கருத்தடை டாட் காம்

“பொதுவாக  புளுகுகளை
இப்படிப் பிரிக்கலாம்.
ஒன்று     :   அண்டப்புளுகு.
அடுத்து :   ஆகாசப்புளுகு.
ஆனால்
இவை எல்லாவற்றையும் தாண்டி
மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது.
அதுதான் புள்ளிவிவரப் புளுகு.”

– காட்கோ வாலிஸ்.****

மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா? அல்லது காணாமல் போயிற்றா?

என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு ‘புள்ளி’ விவரத்தை வெளியிட்டிருக்கிறது  “தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம்” அதாவது N.S.S.O (National Sample Survey  Organization).

இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது  தே.மா.க.க. என்று அழைக்கக்கடவதாக. அப்படி என்னதான் புள்ளிவிவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது.

ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று   நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும்.
அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்…

ஆம் இந்த ‘ஒரு மாதிரியான’ கணக்கெடுப்பின் மூலம் அப்புள்ளி விவரம் சொல்வது இதுதான்:
“இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 41 சதவீதம்தான்.”

‘இதிலென்ன சிக்கல் ? 41 சதவீதமோ 31 சதவீதமோ எதுவாயிருந்தால் என்ன? கிடைப்பது கிடைத்தால் சரி’ என எவராவது ‘தேமே’ என்று இருந்தால் வந்தது வம்பு என்று அர்த்தம்.

ஏனென்றால் இந்தப் புள்ளிவிவரம் வெளிவந்திருக்கும் நேரம் அப்படி. நேரம் என்றதும் எந்த ஜோசியக்காரனையும் தேடிக் கொண்டு ஓட வேண்டியதில்லை. சமீப காலமாக உச்ச நீதிமன்றம் உதிர்த்து வரும் முத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

தே.மா.க.க. வின் இந்தக் ‘கண்டுபிடிப்பு’ வெளிவந்திருக்கும் நேரம்  மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 % இட ஒதுக்கீடு அளிப்பதா கூடாதா?

அளிப்பதாக இருந்தால் அந்த 27 ஐயும் 9+9+9 என்று மூன்றாண்டுகளுக்கு பிரித்து அளிக்கலாமா?

அல்லது
3+3+3+3+3+3+3+3+3  என்று   ஒன்பதாண்டுகளுக்கு   ஜவ்வாய்  இழுத்து பிரித்துக் கொடுக்கலாமா?

பிரித்துக் கொடுப்பதற்குள் இருக்கின்ற அரசின் ஆயுள் காலம் முடிந்து விடாதா ?

ஒருவேளை முடிந்து தொலைத்தால் வருகின்ற அரசாவது பிற்படுத்தப்பட்டோருக்கு சரியான விதத்தில் ஆப்பு வைக்கும் அரசாக அமையுமா ?
என்று உச்ச நீதி மன்றம் தன் உச்சிக் குடுமியை உசுப்பிக் கொண்டிருக்கிற நேரம் இது.

1931 கணக்கெடுப்புப்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதம். ஆக இந்தக் கணக்கை முன் வைத்தே 70% இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றது காகா காலேல்கர் கமிட்டி. 52 சதவீத மக்கள் தொகைக்கு 70% கிடைக்காவிட்டால் போகிறது. ஆனால் கிடைப்பதே 27 சதவீதம்தானே என்று எவரும் அங்கலாய்த்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தே.மா.க.க. வின் இந்தப் புதிய ‘கணக்கெடுப்பு’. இதன்படி பார்த்தால் இருப்பதற்கும் வந்திருக்கிறது ஆப்பு என்பதுதான் உள்ளர்த்தம். 52 க்கு 27 சதவீதம் ஒதுக்கீடு என்றால்…இப்புதிய கண்டுபிடிப்பின்படி 41 சதவீதம்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறபோது கிடைக்கவேண்டியது கூடுமா?குறையுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

கடைசியாகக் கணக்கெடுத்தது 1931 ல். அதுவும் வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில். நல்ல வேளையாக “சுதந்திர” இந்தியாவில் கணக்கெடுப்பு நடக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். ஆக நமது கேள்விகளெல்லாம் இதுதான்:

1931 ல்  52 சதவீதமாக   இருந்த பிற்படுத்தப்பட்டோர் 2005 இல் 41
சதவீதமாகக் குறைந்தது எப்படி…?

