தங்களின் அற்புதமான ஒரு புகைப்படத்தையும் எனக்கு அனுப்பி வைக்கவும்.
  புரட்சி வாழ்த்துக்களுடன் மனுநீதி
  எனது மின்னஞ்சல் முகவரி
  navneethsmart@yahoo.com

 9. ///அவனது அப்பன் செங்கோடன், தானே நெய்த துணிகளைத்
  தலையில் சுமந்து ஊர் ஊராய் விற்று வயிறு வளர்த்து வந்தவன்.
  கணக்கய்யர் பையனும், மணியகாரர் மகளும் வண்டி கட்டிக் கொண்டு
  போய் படித்து வர – அவனோ அந்த ஆறேழு கிலோ மீட்டரும்
  நடையாய் நடந்து டவுனிலுள்ள பிஷப் ஸ்கூலுக்குப் படிக்கப் போனான்.////

  இந்தத் தாக்கம் 60% மக்களிடையே உண்டு!
  வெளிப்படுத்த தெரியாமல் அல்லது வெளிப்படுத்தாமல் இருப்பவர்கள் எண்ணற்றவர்கள்
  நீங்கள் உங்கள் நடையில் சரளமாக எழுதியுள்ளீஈர்கள்.
  பாராட்டுக்கள் ந்ண்பரே!

  அன்புடன்
  SP.VR.சுப்பையா

 10. அன்புள்ள பாமரன் அவர்களுக்கு,
  உங்கள் எழுத்தின் தாக்கம்…குறைந்த பட்ச சோரணை உள்ள எல்லோருக்கும் இருக்கும் என நம்புகிறேன்.
  அரசியல்வாதிகள் எப்படி வரவேற்கிறார்கள்? ஏதேனும் இருந்தால் எழுதவும்…

  நன்றி.

 11. Hello Pamaran,

  Your 99.9% percentage of your life applied in my life tooo…. including diravidar kazalam, Anna death after crying….. everything but my luck still my dad is alive… after your article I have reserved one train ticket for tomorrow morning to see my father….

  I can not write so much becuase I do not have the mood now I am stimulate the feeling also I am crying……however I would see you latter

  thanks….. thanks…..

  Saravanan

 12. ANBULLA PARAMAA,

  NEE ENNAII AARIYAAA, UNN EAZHUTHUKALAII NAN ARRIVEANN ………. UNN EAZHUTHUPANII ENNDRUMM THOODARAA ENN ATHMARTHAMANA VAZHLTHUKALL …..

  NATPUDAN …..ELLAII
  THOZHLI …… ELLAI .
  SNEAHETHI ……ELLAI
  NALAM VIRUMBI ……ELLAI
  VASAHII……… ELLAI
  RASIGAI ………ELLAII

  SILA NOODII ENN EAZHUTHUKALAII NE VASITHUU , SILA NIMIDAM ENN VASAHANAII EERUNTHAMAIKUU NANDRII 🙂

  ENNDRUMM
  SHUBHAA MITHRA

  • i am Rajesh from Chennai but now working in SaudiArabia .
   Ungalin patdthadum Killithadum thodarai Kumudam -l padithullen .Really Super ( Same as Sujatha -Katrathum Petrathum ,Zani_O pakkangal,Solai,Ravi Kumar_M.L.A, S RAmakrishnan).
   Ungalin Vicchu innum pala vasagargalin manathil matrahidun kudia valarchiyau Erpadutha Valthgal

   Neengalum Sujatha sir,Ramakrishnan sir pola Vasagargaluku Ariya pada Ananda Vikatan -l Thodar Elthumaru ungalin Vasagargall oruvanin Viruppam.
   I like your writng styles in tamil its very correct and straight forward. and your comments also the same type.

   i want to talk with you.please send your cell no…..mail me

   Wish u all the best.

 13. hello pamaran,
  i read this article.my emotional stablility is breaked by your words.my eye lids get wet.
  hands of u..
  chitrarasu
  9841545516

 14. dear

  i am not able to read your article. what to do to get the tamil font to go through your articles?

  thanks
  robert.

