செயல் மறந்து வாழ்த்துதுமே……

 

“தமிழ் படிச்சா இதுதான் கதி என அச்சுறுத்துகிறது படம்…”

“எம்.ஏ தமிழ் படிச்சா வேலை கிடைக்காதுன்னு எவன் சொன்னது?”

“தமிழ் படிச்சவன இப்படி வன்முறையாளனாவா காட்டறது?”

என ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்கள்

ஆனால் கற்றது தமிழ் அலசுவது அதைப்பற்றி மட்டும்தானா?

‘இந்து’ தொடங்கி ‘இந்தியா டுடே’ வரைக்கும் கிழித்துக் காயப் போட்டு விட்டார்கள் படத்தை. அடுத்த படமாவது சிறப்பாக அமைய ஆசி வேறு வழங்கியிருக்கிறது ஆ.வி.

அப்படியானால் இந்தப்படம் ?

‘கற்றது தமிழை’ யார் யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைவிடவும் யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்பதில் மட்டும் ஒரு ஓரப் பார்வையைச் செலுத்தினால் போதுமானது.

‘கற்றது தமிழ்’ தமிழ் படித்தவனின் நிலையை அலசுகிறது என்பதைக் காட்டிலும் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த சூழலையும் அலசுகிறது என்பதுதான் உண்மை.

அதுவும் இன்றிருக்கும் உலகமயம் தனியார்மயச் சூழலில்…

நினைவு தெரிந்து இதுவரை தமிழாசிரியர் என்றாலே அரைக்கிறுக்கர்களாய்…

மற்றவரது கேலிக்கும் கிண்டலுக்குமான ஒரு பண்டமாய் மட்டுமே கோடம்பாக்க அயோக்கியர்களால் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அதனை இந்தப் படம் மாற்றிக் காட்டியிருக்கிறது.

தமிழ் படித்தவர் தமிழ் இலக்கியம் படித்தவர் தமிழ் ஆசிரியர் என்பவர்கள் யாருக்கும், எவருக்கும் எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை என்பதை உரக்கச் சொல்கிறது கற்றது தமிழ்.

“தமிழ் படிச்சவன்னா சோடா புட்டி கண்ணாடி மாட்டிகிட்டு…………தாடி வெச்சுகிட்டு…………ஜோல்னாப் பை போட்டுகிட்டு டொக்கான் மாதிரி இருப்பான்னு நெனைக்காதே…………தமிழ் சாந்தத்தை மட்டுமல்ல, ரௌத்திரத்தையும் பழக்கியிருக்கிறது” என ஒலிக்கும் பிரபாகரனின் குரல் பல லட்சம் தமிழர்களது உள்ளத்தில் புதைந்து கிடந்த குமுறல்.

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என அச்சுறுத்துவதாக இருக்கிறது என உளறுபவர்கள்…………

“நானாவது ரெண்டு குறள் சொல்லிப் பொழச்சுக்குவேன்.

ஆனா ஹிஸ்டரி படிச்சவன்…………

ஜாகரபி படிச்சவன்…………

எக்கனாமிக்ஸ் படிச்சவன்…………

சோசியாலஜி படிச்சவன்…………

சைக்காலஜி படிச்சவன்…………

பொலிடிசல் சைன்ஸ் படிச்சவன்…………

எல்லாம் செத்தான்.

‘வாத்தியார் வேலை கூட கிடைக்காது” என்கிற வரிகள் அரங்கில் ஒலிக்கும் போது காதுகளில் எதை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் என்பது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

உண்மையில் இக்குரல் தமிழகத்திற்கு மட்டுமில்லை…………

இந்தியாவிற்கு…………

மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்குமான குரல்.

உயர் கல்வியையும்…………

ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காக மட்டுமே கற்றுக் கொள்ளும் கல்வியையும் கிழித்துக் கூறுபோடும் குரல்.

அதுசரி எத்தனையோ துறைகள் இருக்கும்போது I.T என்கிற தகவல் தொழில் நுட்பத் துறையினர் மீது மட்டும் படத்தில் ஏன் இந்தப் பாய்ச்சல்?

