அப்பாலே போ சாத்தானே……

ஒரு முன் குறிப்பு:
வெள்ளைக்கார துரைகள் கணக்காய் படங்களுக்கு இங்கிலீஷ் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள்  தமிழுக்கு இறங்கி வர….இந்த நேரம் பார்த்து “அகம் பிரம்மஸ்ய” என்று சமஸ்கிருதத்தில் துணைத் தலைப்பை வைத்திருக்கிறார் பாலா. சமஸ்கிருதத்துக்கும் தமிழக அரசின் வரி விலக்கு உண்டா என்ன?

“நான் கடவுள்” படத்திற்காக ஏகப்பட்ட பிச்சைக்காரர்களை திரட்டி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்தி.

இதைக் கேள்விப்பட்டதும் சட்டென்று ஒரு பொறி தட்டியது. ஏற்கெனவே ஆசிய வங்கி, ஐ.எம்.எப், உலக வங்கி, பரலோக வங்கி என ஒவ்வொரு வங்கிகளாய் படியேறி தலையைச் சொறிந்து, பல்லை இளித்துக் காசு வாங்கி வந்த அனுபவம் கை கொடுக்கும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள மாநில நிதியமைச்சர்கள்… மத்திய நிதியமைச்சர் என அனைவரையும் திரட்டிக் கொண்டு வந்து இவர்களோடு நடிக்க வைத்தால் தத்ரூபமாக இருக்குமே படம் என்பதுதான் அந்தப் பொறி. சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதுக்குக் கூட வாய்ப்பிருக்கிறது. எதற்கும் அதைக் கொஞ்சம் பரீட்சித்துப் பாருங்களேன் பாலா….

 

##########

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா…வெறும் குப்பை மேட்டர்ப்பா…” என்று இனி யாரும் அசட்டையாகச் சொல்லிவிட முடியாது. அதுவும் சிங்காரச் சென்னையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடந்தவர்கள்.கடந்து போகிறவர்களுக்கே இப்படி என்றால் அதை சுமந்து செல்பவர்களுக்கு எத்தனை வலி இருக்கும் என்பதை ஒரு நொடியாவது சிந்திக்க வேண்டிய வேளையிது.

ஏழேகால் வருடக் காண்ட்ராக்ட்டில் வந்த ஓனிக்ஸ் கம்பெனி அதற்கு முன்னரே ஓட்டம் பிடிக்க….வந்தது வேட்டு சென்னைவாசிகளுக்கு. குவிந்த குப்பையைப் பொறுக்காததோடு இருக்கிற குப்பைத் தொட்டிகளையும் உடைத்துப் போட்டுவிட்டு ஓடியிருக்கிறது அந்த சிங்கப்பூர் நிறுவனம்.

நல்லவேளை அவர்கள் நாட்டிலிருந்து கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகாமலிருந்தார்களே அதற்காக நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

பொறுப்பற்று நடந்த அந்த நிறுவனத்தை கூண்டில் ஏற்றி குமுறி எடுக்கச் சொல்லாமல்….”மாநகராட்சி ஊழியர்களைக் கூட்டி வந்து சுத்தம் செய்வதற்கு என்ன?” என்று ஊளையிடுகின்றன சில பத்திரிக்கைகள்.

சென்னையின் நிலை இப்படி என்றால் கோயம்புத்தூர்வாசிகளின் நிலையோ சிறப்போ சிறப்பு.

வீட்டுக்கு வீடு இலவச டி.வி. தருவதைப் போல இனி வீட்டுக்கு வீடு இரண்டு குப்பைத் தொட்டிகளைத் தரப் போகிறது மாநகராட்சி.

ஒன்று : மக்கும் குப்பைக்கு
மற்றொன்று: மக்காத குப்பைக்கு.

கோவை நகர மக்கள் இனி குப்பையைக் கொடுக்கும் போது கூடவே 30 ரூபாயையும் கொட்டி அழ வேண்டும்.