 15. Anbulla pamaran sir ethanai nal aachu ungal elluthai padikka. appodhu kumudham book il thdarndhu padithadhu than . enge sir poneergal ithanai nal. konja nal munbu VIJAI TV il parthen.Ini ungalai thodarandhu padippen. Romba romba sandhosam sir. Ini neraiya elludhungal.
  Anbudan
  kalyankumar

 16. anbulla pamaranukku…

  kovai pidikkum enpathalum, pamaranin kadithangal romba pidiukum enbathalum…
  kurippai ” naan iduvarai pesinadu ungaloda nadagangala patthi thaan eppo cinema edukka
  poringa” aaha yaara adu pramippa ungaloda thunichala rasithavan… keep it up

  thanks to ananda vikatan valaipoo vilasam kodothadukku…

  anbudan
  purushothaman

 17. NANBARE,
  UMATHU VAARTHAIGAL ENNAI SURUTTI POODUKINDRANA
  ENNAKKU 15,VELAMPAALAYATHAI MEENDUM ORU MURAI PAARKANUM POL IRUKIRATHU.
  AANAAL EN MCA PADIPPU KONJAM KAATHIRUKKA SOLGIRATHU..

 18. N(a)nbha,
  Naan umathu kumudham vasakan, kadantha vaaram umathu kilithal varavillai endru naan kumudathai kilikalaam endru thaan ninaithen, aanaal umathu kilithal thodarum endra nambikaiyil, naan kilikavillai anbaaa…
  unaku eppadiyum kaditham eluthanum endru thaan irunthen atharku sariyana mukavari kittavillai, kadantha vaaram oru naalithalil thaan umathu valaipinnal mukavari kidaithathu..udane umaku oru kaditham nanbaa…
  nee leela manimekaliku vanja pukalchiyaka eluthiyathai naan mikavum rasithen…arumai nanaba, yaarukum payam illaamal thavaru seikiravarkal yaara irundhaalum neer pesum (neridaiyaka) alaku yaaru varum..andha thairiyathuku oru tamilanaka thalai vanangukiren nanba…netri kan thirapinum kutram kutram endru sollum unnai emaku romba pidukuthaiyaa paamaraaaaaaaaa…
  naan maduraiku maavatathilullal oru alzhakana Keezhaiyur endra kiramathu ilazhan, menporum niruvanathil Bangaloril velai seikiren…en peyar selvarajan….
  neer kilipathu thodarum endraal, naan athai padipathu thodarum…..neer kilukum varai athu thodarum nanbare…neer kilipathai mattum niruthividatheer…

 19. Dear Pamaran,
  I hadbeen familiar with ur writting thro the weekly KUMUDAM.
  Recently iam start reading u in net.
  Iam happy to knew that u r from coimbatore area. Iam also from that lovely district, MADUKKARAI. Now working in KUWAIT.
  Iam strongly belive that the writtings of someone will reach to the heart and minds of people if the writter has the humanity in his heart. My prayers goes to your beloved father from where u get the inspiration to love the whole humanity irrespective of religion, language , culture and region.
  This is an immediete requirement for everyone to start loving the whole world.
  We will unite for universal brotherhood.
  Wish u all the best.

 20. Ayya

  Thenvattu th Thodardhan naan padiththathangalin mudhal padaippu.
  SunTV il thandlin interview kaalamalaril kandirukkiraen.
  Adhu mudhale naan thangalinbal eerkappattaen.
  Valarga um thondu.
  Tahngalai sandhikka vizhaigiraen.

  Valavan

 21. my dear friend pamaran,
  since i coudn’t type in tamil i am going for english. i am saying this coz after reading your views i feel ashamed to type in english. i have been reading your articles in kumudham and was always impressed by the honesty and straighforwardness in your words. recently read about this website from vikadan and it has been a nice oppurtunity to know more about you. till recent years i have been calling my father as “daddy” for which i feel ashamed and have taken a vow to use only tamil words as possible as i can. keep up your good work. as you have said, “people with similar thoughts are very rare to find” and your works will help a lot others to realize thier true faces.
  regards
  senthil kumaran

 22. thozha vanakkam.
  ithu than muthal murai, ungal valaipoovil en amutha thamizhai parugiyathu ithu than muthan murai.
  thevittatha inimai thantha nanbanukku nantri.

  ungal iyyanai pol(en thagappanum) nanum en maganukku nalla thagappanaga samuthaya sinthaiyodu valarppen
  meendum ungal valaippuvil pinnikkolla varuven
  nantri uyir inban

 23. Dear Sir,
  I have seen that your place is 15 velamplayam. I am really happy for your writings and your expressions are really good. I am from your nearby place anupparpalayam. Now working in dubai
  Thanks

 24. Happy tom see you on net, I used to read your articles in KUMUDAM , I agree 100% with your views, keep it up, sorry for not write in Tamil.Thank you for your care for Srilankan Tamils.

