நீங்க மனசுக்குள்ள திட்டறது கேக்குது…
என்ன செய்ய…திடீரென குமுதம் தொடர்… “படித்ததும் கிழித்ததும்”. வேலை வெளுத்து வாங்குது…
போதாக்குறைக்கு கம்ப்யூட்டர் வேற பொகைஞ்சு போச்சு… அதுக்கு நாயா அலைஞ்சு ஒரு வழியா இன்னைக்குத்தான் வந்து சேர்ந்தது.
இன்னும் ஒரிரு நாளில் வழக்கம் போல் கச்சேரி ஆரம்பமாகும்.
மன்னிக்க.
அன்புடன்
பாமரன்.
பாத்து பாத்து கண்ணு பூத்துப்போச்சு.செல்லா சொன்னாரு உங்க சிஸ்டத்துல
பொகை வந்துருச்சுன்னு.சீக்கரம் வாங்க பாஸ்.
வந்து கலக்குங்க.
செல்லா!
பொசுங்கிய கம்ப்யூட்டாரை விழித்தெழச் செய்வீராக.
🙂
நல்வரவு
ச்சீக்கிரம் வாங்க. இல்லேனா எழுதவேண்டியவை இன்னும் குவிந்துவிடும்
உங்களுடைய டெம்ப்ளேட் “கருப்பு சிகப்பில்” அட்டகாசமாக அமைக்கப்பட்டிருப்பதற்காக வாழ்த்துக்கள்!!!
ஒழுங்கா எழுதணும்.. உலகத்துல இருக்குற அத்தனை குசும்பையும் ஒண்ணா சேர்த்து எழுதினா கம்ப்யூட்டர் பொங்காம என்ன செய்யும்? சூதானமா, நிதானமா இனிமே பார்த்து எழுதுங்க ராசா.. பாவம் கம்ப்யூட்டரு.. வாயில்லா ஜீவன் சாமி.. ‘நாங்க’ன்னு நினைச்சு அதை வதைக்காதீங்க..
வெல்கம் பேக்! 🙂
விரைந்து போஸ்ட் செய்திடுங்கள் தலைவா !
அண்ணா வணக்கம்ங்ணா…
நீங்க பிளாக் ஆரம்பிச்ச விசயம் ஹிந்துல வந்தது…இந்த பிளாக் மேட்டருக்கு நான் புதுசு….
நாய்வால் விழாவுல அச்சுப்பிழை படம் காண்பித்தபோது உங்கள சந்திச்சேன்..(உங்களுக்கு ஞாபகம் இருக்குற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது…உருவத்திலும்தான்..அதனாலே யோசிக்காதீங்க!)…
உங்க எழுத்த தீராநதி எனக்கு அறிமுகப்படுத்துச்சு….அப்புறம் பழைய புத்தகக் கடையில பாலச்சந்தர் படங்களப் பற்றி உங்க நையாண்டி கட்டுரையப் படிச்சு சிரிச்சிட்டே சிந்திச்சப்போ…வேணுமுன்னா வாங்கு..இல்லாட்டி கெளம்புன்னு சொல்றமாதிரி கடைக்காரன் பார்த்ததனாலே…ரோசம் வந்து ஓடி வந்துட்டேன்…
(அப்புறம் என்ன மாதிரி புதிய ஆட்களுக்கு யாரும் வாய்ப்புத் தரமாட்டாங்க…அதனாலே..எனக்கும் ஒரு ஆசை வந்து பிளாக் ஆரம்பிச்சுட்டேன்… உங்க நையாண்டி நக்கல் மாதிரி எழுதிப் பழகப் போகிறேன்…படிக்கிறவங்க பாடு…நம்மள வாழ்த்துங்க….நன்றி.
வாழ்த்தியதற்கு நன்றி