நியாயம்தான்.

ஆனால்

மருத்துவர்கள்……….

பொறியியலாளர்கள்……….

கொளுத்தும் வெய்யிலிலும், கொட்டும் மழையிலும் தார் சாலை போடுபவர்கள்……….

என எவரும் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு வருகிறோம் எங்களுக்காக விடிய விடிய PUBS (மதுபானக் கூடங்கள்) களை திறந்து வையுங்கள்என்று கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அதி அத்தியாவசியக் கோரிக்கையை வைத்தவர்கள் இந்த I.T துறையினர் மட்டும்தான். தென்னக உணவக உரிமையாளர்கள் சங்கம் “பன்னாட்டு நிறுவனங்களும்……….பெரும் தொழில் நிறுவனங்களும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அரசு இரவு வாழ்க்கை குறித்தும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தது இம்மேதைகளுக்காகத்தான்.

இங்கு பலரது பகல் வாழ்க்கையே பாடையில் போய்க்கொண்டிருக்கும் பொழுது……….

இரவு வாழ்க்கை குறித்து சிந்திக்கச் சொல்பவர்கள் மீது பாய்ச்சல் வராமல் வேறென்ன வரும்?

இது கற்றது தமிழை இந்த நூற்றாண்டின் ஒரே புரட்சிகரமான படமாக நிறுவும் முயற்சியும் அல்ல………. குறைகளே அற்ற உன்னத காவியம் என உயர்த்திப் பிடிக்கும் போக்கும் அல்ல.

30 களில் தொடங்கிய புராண, இதிகாச படங்களாகட்டும்……….

50 களில் உலுக்கிய பராசக்தி, ரத்தக்கன்ணீர் போன்ற சமூக மறுமலர்ச்சிப் படங்களாகட்டும்……….

60 களில் வந்த பாலச்சந்தர் வகையறாக்களின் நாடகபாணிப் படங்களாகட்டும்……….

70 களின் பிற்பகுதியில் ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த காமிராவை வயல்வெளிகளுக்கு இழுத்துச் சென்ற பாரதிராஜாவின் படங்களாகட்டும்……….

மரியாதைக்குரிய மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்கள் தமிழ் இதயங்களை நெருடிச் சென்ற உதிரிப்பூக்கள், மெட்டி, வீடு போன்ற படங்களின் காலகட்டமாகட்டும்……….

அதை அப்படியே கடத்திக் கொண்டு போய் மசாலாக்களில் மூழ்கடித்த சகலகலாவல்லவர்களின் காலகட்டமாகட்டும்……….

என இப்படிப் பல காலகட்டங்களைத் தாண்டித்தான் வந்திருக்கிறது தமிழ் சினிமா.

“ங்கொம்மா……….ங்கொம்மா என்ன சேத்தி வைப்பாளா?” என்கிற வினாக்களும்……….

கொளுந்தியாளை அடைய “ஆசை”ப் படும்போது கொளுந்தனாரின் மீது ஏன் “உயிர்” ஆக இருக்கக்கூடாது? என்கிற ஆதங்கங்களும்……….

“என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ

என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ” என “கண்ணியத்தை”ப் பறை சாற்றும் குரல்களும்……….

ஒலிக்கின்ற “ஆரோக்கியமான” சூழலில்தான் கற்றது தமிழ் வெளிவந்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டால் மட்டுமே இப்படத்திற்கான தேவை புரியும்.

ரத்தமும் சதையுமாய் பிய்த்தெறியப்படும் அம்மாவின் சாவை நுகரும் ஏழு வயதுப் பிரபாகர்……….

பால்ய தோழி ஆனந்தி……….

வருடிக் கொடுக்கும் தமிழ் அய்யாவால் விடுதியில் வளரும் சூழல்……….

அவர் ஊட்டிய உணர்வால் படிக்கப்போன தமிழ் இலக்கியம்……….

பள்ளி நிர்வாகி குடும்பத்துக்கு ஊழியஞ் செய்து பெறும் தமிழாசிரியர் பணி……….