விவசாயிகளின் ஒட்டு மொத்தத் தற்கொலைகள் மாதிரி பிற்படுத்தப்பட்டோர் எங்காவது கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டார்களா?

(52 – 41 = 11)  இந்த   11   சதவீத   மக்கள்   எங்காவது ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனார்களா…..?

ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் அவர்கள்  வந்த  கைபர்   போலன்    கணவாய்    வழியாக இவர்கள்  என்னாவது வெளியேறிவிட்டார்களா….?

சரி இந்த சர்வே – சப்வே எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா…..?

பிற சாதியினரின் கணக்கை யார் முஷாரப்பா வந்து எடுப்பார்….?

கணிப்பொறியின் ஒரு சுவிட்சைத் தட்டினாலேயே  கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் விழக்கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் இந்தியர்களுக்கு இதில் மட்டும் என்ன சிக்கல்….?

ஆனால் அப்படியும் எடுத்தார்கள் ஒரு கணக்கை. இன்றல்ல 1961 ல். தலித் மக்களது கணக்கை. அந்தக் கணக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்னமே 25 சதம் என்று காட்டியது.  ஆனால்   இன்றுவரை   தலித் மக்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீடோ வெறும் 22.5%..

இந்த    22.5     சதவீதத்தையும்      எந்த லட்சணத்தில்   நிரப்புகிறார்கள்     என்பது தெரிந்தவர்கள் “இந்த நாடு கடலில் மூழ்கட்டும்” என்று மனதார ‘வாழ்த்துவார்கள்’.

ஆக இன்றுவரை இந்த “சுதந்திர” இந்தியாவில்
‘ஆகா’ ‘ஓகோ’ என்று ‘ராஜவாழ்க்கை’ வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான்.  
அதனால்    அவர்களுக்கு    மட்டும்   இந்தக் ‘கணக்கெடுப்பு’.
மற்றவர்களெல்லாம் பாவம் மடிப்பிச்சை ஏந்தித்தான் வயிறு வளர்த்துக்   கொண்டிருக்கிறார்கள்.  நாம் பார்த்து ஏதாவது அவர்களுக்குக் கூட்டி கொடுத்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும். என்ன செய்ய….?

இதே தே.ம.க.க. வின் 1999 கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டோர் 35.8 % என்கிறது. 1999 இல் இந்தக் கணக்கெடுப்பைக் கண்டுணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்யாமல் பெற்றெடுத்ததன் விளைவு 41 %. மாக எண்ணிக்கை உயர்ந்ததுதான்.

ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியைக் காட்டிய இம்மக்கள் 1931 லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.

சரி எப்படித்தான் கண்டெடுத்தார்கள் இந்தப் புள்ளிவிவரங்களை என்று கேட்டால் குழப்பத்தில் தே.மு.தி.க. வையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த தே.மா.க.க.

“79306 நகர்ப்புற வீடுகளிலும்
45377 கிராமப்புற வீடுகளிலும்
இந்த சர்வே நடத்தினோம்” என்பவர்களிடம் சர்வே சரி…
எந்த நாட்டில்….
எந்த மாநிலத்தில்…
எந்த நகரத்தில்….
எந்த கிராமத்தில்….
நடத்தினீர்கள்?  என்றால் பதிலாக வெறும் காத்துதாங்க வருது.

தங்களது  ‘அகண்டபாரதக்’ கனவில் பிரிக்கப்படாததற்கு முன்பிருந்த
இந்தியப் பகுதிகளில் ஏதேனும் நடத்தியிருப்பார்களோ இந்தக் கணக்கெடுப்பை?

வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்தக் கணக்கெடுத்த மகான்கள் முன்னொரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்துத் திரிந்த தங்களது பூர்வீக மத்திய ஆசியாவின் கணக்கைத்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டார்களோ என்னவோ…?

யாமறியோம் பராபரமே.

