தே.தி.சேரன் ஐயா சமூகத்துக்கு- கிளைமேக்ஸ்

சரி சரி நீ தண்ணீ குடி..ன்னேன்.

“தண்ணியும் வேண்டாம்… ஒரு மண்ணும் வேண்டாம். உன்ன ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு”ன்னான்

கேளுன்னேன்.

“பள்ளிக்கூடத்துல எதுக்காக சாதி கேக்கறாங்க? அதுக்குக் காரணத்த சொல்லு.”

எதுக்கோ…அதெல்லாந் தெரியாது எனக்கு. நாம ஜாதி இல்லேன்னுதானே சொல்றோம்…அப்புறம் எதுக்கு பள்ளிகோடத்துல மட்டும் ஜாதி கேக்கறாங்க…?ன்னேன்.

“முட்டாளே…ஒண்ணே ஒண்ணப் புரிஞ்சுக்க. எல்லாரும் ஒளர்ற மாதிரி நீயும் ஒளறாதே….
பள்ளிக்கூடத்துல சாதி கேக்கறதுக்குக் காரணம்…சாதிச் சங்கம் வெச்சுக் குடுக்கறதுக்காக இல்ல.

பத்துப் புள்ளைக கவுண்டர்ல சேந்தாச்சு…
நீங்க கவுண்டர் சங்கம் ஆரம்பீங்க…

பதினேழு புள்ளைக தேவேந்திரர்கள்ல சேந்தாச்சு…
நீங்க தேவேந்திர சங்கம் வையுங்கன்னு….
சாதிச் சங்கம் வெச்சுக் குடுக்கறதுக்காக கேக்கல….”

அப்பறம் எதுக்கு வீணா சாதி….

“நிறுத்து…கொஞ்சம் பேச விடு. பள்ளிகூடத்துல சேர்றப்ப மட்டும் சாதி கேக்கறதுக்குக் காரணம்…
நீ மத்தவங்களால ஒடுக்கப்பட்ட சாதியா….
இல்ல மத்தவங்கள ஒடுக்கற சாதியான்னு பிரிச்சுப் பார்த்து இட ஒதுக்கீடு செய்யறதுக்குத்தான்.

அம்பது அறுபது வருசத்துக்கு முன்னால 97 சதவீதம் பேர் இருந்த நம்ம தாத்தனும் பாட்டனும் மூணு சதவீதத்து ஆளுககிட்ட ‘சாதி வேண்டாஞ்சாமி…எங்க கொளந்தைகளை படிக்க உடுங்க’ன்னு கால்ல உழுந்து கெஞ்சுனாங்க….
அப்ப அவங்க…’ஜாதி இருக்குடா…போயி உன் குலத் தொழில பாரு’ன்னு தெனாவெட்டாச் சொன்னாங்க.
எப்படியோ நம்ம பெருசுக கெஞ்சிக் கூத்தாடி….
அதுவும் முடியாம வாதாடி….
அப்புறம் அதுவும் முடியாம போராடி….
இட ஒதுக்கீடு வாங்கி நம்ம புள்ளைகள பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பிச்சாங்க.
இப்பத்தான் நம்மளோட மொதல் தலமுறையே காலேஜ்ஜப் பாத்திருக்கு.
அத பொறுத்துக்க முடியாம அன்னிக்கு ‘ஜாதி இருக்குடா’னு சண்டித்தனம் பண்ணுன அதே ஆளுங்கதான் இன்னைக்கு ‘ஜாதியே இல்லே’ங்கறாங்க”.

அவங்களே திருந்தி வந்திருக்காங்க. அது நல்லதுதானே. அப்ப நாமளும் இல்லேன்னுட்டு கை கோத்துகிட்டுப் போக வேண்டீதுதானே…?

“திருந்துனா சந்தோசந்தான் புண்ணாக்கு…. ஆனா நடவடிக்கைகளப் பாத்தா அப்படித் தெரியலயே…”ங்கறான் த.தி.த.

எப்புடீன்னேன்.

