எதிர்பார்ப்பு….ஏமாற்றம்….எதார்த்தம்….

கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. 
எமது “புளுக்கையின் கதை” பதிவின் இறுதியில்
பின்னூட்டம் இடுபவர்களுக்கு மட்டும்
மீதமுள்ள அக்கவிதையை அனுப்பி வைப்பதாக
எழுதி இருந்தேன்.

ஆனால் அதைப் பார்த்துவிட்டு 
அனுப்பச் சொல்லி பின்னூட்டமிட்டவர்கள் வெகு சிலரே.
என்ன செய்ய….ஆனாலும் எதார்த்த நிலை இதுதான்.

அந்த எளிய மனிதர்களின் அன்புக்கு செவி சாய்த்து கவிதையின் மீதி இதோ……..

அரசியல் சாரா அறிவு ஜீவிகள்

Otto Rene Castillo (Gautemala) 

1
ஒருநாள்
என் நாட்டு
அரசியல் சாரா அறிவு ஜீவிகள்
எளிமையான எம் மக்களால்
குறுக்கு விசாரணை செய்யப்படுவர்.
தன்னைச் சிறுகச் சிறுக இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென மெதுவாக
அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்
என்று விசாரிக்கப்படுவார்கள்.

ஒருவரும் அவர்களிடம்
அவர்கள் உடைகளைப் பற்றியோ
அவர்களின் மதிய உணவையடுத்த
நீண்ட உறக்கத்தைப் பற்றியோ
கேட்கப் போவதில்லை.
அவர்களின்
‘உலகலாவிய’ கருத்துக் கொண்ட
மலட்டுப் புரட்சியைப் பற்றிக்கூட
அறிய எவரும் ஆவலாக இல்லை.
அவர்கள் தங்கள் நீதியை எப்படிப்
பெற்றார்கள் என்று ஒருவருமே
கலலைப்படவில்லை.

கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ
ஒரு சுய மாறுதலை அவர்கள் உணர்ந்தது பற்றியோ
அவர்களிடம் எதுவும் கேட்கப் போவதில்லை
முழுப் பொய்யின் நிழலிலே
பிறந்த
அவர்களின் மடத்தனமான
சமாளிப்புகளைப் பற்றியும்
அவர்களிடம் கேட்கப் போவதில்லை.

2
அந்த நாளில்
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.
அரசியல் சாரா அறிவு ஜீவிகளின்
புத்தகங்களிலோ,
கவிதைகளிலோ
இடம் பெற்றிராத
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.

ஆனால்
தினமும் அவர்களுக்கு
ரொட்டியும், பாலும் சேகரித்துத் தந்த
ஆம்லெட்டும், முட்டையும் உடைத்து ஊற்றிய,
அவர்களின் துணியை நெய்தும், தைத்தும் கொடுத்த
அவர்களின் வாகனங்களை ஓட்டித் திரிந்த
அவர்களின் நாய்களையும், தோட்டங்களையும் மேய்த்துவந்த
மொத்தமாக
அவர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துவிட்ட
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.
வந்து கேட்பார்கள்:
‘ஏழைகள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருந்தபோது
அவர்களின்
இளமையும், வாழ்வும் திகுதிகுவென எரிந்து
கொண்டிருந்தபோது
நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீரகள்?’

3
என் இனிய நாட்டின்
அரசியல் சாரா அறிவு ஜீவிகளே
அப்போது
உங்களால் பதிலளிக்க இயலாது.
உங்கள் மனோதிடத்தை
மெளனம் அரித்துத் தின்னும்.
உங்கள் ஆத்மாவை உங்கள்
துன்பமே கடித்துக் குதறும்.
உங்கள் அவமானத்தில்
நீங்களே ஊமையாகிப் போவீர்.

15 thoughts on “எதிர்பார்ப்பு….ஏமாற்றம்….எதார்த்தம்….