காட்கோ வாலிஸ்**** : பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் வாழ்ந்த புள்ளியியல் நிபுணர் என்று சொன்னால் நீங்களும்  நம்பத்தான் போகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த காட்கோ வாலிஸ் யாரென்பது எனக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

 

Advertisements

14 thoughts on “கருத்தடை டாட் காம்

 1. “பொதுவாக புளுகுகளை
  இப்படிப் பிரிக்கலாம்.
  ஒன்று : அண்டப்புளுகு.
  அடுத்து : ஆகாசப்புளுகு.
  ஆனால்
  இவை எல்லாவற்றையும் தாண்டி
  மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது.
  அதுதான் புள்ளிவிவரப் புளுகு.”

  – காட்கோ வாலிஸ்.****

  காட்கோ வாலிஸ்**** : பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் வாழ்ந்த புள்ளியியல் நிபுணர் என்று சொன்னால் நீங்களும் நம்பத்தான் போகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த காட்கோ வாலிஸ் யாரென்பது எனக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

  காட்கோ வாலிஸ்-பற்றி எதுவும் தெரியாது. ஆனால் புள்ளிவிவரங்கள் குறித்த மேற்கூறி்ய “பொன்மொழி(?)”யை “மார்க் ட்வெய்ன்” சொன்னதாக எப்போதோ படித்த பி.காம். பிஸினஸ் ஸ்டாட்டிஸ்க்ஸ் புத்தகத்தில் படித்ததாக நினைவு.

  அதெல்லாம் சரி. சிந்திக்க வேண்டிய பதிவு ஒன்றி்ல், அந்த சிந்தனையை திசை திருப்பும் இதுபோன்ற விவாதம் தேவையா????

 2. பார்ப்பானைப் பற்றி எழுதினா மைனாரிட்டி (அதாவது மெஜாரிட்டி) ஜாதி வாசகர்களின் எண்ணிக்கை கூடும் என்ற சிறு புத்தி நன்றாக வெளிப்படுகிறது. மிகச் சிறப்பாக உள்ள ஒரே விஷயம் மொட்டைத்தலையுடன் உள்ள நிழற்படம்.. பாப்பர மக்களை இந்த சமூகம் மொட்டை அடிப்பதை நன்றாக உரைத்துள்ளீர்கள். இன்று நிலவும் சமூகச் சிதைவு பெரும்பாலும் பிராமணர் அல்லாத வேற்று சாதிகலால்தான் (தேவர், கௌண்டர்… – அரசாங்கத்தின் பார்வையில் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்) என்ற உண்மையை தயவு செய்து எழுதிவிடதீர்கள். சாவுதான். கொழுத்திவிடுவார்கள்! தகுதி என்ற ஒன்று இல்லாத காரணத்தினால் தான் தரம் இல்லாத இந்த எழுத்துக்கள் குறைப் பிரசவம் ஆகிறது. இந்த வாரம் தங்களின் பிச்சை பொழைப்பு இனிதே வளர வாழ்த்துகிறேன்…
  praburamanathan@yahoo.com | IP: 123.195.44.25

 3. பிரபுவின் எழுத்து நடையே அவரது அடையாளத்தை(?) காட்டுகிறது. சாதி என்னும் விஷ செடியின் வளர்ச்சி தான் இன்றைய கவுண்டர்..தேவர்..களின் வக்கிரத்துக்கு காரணம்..சாதியை வளர்த்த கட்டி காத்த..காக்கின்றவர்கள் யார் என்று நீங்கள் கேட்டால்..ஹி ஹி ..அதுக்கு பெயர் காமெடி…இங்கு யாரும் ஒரு ஆதிக்க எண்ணம் கொண்ட தேவரையோ..கவுண்டரையோ..தூக்கி பிடிக்க வில்லை… அவர்களை பாமரன் ஞாயப்படுத்தவில்லை..அதை புரிந்து கொள்ளுங்கள்..

  //பாப்பர மக்களை இந்த சமூகம் மொட்டை அடிப்பதை நன்றாக உரைத்துள்ளீர்கள்.//

  -என்ன கொடுமை சார் இது!!!!யாரு யாரை மொட்டை அடிப்பது!

  //தகுதி என்ற ஒன்று இல்லாத காரணத்தினால் தான் தரம் இல்லாத இந்த எழுத்துக்கள் குறைப் பிரசவம் ஆகிறது. இந்த வாரம் தங்களின் பிச்சை பொழைப்பு இனிதே வளர வாழ்த்துகிறேன்//

  இந்த வரிகளுக்கு பின்னால் இருப்பது என்ன தெரியுமோ…..சாதி திமிர் / கொழுப்பு..(தகுதி..திறமை)–நல்லா புடிச்சாயான்யா பாயிண்ட!!