கோவை மக்கள் கொடுக்கும் வீட்டுக் குப்பைகளை மறு சுழற்சி செய்து உரமாக்கினால் மாதம் 60 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால் மாநகராட்சியோ இந்தக் குப்பைகளை வெறும் 24 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்க்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் நகர மேம்பாட்டுக்கான கண்காணிப்புக் குழுவினர்.

குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள்  வருகின்ற 60 லட்சம் லாபத்தை நோக்கி நடப்பார்களா?
அல்லது வெறும் 24 ஆயிரம் “லாபத்தை” (?) நோக்கிப் போவார்களா?

யாராவது ஆறறிவு உள்ளவர்கள் இவர்களுக்கு அறிவுறுத்தினால் நல்லது.

ஆக….
குப்பை வரி….
இன்று கோவை.
நாளை சென்னை?

##########

அவசர அவசரமாக ரேஷன் கடையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனைப் பிடித்து நிறுத்தி கையில் ஒரு நோட்டீசைத் திணித்தார் ஒரு ஆசாமி.
இருந்த அவசரத்தில் படிக்காமலேயே….என்ன? என்றேன்.

“கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிறார் சகோதரா” என்றார்.

நான் ரேஷன் வாங்கிய பிறகா…இல்லை அதற்கு முன்னமேவா? என்றேன்.
“அதற்கு முன்னால் நீங்கள் தேவ ஊழியர்களின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்றார்.

நான் ஸ்நானமே வாரத்துக்கு ஒரு தடவைதான்….அதென்ன ஞானம்? என்றேன்.

“அதற்குப் பிறகு நீங்கள் ஜீவியம்….தெய்வீக சுகத்துக்குக் கீழ்படிந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் மறுபடியும்.

சாதாரண சுகத்துக்கே கீழ்படிபவன்….தெய்வீக சுகம்ன்னா சும்மாவா இருக்கப் போறேன்? சீக்கரம் மேட்டருக்கு வாங்க என்றேன்.

அப்படியே இயேசு வந்தாலும் ஏழு வருட காலம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பாராம்…அப்போது இன்னொரு டூப்ளிகேட் இயேசு மீசைக்கு மேலே ஒரு மச்ச அடையாளத்தோடு பயங்கர ஆட்சி நடத்துவாராம். ஏழு முடிந்த பிறகு இயேசுவின் ஏழரை அடச்சே….ஆயிரம் வருட ஆட்சி நடக்குமாம்….

அப்புறம் ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெற்ற என்னைப் போன்ற “பரிசுத்தவான்கள்” த்ரிஷா, பாவ்னா போன்ற தேவதைகளோடு சூப்பரான வாசஸ்தலங்களுக்கும்….

உங்களைப் போன்ற ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெறாதவர்கள் சுப்ரமண்யசாமி போன்றவர்களோடு அக்கினிக் கடலுக்கும் போவீர்களாம்….
உளறிக்கொண்டே போனது அது……

அது சரி நீங்க எந்த டாக்டர் கிட்ட டிரீட்மெண்ட் எடுத்துக்கறீங்க? என்றேன் சன்னமாக.

“அப்பாலே போ சாத்தானே” என்றபடி கையில் எதையோ அடிக்க எடுக்க..

உடு ஜூட் என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ரேஷன் கடை நோக்கிப் பறந்தேன்.

 

 

 

Advertisements

27 thoughts on “அப்பாலே போ சாத்தானே……

 1. வணக்கம் பாமரன் அவர்களே, “அப்பால போ சாத்தானே”, கிறிஸ்துவ மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரப்பி, அவர்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சரியான சாட்டையடி.