என நகரும் நாயகனின் வாழ்க்கையில் ஒரு சிகரெட்டுக்காகக் குறுக்கிடும் போலீசால் திக்குத் தெரியாமல் ஓடத் தொடங்குவதை ஒட்டி ஓடத் துவங்குகிறது படம்.

ஒரு காட்சியையும் மற்றொரு காட்சியையும் கண்ணுக்குப் புலப்படாத நூலிழையால் பிணைக்கும் பாங்கு……….

அடி முதல் நுனி வரை சாவுதான் எனக்கு விசிட்டிங் கார்டு என்பதற்கான சாட்சியக்கோர்வைகள்……….

நாயகனின் வசிப்பிட டேபிளில் தென்படும் ஆல்பர் காம்யூவின் அந்நியன் நாவல் புத்தகம்……….

அப்புத்தகத்தின்படி நகரும் இப்படத்தின் இறுதிக்கட்டக்காட்சி……….

பார்க்கும் ஒவ்வொருவருக்கும் விளம்பர இடைவேளையின்றி நகரும் படம்…

சேனல்களை மாற்ற முடியாத ரிமோட்…

ஏழு வயது சிறுவனாகவே இருந்து

ஏழு வயது சிறுவனாகவே மடிந்து போகும் மனோநிலை…

என வித்தை காட்டியிருக்கிறார் ராம்.

ஆனால் இதையெல்லாம் எழுதினால் எனது பெயரும் சைக்கோ.

ஆக சைக்கோக்களே சாதியின் பெயரால் மனிதர்களை குடிசையோடு கொளுத்தாதவர்கள்……….

ஆக சைக்கோக்களே மதங்களின் பெயரால் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் இழுத்துக் கூறுபோடாதவர்கள்……….

ஆக சைக்கோக்களே இனத்தின் பெயரால் மழலைகள் பயிலும் பாடசாலைகளின் மீது குண்டு வீசி கொன்றழிக்காதவர்கள்……….

ஆக நாமும் ஒருவகையில் சைக்கோக்கள்தான்.

நன்றி: நக்கீரன்.காம்

11 thoughts on “செயல் மறந்து வாழ்த்துதுமே……

 1. அருமையான அலசல், இந்த படத்தில் ‘எத்தனை நாளைக்கு தான் பாத்ரூமிலேயே..’ என்பது போல் வசனம் வருகிறதாமே, இதெல்லாம் தேவை தானா? – நாகூர் இஸ்மாயில்

 2. Anandha Vikatan gave 42 Marks… For this movie
  a filthy movie “PokKiri” also got the same marks 42..
  after i got this.. i teared the Pokiri Review Paper and i Cleaned My “Shit”..and after that

  I FELT LIKE ALMIGHTY…

  wonderful thought on a “Wonderful movie..”–> only meaningful thamizh movie which i have seen…

  RAM has the courage to Make real films..not like KB…

  Keep it up PAMARAN…

 3. மிக அருமையான படம்.
  குத்துப்பாடல்களோ,தொப்புள் காட்சிகளோ எதுவுமின்றி படத்தைத் தந்திருக்கும் இயக்குனருக்கு அவரது தைரியத்தையும்,திறமையையும் பாராட்டி பெரும் விருதே வழங்கலாம்.
  லாஜிக்கே அற்ற ‘மலைக்கோட்டை’க்கும் 42%
  அற்புதமான “கற்றது தமிழு’க்கும் 42%
  என்ன நியாயம் இது ஆ.வி ?

 4. அருமையான பார்வை மற்றும் கருத்துக்கள்.
  நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. நானும் IT காரன் என்றாலும், ITக்காரர்கள் செய்வது கொஞ்சம் ஓவர்தான்..

  தொடர்ந்து கிழியுங்கள்.

  நன்றி.

 5. சிறந்த திரை சித்திரம். வந்தாரை வாழவைக்கும் தமிழகம், தமிழுக்காக குரல் கொடுக்கிறவனை வாழவிடாது. தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றதை BA in Tamil literature என்று சொன்னால் தான் புரியுது. விளங்குமா….?

