நான் தேசபக்தன் அல்ல…

“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்…? கொண்டாட மாட்டீர்களா…?” என்றது தொலைபேசிக்குரல்.
அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்…? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை…” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை.
தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.
இரண்டுமே எனது வேலையில்லை…” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது…’ என்று வாழ்த்தி இருக்கிறாரே…?”

அப்படியானால்…
ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’
என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்…? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்…
இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை…”என்று
தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி…?”

“மகன் செத்தாலும் சரி… மருமக தாலி அறுக்கணும்…”

“ச்சே… தேசபக்தியே கிடையாதா…?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது.
ஆனால்… தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.
எம்மைப் போலவே பசியிலும்… பட்டினியிலும் உயிரை விடுகிற…
தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்… தீப்பெட்டிகளையும்
வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற…
நிலங்களை இழந்து…
வாழ்க்கையை இழந்து…
விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக
வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற…
சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு…
பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு…
இலங்கை மக்கள் மீது காதல் உண்டு…
நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு…
இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற
ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல்,
இந்தியாதான் ஜெயிக்கணும்… பாகிஸ்தான் தோற்கணும்… என்கிற
ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்…
மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.
அப்படி பார்த்தால் ஜாக்கிசான் ,அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்…என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால்
எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது.
அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்
வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற
அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்…?

இந்துஸ்தானோ…
பாகிஸ்தானோ…
இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.
அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ…
விவசாயக் கூலியோ…
மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்…’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க…?’ என்பான்.
கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்….”சாமிக்கு இது எத்தனாவது வருசம்…?” என்பான்.
எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.
அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க…” என்று
கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே… 
“…யோளி… அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே…?”
என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி….

அதுவரை டீக்கடை தொடங்கி
பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும்
கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன…?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன…?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே
இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள்
பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக…
சாதிச் சண்டையாக …
மதச் சண்டையாக…
மாநிலச் சண்டையாக…
உருவெடுத்து தற்காலிகமாக
இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன…
வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட
பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்…?
அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக்
கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்…

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்…

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு
கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்…

ஆனால் தெருக்களிலும்…
தேநீர்க் கடைகளிலும்…
திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.
என்னே தேசபக்தி…?

பாவம்…
இவர்கள் விளையாட்டை
போராகப் பார்க்கிறார்கள்
போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்
தண்டனை நம்மைப் போன்ற
‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது…?
 

23 thoughts on “நான் தேசபக்தன் அல்ல…

 1. மீண்டும் ஒரு சாட்டையடி பதிவு . எங்கேயோப் படித்த ஹைக்கூ கவிதை நினைவுக்கு வருகிறது.

  “நானும் இந்தியன்
  கிரிக்கெட் ஆட்டத்தின் போது
  மட்டும்”

 2. //பாவம்…
  இவர்கள் விளையாட்டை
  போராகப் பார்க்கிறார்கள்
  போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

  இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்
  தண்டனை நம்மைப் போன்ற
  ‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது…?
  //

  Well written

 3. //பாவம்…
  இவர்கள் விளையாட்டை
  போராகப் பார்க்கிறார்கள்
  போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

  இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்
  தண்டனை நம்மைப் போன்ற
  ‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது…?

  //

  நெத்தியடி!

 4. ”அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள்
  பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்” ,

  ”பாவம்…
  இவர்கள் விளையாட்டை
  போராகப் பார்க்கிறார்கள்
  போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

  இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்
  தண்டனை நம்மைப் போன்ற
  ‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது…?”

  அருமையான பதிவு

  -கருணா-

 5. இறுதியில் மண்டியிட்டு கிடப்பது என்னவோ அமெரிக்கா விடம் தான்… நல்ல வரிகள்…

 6. நண்பர் ஒருத்தருக்கு அனுமார் மேலயும் இந்திரா காந்தி மேலயும் கடுமையான கோவம். என்னய்யான்னு கேட்டா இந்தியா தோத்ததுக்கு அவங்கதான் காரணம்ங்கறாரு.