“கல்வியிலும், வேலையிலும் ஜாதி வேண்டாங்கற இவுங்க இன்னும் கோயில்ல அவுங்க மட்டும்தான் குருக்களா இருக்கணும்….
சங்கராச்சாரியாரா அவுங்க மட்டும்தான் வரணும்…இதுகள்ல மட்டும் அவுங்களுக்கு தனீ இடஒதுக்கீடு இருக்கணும்கறாங்களே…
இது மட்டும் எந்த விதத்துல நியாயம்….?”ன்னு உருக்கமாக் கேட்டான்.

“ஆமா நீ பரிட்சை எழுதுனப்ப ‘தமிழ்நாட்டோட முதல்வர் அலாவுதீன் கில்ஜி’ன்னா எழுதுனே…?”ன்னான்.

இதென்னடாது வம்பாயிருக்கு. நான் கலைஞர்னுதானே எழுதுனேன்.

“அப்புறம் என்னடா தகுதி திறமை….?
பிற்படுத்தப்பட்டவனா இருந்தாலும் சரி….
தாழ்த்தப்பட்டவனா இருந்தாலும் சரி….
சரியா பதிலெழுதினாத்தான் மார்க்கு.

என்னமோ நீங்க எல்லாம் ‘இந்தியாவின் தலைநகர் எது?’ங்கறதுக்கு
‘கஜகஜஸ்தான்’ன்னு எழுதுன மாதிரியும்…
அவுங்க மட்டும் சரியா ‘டில்லி’ன்னு எழுதீட்டு வேலை இல்லாமப் போயிட்ட மாதிரியும் கதை திரிக்கறாங்களே…
உங்குளுக்கெல்லாம் ஒறைக்குதா புத்திக்கு?

மொத்தத்தில் எங்களுக்கும் சாதி கெடையாது.
மொதல்ல கோயில்ல சாதி கேக்கறத நிறுத்தச் சொல்.
நான் நிறுத்தறேன்….

மொதல்ல சங்கரமடத்துல சாதி கேக்கறத நிறுத்தச் சொல்.
நான் நிறுத்தறேன்….”னு நாயகன் கமல் மாதிரி அவதாரம் எடுத்துட்டான் நம்ம தகுதி திறமையத்த தண்டபாணி.

அட இதுவும் நியாயந்தானேன்னு படுதுங்க  சேரன்.
ஆனாலும் நீங்க சொன்ன பொருளாதார ரீதீல ஒதுக்கீடு குடுத்தா நல்லதுதானே?ன்னு கேட்டேன்.

ஆனா அதையும் அவன் விட்டுவைக்கல.
“யோவ் இட ஒதுக்கீடுங்கறது பொருளாதாரத்த வெச்சு கணிக்கறதில்ல…
சமூக இழிவை கணக்குல வெச்சு கணிக்கறது. பொருளாதாரம்கறதே நெலையத்தது. .
இன்னைக்கு ஓட்டாண்டியா இருக்கறவன் நாளைக்கு ஒசரத்துக்குப் போயிடுவான்.
நாளைக்கு… ஒசரத்துல இருக்கறவன் அடுத்த நாள் தெருவுல நிற்பான்.
எப்படி நின்னாலும் சமூக ரீதியா அவன் மதிக்கப்படறானா இல்லையாங்கறதுதான் ரொம்பவும் முக்கியம்.

ஆந்திராவுல ஆறு மாசத்துக்கு முன்னாடி ஓகோன்னு இருந்த விவசாயிக ‘ஹீலியோத்தீஸ்’ன்னு
ஒரு புழு பயிர்களத் தாக்குனதால தற்கொலையே பண்ணிகிட்டாங்கய்யா.
நேற்று லட்சாதிபதியா இருந்தவன் இன்னைக்கு பிச்சாதிபதியாக்கூட இல்ல…
‘மேலயே’ டிக்கட் வாங்கீட்டு போய் சேர்ந்துட்டாங்க….
இப்ப புரியுதா…பொருளாதாரம்கறதே நிலையத்ததுன்னு நாங்க சொல்றது.