 2. பாலாவின் அடுத்த படம் நீங்கள் சொன்ன ஆளு ங்கல வச்சி எடுத்தா இந்த வருட சிரந்த comady

 3. “அகம் பிரம்மஸ்ய” = “நான் கடவுள்” !!!

  pavam Adi Sankarar.To be (mis)understood this way

 4. அய்யா… ஓனிக்ஸ் நிறுவனம் சரியான நேரத்தில் தான் சென்றார்கள். அவர்களுடைய நிறுவனத்தின் குப்பை தொட்டிகளை மட்டும் தான் எடுத்துச் சென்றார்கள். நமது மாநகராட்சி தான் அடுத்த ஏற்பாட்டை செய்ய தவறி விட்டது. அடுத்து வந்தவர்களும் முன்னேறபாடிள்ளாமல் வந்தேறிவிட்டனர்.

  அய்யா மீட்டர் விடும் போது சூடு கொஞ்சம் பார்த்து வையுங்க.. ஓவர் சூடு ஒடும்புக்கு ஆகாது..

  நன்றி…

 5. //////ஏற்கெனவே ஆசிய வங்கி, ஐ.எம்.எப், உலக வங்கி, பரலோக வங்கி என ஒவ்வொரு வங்கிகளாய் படியேறி தலையைச் சொறிந்து, பல்லை இளித்துக் காசு வாங்கி வந்த அனுபவம் கை கொடுக்கும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள மாநில நிதியமைச்சர்கள்////////

  அய்.எம்.எஃப் வங்கியிடமிருந்து இந்திய அரசு கடன் வாங்குவதை நிறுத்தி பதினைந்து வருடம் ஆகிவிட்டது ! உலக வங்கி கடன் வேறு வகை – Project specific and mainly to state govt bodies, etc ; கட்டாயம் வாங்கியே ஆக வேண்டிய அவசியம் இல்லை.

  ஆனால் அய்.எம்.எஃப் இடம் அன்னிய செல்வானிக்காக அடிக்கடு கையேந்த வேண்டிய கால கட்டம் 1990களுகு பின் இப்போது இல்லை.

  Due to our ‘socialsitic’ economic polices that we followed until 1991, there was acute and chronic foreign exchange shortage until the 90s. We refured foreign direct investement and investment into our capital marktets. As we are a net importing nation (esp petrolem, fertiliser,etc) we were desparate for dollars. No idiot was ready to accept of rupee for payments and we had to beg and borrow dollars (SDR – special drawing rights) from the much maligned IMF. After we implemented some of IMF’s ideas like liberalisation, now we have no futher need for IMF itself. supreme irony that escapes leftists and communists !!!

  http://nellikkani.blogspot.com/

  ‘தாரளமயமாக்கல்’ என்றால் என்ன ?

  ‘ தனியார் மயமாக்கல், தாரளமயமாக்கல், உலகமயமாக்கல்’‍‍ இவை பற்றிய தெளிவான , சரியான விளக்கங்கள் இன்னும் தழிழில் எழுதப்படவில்லை. உணர்ச்சி வேகம். கோபம் , பயம் போன்ற உண்ர்வுகளால் இவ்வார்த்தைகளின் உண்மையான
  அர்த்தங்களும் , விளைவுகளும் தெளிவாக்கப்படாமல் உள்ளன. முதலில் ‘தாரளமயமாக்கல்’ பற்றி புரிந்து கொள்வோம்.

