திரை – புலம்பல் பக்கம்

thirai1.jpg திரை

Perfection is Death – ஓஷோ.

அப்போது எனக்குத் தெரியாது,இன்னொரு சக உயிரை இழிவுபடுத்துகிறேன் என்பது… என்னைச் சுற்றியிருந்த சகல சூழலும் அதை நியாயமெனவே கூறின. அத்தகைய பாடல்களை அவர்களை நோக்கிப் பாடுவதற்காக அவமானப்பட்டதில்லை நான். அவர்கள் அனைவருமே அவமானப்படுத்துதல்களுக்கும்,இழிவுகளுக்கும் பொருத்தமானவர்கள்தான் என்கிற வகையில் அமைதி காத்தது சுற்றுப்புறம்.

கல்லூரி நாட்களில் அவர்களை போலவே பேசுவது…

‘பொழுதோட கோழி கூவுற வேளை’ என்று பாடுவது…

சில அடிகள் நகர்ந்ததும் ‘ஒம்போது’ என்று குரல் கொடுப்பது…

ஆனால் நாய்களோடு மல்லுக்கு நிற்பதை எப்போதும் விரும்பியதில்லை அந்த மனிதர்கள். உடல் ரீதியாக உருக்குலைந்து போன அந்த மனிதர்களைக் கண்ணியக்குறைவாகவும், மனித நாகரீகமற்றும் நடத்த என்னைத் தூண்டியது எது என எண்ணிப் பார்க்கிறேன். நான் பார்த்த திரைப்படங்கள்… படித்த பத்திரிகைகள்… பழகிய ‘மனிதர்கள்’…என எல்லாவற்றுக்குள்ளும் அந்தக்கேவலம் ஒளிந்து கொண்டிருந்தது.

இவற்றில் முதலாவதாக முன் நிற்பது சினிமாதான் . அது மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை மாறவேயில்லை. பழைய பாலாபிஷேகம்,ஒரு தலை ராகத்திலிருந்து நேற்றைய விவேக் படம் வரைக்கும் இந்த ஜென்மங்கள் திருந்தவேயில்லை. மனிதத் திரளில் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் அடுத்ததாய் மூன்றாவது பாலான அவர்கள் குறித்து அக்கறை இல்லாவிடினும் அவமானப்படுத்தாமலாவது இருக்கலாம் இவர்கள்.

‘மதம் குறித்தோ,சாதி குறித்தோ வசனங்கள் வந்துவிடக் கூடாது… ஆபாசக் காட்சிகள் இடம் பெற்றுவிடக் கூடாது…’ என்பதற்காகக் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கத்தரிக்கோலுடன் சுற்றுவதாக நம்பப்படும் தணிக்கைக் குழு,அலிகள் இடம்பெறும் காட்சிகளின் போது மட்டும் ஒட்டுமொத்தமாய்த் தற்கொலை செய்து கொள்கிறது.

அநேக விஷயங்களில் மாறுபாடுகள் இருப்பினும், அலிகளை மனிதநேயம் மிக்கவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் காட்டியிருந்தார் மணிரத்னம் தனது பம்பாயில்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் நாடெங்கும் நடந்த வேளையில்… ‘ஆசியாவின் அறிவு ஜீவி’யான ஒரு ‘பத்திரிக்கையாளர்’ திருவாய் மலர்ந்தார்… ‘கொஞ்சம் விட்டால் அலிகளுக்கும்கூட இட ஒதுக்கீடு கேட்பீர்கள் போலிருக்கிறதே?’ என்று. மிக புத்திசாலித்தனமாகக் கேட்பதாகக் கருதிக் கொண்டு கேணத்தனமாகக் கேட்ட கேள்வி அது என்பது இருக்கட்டும் ஒரு புறம். ஆனால்,உண்மையிலேயே இந்த அரசு அதிகாரத்தில் அலிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தே தீர வேண்டும் என்பதுதான் சரி. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்கு தள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு இவர்களுக்கும் அளிக்கப்பட்டேயாகவேண்டும் என்பதுதான் நியாயமானது. அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் மூன்றாம் பாலருக்கான ஒதுக்கீடு அளிப்பதுதான் நாமும் மனிதர்கள் என்பதை ஊருக்குச் சொல்லக் கிடைத்த ஒரே வாய்ப்பு.

மனித இனத்தின் மற்றொரு பிரிவினரான இவர்கள் ரேஷன் கார்டு தொடங்கி, எந்த விண்ணப்பப் படிவத்தையும் இட்டு நிரப்ப அனுமதி மறுக்கப்பட்டவர்கள். ஆண்பால்-பெண்பால் இவற்றுக்கு அடுத்தாக மூன்றாம் பால் என இடம் ஒதுக்கப்பட வேண்டும் விண்ணப்பப் படிவங்களில்.