இந்த நாட்டோட சனாதிபதியா நாராயணன் வந்ததும் திருப்பதி தேவஸ்தானத்துல ஒரு தீர்மானம் போட்டாங்களே அது பத்தி தெரியுமா…?”ன்னான்.

வழக்கம் போலத் தெரியாதுன்னேன்.

” ‘இனிமேல் சனாதிபதியோ யாரோ…யாரா இருந்தாலும் இனி தேவஸ்தானம் முடிவு பண்றவங்களுக்கு மட்டும்தான்
பூரண கும்ப மரியாதை….சனாதிபதிங்கறதுக்காக எல்லாம் பூரண கும்ப மரியாதை குடுக்க முடியாது’ன்னு…சொல்லுது அந்தத் தீர்மானம்.

இப்பப் புரியுதா உனக்கு சமூக ரீதியான இழிவுன்னா என்னான்னு….?”

இதெல்லாம் எனக்கு இதுவரைக்கும் தெரியலயேன்னு தலையச் சொறிஞ்சேன்.

“உன்னமாதிரி ஆளுகளுக்கெல்லாம் புரிஞ்சிருந்தா…அவுங்க இப்படி தெனாவெட்டாப் படமெடுப்பாங்களா…
எல்லாம் நேரம்.

இந்த வருசம் உங்க சேரனுக்கு இட ஒதுக்கீடு இல்லன்னு வெச்சுக்க…
அடுத்த ஆறு மாசத்துல இதே மாதிரி ஒரு படம் எடுத்து டப்பாக்குள்ள போச்சுன்னா கேர் ஆப் பிளாட்பாரம்ன்னு அவுரே இட ஒதுக்கீடுக்கு அப்ளிக்கேசன் போட வேண்டியதுதான் ஞாபகம் வெச்சுக்கோ.”

முடிவா என்னதான் சொல்றே…

“மொதல்ல அறிவழகன், தமிழரசன்னு பேர் வெச்சவன் எல்லாம் கடத்தல்காரன், கொலகாரன்னு படம் எடுத்து தமிழர்கள இழிவு படுத்தறத கோடம்பாக்கத்துக்காரனுக நிறுத்தணும். இல்லேன்னா எவனாவது நெஜமாவே உங்களக் கடத்தீறப்போறான்…..

புண்ணாக்கு…. வட இந்திய தரம்சந்த் லுங்கட் குடுத்த பணத்துல தமிழர்களுக்கு எதிரா குரைச்சிருக்காரே உங்க சேரன்…
அத நெனச்சாத்தான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு.

அடுத்தது நீ இந்தியனோ…ஆப்பிரிக்கனோ எக்கேடோ கெட்டுப்போ…
ஆனா தமிழனுகள இளிச்சவாயனுகளா சித்தரிக்கறத நிறுத்தணும்.
இந்தியாவையே தூக்கி நிறுத்தறோம்கற போர்வையில
தமிழையும்…தமிழ்நாட்டையும்…தமிழர்களையும் கேவலப்படுத்தறத கைவிடணும்.

சாதிய எந்த அயோக்கியனுக இந்த மண்ணுல உருவாக்குனாங்க என்கிற உண்மை புரியாம எங்க சனங்களே சின்ன மீனை பெரிய மீனு முழுங்கற கதையா…ஒருத்தனை ஒருத்தன் வெட்டிகிட்டு செத்துகிட்டு இருக்காங்களேன்னு ரத்தக் கண்ணீர் வடிச்சுகிட்டு இருக்கோம்.
இந்த நேரத்துல எரியற ஊட்டுல புடுங்கறது லாபம்கற மாதிரி இட ஒதுக்கீடே வேண்டாங்கறீங்க.

இதுக்கு நீங்க மட்டுமில்ல உங்களோட இந்த முட்டாத்தனத்துக்கு முட்டுக் குடுக்கற அத்தனை பேரும் ஒரு நாளு பதில் சொல்லித்தான் தீரணும்.