 6. அன்புள்ள் பாமரன் அய்யா அவர்களுக்கு, நான் உங்க எழுத்தோட பரம விசிறிங்க. நானும் உங்க ஊருக்கு பக்கந்தாங்க. ஆனா உங்களமாதிரி கோவை மாநகரம் எல்லாம் இல்லைங்க. ஈரோட்டு பக்கம் ஒரு குக்கிராமம். அரசாங்க பள்ளிக்கூடத்துல படிச்செதெல்லாம் அங்கதாங்க. College கூட Erode Arts College தாங்க. ஆனா மெட்ராஸ் க்கு பிழைக்க வந்து ஒரு 10 வருஷம் ஆச்சு. உங்களோட இந்த பதிவும், கிராமத்தான் அப்படிங்கிற நண்பரோட பதிவும் பார்த்துட்டு, மனசு கஷ்டமாயிடுச்சு. அதனால இந்த பதில் எழுதறேன்.

  எனக்கும் உங்கள மாதிரி ஊட்ல உக்காந்து கட்டுரை, கதை எழுதி பிழைக்கணும்தான் ஆசை இருந்துச்சு. அதுக்கு உங்க அப்பா ugriculture university accountant மாதிரிஇல்ல எங்க அப்பா. அவர் வேற மாதிரி. பிழைக்க பணம் வேணும். அதுக்கு ஒரு படிப்பு வேணும். B.Sc, க்கு அப்புறம் regular ல படிக்க donation கொடுக்க வழி இல்லை. எங்க ஸ்கூல் வாத்தியார் கிட்ட கேட்டேன். MCA படிக்க சொன்னாரு. Correspondence course ல படிச்சு முடிக்கிறதுக்குள்ள தாவு தீந்து போச்சு.