அதிலும் படிவங்களுக்கு முன்னதாக நமது இதயங்களில்.

இந்த விஷயத்தில் தென்னகத்தை விடவும், வடக்கு ஓரளவு இம்மக்களைப் பண்போடு நடத்துவதாகவே தோன்றுகிறது எனக்கு. அவர்களது வீட்டு விருந்துகளில் பங்கேற்கச் செய்வதிலிருந்து, மாநகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பது வரைக்கும் மூன்றாம் பாலரை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

மதத்தால் ஒடுக்கப்பட்டவர்கள்-நாடு கோருகிறார்கள்….

மொழியால் ஒடுக்கப்பட்டவர்கள்-நாடு கோருகிறார்கள்….

சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள்-மாநிலம் கோருகிறார்கள்….

ஆனால் இந்த மனிதர்கள் கோருவது நாடோ…

மாநிலமோ…

மாவட்டமோ அல்ல…

மனிதம்.

அலிகள் என்னும் மனிதர் குறித்து ‘நிறப்பிரிகை’ இதழ் முன்பொரு முறை தனது கவலையையும், அக்கறையையும் பதிவு செய்திருந்தது. அதிலொருவர் இப்படிச் சொல்லியிருந்தார். ‘வாழ்க்கைல நாங்க காண்ற சுகமே ஒண்ணே ஒண்ணுதான். நாங்க ஆடறோம், பாடறோம், எவ்வளவோ பேரு எங்களை ரசிக்கிறாங்க. ஒரு தியேட்டர்ல படம் பார்க்கப் போறாங்க. ஃபிலிம் ஓடற வரைக்கும் படத்தப் பார்க்குறாங்க. படம் ஓடி முடிந்த பிறகு வெறும் திரையை யாராவது பார்க்குறாங்களா? அந்தத் திரைதான் நாங்க.”

திரை.

ஆம்.

‘வெறும் திரை’.

ஆனால் அந்த வெறும் திரையையும் அர்த்தமுள்ளதாக்க முடியும்…

நாம் மனதுவைத்தால்……

25 thoughts on “திரை – புலம்பல் பக்கம்

 1. இந்தப் பதிவை படித்தால் வித்யா மிகவும் சந்தோஷப்படுவாங்க. கேள்விப்பட்டிருப்பீங்க. அவங்களப் பத்தி livingsmile.blogspot.com

 2. திடுக்கிடும் சீர்திருத்தமும், சமூக அக்கறையும் உள்ள / உள்ளதாக கூறிக்கொள்ளும் பலரிடம் திருநங்கைகள் குறித்த கரிசனம், சிந்தனையும் வெட்ககரமாக மிக அரிதாகவே உள்ளது. இந்நிலையில், திருநங்கைகள் குறித்த தங்களது தொடர் சிந்தனையும், அக்கரையும் ஆரோக்கியமானதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  //// இந்தப் பதிவை படித்தால் வித்யா மிகவும் சந்தோஷப்படுவாங்க. கேள்விப்பட்டிருப்பீங்க. அவங்களப் பத்தி livingsmile.blogspot.com ///

  சந்தோசமே என்னைப் போன்ற ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாத போதும், பாமரன் போன்ற ஆளுமைகள் திருநங்கைகள் குறித்து பேசுவதும், எழுதுவதுமே அதிக மக்களை விழிப்படையச் செய்யும்!!

  நன்றி!!

 3. மிக்க நன்றி வித்யா…
  எழுத்தில் மட்டுமில்லை…
  என்னால் முடிந்த அளவு கொஞ்சம் செயலிலும் எனது பங்களிப்பை அளித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
  ஒரு முறை தொலைபேசியில் பேசினேன்.
  நினைவிருக்கிறதுதானே?

 4. பம்பாய் படத்தில் ஒரு அலியிடம், “நீங்க இந்துவா? முஸ்லீமா?” என்று கேட்கப்படும், தியேட்டர்ல ஒரு கூட்டம் கத்தியது, “அது இருக்கட்டும், நீ ஆம்பளையா? பொம்பளையா? அத சொல்லு முதல்ல?” என்று – தியேட்டரே சிந்திக்காமல் சிரித்தது – உங்கள் திரை சிந்திக்க வைப்பதுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது – தங்களின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தும் நேசித்தும் வரும் – நாகூர் இஸ்மாயில்

 5. anbu pamaran, theendamay pondre thirunangaikal kodumayum. nan yerkanave ungalidam idhu patri pesiyiruppadhaga ninaivu.tharpodhu thirappadangalil siriya rollkalil nadikkum chelladurai ennum nadigar 30 aandukalukku munnare indha pirachinai patri yosithu oru nadagam panna enninar. aanal andha ennam niraiveravillai .ippodhu neengal oruarogyamana vivadhathai thodangi ulleerkal.nallatheervu pera valthukkal

 6. Pingback: Transgenders - Pamaran « கில்லி - Gilli

 7. //// மிக்க நன்றி வித்யா…
  எழுத்தில் மட்டுமில்லை…
  என்னால் முடிந்த அளவு கொஞ்சம் செயலிலும் எனது பங்களிப்பை அளித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ///

  தெரியும்..

