நிபந்தனைகளுக்கு உட்பட்டது….*

பாலாவையே பிதாமகன் என்று சொல்லலாம் 2000 ல் எழுந்த புதிய அலைக்கு. “சேது”வில் துணிச்சலாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி இன்று “கற்றது தமிழ்” வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

 

                மகேந்திரன்களாலும்……..பாலுமகேந்திராக்களாலும்……..                                     துளிர்த்திருந்த திரைத்துறை சகலகலாவல்லவன்களால் சகதியில் அமிழ்த்தப்பட்டது. அதற்கும் முன்னர் நாடகபாணிப் படங்களுக்கு ஆப்படித்து ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே சுழன்று கொண்டிருந்த காமிராவை வயல்வெளிகளுக்கும்……..புழுதிக்காட்டுக்கும் சுமந்து சென்றதில் பாரதிராஜாவுக்கு பிரதான பங்கிருந்தது. மெல்லிய -நுண்ணிய உணர்வுகளைப் பிரதிபலித்த தமிழ்த் திரையுலகம் மசாலாக்களில் மூழ்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் உருவான மிக நீண்ட இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்தான் பாலா.

தங்கர்பச்சானின் “அழகி”யோ ஒவ்வொருவரையும் தத்தமது பால்யத்துக்கே இழுத்துப் போய் நோஸ்டால்ஜியாக்களில் கிறங்கடித்தது. தனலட்சுமியும்……..சண்முகமும் ஓசைப்படாமல் மனதுக்குள் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

 

 

 

அண்ணன் மனைவியை அடைவது எப்படி? தம்பி மனைவியை தட்டிக் கொண்டு போவது எப்படி? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த “வாலி”கள் லிங்குசாமியின் “ஆனந்த(ம்)”த்தின் முன்னே காணாமல் போனார்கள்.

 

“இயற்கை”யில் கால் பதித்த ஜனநாதனின் பயணம் “ஈ” யில் மற்றொரு பரிமாணத்தையும் காட்டியபடி தொடர்கிறது. “ஈ” சாதாரண படமல்ல. மருத்துவர் புகழேந்தி எழுதிய “எய்ட்ஸ் : ஓர் உயிரியல் ஆயுதப் போர்” (AIDS : A Biological Warfare) என்கிற நூலின் காட்சி வடிவம்தான் என்பது வெகு சிலருக்கு மட்டுமே புரிந்த உண்மை.

 

‘வால மீனுக்கும்……..விலங்கு மீனுக்கும்’ நடந்த கல்யாணக் கச்சேரியில் கண்ணில் பட்டவர்தான் மிஷ்கின். இந்த மனிதருக்குள் சொல்ல வேண்டிய சேதிகள் அநேகம் இருக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுதான் “சித்திரம் பேசுதடி”.

 

பசும்பொன்……..பாஞ்சாலங்குறிச்சி என்று வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருந்த சீமானை ‘தம்பி வா……..தலைமை ஏற்க வா……..” என மறுபடியும் அழைத்து வந்ததுதான் “தம்பி”. சமூக அவலங்களைச் சாடித் தீர்ப்பதில் எவனுக்கும் சளைத்தவனில்லை இந்தத் தம்பி என்று நிரூபித்த படம்.

 

இவற்றுள் ராதா மோகனின் உலகம் கொஞ்சம் வேறு வகையான உலகம். மேல்தட்டு மாந்தர்களது உலகைச் சுற்றி நிகழும் உணர்வலைகளைப் பதிவு செய்வதில் “மொழி” வகித்த பங்கு பிரதானமானது. மொழியை மொழியால் விளக்க முயற்சிக்காமல் உணர்வால் உணரவைக்க முற்பட்ட படம் எனலாம்.

‘காதலே கூடாது……..காதலிச்சா ஒவ்வொருவருக்கும் இதுதாண்டா கதி…….. என அச்சுறுத்துகிறார்’  என்கிற குரல்களுக்கு இடையில் அறிமுகமானவர்தான் பாலாஜி சக்திவேல். தென் மாவட்டங்களில் ஒளிந்திருக்கும் சாதீய முகத்தை அப்பட்டமாகச் சொன்னது “காதல்”. படம் பார்த்தவர்களில் சிலரை அது பயமுறுத்தியதும் உண்மைதான்.

அதைப்போலவே அதை எப்படி முறியடிப்பது என்கிற சிந்தனையையும் நிச்சயம் விதைக்கும் காதல்.

 

அண்ணன்……..தம்பியின் நேசம் ததும்பும் உறவை……..தோல்வியைத் தவிர வேறெதையுமே அனுபவித்திராதவன் வலியை……..இவ்வளவு தத்ரூபமாகச் சொல்லமுடியுமா? என்கிற கேள்வியை எழுப்பியது வசந்தபாலனின் “வெயில்”.

‘நானிருக்கிறேன்’ என தமிழ்த் திரைக்கு நம்பிக்கையூட்டும் நாயகனாய் முருகேசனாய் வரும் பசுபதி.