 4. பார்ப்பனரை இந்த சமூகம் மொட்டை அடிப்பதாக நம்புவதற்கு இடமில்லை.
  கோபாலாச்சாரி அய்யங்கார் நாற்றுப்பறிக்கப்போய் கூலிவாங்கி கஞ்சிகாய்ச்சியதாக யாரும் கேள்விப்பட்டதில்லை. காயத்ரி மாமி நடவுக்குப்போன இடத்தில் வரப்பில் பிரசவிச்சதாக செய்தி வெளியானதில்லை.
  சாக்கை கிராமத்து அக்கிரகாரம் ஒத்துவரவில்லையென்றால் தஞ்சாவூர் மேலவீதி இருக்கவே இருக்கிறது. அதுவும் ஒத்துவரவிலையென்றால் வெஸ்ட் மாம்பலம் தான் புகலிடம். அங்கோயும் பிடிக்கவில்லையென்றால் மாதுங்காவோ வேறு ஒன்றோ. இந்திய சாக்கடை வெறுத்துப்போனால் இருக்கவே இருக்கிறது சிலிகான் வேலி.
  இப்படி ஊர் விட்டு ஊர்பாயும் பிராமணர்களை யாராவது மொட்டையடிக்கமுடியுமா என்ன?
  அவர்களின் ஞாபகம் நமக்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் பட்டிதொட்டிகளிலெல்லாம் சூத்திரபிராமணர்க்ளை அந்த இடத்தில் உட்கார வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள் புண்ணியவான்கள் !

 5. திரு குருமூர்த்தி & திரு.குப்பன்.

  //பிரபுவின் எழுத்து நடையே அவரது அடையாளத்தை(?) காட்டுகிறது.//

  அய்யா, நன்றி. ஆனால் தவறு. எனக்கு உள்ள இட ஒதுக்கீட்டை மறுத்து OC – Other Caste கோட்டாவில் அரசாங்க வேளையில் அமர்ந்த திமிர் உள்ளமையால் (உங்கள் வரிகளில் – சாதி திமிர் / கொழுப்பு..) என் அடையாளத்தை எங்குமே வெளிக்காட்டியது இல்லை.

  //இங்கு யாரும் ஒரு ஆதிக்க எண்ணம் கொண்ட தேவரையோ..கவுண்டரையோ..தூக்கி பிடிக்க வில்லை… அவர்களை பாமரன் ஞாயப்படுத்தவில்லை..அதை புரிந்து கொள்ளுங்கள்.. //

  ஆனால் அவரின் எழுத்து அதை வெளிகாட்டுவதும்இல்லை – இது தான் என் கருத்து.

  //கோபாலாச்சாரி அய்யங்கார் நாற்றுப்பறிக்கப்போய் கூலிவாங்கி கஞ்சிகாய்ச்சியதாக யாரும் கேள்விப்பட்டதில்லை. காயத்ரி மாமி நடவுக்குப்போன இடத்தில் வரப்பில் பிரசவிச்சதாக செய்தி வெளியானதில்லை.//

  பத்திரிக்கை செய்தி: டெல்லியில் பார்த்தசாரதி (OC) ஒரு அரசாங்க ஊழியர். மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமைக்கு சொந்தகாரர். (என்ன கொடுமை சார் இது!!!! – வகை அல்ல)
  அவருடன் குப்பனும் சுப்பனும் பலர் உள்ளனர். காயத்ரி மாமி அப்பளம் தட்டி, வீட்டு வேலை செய்து தன் மகனை MA Tamil Lit படிக்க வைத்த சம்பவங்கள் பல. குப்பமா நாற்றுப்பறிக்கப்போய் கூலிக்காக பன்னையரிடம் தன் கற்பை பறிகொடுத்து தன் உயிரையும் விட்ட சம்பவங்களும் பல.
  என் கருத்து:
  பார்த்தசாரதி, குப்பனும், சுப்பனும், காயத்ரி மாமி மற்றும் குப்பமா ஆகியோர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். என் தந்தைக்கும் இட ஒதுக்கேடு எனக்கும் இட ஒதுக்கீடு என்றால் மற்ற சமூகத்திற்கு மொட்டையே!!!

