காயமே இது…

 

‘Patriotism is the last resort for the Culprits.’ 

                                                   -மார்டின் லூதர் கிங்.

“என் தாய் நாடு இந்தியா…
இந்தியர் அனைவரும் எனது உடன்பிறப்புகள்…”படித்துக் கொண்டே போனான் மகன்.

அவன் படிக்கப் படிக்க சிரிப்பு வந்தது.

இது கர்நாடக இந்தியர்களுக்குப் புரிபடவில்லையே என்று.

காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனை வந்தாலே போதும் நமது ‘தேசியக்’ கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக திரண்டு ‘சொட்டு நீர்கூட கொடுக்கக்கூடாது’ என்று போடுவார்கள் தீர்மானம்.

கர்நாடக காங்கிரஸ் சொல்வது சரியா… 

தமிழக காங்கிரஸ் சொல்வது சரியா…

இதில் எது சரி…? வாயே திறக்காது அவர்களது ‘தேசியத்’தலைமை.

ஜனதா தளம் மட்டும் சும்மாவா… ஐக்கியமோ… ஐக்கியமற்றதோ… யாருக்கும் குறைந்தவர்களா என்ன…? எடுத்துவிடு அங்கொரு அறிக்கை… இங்கொரு அறிக்கை… இது குறித்து இவர்களது தலைமையும் கப்சிப்.

இந்தத் ‘தேசியச்’ சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்பாத மற்ற தலைமைகளோ… ‘நயாகரா நீர் வீழ்ச்சியைத் தமிழகத்திற்குத் திருப்பிவிட வேண்டும்…

செவ்வாய் கிரத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்து தாமிரபரணியோடு இணைக்க வேண்டும்…’ என்றெல்லாம் அள்ளி வீசுவார்கள்.

காஷ்மீரிலுள்ள பண்டிட்டுகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் காவிரியையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு கதை. மொத்தத்தில் கேணையர்கள் நாம்தான்.

நமக்கு தேசபக்தியை டன் கணக்கில் ஊட்டோ ஊட்டென்று ஊட்டும் தேசிய ஒருமைப்பாட்டின் ஒட்டுமொத்த ஏஜண்டுகளோ இந்த விஷயத்தில் மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
ஆக இவர்களது தேசீயம்… ஒருமைப்பாடு… எல்லாம் தமிழகத்திற்கு மட்டும்தான்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வித்தியாசமானதொரு‘தேசிய ஒருமைப்பாட்டு’ பார்முலாவே வைத்திருக்கிறார்கள்.

பார்த்திபனாகட்டும்… அர்ஜுனாகட்டும்… விஜயகாந்த் ஆகட்டும்…

முதலமைச்சர் என்றால் கடத்தப்பட வேண்டும்.

பிரதமர் என்றால் காப்பாற்றப்பட வேண்டும்… என்பதே அது.

இந்திய விடுதலைக்காவே போராடிய வ.உ.சி.யை பற்றிப் படம் எடுக்கும்போதுகூட ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றே எடுத்தார்கள்.

ஆனால் டிராபிக் போலீசைத் தட்டிக் கேட்கிற கிழடுக்குப் பெயர் ‘இந்தியன்’.

போதாக்குறைக்கு ’40 லட்சம் தமிழர்கள் ‘பிணைக் கைதிகளாக’ கர்நாடகாவில் இருக்கிறார்கள்…பெருமூச்சையும் கொஞ்சம் மெதுவாக விடுங்கள்…’ என்கிற ரகத்தில் வேதம் ஓதுகிறார் படையப்பா.

இது அரசு தூதரல்ல. தேவதூதரே போனாலும் தீர்க்கமுடியாத பிரச்சனை… ஆகவே 40 லட்சம் தமிழரின் பாதுகாப்புக்காக முறத்தால் புலி துரத்திய கூட்டம் வாயையும் மற்றதையும் மூடிக் கொண்டிருப்பது தான் தேசிய சேவை.

அரசியலைப் பொறுத்தவரை… ‘தேசிய’ அரசியலில் குப்பை கொட்டி விட்டு மாநிலக் கட்சியானவைகளும் உண்டு…

உள்ளூரிலேயே ஓணான் பிடிக்க முடியாத ‘ஜாம்பவான்கள்’ ‘தேசிய’ அரசியலை வெட்டி முறிக்கக் கிளம்பிய கதைகளும் உண்டு.

