இது பகிரங்கக் கடிதம் அல்ல…

pamaran10.jpg

 முன் குறிப்பு: குமுதத்தில் வந்து கொண்டிருக்கும்
எனது “படித்ததும்….கிழித்ததும்” தொடரை
வாசிக்கிறீர்களா?

அது பற்றி உங்கள் விமர்சனங்களைச் சொன்னால்
என்னை மேலும் செழுமைப் படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
எழுதுங்களேன் ஓரிரு வரியாவது….

இனிய நண்பர்களுக்கு,
முதலில் மன்னியுங்கள் என்னை.
சும்மாவே எனது “சுறுசுறுப்பு” சொல்லிக் கொள்ள வேண்டாம்.
போதாக்குறைக்கு கொஞ்சம் எழுத்து வேலையும்…
அவ்வப்போது வெளியூர்ப் பயணங்களும்
கூட சேர்ந்து கொண்டால் சொல்லவா வேண்டும்?.

நண்பர் கனகராஜ் கட்டுரைகள் அனைத்தையும்
யுனிகோடில் அடித்துக் கொடுத்து
எமது பெரும் சுமையைக் குறைத்திருக்கிறார்.

பதிவே போடாவிடினும் கூட ஒவ்வொரு நாளும் இத் தளத்தை
வந்து பார்வையிட்டுச் சென்ற எண்ணற்ற உள்ளங்களிடம்
மீண்டும் எனது மன்னிப்பினைக் கோருகிறேன்.

திங்களில் இருந்து இனி தொடர்ந்து சந்திப்போம்.

தோழமையுடன்,
பாமரன்