 25. paamaran ayyaaviRku Enadhu vaNakkam naan ungkaLadhu padiththadhum kiziththum vaasakan naan mikavum virumpi padippen

  kizippadhu thodara vendum

  thangkaLin kaippesi en kidaiththal mikavum makilven (pizhai irupin mannikavum)

  Balaji

 26. என்ன தோழரே, குமுதத்தில் எழுதுவதற்கே நேரம் சரியாக இருகிறதா. வலைபதிவில் புதிய கருத்துக்களை காண முடியவில்லையே. அல்லது துவக்கத்தில் இருந்த ஆர்வம் தற்போது குறை ந் து விட்டதா?
  அன்புடன்
  செந்தில் குமரன்

 27. i am murali(rajapalayam)now in chennai.i want to talk with you.please send your cell no…..mail me

 28. Hi

  I have visited 15, Velampalayam and Tirupur Textiles nearby. Very good schools are there. My wife’s sister worked there as VP. Very clean place. Better than Chennai and Bangalore.

  Tirupur gets Dollars, and whatever you want. Surprised to see many Skoda’s and Benz cars running around.

  Gnani the ex Indian express writer, Charu Nivedita and you are one genre. Sujatha liked.

 29. அன்புள்ள உடன்பிறப்புக்கு
  தமிழீழத்தல் இருந்து உங்கள் தொப்புள்கொடி உறவுகள் எழுதிக்nகொள்ளும் அன்புமடல் இது!
  நீங்கள் எழுதிரும் ஆக்கங்களும் விமர்சன மடல்களும் எங்களுக்கும்இ எங்கள் கருத்துக்கக்கும் இன்னும் உரமூட்டி நிற்கின்றது.
  உங்கள் தமிழ்ப்பற்றுஇ உங்கள் பகுத்தறிவு முற்பேக்குச்சிந்தனைகள் எங்களுக்கு படிக்கும்பேது
  ஒரு ஆறுதiயும்இ சந்தோசத்தையும் தருகின்றது.
  தமிழகத்தில் பெரியார் மற்றும் அண்ணவின் மறைவுக்குப்பின்னர் தமிழ் உணர்வுகெண்ட எழுத்தாளர்களை காண்பது அpதகவே இருந்துவந்துள்ளது. அதேநேரம் 28 மைல் தூரத்தில் தம்மினம் அழிக்கப்படும்போது ஆறரைக்கொடி பேர்கள் இரந்தும் இதயம் துடித்தும் ஏதும் செய்யமுடியமல் இருப்பது தமிழக்கான சாபமா? தமிழகத்தில் இருந்துகெண்டு தம்மை பெரிய பெரிய எத்தாளர்களாக இனங்காட்டிக்கொண்டு பாப்பனியத்துக்கு ஆலவட்டம் பிக்கும் பல் மத்தியில் உங்கள் எழுத்துக்களுக்கு மட்டுமே எங்கள் காயங்களுக்குமருந்தூட்டிஇ இதயத்திற்கு இன்னும் பலம் சேர்க்கத்தெரிந்துள்ளது.
  தொடர்ந்தும் உங்கள் எழுத்துப்பணி வீறுகொண்டு எழவும்இ அழுது கலங்கிய எங்கள் விழிகளுக்கு ஆறுதலையும்இ தைரியத்தையும் வழங்குவதாக அமையும் என உங்கள் சNfhதரன் வேண்டிக்கொள்கின்றான்.