வந்தே மாதரம்னு சொல்லி…வந்தே ஏமாத்தற வேலை எல்லாம் தமிழர்ககிட்ட வெச்சுக்க வேண்டாம்.

பகல்லயே பசுமாடு தெரியாதவன்
இருட்டுல எருமையைத் தேடுன மாதிரி….
திராவிடர்களோட வரலாறே தெரியாம
இந்திய ‘விடுதலை’ய ஆராய்ச்சி பண்றது நல்ல தமாசு.

சேரன் மாதிரி ஆளுங்க
வரலாறு படைக்கட்டும் தப்பில்ல….
ஆனா அதுக்கு முன்னால
வரலாற்றைப் படிக்கட்டும்.

எச்சரிக்கையுடன்,
பாமரன்.

Advertisements

20 thoughts on “தே.தி.சேரன் ஐயா சமூகத்துக்கு- கிளைமேக்ஸ்

 1. பாதிக்கப்பட்டவர்களின் வார்த்தைகளுக்கு பயந்து கொள்ளுங்கள் இறைவனின் வார்த்தைக்கும் பாதிக்கப்பட்டவர்களின் வார்த்தைக்கும் எந்த இடைவெளியும் இல்லை என்று குரானில் வசனம் உண்டு. உங்கள் எச்சரிக்கைக்கு சம்மந்தப்பட்டவர்கள் பயப்படுவார்கள் என்று நம்புகிறேன் – நாகூர் இஸ்மாயில்

 2. பதிவு நல்லா இருக்கு.

  உங்க பதிவின் பேக் க்ரவுண்ட் கலரை வெளிர் நிறத்துக்கு மாற்றுங்கள்.
  மணிரத்னம் படம் போல ஒரே இருட்டா இருக்கு. இந்த கணினியில்
  பின்னூட்டமிடம் பெட்டி கூட தெரியவில்லை.

  இணையத்தில் டார்க் பேக்க்ரவுண்டில் எழுதக்கூடாது என்பது முதல் விதி.

 3. அன்புமிக்க ஆதிரை…மற்றும் நண்பர்களுக்கு,
  மிக விரைவில் நீங்கள் சொன்னது போல் வண்ணத்தை மாற்றி விடுகிறோம்.
  சிரமத்திற்கு மன்னிக்க.
  உங்கள் அன்புக்கு எம் நன்றி.
  அன்புடன்,
  பாமரன்.

 4. நல்லா சொன்னீங்க பாமரன். உங்க நடை ரொம்ப நல்லா இருக்குங்க.

 5. படிக்க படிக்க படிச்சிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.. எப்படி இப்படி எல்லாம் எழுதி அசத்தறீங்க..??

 6. மற்றவர்கள் சொன்ன மாதிரியே.. கலரும் , எழுத்தினையும் சற்று பெரிதாக்கிவிடுங்கள்..படிக்க மிகவும் சிரமமாக உள்ளது

 7. தலையை தடவி குத்துவது என்பது இதுதானோ …?

  எம். ரீஷான் ஷெரீஃப் ,
  இலங்கை

 8. இப்படி போட்டாத்தாய்யா அடுத்தவன் காசுல படமெடுத்து கருத்து சொல்றவனுக்கெல்லாம் புத்தி வரும்.தகுதி திறமையத்த தண்டபாணி மாதிரி
  ஊருக்கு ஒரு ஆள் இருந்தா நம்ம தமிழ்நாடு உருப்பட்டுரும்.

 9. தேசிய கீதத்தை முன்வைத்து எழுதப்பட்டிருந்தாலும், தற்போதய மாயக்கண்ணாடி வரை பொருந்தி வருகிறது த.தி.தண்டபாணியின் அனைத்து வாதங்களும்.

  இது குறித்தும் த.தி.த.விடம் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்களேன்!!