 1. தோழருக்கு முதற்கன் நன்றி,

  அனைத்து தேசத்திற்கும் பொறுத்தமான சத்திய வார்த்தைகள்.

 2. அன்புள்ள தோழர்,

  இந்த கவிதையின் கருத்து அரசியல் சார்பு ஒவ்வொருவருக்கும் இருக்கனும் என சொல்கிறது .

  அரசியல் சாராமல் ஏழை எளிய மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது
  எனும் உங்கள் எண்ணாமாய் இருக்கலாம்.

  அரசியல் என்பது பிழைப்புவாதமாக அல்லது அதிதீவிரவாத கண்ணோட்டம் மிக்கதாக இருக்கும் சூழ்நிலையில் .

  அறிவிஜீவிகள் ஏதேனும் ஒரு கட்சியை பிடித்து தொங்கத்தான் வேணும்
  என எப்படி எதிர்பார்க்கலாம்

 3. மிக அழகிய அழுத்தமான மற்றும் ஆழமான கவிதை வரிகள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதை மறந்து, மறுத்து உப்பிட்டவரை ஒருபோதும் நினையாதே என்று திரிபவர்கள் சற்றேனும் தங்களை சுயப் பரிசோதனை செய்தால் நலமாக இருக்கும். படிப்பதற்கு சுவராசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்பது தங்களுடைய தலைப்பை போல. என்ன செய்ய தங்கள் புனைப்பெயர் போல அனைவரும் பாமரனாக இருக்கிறோமே!!!

  அன்புடன் சகோதரன்
  Ferozkhan

 4. “அரசியல் சாராமல் எளியோருக்கு ஏதும் செய்து விடமுடியாது” என்று கவிதை பேசுவதாய்த் தியாகு குறிப்பிடுகிறார்.

  கவிதை அவ்வாறு பேசவில்லை என்று நான் நினைக்கிறேன்.

  எது சரி?

 5. மிக சிறப்பான கவிதை…

  பின்னூட்டம் இட்டால் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் சொல்லுரேன்னு சொல்லியிருந்தால், ஒட்டுமொத்த் தமிழ் வாசகர்கள் கூட்டமும் பின்னூட்டம் இட்டிருக்கும்…….

 6. கவிதைக்கு மிக்க நன்றி நண்பரே!

  where is ur office ? என்ற கேள்விக்கு ‘என் அலுவலகம் கோரமங்கலாவில் இருக்கிறது’ என்றேன் ஒரு தமிழ் நண்பனிடம்.
  ‘அவன் ஒரு மாதிரி’ என்று இன்னொரு நண்பனிடம் என்னைபற்றிக்கூறியிருக்கிறான்..

  இந்த மாதிரியான சமூகத்தில் இதுவே அதிகம் பாமரன்.
  மொழியை விட்டுக்கொடுப்பது தான் இங்கு நாகரீகமாம்..

  நாம் நீர்த்துப்போய் விடமாட்டோம்.அது மட்டும் நிச்சயம்.

 7. அய்யா பாமரன் அவர்களுக்கு…..

  நல்ல அழுத்தமான வரிகள்….

  அந்த நியாயதீர்ப்பு நாள் வெகுசீக்கிரம் வரும்…..

  மன்னிக்கவும்… தாங்கள் எப்படியும் இந்த கவிதையை பதிவில் போடுவீர்கள் என்ற நம்பிக்கையில் சென்ற பதிவில் பின்னூட்டம் இடவில்லை…

  நன்றியுடன்

  கிராமத்தான்………

 8. இப்பதிவையும், முந்தைய பதிவையும் அனுப்பியதற்கு நண்பர்களின் எதிர்வினையும், எனது பதில்களும்:

  amirtharaj wrote:

  மக்களுக்கான எழுத்து திடீரென சாத்தியப்படும் ஒன்றல்ல..
  நிறைய உள் வாங்கி, கிரகித்து பின் அப்புள்ளிக்கு நகர்வது
  நடக்கலாம், நடக்கக் கூடும், நடக்கும் என நம்புவோமாக…

  arasu balraj wrote:

  //நடக்கலாம், நடக்கக் கூடும், நடக்கும் என நம்புவோமாக… //

  ஆமென்!