  மண்ட கொழம்பிப் போயி காரணம் கேட்டா அவர் சொல்றாரு, “இலங்கைய அனுமாரு முழுசா எரிச்சிருந்தா நம்மளுக்கு இப்படி நாயடி பேயடி கெடைச்சிருக்குமா? இந்திராம்மா சும்மா கெடக்காம பங்களாதேசத்தைப் பிரிச்சுக் குடுக்கப் போய்தான நாம இப்படி தர்மடி வாங்கவேண்டியதாப் போச்சு”

  thankls to nilacharal.com

 7. Pingback: DesiPundit » Archives » தேசபக்தி

 8. Really nice……………even i also did the samething………..thank you sir………..
  i like that line”kadaisiya america kitta mandi podurom”

 9. //நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக்
  கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்…

  பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்…

  உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு
  கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்…

  ஆனால் தெருக்களிலும்…
  தேநீர்க் கடைகளிலும்…
  திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.
  என்னே தேசபக்தி…?
  ///

  நம்முடைய மக்கள் , அவர்களுடைய உரிமை, அவர்களுடைய வாழ்க்கை அவற்றிர்க்காக நம் நாட்டின் கொள்கைகள் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பது தான் தேசப்பற்று என்பதை நெத்தியில் அடித்தாப்பல சொல்லிவிட்டீர்கள்

 10. anbu pamaran, iyyappan viradhathayum cricket matchayum compare pannum yosanai ungalaithavira veru yarumkkum varadhu. super

 11. வணக்கம், இந்த விளையாட்டால் அறிவும் செல்வமும் பெருகும் இது உங்களை போல் உள்ள பாமரர்களுக்கு தெரியாது.

 12. ” சின்னகுண்டூசி” பாமரனின் கட்டுரை ” பெரியார், நான் தேசாபிமனி அல்ல மனிதாபிமானி ” என்று
  கூரியது தான் நினைவுக்கு வருகின்றது.

 13. கணனியின் விசைப்பலகையில் விரல்களால் தட்டுகிறீர்களா? இல்லை, துப்பாக்கியால் தட்டுகிறீர்களா? வார்த்தைகள் தோட்டாக்களாக சுட்டு தள்ளுகிறதே!, ஆனால், இறந்து விட்ட மனிதாபிமானத்தை உயிர்ப்பிக்கும் வித்தியாசமான தோட்டாக்கள் உங்களுடையது – நாகூர் இஸ்மாயில்

 14. சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள். உண்மைதான். ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் இருந்தேன் என்பதை எண்ணி வெட்கி தலைகுனிகிறேன்.

 15. anbu thozhar, vanakkam, baala vayathu muthale ungal ezhuthin rasigan naan.” che” ponra suyanalamatra manithargalai enakku arimuga patuthi, pin enai “bolivian diary” padikka thoondiyathum thangalin ezhuthu mattume. ungalai uyarsaathi vaguppinarin mel veruppu kondavar ena sil antha vaguppu abimaanigal mattum kutram kooruvathu, “netri kannai thirappinum kutram kutrame” ena antha vaguppinai saarnthavar sollaathathuthaan…..

 16. Comment by செந்தில் வெ கி on May 25, 2007 12:03 pm
  வணக்கம், இந்த விளையாட்டால் அறிவும் செல்வமும் பெருகும் இது உங்களை போல் உள்ள பாமரர்களுக்கு தெரியாது

  Yarayya pamaran…. intha vilayattal arivu perugathu… paithiyamthan pidickum….

 17. இவர்கள் விளையாட்டை
  போராகப் பார்க்கிறார்கள்
  போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.
  //

  சாட்டையடி !!!!!
  How many tamils know about Eelam?!?!

 18. பாமரனின் அனைத்து கட்டுரையும் ஆழமாக சிந்திக்கவைப்பது மட்டுமில்லாமல் வேறு ஒரு கோணத்தில் தோல் உரிக்கவும் செய்யிகிறது. இன்று வரை ஆகி வந்த ‘ஆகம’ களை உடைந்து பொடி பொடியாகிறது.
  காலம் காலமா ஒடுக்கப்பட்டு கிடக்கும் தமிழ்ர்களின் குரலாகவேபடுகிறது. மென்மேலும் இப்பணி தொடர வாழ்த்துகள்.

 19. vanakkam pamran avargale. ungal elutthukkalai kumudattil neengal valikkum balachandarukkum eludiya pagiranga kadithangalilirundu vasittu varugiren. ungaladu anaithu karuttukkalium naan eetrukolladapodum ungaladu eluttu nadaiyai naa migavum nesiikeren.

 20. //பாவம்…
  இவர்கள் விளையாட்டை
  போராகப் பார்க்கிறார்கள்
  போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.//

  you are right.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s