 10. திரைப்படங்களில் ஒளிந்திருக்கும் மோசடிகளை, அநாகரிகங்களை, அக்கிரமங்களை, அசிங்கங்களை, திரைப்படத்துறையினர் பசு மாட்டு போர்வையில் செய்யும் பாதகங்களை நச்சென்று எடுத்துச் சொல்லும் தங்கள் பணி வாழ்க!

 11. மாயக்கண்ணாடியில் சேரன் என்ன சொல்ல வருகிறார்? ஒண்ணுமே புரியலியே….!
  கடைசியிலே குழப்பம் தான் மிச்சம்.

  எம்.ரிஷான் ஷெரீஃப்,
  இலங்கை.

 12. இயக்குநர் சேரன் ஆனந்த விகடனில் தன்னைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்து, சினிமா உலகில் நுழையப் போராடும் எத்தனையோ பேர் தங்களாலும் ஒரு காலத்தில் சாதிக்க முடியும் என உற்சாகப்பட்டனர்.வார்த்தைகளை நம்பித்தொடர்ந்தும் போராடிக் கொண்டும் இருக்கின்றனர்.
  மாயக் கண்ணாடியில் சினிமாவில் ஜெயிக்க போராடுவது வீண் என்று சொல்ல வருகிறார்.இரண்டிலும் ஏன் இத்தனை முரண்பாடு…?
  உண்மையில் என்னதான் சொல்ல வருகிறார்…?

  எம்.ரிஷான் ஷெரீஃப்,
  இலங்கை.

 13. அன்பிற்கினிய அண்ணனுக்கு வணக்கம், தம்பி வீரமணி.எழுதுகிறேன்……,சேரனின் தேசிய பக்தி, சாதீய பக்தி, ஊன அனுதாபம், வெளிநாட்டுவேலை வேண்டாம் என்கிற குரல்,கிராமத்துக்கு திரும்புதல், ஊருக்கு ஊரு காதலிகள், தந்தை மகன் உறவு, செய்வனதிருந்த செய்,…………………………………..என்கிற அனைத்து நாட்டும் ஒரு வியாபார நோக்கத்தோடும் தனித்த அடையாளத்திற்காகவும் செய்யப்பட்டதுதான் ஆனால் அதில் இவ்வளவு பெரிய சூழ்ச்சி இருக்குமென்று நினைக்கவில்லை….தெளியப்படுத்தியதற்கு நன்றி….
  தெளிவுப்படுத்துங்கள்
  பாசத்துடன்
  தம்பி
  வீரமணி

 14. Dear Pamaran,

  What is wrong with you?
  If you start finding fault in each and every thing there may not be any end.
  Pl try to change the view of you.

  You say, that fore fathers of ceratain caste did some cruel things to so called “SC/ST”. For that why you start to affect the real SC/ST of the society? if Economy is unstable why cant we make caste as unstable. So many of us change to other caste.. Is it not happening now??

  Ok could you challenge to Thiruma valavan to take his party’s leadership? or try ramadoss..
  Sankarachariyar is a total fraud. Matt is their Head Qtrs? Y do u want to own that? Is it to own Swarnamalya?

  // எச்சரிக்கையுடன், பாமரன்.//

  Try to learn and teach obedience to u and ur readers. ( I am also one of them)

  Thanks,
  Prabhu.

 15. ப்ரபுவிற்கு ஏன் இவ்வளவு கோபம்….இன்னும் ஒடுக்கப் பட்டவர்களின் வலி உணரும் பக்குவம் வர வில்லை என நினைக்கிரேன்..மன்னிக்கவும் தவறு இருப்பின்.

 16. sir,

  nattula evvalavo smacharam irrukku.atha vittitu en sir cinamakaranai patthi pesi time waste pantringa. unkalukku popularity kitaikanumna??

  ivan,
  Bala

 17. இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் உங்கள் இணைய முகவரி கிடைத்த்து.
  மிக அருமை!!!!!!!!!!
  என்னை போன்ற தோழர்களின் உள்ளார்ந்த வெளிப்பாடு.
  தொடரட்டும் தங்கள் சீரிய பணி

  மகிழ்ச்சியுடன்,
  மகிழ்நன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s