  என்னமோ IT ல இருக்கிரவங்கனால தான் பொருளாதார ஏற்ற தாழ்வு இருக்கிற மாதிரி சொல்றது சரி இல்லை. கிராமத்தான் னு போட்டுகிட்ட சிலபேர் பிறந்த இடம் கிராமமா இருக்கலாம். ஆனா அவங்க கம்ப்யூட்டர் ல கதை எழுதிக்கிட்டு இருக்காங்க. இந்த மாதிரி வெறும் வார்த்தை ஜாலம் செய்யிற எல்லோரும் கடைசியாக போய் விழற இடம் கோடம்பாக்கம். ஒரு சினிமாக்காரன் 4 மாசத்துல ஒரு குப்பை படம் எடுத்துட்டு 50 லட்சம் வாங்கிட்டு போறான். Tax கட்டுறது இல்லை. வருஷத்துக்கு 5 லட்சம் னு சம்பளம் பேசிட்டு tax போக மாசம் 25000 வீட்டுக்கு கொண்டு போற IT காரன் மேல உங்களுக்கு கோபம் வருது. இது உங்களுக்கே அநியாயமா தெரியல? சினிமாக்காரனும், அரசியல்வாதியும் உடனடி பணக்காரன் ஆகி sent, shoe னு போட்டா அது உங்களுக்கு வெறுப்பு ஆகல. ஆனா கஷ்டப்பட்டு படிச்சு வேலைக்கு போய் வாங்கி போட்டா கோபம் வருது. ஏற்ற தாழ்வுகள் IT industry க்கு உள்ளும் இருக்கிறது அய்யா. குக்கிராமத்து பள்ளிக்கூடத்தில படிச்சுட்டு, கஷ்டப்பட்டு MCA படிச்சு முடிச்சுட்டு, எங்க போனாலும் experience இருக்கா னு கேட்டு நிராகரிச்சு, 500 ரூவா சம்பளத்துல ஆரம்பிச்சு 29 வயசுல 10000 சம்பளமா ஆனதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணி, 34 வயசுல மெட்ராஸ் ல tax எல்லாம் போக 35000 சம்பளம் வாங்கி எங்க அப்பா வாங்கின கடன் அடைக்கிற எங்களுக்கும் BE படிச்சு முடிச்ச உடனே college ல இருந்து நேரா office க்கு வந்து மாசம் 20000 வாங்கிட்டுபோற fresher பாக்கும் போது எங்களுக்கும் தான் வெறுப்பு வரும். ஆனா அந்த ஒரு பையானால ஒரு நலிவடைஞ்ச விவசாயி அப்பாவும், அவர நம்பி இருக்கிற ஒரு குடும்பமும் ரொம்ப சந்தோசப்படுது னு தெரிஞ்ச உடனே “அடடா இவனக்காவது நம்மள மாதிரி பெரிய கஷ்டம் இல்லாம சீக்கிரம் வேலை கிடைச்சுதே னு மனசு நிறையும். எங்கள மாதிரி கிராமத்துல பனை மரத்தை விற்று அப்பா காசு கொடுத்து படிச்சுட்டு வந்த யாரும் Pub க்கு போகணும் னு நினைக்க கூட மாட்டான். இது சத்தியம். இந்த மாதிரி படிச்சு வந்தவங்க என்னை சுத்தி நிறைய பேர் இருக்காங்க. எனக்கு தெரிஞ்ச என்னோட நண்பர்கள் வீட்டுல இப்போ தான் கொஞ்சம் வெளிச்சம் வந்து இருக்கு. இன்னும் அது பெரிசாகும். கொஞ்சம் கொஞ்சமா பரவும்.
  கற்றது தமிழ் படத்துல முனைவர் ராசகோபாலன் “இது ஒரு வீக்கம்” னு பேட்டி கொடுக்கிறாரு. அவர் குழந்தைங்க எல்லோரும் BA தமிழ் தான் படிச்சு இருக்காங்களா?
  கிராமத்தில் 8 மணி நேரத்துக்கு மேல வேலை பாக்க முடியாது னு தைரியமா சொல்லுவாங்க னு ஒரு நண்பர் சொல்றார். எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அவர் உண்மையிலேயே கிராமத்தான் தானான்னு தெரியல. ஆனா உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். எங்க ஊர் பக்கம் “பண்ணையத்து ஆள்” னு ஒரு விஷயம் இருக்கு. ஒரு குடும்பமே நிலம் இருக்கிறவங்க இடத்துல குடிசை போட்டு தங்கி வேலை பாக்கும். வருஷத்துக்கு சம்பளம். அரிசி பருப்புக்கு வேண்டிய போது பணம் வாங்கிக்கலாம். பொங்கலுக்கு மட்டும் தான் அவங்க சொந்த ஊர்க்கு போய் தாய் தமையன பாக்கலாம். இதுக்கு என்ன சொல்றது?

  ஒட்டு மொத்த IT க்கரனுகளும் அயோக்கியன் அப்படிங்கிற மாதிரி சொல்லாம தவிர்ப்பது நல்லது. இதோ இந்த படம் கொடுத்த ராமோட life style இந்த நேரம் மாறி இருக்கும். இனி அவரோட சம்பளம் கருப்புல கோடியத் தொடும். ஆனா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு எங்கள படிக்க வைக்க அப்பா பட்ட கடனை அடைச்சு, அவங்க சந்தோசப் பட்ட அந்த நாளை நினைச்சு இன்னும் 2 மணி நேரம் சேர்த்து வேலை செய்யத் தோனுது. எங்களோட இந்த நிம்மதி எங்களோட அக்கா குடும்பம், தம்பி குடும்பம், நண்பன் குடும்பம் னு வளரும். சமுதாய மாற்றம் முதலில் ஒரு குடுமபத்தில் தான் ஆரம்பிக்கிறது. அதை தவிர வெறும் வார்த்தை ஜாலத்தில் மட்டும் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

  என்னை விளம்பர படுத்திக்கொள்ள, எனக்கென்று தனியான blog எனக்குக் கிடையாது. ஆகவே தான் இதை என் பதிலாக இங்கு பதிவு செய்கிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.