  //அவர்களின் ஞாபகம் நமக்கு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் பட்டிதொட்டிகளிலெல்லாம் சூத்திரபிராமணர்க்ளை அந்த இடத்தில் உட்கார வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள் புண்ணியவான்கள் !//

  அதனால் தான் சொல்கிறேன்… பட்டிகளை (அதிலுள்ள பார்ப்பான், முஸ்லீம், செட்டியார், கவுண்டர், தேவர் மற்றும் பலர்) முன்னேற்றுவோம். குறைந்த பட்சம் ஏளனம் செய்யாதிருபோம்…

  நன்றி.

  praburamanathan@yahoo.com

 6. சமீபத்திய உரையாடல்கள் :

  //////இவர்கள் வாரிசு எல்லாம் எத்தனைக்காலமாக படிக்காமல் அதே தொழிலையே செய்துக்கொண்டு இருக்காங்க காரணம் என்ன, அவங்க தலை எழுத்தா , எல்லாம் உங்களைப்போலவங்க அவங்களை அடக்கி அடிமையா வைத்து இருந்தது தான், அரசியல் ரீதியாக அவங்களுக்கும் எதுவாச்சம் செய்யனும்னா இப்படி ஒதுக்கீடு கொடுக்கணும், அதுவும் பிடிக்காதே உங்களுக்கு./////////

  இட ஒதுக்கீடு இதே முறையில் தொடர்ந்தால் இன்னும் 1000 வருடமானாலும், மலம் அள்ளுபவர்களின் சந்ததிகள் படித்து நல்ல வேலையில் சேர முடியாது. மீண்டும் மீண்டும் ‘கிரிமி லேயர்’ மக்களின் வாரிசுகளே இட ஒதுக்கீட்டு சலுகைகளை வெக்கமில்லாமல் அனுபவக்கின்றனர். தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சேர வேண்டிய இடங்களை, நடுத்தர மற்றும் பணக்கார வகுப்பை சேர்ந்த மாணவர்களே அனுபவக்கின்றனர். சந்தேகம் இருந்தால் அண்ணா பல்கலை கழக நுழைவுத் தேர்வு பட்டியலில் இடம் பெறும் மாணவர்களின் பின்புலத்தை ஆரய்ந்து பாருங்கள். இட ஒதுக்கீட்டில் கிரீமி- லேயர்களை நீக்காவிட்டால், நீதி கிடைக்காது. வெறும் பேச்சும், வாக்குவாதுமும்தான் தொடரும்.

  இட ஒதுக்கீடு ஒரு தலைமுறைக்கு மட்டும்தான் என்றாலே பாதி நியாயம் கிடைக்கும். அரசு பள்ளிகளில் படிப்பவர்களிக்கே சலுகை என்றும் கொண்டுவரலாம்…

 7. வணக்கம் திரு பாமரன் அவர்களுக்கு, சினிமாவை கெடுத்தது சகலகலா வல்லவர்களா அல்லது சூப்பர் ஸ்டார்களா ஏன் இப்படி ஓரவஞ்சனை.

 8. Dear Pamaran,
  A Quick observation.

  A vendor has 60 apples and 40 oranges, totally 100 fruits. (i.e. 60% apples)

  Tomorrow, he doubles the amount of apples, and triples the amount of oranges in posession.. ie.. 120 apples and 120 oranges, totally 240 fruits (i.e. 50% apples)

  That means, even if the amount of apples increase from 60 to 120, their proportion can decrease from 60% to 50%. Similarly, OBC population can increase, but you may still see a decrease in the %

 9. gayatri maami veetil irundhu appalam thattinalum, veetu velai paarthalum adhu agraharathukkul mattumae, kaatilum maetilum alla aiya…

 10. maami, mama yarum veyyila viyarvai sindhi kastapatavangha illa….adhuthavan kaasula kozhuthu ponaavanghathan……..

 11. ஐயனும் கூமுட்டை தான்.. தேவனும் கூமுட்டை தான்..
  பழைய பஞ்சாக்கதயே ஒட்டாதீங்கபா!

  நம்ம ஊர்ல இருக்கிற கல்வி தரமும், பொருளாதார தரமும் – இதுல உள்ளத பிச்சிக்குற சண்ட வேற!

  கண்ணமுழிச்சி உலகத்த பாருங்கப்பா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s