 30. அன்புள்ள பாமரனுக்கு,
  தங்கள் எழுத்துக்களை குமுதத்தில் படித்திருக்கிறேன். தனித்துவமிக்க தங்கள் கருத்துகள் அலாதியானவை. ஆனால் யார் இந்த பாமரன் என்று அறியும் ஆர்வம் இருந்தது. இன்று இணைய தளத்தில் தங்களைப்பற்றி அறிந்து கொண்டதும் மனதில் சில நிமிடங்கள் விவரிக்க இயலாத உணர்வு ஊடுருவிப் பரவியது. உண்மைக்கு நெருக்கமாக வரும் தங்கள் எழுத்துக்களை வாழ்த்துகிறேன்.
  இப்படிக்கு
  தனுஷ்

 31. பாமரன் அப்படேங்ர பெரு சும்மா ஒரு புனை பேருன்னு நினைச்சு தான் படிக்க ஆரம்பிச்சேன், ஆனா, படிசு முடிச்ச உடனெய் நிஜமாலுமெய் ஒரு மரியாத வருது அந்த பேர் மேல…

 32. ஒரு துளி கண்ணீரையேனும் வரவழைக்கும் எழுத்துக்கள்.
  மனதை கனக்கவைத்துவிட்டீர்கள் பாமரன்.
  எழுத்துப்போராளியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.

 33. vanakkam paamaran, yerkanave palakkapatta ungal eluthukkal nanrai unarvupoorvamai irukkirathu. ungalai Kattrathu Tamil paarattu vilavil paarthirukkiren. andru neengal sonna oru sila seithigal indrum manathil appadiye irukkinrana, keerai kara patti tholainthu pona nigalvu patri neengal sonna vitham arumai. ungal valaithalathai ippoluthuthan muthan murai parkiren migavum arumai. nandri

 34. Dear Sir,

  I am from same 15,velampalayam and it is really unbelievable that it is ur native can u tell its pincode if u remember

 35. அன்புள்ள பமரனுக்கு,

  உங்கள் கட்டுரை எல்லம் வெகு சிறப்பாக உள்ளது, உங்களுக்கு ஒரு ரசிகன் நான்

 36. மேலே உள்ள பின்னூட்டங்களை படித்த பிறகு எனக்கு எதுமே தோன்ற வில்லை.. கண்ணீரை தவிர…தொடருங்கள், உங்கள் எழுத்து பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
  நன்றி நண்பரே..
  இப்படிக்கு
  கணினி நல்லதம்பி.

 37. dear pamaran, i was reading your articles in kumudam. now you are not writing there.
  i hope now you can shed your dmk affinity.
  you can write something useful to eliminate caste differences.
  sometimes i feel you are only targetting brahmis. do you feel this attitude will solve the real problem.
  nobody is dare enough to tell the students to rise above caste differences.
  why you can not write?
  because we like to read your articles and atleast somebody will change.
  gopalasamy.

 38. idhuvarai naerilum katturai vayilagavum santhitha ungalai, intha valai pakkathil uratha sindhanaiyodu santhipathu magizhchi….

  sankar
  s/o suresh

 39. Dear Pamaran,

  Apologies for writing in English,Thanks for writing things in a way that everyone can understand. I feel ashame of myself, because i have not read you before. This is the first time i read you. But you made me to read all your writings in a single shot.

  It is some thing different and it takes me close to truth in all topics…
  Now i am very much interested to read your other writings..
  I will start my search for your writings today itself.

  Thanks to Valaicharam who introduced PAMARAN(in name) to another Pamaran(in literal meaning).

  Natpudan
  Soundar

 40. பிறரை குறை கூரி, தன்னை விளம்பரம் படித்திக்கொள்ள கூடாது.

 41. தமிழ் எழுத்துக்களை உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என்று பிரித்து உரிமை பேசுகிறோம். ஆனால், உங்களுடைய எழுத்துகள் உயிர் மெய் எழுத்துகளாக எழுந்து நின்று உணர்ச்சிகளைக் கொப்பளிக்கின்றன. நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். நிறைய எழுத வேண்டும். மலேசியாவில் உங்களுக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அவர்களில் எங்கள் குடும்பத்தாரும் அடங்குவர். வாழ்த்துகள்.