  உங்கள் எழுத்தின் அபிமானி,
  சீனிவாசன் மு

 7. படத்துல காட்ற மாதிரி எத்தன சாப்ட்வேர் இஞ்சினியர் இருக்காங்கன்னு தெரியல. எல்லாருக்கும் சாப்ட்வேர்ல வேலை செய்யரவன பாத்தா எப்படி தான் இருக்குமோ தெரியலை. வீடு வாடகைக்கு விடற வீட்டு முதலாளில இருந்து இப்போ இந்த படத்தோட டைரெக்டர் வரைக்கும். ஏன் சார், ரொம்ப “கஷ்டபட்டு” உழைக்கற சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் சினிமா டெக்னீசியன்ஸ் அவங்களோட வருமானம் எல்லாம் எப்படி, சோத்துக்கே வழி இல்லாம கஷ்டபடுவாங்க போல… நியாயப்படி இந்த படத்தோட ஹீரோ முதல்ல அவஙகளத்தான் போட்டு தள்ளி இருக்கனும். உலக மயமாக்கல் மூலமா நிறைய இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வருதுன்னு(வரும்னு) சொல்றார். ஒரு சமுதாயத்தயே இவ்வளவு நாள் சீரழிக்கற “சினிமா-மயமாக்கல்” பத்தி ஒண்ணுமே சொல்லலயே. முதல்ல புரையோடிப்போன சினிமா துறைய சரி பண்ணுங்க சார். இந்த படத்தால ஒரு துரும்ப கூட தள்ளி போட முடியாது. ஏன்னா, இப்பவே எஙக தமிழன் டைரெக்டரோட அடுத்த படத்துக்கு காத்துகிட்டு இருக்கான். “வித்தியாசமன படத்தை எடுத்து இருக்காருடா!!! …” இது தான் இந்த படத்துக்கு குடுக்கற அதிகபட்ச கவனிப்பு…

 8. apparam makkale antha padathule oru idathule prabhakar aanathiku muthal maasa sambalathule oru churidar vaanag povvan.ange avanoda padicha paarpannum avanoda fiancee yum varuval.inthe paarpan prabhakara avaluku intro koduppan.avalo ivane etho mithika koodathathe mithichute mathri parpal..
  apparum ava antha paarpan kitta keppa

  “enna unnoda friend ippadi kaatu mirandiya irukan,oru mathri paakuran?

  athuku intha paarpan solluvan

  “viduma avan tamizh padichavan avan kalacharame appadi than”

  enna powerful scene…
  enakku therinchu intha allavu samuthaiye unarvoda vera entha padam vanthathu illa…
  intha allavu disturb panra mathri 1995 il mahanathi vanthathu….

  intha padam oru classic pa….
  ulaga cinema pakkure methavinga intha padatha paarungapa….

 9. பாமரன் அவர்களே
  திரு சீனிவாசன் சொல்வது போல் கணிணி துறையில் இருக்கும் எல்லொரும் க்கு செல்வதில்லை. இன்று நீங்கள் எப்படி பதிவு எழுதி நாங்கள் படிப்பதற்கு கணிணி துறையும் ஒரு காரணம் என்பதை நிஙளும் மறுக்க மாட்டீர்கள். இ ந்த திரை படம் சொல்வது போல் தமிழ் கற்றவன் மற்றவர்களை கொல்வதுதான் நல்ல முடிவா? ஆதற்கு பதில் தமிழ் படிதவற்கலும் நன்றாக வாழும் படி முடிவு செய்திருக்கலாமே? அப்படி ஏன் சொல்லவில்லை? இயக்குனருக்கு எ ந்த வித யோசனையும் தோன்றவில்லையா? கிழ் நிலையில் எருக்கும் ஒருவன் அவனை விட மேலன நியில் இருப்பவனை கொல்வது எப்படி நியாயமாகும். மீடியாவில் இருக்கும் நீஙளும் பொறுப்பொடு கருத்தை சொல்லி இருக்க வென்டுமே. என் பார்வையில் இ ந்த திரைபடமும் ஒரு குப்பையே.

 10. i don’t saw this film. but i understood that’s story..
  first i really apreciate to director for his trying in devolopement of tamil language.
  but must we correct No., No., we remove the bad cinima culture then only possible for clear all..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s