  சுதந்திரம் வந்த புதிதில். 1950களில் , பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டல்படி, காங்கிரஸ் கட்சி ‘சோசியலிச’ பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த துவங்கியது. அப்போது உலகெங்கிலும் இது போன்ற சிந்தனைகளே
  ஆதிகம் செலுத்தின. (அமேரிக்கா , மேற்க்கு ஜெர்மனி போன்ற சில நாடுகளை தவிர்த்து). சோசிய‌லிச‌ கொள்கைக‌ளின் முக்கிய‌ அம்ச‌ம் ‘
  திட்ட‌மிட‌ல்’ (centralised planning ) ; அதாவ‌து நாட்டிலுள்ள‌ இய‌ற்கை
  ம‌ற்றும் ம‌னித‌ வ‌ள‌ங்க‌ளை எவ்வாறு உப‌யோக‌ப் ப‌டுத்த‌ வேண்டும் என்று ம‌த்திய‌ அர‌சு ம‌ட்டுமே ‘திட்ட‌ க‌மிச‌ன்’ மூல‌ம் தீர்மாணிக்கும். சந்தை பொருளாதார‌ கொள்கைக‌ளுக்கு நேர் எதிரான‌ சித்தாந்த‌ம். பொதுத் துறை நிறுவ‌ன‌ங்க‌ளுகே முக்கிய‌த்துவ‌ம். த‌னியார்க‌ள் ப‌ல‌ முக்கிய‌ துறைக‌ளில் ( உ.ம் தொலைபேசி, மின் உற்ப‌த்தி) நுழைய‌ த‌டை. ஏற்க‌ன‌வே இருக்கும் துறைக‌ளில் தொழிலை விரிவுப‌டுத்த‌ , குறைக்க‌ ப‌ல‌ ப‌ல‌ க‌ட்டுப்பாடுக‌ள். உற்ப‌த்தியை பெருக்க‌ த‌டைக‌ள் ப‌ல‌. இக்க‌ட்டுப்பாடுக‌ளை (controls and licenses) அம‌ல்ப‌டுத்த‌ ஒரு மிக‌ப்
  ப‌ல‌மான‌ , பூத‌க‌ர‌மான‌ அர‌சு எந்திர‌ம் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. கொஞ்ச‌ம்
  கொஞ்ச‌மாக‌ அந்த‌ எந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து. ஒரு தொழில‌திப‌ர் ஒரு புதிய‌ தொழிற்சாலையை நிறுவ‌ வேண்டுமானால் ப‌ல‌ அதிகாரிக‌ளின் த‌ய‌வும் , ‘க‌ருணையும்’, அர‌சிய‌ல்வாதிக‌ளின் (பெரும்பாலும் காங்கிர‌சஸ் அமைச்ச‌ர்க‌ள் ம‌ற்றும் த‌லைவ‌ர்க‌ள்) ‘ஆத‌ர‌வும்’ தேவையாக‌ இருந்த‌து.
  தாரளமயமாக்களுக்கு பின் இன்று எவ்வ‌ள‌வே ப‌ர‌வாயில்லை.

  உதராணமாக கோவை மதுக்கரை ப‌குதியில் உள்ள ஏ.சி .சி (Tata) சிமென்ட் நிறுவனத்தை பார்ப்போம். லைசென்ஸ்டு கெப்பாசிட்டி (licensed capacity ) என்று அதற்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிகப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லச்சம் டன் மட்டுமே அனுமதி (லைசென்ஸ்) என்றால் , அதற்க்கு மேல் ஒரு கிலோ கூட உற்பத்தி செய்ய அனுமதியில்லை.
  சந்தையில் தேவை (demand) எவ்வளவு அதிகரித்தாலும் கூட உற்பத்தியை பெருக்க அனுமதி கிடையாது. காரணம் டாடா நிறுவன அதிபர்கள் பெரும் பணக்காரர்களாக வளர்ந்து விடுவார்களாம் ! ‘concentration of economic power ‘ என்ற ஒரு
  மூடத்தனமான சிந்தனை நாட்டின் பொதுபுத்தியை மிகவும் ஆக்கிரம்த்த காலம் அது. நூறு கோடிக்கு மேல் (ஒரு உதாரணத்திற்கு) ஒரு தனியார் சிமின்ட்
  நிறுவனத்தின் நிகர விற்பனை (அல்லது சொத்துகள்) அதிகரிக்க அனுமதியில்லை ! இதன் மொத்த விளைவு , செயற்க்கையான‌ தட்டுப்பாடுகள் , பதுக்கல் , கள்ளமார்க்கட், லஞசம். அரசே லெவி (levy) என்ற பெயரில் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை மிக குறைந்த விலைக்கு கட்டாய கொள்முதல்
  செய்து பின் ரேசன் முறையில் விற்றது. 1950 களில் வந்த திரைபடங்களில் வில்லன்கள் சிமென்ட், சர்க்கரை , நூல் பேல்கள் போன்றவற்றை பதுக்குவார்கள் , கடத்துவார்கள். அவ்வளவு தட்டுப்பாடு அப்போது !!