  ஒரு முறை கோவையில் ஒரு “அச்சுப்பிழை” திரையிடல் நடத்தியது.

  ஒரு முறை பேரணி ஒன்றில் துவக்க விழாவிற்கு வருகை தந்ததோடு, முடிவில் நல்ல உரையொன்றும் அளித்திருந்தீர்கள்.

  அதனால் தான் தொடர் சிந்தனை, அக்கரையென்று குறிப்பிட்டேன். வேறு ஏதேனும் நிகழ்வுகள் இருந்தாலும் தெரியப்படுத்தவும். அது எனது ஆவணத்திற்கு பயன்படும்.

  நன்றி

  /// ஒரு முறை தொலைபேசியில் பேசினேன்.
  நினைவிருக்கிறதுதானே? ///

  நன்றாக நினைவிருக்கிறது; தாங்கள் நினைவில் வைத்திருப்பதற்கும் நன்றி

 8. பாமரன்,
  அருமையான பதிவு. நானும் என்னுடைய நினைவுகளை ‘திருநங்கைகள்’ என்ற பதிவில் போட்டேன். ஆனால் அந்த பதிவில் என்னுடைய எண்ணத்தை சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

 9. சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி ஒரு நல்ல பதிவு என்று கருதுகிறேன். நீங்கள் படித்திருக்ககூடும்

 10. பாமரன்,
  மிக சிறந்த ஒரு பதிவு.உங்களைப்போன்ற எழுத்தாளருக்கு இருக்கின்றகிற சமூக பொறுப்புணர்வு ஏன் திரைதுறையினருக்கு வரவில்லை.வருத்தமாக இருகிறது.

  • Anbulla Thiru Pamaran,
   Ennudaya karuthukalai Thamizhil ezhutha virumukiren. Eppai ?
   Please help me. i want to write my comments in Tamizh.
   Swaminathan

 11. Ayya,
  En manam oppiya muthal thamizh ezhuthaalar (allathu puratchi chinthanaiyaalar) engira vagaiyil (thanggalukku athil perumai illavidinum) thanggal ennanggalai aamoothiththathaal, netru ‘naan’ enra peyaril oru ethirvinaiyai (??) anuppiyiruntheen.. thaanggal athai uthaaciinappaduththiyamaikku varunthukireen…

  regards,
  naan

 12. உங்களது பதிவுகளை சில நாட்களாகத்தான் படித்து வருகிறேன். மிக அருமை…

 13. தேத்தா சாப்பிட்டு திரும்புரேன் எந்துதானே லண்டனுக்கு வெளிக்கிட்டீர்
  எப்போ திரும்புரீர்கள்

 14. உங்களது பதிவுகளை padikum pothu nane konjam konjam maha thalivadaikerane……..
  Nandri….

 15. உடல் ரீதியாக துன்பப்பட்டவர்களை பற்றிய உங்கள் கட்டுரை நலம். அதே நேரத்தில் அவர்களில் “சிலர்” சரியில்லை என்பது நான் கேள்வி பட்ட உண்மை.(உ).ரயிலில் பிச்சை எடுப்பது, பாலியல் சம்பந்தமான பிரச்சனையில் பிற்போக்குத தனமாக நடந்துக் கொள்வது என பல உதாரணங்கள் சொல்லலாம்.

 16. திருணங்கை சமூகத்தின் மீதான புதிய பார்வை அனைவருக்கும் தேவை. சிரித்தால் சிரிக்கவும், அடித்தால் அழவும் அவர்களுக்கும் மனம் உண்டு என்பது ஏனோ பலர் உணர்வதே இல்லை.

 17. உண்மையிலேயே இந்த அரசு அதிகாரத்தில் அலிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தே தீர வேண்டும் என்பதுதான் சரி. Thangalum Ali endru solvathai thavirthirukalam.

 18. hi sir ! i am ur fan. neenga thirunangai pathi eluthinatha nan padichen sir.really super sir.nan livingsmile vidhya avangaioda blogspot pathu iruken.but namba makkal thiruntha matanga sir.avangalum human being thane yen intha samuthayam verukuthu

 19. paamaran iyya! vanakkam,naan ungal neenda naal puthaga thozhan,ungal puthagam annaithum padithirukiren ennil ungal thaakkam miguthi naan oru tharkaaliga thamizh perasiriyar,nandri.en e-mail: kadamburramesh@gmail.com.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s