  🙂

  (இறுதி வரிகளை பார்த்தவுடன் எனது இயல்பான நக்கல் எழும்பி விட்டது. கோபித்துக் கொள்ள வேண்டாம், இப்படியொரு பதில் வெளிவருவதே மகிழ்ச்சிக்குரிய விசயம்தான்.)

  gautham wrote:

  மெத்தப்படித்த மேதாவி போல பேசித்திரிபவர்களைச் சாடுகிறாரா? அல்லது நேரடி அரசியலில் நுழையாமல் வெறுமனே எழுத்துக்களால் மட்டும் உனர்ச்சிகளைக் கொட்டி சமுதாய கோபங்களை வெளிப்படுத்தும் எழுத்தாலர்களையும் சேர்த்துச் சாடுகிறாரா என்று தெரியவில்லை.
  தன்னால் இயன்ற சமுதாயப்பணிகளை, விழிப்புணர்வுகளை தங்கள் எழுத்துக்களின் மூலமாக ஏற்ப்படுத்தினால் அதுவும் வரவேற்க்கப்பட வேண்டியதே.
  இவர்களும் கூட மனம் வெதும்பி நேரடியாக போராட்டத்தில் இறங்கவும் கூடும். காலமும் சூழ்னிலையும் அதை தீர்மானிக்கும்.

  arasu balraj wrote:

  கவிதையை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அரசியல் சாரா அறிவுஜீவிகள் என்பது புத்தகங்கள் எழுதுபவர்களை மட்டுமல்ல. தான் உண்டு, தனது வாழ்க்கையுண்டு, தன்னால் முடிந்த நல்லது, சமூகப் பணி, விழிப்புணர்வு என வாழும் ‘டிராபிக் ராமசாமிகளை’த் தான்.

  ஒருவர் சமூகப் விழிப்புணர்வு கொள்வது தட்ப வெட்ப நிலை மாற்றமல்ல, எப்பொழுதுமே அது எதிர்காலத்திற்கு தள்ளிப் போட வேண்டிய ஐந்தாண்டுத் திட்டமல்ல. எதிர்காலம் என்பது அடுத்த கணமும் எதிர்காலம் தான், அடுத்த நூற்றாண்டும் எதிர்காலம் தான். இதனை தயவு செய்து தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விமர்சனமாக எண்ணி சிந்தித்தால் மகிழ்வேன்.

  gautham wrote:

  இதனை தாக்குதலாக எடுத்துக் கொள்ளவில்லை…நன்றி!
  போராட்டமே தினசரி வாழ்க்கையாக இருப்பவர்களை நான் மதிக்கிறேன். எனக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடுகிறார்கள் என்பதையும் புரிந்திருக்கிறேன்.

  தன்னால் இயன்ற அளவிற்கு போராட்டத்திற்கு துணை நிற்பதும்,
  தேவைப்படும்போது போராட்டத்தில் ஈடுபடுவதும்,
  அல்லது எதற்கெடுத்தாலும் பெட்டிஷன் போடுவதும்
  இன்னும் பலவிதமான ராமசாமிகள் இருக்கிறார்கள்.
  இதில் ஏதாவது ஒரு ராமசாமியாகத்தான் நம்மில் பலரும் இருக்கிறார்கள்.

  விமர்சனத்திற்கு நன்றி!

 9. Com. Pamran,

  Thanks for publishing it for everyone. Most of us will agree that this is what exactly the REDGUARDS did about 35 years back in China

 10. ஊசி குத்தியது போல் சுருக்கென்றிருகிறது வலி, நெஞ்சில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s