  Monopolies Restricted Trade Practises Act (MRTP Act) என்று ஒரு
  முட்டாள்தனமான சட்டம் 1969 இல் இயற்றப்பட்டது. அதன்படி எந்த ஒரு குறிப்பிட்ட தொழிற் துறையிலும், எந்த ஒரு நிறுவனமும் , மிகப்பெரிய அளவில் ‘வளரக்கூடாது ‘. இதற்கான அளவுகோள்கள் ‘percentage of market share’
  அடிப்படையில் வகுத்திறுந்தாலாவது பரவாயில்லை ; அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் சென்றால் பெனால்டி , தண்டனை என்று உருவாக்கபட்டது. விளைவு : தட்டுப்படு, அதிக விலை.

  இதற்க்கெல்லம் சிகரம் வைத்தாற்போல வரி விகுதங்கள். ‘பணக்கார்க‌ள்’ மீது
  மிக மிக அதிக வரி விதித்து , அதை ஏழைகளுக்காக ‘ செலவு’ செய்யவதாக சொல்லப்பட்டது. அனைத்து வரிகளும் சேர்ந்து சுமார் 95 % ஆனது. விளைவு வரி ஏய்ப்பு , கருப்பு பணம், வரி வசூல் செய்யும் அரசு எந்திரம் லஞ்சமயமானது. அதிக வரிக்கு பயந்து புதிதாக யாரும் தொழில் தொடஙக முயலவில்லை. கடுமையான
  விலைவாசி உய்ர்வும் , வேலை இல்லாத்திண்டாட்டமும் உருவாகின.

  1991 இல் அன்னிய செலாவனி தட்டுப்பாடு வந்து அரசின் தங்கத்தை வெளிநாட்டில் அடமானம் வைக்க வேண்டிய கட்டாயமான‌ சூழல் நிலையில் நரசிம்மராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக்கி , சுதந்திரமாக செயலாற்றா அனுமதிதார். முதல் வேலையாக லைசென்சிங் முறையை அறவே ரத்து
  செய்தார் மன்மோகன் சிங். MRTP Act ரத்து செய்யப்பட்டது. அந்நிய
  முதலீடுகளும் ‘தாரளமாக’ அனுமதிக்கப்படன. வரி விகுதங்களும் படிப்படியாக குறைக்கபட்டன. இதைத்தான் ‘ தாரளமயமாக்கல்’ என்கிறோம்.

  விளைவு : 9 % பொருளாதார வளர்ச்சி , மிக மிக அதிக அளவு வரி வசூல் (1991ஐ விட இன்று சுமார் 15 மடங்கு அதிகம்), வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை. வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 50 % இல் இருந்து
  சுமார் 25 % மாக குறைந்தது. ஐ.எம்.எஃப் உலக வங்கியிடம் இனி எப்போதுமே அன்னிய செலவாணிக்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத , பலமான சூழல்.

  இந்த ‘தாரளமயமாக்கலை’ செய்யாமல் இருந்திருதால், இன்னேரம் நாடே திவாலாகியிருகும். (அவ்வள்வு அன்னிய கடன் வாங்கியிருந்தோம்). வறுமை இன்னம் அதிகரித்திருக்கும்…

 6. வட மொழியில் துணைத் தலைப்பு வைக்கும் பாலாவின் திரைப்படத்துக்கு வரிச்சலுகை அளிக்கக் கூடாது.