  ஈப்போ, பேராக், மலேசியா

 42. Good to know you Pamaran.. It’s first time.. i am reading your blog writing. i came across your Book “theruvora Kuripukal”…it’s a good Genre. Me too live in coimbatore..
  hope to meet you some time….. thanks a lot and hats of to mr. Rasukutty.

 43. வணக்கம்!
  தங்கள் கட்டுரைகளை தமிழக அரசியல் இதழில் படித்து வருகிறேன். இணையத்தில் உள்ள வாய்ப்பிற்கு
  நன்றி. தங்கள் எழுத்தின் கருத்து நாசுக்காக அதே நேரம் சாட்டையடியாக சொல்லும் பாங்கு பாராட்டுக்குரியது. நானும் எழுத ஆரம்பித்துள்ளேன். தங்களைப் போன்றோரின் எழுத்தைப் பார்த்து..

 44. Dear Sir,
  I had read your writings in various weeklies.I like your wring styles in tamil its very correct and straight forward. and your comments also the same type.

  thanks
  VinothBaskaran

 45. உமது இந்த வரைவைப் பார்த்து பின்ஊட்டங்கள்-ஐப் பார்த்தால் சரியாக 49 இருந்த்தது சரி எனது பதுவு 50 ஆவது ஆக இருக்கட்டுமே என எழுத ஆரம்பித்து விட்டேன். எழுதத்ததான் வரவில்லை திராவிட இயக்கங்களின் தாக்கம் இல்லாமல் தமிழக வரலாறு என்பது இல்லை .அண்ணாவின் மரணத்திற்கு உமது தந்தையின் வேதனை ஒரு தேசத்தின் வேதனை ஆகும்.. ஆனால் திராவிட இயக்கங்கத்தை தனது கபட நாடகங்களால் மற்றும் சுயநலத்தால் நீர்த்துப் போகக் செய்த கருணாநிதியின் பங்கு பற்றி பல இடங்களில் நீங்களே எழுதி விட்டதால் அது குறித்து இங்கு எழுத வேண்டியதில்லை

 46. முன்பு சிறு வயதில் குமுதத்தில் உங்கள் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்..போன வருடம் ஈழத்தில் நடந்த கொடுமைகளிற்கு தாய்த்தமிழ் நாட்டின் எதிர்வினையின் போக்கினால் மனம் நொந்து தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் எழுத்தின் மேல் ஒருவிதா வேறுப்பில் இருந்த எனக்கு , எனது பால்ய நன்பன் தங்களின் இணையத்தள முகவரியை அனுப்பி இருந்தான். என்ன இவர் எழுதி கிழிக்க போகின்றார் என்று எண்ணி வந்த எனக்கு, சோபாசக்தியின் புத்தகத்திற்கு தாங்கள் எழுதிய விமர்சனத்தை/ பதிவை வாசித்ததும் புரிந்தது…..நீங்கள் மனித நேயமும், பொறுப்புணர்வும், தெளிவும் அற்று, எழுத்துக்களால் பக்கங்களை நிரப்புகின்ர அரைவேக்காட்டு எழுத்தாளர் அல்ல என்று. அதன்பின் தங்களின் ஒவ்வொறு கட்டுரையாக ஒரே மூச்சில் வாசித்துக்கொண்டிருக்கிறேன்..பிரமாதம்..மயக்கும் எழுத்து நடை….ஏன் இவ்வளவு நாட்களாக இத்தளத்தை தவறவிட்டேன் என எண்ண வைக்கின்றது………

 47. excellent work,i read your book “padithathum killithathum” very nice………i like to know what are the other books you wrote & who are there publishers .

 48. தோழரே,
  நலமா.
  உங்களை சந்தித்து பல வருடங்களாயிற்று.தொலைவிலிருந்து உங்கள் கட்டுரைகளை கீற்றில் படித்து இரசித்து வந்தேன்.உங்கள் கூர்மையான்,நேர்மையான எழுத்தால் உங்களோடு பழகிய தோழன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

  அன்புடன்,
  பொற்செழியன்.