ஆனால் அப்பாவித் தமிழர்களைப் பொறுத்தவரை… ‘தேசிய ஒருமைப்பாடு…’ ‘இறையாண்மை…’ என்பதற்கெல்லாம் அர்த்தமே வேறு. 

 ஈழத்தைப் பொறுத்தவரை இலங்கையின் ‘இறையாண்மைக்குப்’ பங்கம் வராதவாறு உதை வாங்க வேண்டும்.

பம்பாயிலோ… கர்நாடகத்திலோ… என்றால் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் நேராமல் உதை வாங்க வேண்டும். 

எங்கு எவ்வளவு வாங்கினாலும் அங்கங்குள்ள அரசுகளின் இறையாண்மை பாதிக்கப்படாமல் வாங்கவேண்டும் என்பதே தேசபக்திக்கு அடையாளம்.

போங்கடா நீங்களும் உங்க தேசியமும்.

நன்றி: தீராநதி

8 thoughts on “காயமே இது…

 1. //’40 லட்சம் தமிழர்கள் ‘பிணைக் கைதிகளாக’ கர்நாடகாவில் இருக்கிறார்கள்…பெருமூச்சையும் கொஞ்சம் மெதுவாக விடுங்கள்…’ என்கிற ரகத்தில் வேதம் ஓதுகிறார் படையப்பா.//

  அவர் ஓதவில்லை. அவருடைய பேட்டியில், ஆள்காட்டி விரலை உயர்த்தி ” அங்கேயும் தமிழர்கள் இருக்கிறார்கள்”. என மிரட்டுகிறார்.

  அய்யா இந்த தேசிய எ(ஒ)ருமைபா(ட்)டை மாண்புமிகு மஞ்சள்துண்டு ஓணத்திற்க்கு விடுமுறை அளித்து நிருபித்துவிட்டார்.குமுதம் படித்ததும் கிழித்ததும் பகுதியில் கிழித்துவிட்டீர்கள்.மிகவும் அருமை…….

  அடுத்து நம்ம மார்வாடி மச்சான் ஹோலி பண்டிகைக்கு லீவு.வேற யாரெல்லாம் இருக்காங்க…. எல்லோருடைய பண்டிகைக்கும் லீவு விடுங்க… அப்புறம் என்ன உங்களுக்கு மஞ்சள்துண்டு…என்னப்போல இருக்குறவனுக்கு தலைல துண்டு…

  //அப்பாவித் தமிழர்களைப் பொறுத்தவரை… ‘தேசிய ஒருமைப்பாடு…’ ‘இறையாண்மை…’ என்பதற்கெல்லாம் அர்த்தமே வேறு.

  ஈழத்தைப் பொறுத்தவரை இலங்கையின் ‘இறையாண்மைக்குப்’ பங்கம் வராதவாறு உதை வாங்க வேண்டும்.

  பம்பாயிலோ… கர்நாடகத்திலோ… என்றால் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் நேராமல் உதை வாங்க வேண்டும். //

  அருமையாக சொன்னீர்கள் அய்யா…. இவனுக்கு சொரணை எருமைய விட அதிகம்.அதான் அப்படி….

  நன்றி அய்யா… ]
  இங்கனம் கிராமத்தான்

 2. ‘தேசியத்தின்’ உண்மையை நீங்கள் தோலுரித்துக் காட்டியது எவருக்கும் பிடிக்கவில்லை போலும் ஒரு ‘Comment’ஐயும் காணவில்லை.

 3. //’40 லட்சம் தமிழர்கள் ‘பிணைக் கைதிகளாக’ கர்நாடகாவில் இருக்கிறார்கள்…பெருமூச்சையும் கொஞ்சம் மெதுவாக விடுங்கள்…’ என்கிற ரகத்தில் வேதம் ஓதுகிறார் படையப்பா.//

  அவர் ஓதவில்லை. அவருடைய பேட்டியில், ஆள்காட்டி விரலை உயர்த்தி ” அங்கேயும் தமிழர்கள் இருக்கிறார்கள்”. என மிரட்டுகிறார்.

  அய்யா இந்த தேசிய எ(ஒ)ருமைபா(ட்)டை மாண்புமிகு மஞ்சள்துண்டு ஓணத்திற்க்கு விடுமுறை அளித்து நிருபித்துவிட்டார்.குமுதம் படித்ததும் கிழித்ததும் பகுதியில் கிழித்துவிட்டீர்கள்.மிகவும் அருமை…….