 7. அய்யா தாங்கமுடியல மஜா அப்படினு ஒரு படம் மெனகெட்டு பார்துட்டு எதுக்குடா படிசோம் பெசாம ரவுடியா போயிருக்கலாமோனெலாம் தோனுது யார்யாருக்கோ கடுதாசி போடரீங்க லின்குசாமியோ லொன்குசாமியோ அந்தாலுக்கு ஒன்னு போடு தலைவா

 8. பாமாரனுடைய எழுத்துக்கள் அந்தக்காலத்தை நினைவுபடுத்துகிறது. அந்தக்காலம் என்றால்……..
  “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” என்ற கோரிக்கையை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தவர்கள்……
  கீற்றுக்கொட்டகை சாய்வுப்பந்தலில்…..
  குண்டு பல்பு வெளிச்சத்தில்…..
  ஒருகையால் முகத்திற்கு எதிரே பறக்கும் பூச்சிகளை விரட்டிக்கொண்டு…….
  உள்ளூர் “மைக்”கின் உயரத்திற்கு குனிந்து…..
  கழுத்து நரம்புகள் புடைக்க பேசி……
  உள்ளூர் சோடாவைக்குடித்து……..
  .நள்ளிரவில் காய்ந்துபோன புரோட்டாவை மென்று…..
  உள்ளூர் கட்சித்தொண்டன் காசில் லாரிப்பயணம் செய்து….
  கட்சி வளர்ந்த காலத்தில்………..
  இதேபோன்ற எழுத்துக்களை அன்றைய எதிர்க்கட்சி பத்திரிக்கைகளில் படித்தது.
  இப்போதுதான் வாய்த்திருக்கிறது அந்த வாய்ப்பு.
  பாமரனுக்கு வாழ்த்துக்கள்.

 9. இந்திய அரசியலில் சில கட்சிகள் மதத்தைப் புகுத்தி மக்களின் மலிவான கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி வாக்குகளை கைப்பற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டன. இந்த முயற்சிகளுக்குஅப்போது துணை போனது ராமன்!.இப்போது ராமர் பாலம் , ராமர் பாலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம்….. more detail pls visit http://www.lightink.wordpress.com pls write u r comment thank u

 10. ungalathu intha sattai adi yellorukkum theriya vendum avana seiveergal yena nambukiren, yenendral makkal yethai tindral pittam theliyum yendru irukkirargale?

 11. மதிப்பிற்குறிய பாமரன் அவர்களுக்கு,

  நான் தங்களது வலைப்பூ மற்றும் படித்ததும் கிழித்ததும் மூலம் கவரப்பட்டவன். தங்களது சில பதிப்புகள் என்னுடைய வலைப்பூவிலும் இடம் பெற்றுள்ளது. எனக்கு ஒரு சிறிய சந்தேகம், தாங்கள் படித்ததும் கிழித்தம் மோடு நிறுத்திக்கொள்வீர்களா இல்லை அதை சரி செய்ய நடவடிக்கையும் எடுப்பீர்களா?? தவறாக ஏதாவது கேட்டிருந்தால் மன்னிக்கவும்

 12. மிக அருமை. நகைச்சுவையுடன் உண்மைகளை எடுத்த்க் கூறியுள்ளீர்கள்.

 13. dear pamaran your essays is very intersting and important.please do ur writings. ‘ IF WE HAVE CHOSEN THE POSITION IN LIFE IN WHICH WE CAN MOST OF ALL WORK FOR MANKIND,NO BURDENS CAN BOWUS DOWN.BECAUSE THEY ARE SACRIFIES FOR THE BENIFIT OF ALL’ KARLMARX.

 14. Mr. Paamran,

  As your name rightly suggests u r a paamran. You are making fun of one who led his life for you and also others here. One day will come all ur supporters will be against you that time only u will be crying without anybody else around you.

  Remember dont try to mock at something which you have no idea of just for the sake of some silly fellow who laugh at everything.

  Thanks.
  Priya

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s