 49. I READ LOT OF YOUR ARTCLES IN MAGAZINE.I VERY MUCH IMPRESSED WITH YOUR ARTICLE ABOUT VALENTINE DAY KADALUKKU KARUMADHI.I THING THAT YOU PUBLISHED LOT OF BOOKS IN VARIOUS SUBJECTS. I WANT TO PURCHASE IT.PL INTIMATE THE PUBLICATIONS @PROCEDDURES TO ME.REGRADS
  K.RAMESH

 50. அன்புள்ள பாமரன் என்கிற எழிற்கோ அவர்களுக்கு,

  பாமரன் என்றால் தமிழில் “ஒன்றும் தெரியாதவன் ” என அர்த்தம். ஆனால் உங்கள் பகிரங்க கடிதங்களை படித்த பொழுது நீங்கள் அப்படி பட்டவராக தெரியவில்லை. உங்களால் ஆசியாவின் அறிவு ஜீவி என அழைக்கப்பட்ட “சோ” வை விட நீங்கள் தான் உண்மையான உலக அறிவு ஜீவி என்று சொல்ல தோன்றுகிறது.

  குறை சொல்லி பேர் வாங்குபவர் பலர் இருந்தாலும், நீங்கள் தான் எல்லோரையும் விஞ்சி நிற்கிறீர்கள்.

  உங்கள் எழுத்து மெத்த படித்தவர்களையும் சிந்திக்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன்,
  பெ. வஜ்ரவேல், சென்னிமலை.

 51. உங்கள் வலைப்பதிவை இன்றுதான் பார்த்தேன்.
  உங்களின் செருப்பால் அடிக்கும் எழுத்துக்களால் கவரப்பட்ட
  சிறிய அளவில் ஆவணப்படங்களை இயக்கி கொண்டிருக்கும் சிறியவன்

  ஒரு வாசகனாக
  அன்புடன்
  மதுரை
  ஜோ
  குலவை.வேர்டுபிரஸ்.காமில் எழுதி வருகிறேன்

 52. அற்புதமான அறிமுகம்.. வசீகரிக்கின்ற எழுத்து பாணி.

 53. Enaku ungaloda books padika romba pudikum anal nan paditha prey puthagam vali vairamuthu mattum than athum pathi than padithen eppavum antha puthagam padika asai padukiren padika thanthu uthava
  mudiyuma

  Evan
  Siddharth.jayachandran

 54. Dear pamaran sir, Munnuraikal perumpalum thannuraiyakathan irukkum,aanal ivvurai thannai thanakkikkiya thakappanukku pillai ezhuthiya nantri urai.’Ivan thanthai ennotran kol enum sol’ entra valluvan vakkai ninaivu paduthum ponnurai. Makanaka iruppavarkalukkum,Thakappananavarkalukkum manathil oru mathiri uraiyaka pathukakkavendiya ponnrai. Anbudan, Thulasidharan.v.Thillaiakathu

 55. அன்புடன் பாமரன் அவர்களுக்கு, முன்னுரைகள் பெரும்பாலும் தன்னுரையாகத்தான் இருக்கும். ஆனால் இவ்வுரை தன்னை தானாக்கிய தகப்பனுக்கு பிள்ளை எழுதிய நன்றி உரை. “இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்” என்ற வள்ளுவன் வாக்கை நினைவு படுத்தும் பொன்னுரை. மகனாக இருப்பவர்களுக்கும, தகப்பன் ஆனவர்களுக்கும் மனதில் “ஒரு முன் மாதிரி” உரையாக பாதுகாக்க வேண்டிய பொன்னுரை. அன்புடன், துளசிதரன் தில்லைஅகத்து

 56. Vanakam Thozhar,

  Naan Satheesh (Che nanban). Nalla irukeengala. Idhu munurai alla padichan. Ungala yenaku theriyum. Ippo unga appa va pathiyum therinjidhu.

  Romba naal aachu ungala sandhichu. Viraivil kovai vandhu sandhipaen. English la comment post panna ungaluku pudikadhu nu theriyum. Next time Tamil post panna muyarchi panran. Nandri.

 57. திரு சண்முகசுந்தரம் அவர்கள் முதுநிலை கணக்கு அலுவலராக எங்கள் விடுதியில் பணியிலிருந்து போது நான் மாணவனாக இருந்தேன், அவர் அன்பின் மழையில் நனைந்தேன் என்பதே எனக்குப் பெருமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s