  அடுத்து நம்ம மார்வாடி மச்சான் ஹோலி பண்டிகைக்கு லீவு.வேற யாரெல்லாம் இருக்காங்க…. எல்லோருடைய பண்டிகைக்கும் லீவு விடுங்க… அப்புறம் என்ன உங்களுக்கு மஞ்சள்துண்டு…என்னப்போல இருக்குறவனுக்கு தலைல துண்டு…

  //அப்பாவித் தமிழர்களைப் பொறுத்தவரை… ‘தேசிய ஒருமைப்பாடு…’ ‘இறையாண்மை…’ என்பதற்கெல்லாம் அர்த்தமே வேறு.

  ஈழத்தைப் பொறுத்தவரை இலங்கையின் ‘இறையாண்மைக்குப்’ பங்கம் வராதவாறு உதை வாங்க வேண்டும்.

  பம்பாயிலோ… கர்நாடகத்திலோ… என்றால் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் நேராமல் உதை வாங்க வேண்டும். //

  அருமையாக சொன்னீர்கள் அய்யா…. இவனுக்கு சொரணை எருமைய விட அதிகம்.அதான் அப்படி….

  நன்றி அய்யா… ]
  இங்கனம் கிராமத்தான்

 4. யாதும் ஊரே ; யாவரும் கேளிர் !! வெறும் கனவா!!

 5. There is no need for feeling bad for no comments / less no of feedbacks….

  Pamaran..doing a tremendous job never will mind about these kind of recognitions..Or else he would have definitely stopped all these good contributiions far ago.

  Pamaran Sir,

  I am from Udumalpet and I work for an MNC. Though I am having all the urges and feeling like you, I am not ready to leave my job and to come down to road to struggle. This is purely because of my selfishness..

  You are not only talking, but living and setting examples, working hard for betreived people..That way you are really great. Hats off to you and all the best.

  Sorry for posting in English. I did not know how to feed in in Tamil.

  P.S – I have seen you on one Sunday night by 11.00 PM when getting the magazine “Nandhan” near thiruvalluavar bus stand periyaar padippagam. That was 4 years ago. Now that pettik kadai and Nandhan both are not existing.

  Keep up the good work. I started buying Kumudham onlyu for your “Padithadhum Kizhithadhum..”I quit reading all these kuppaigal 4 years back since I read Periayr’s “Kadavul”.

  Natpudan,

  M Rangaraj,
  Mysore.

 6. அன்புள்ள பாமரன்,

  நேற்று தற்செயலாக சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் (தமிழ் நூலகங்களிலேயே மிகச் சிறந்த ஒன்று என்று சொல்லலாம்) உங்கள் ‘படித்ததும் கிழித்ததும்’ கட்டுரைகள் குமுதத்தில்? படித்தேன். வழக்கமாக குமுதம் நான் விரும்பிப் படிக்கும் ஒரு பத்திரிக்கை இல்லை என்றாலும் உங்கள் கட்டுரைகளுக்காகவே பழைய இதழ்கள் அனைத்தையும் தேடித் தேடிப் படித்தேன். சிறப்பாக இருக்கிறது!அற்புதம் என்பதெல்லாம் மிக சாதாரண சொற்கள். நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்! உங்களை ஒரு கூட்டத்தில் சந்தித்து ( செஞ்சிலுவை சஙகத்தில் என்று நினைக்கிறேன்) பேசியது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. நானும் கோவையை சேர்ந்தவன் (உங்களுக்கு வெகு அருகில்) மற்றும் கோவையில் நடந்த துயரங்களில் பாதிக்கப் பட்டபோது கிட்டத்தட்ட உங்கள் வேதனைகளை நானே அனுபவித்து எழுதியதைப் போன்று இருந்தது உங்களின் எழுத்துக்கள். வாழ்த்துக்கள்!

  சண்முகம்.திரு,
  சிங்கப்பூர்.

 7. “Leo Tolstoy, the greatest anti-patriot of our times, defines patriotism as the principle that will justify the training of wholesale murderers; a trade that requires better equipment for the exercise of man-killing than the making of such necessities of life as shoes, clothing, and houses; a trade that guarantees better returns and greater glory than that of the average workingman”
  Goldman, Emma “Patriotism a menace to Liberty” Mother Earth Publishing (1917)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s