பெரும்பாலும் தமிழ்ப் படங்கள் சாதீயத்தை சொல்வதோடு நின்றுவிடும்…….. ஆனால் சொன்னதோடு நிற்காமல் அதன் மீதான சிறு விமர்சனத்தையாவது சுமந்து வந்த படம்தான் அமீரின் பருத்தி வீரன்.(திருநங்கையர் எனும் மனிதர்களை கொச்சைப் படுத்தியதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்……..)

தகவல் தொழில் நுட்பத் துறையினர்…….. அதுவல்லாத துறைகளில் பயின்றவர்கள்……..பீட்ஸா கார்னர்களில் ஒதுங்குபவர்கள்……..ATM செண்டருக்கு உள்ளிருப்பவர்கள்……..அதற்கு வெளியே இருப்பவர்கள்……..எனச் சகலரையும் அசைத்துப் பார்த்த படம்தான் ராமின் “கற்றது தமிழ்”.

உலக மயமாக்கல் என்றால் என்ன? தாராளமயம் நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தும்? என்பதையெல்லாம் மூன்றாம் உலக நாடுகள் உணர்வதற்குள்ளாகவே மொத்த கோவணமும் உருவப்பட்டு விடக் கூடிய எதார்த்த நிலையில் அப்பட்டமாக அதை நெற்றியிலடித்து காட்சிப்படுத்தியது கற்றது தமிழ்.

சொல்ல வந்ததில் கொஞ்சம் மிச்ச சொச்சம் இருந்தாலும்……..இன்னும் கொஞ்சம் கூடுதல் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் இவர்களோடு சேரக்கூடியவர்தான் சமூக அக்கறையோடு “ராமேஸ்வர(ம்)”த்தை இயக்கிய செல்வம்.

இவர்களுக்கிடையில் அவ்வப்போது எதையாவது சொல்லியாக வேண்டும் என்கிற அக்கரையில் உள்ளவர்கள்தான் பார்த்திபனும், சேரனும்.

ஆக……..சொல்லிய படங்கள் அனைத்துமே நூற்றுக்கு நூறு சரியானவைகள் என்பதோ……..விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவைகள் என்பதோ அல்ல. யாவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஒப்பீட்டளவில் எழுந்த பார்வையே இது.

ஏனெனில் எஸ்.ஜெ.சூர்யா,

ஷங்கர்,

செல்வராகவன்,

சிம்பு

போன்ற “மகத்தான கலைஞர்களை” கணக்கில் கொண்டே எழுதப்பட்டது இது என்பதை இங்கு யாவரும் கவனத்தில் கொள்வது சாலச் சிறந்தது.

ஓ.கே. ……..
லைட்ஸ் ஆன்.

 

 

நன்றி : சண்டே இந்தியன்

(“கோடம்பாக்கத்தில் புதிய அலை” சிறப்பிதழ் – பிப்ரவரி 2008)

12 thoughts on “நிபந்தனைகளுக்கு உட்பட்டது….*

 1. நிபந்தனைகளுக்கு உட்பட்ட எழுத்து என்று தாங்களே சொல்லிவிட்டக் காரணத்தால் உங்களுடைய திரைப்படங்கள் பற்றிய பார்வையில் எங்களது கருத்துக்களை சொல்ல முடியாது.

  ஆனாலும்,

  //இவர்களுக்கிடையில் அவ்வப்போது எதையாவது சொல்லியாக வேண்டும் என்கிற அக்கரையில் உள்ளவர்கள்தான் பார்த்திபனும், சேரனும்.//

  என்ற உங்களது வரிகளை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இதில் சேரனின் பெயர் இடம் பெற்றிருக்கக் கூடாது. பார்த்திபன் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

  என்னுடைய பார்வையில் தங்கர்பச்சான், பாலா, பார்த்திபன் இந்த மூவரையும்விட சேரனே ‘சமூக அக்கறை கொண்ட இயக்குநர்’ என்று சொல்வேன்.

 2. //என்னுடைய பார்வையில் தங்கர்பச்சான், பாலா, பார்த்திபன் இந்த மூவரையும்விட சேரனே ‘சமூக அக்கறை கொண்ட இயக்குநர்’ என்று சொல்வேன்.
  //
  உண்மை தமிழனனின் எழுத்துகள் ஏற்கனவே எமக்கு நல்ல அறிமுகம் இருப்பதால் சேரன் சமூக அக்கறை கொண்டவராக உண்மை தமிழனுக்கு தெரிந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை…. ஆனால் கருத்து சொல்றேன்னு வந்த சேரனின் படங்கள் மிக மோசமான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல விதைத்தன, “பாரதி கண்ணம்மாவில்” இருந்தே ஆட்டத்தை ஆரம்பிக்கலாம், பாரதி கண்ணம்மா மேலோட்டமாக சாதியத்தை எதிர்ப்பது போன்ற தொரு பார்வையை தரும், ஆனால் அதன் வசனங்களின் வழியாக தாழ்த்தப்பட்ட ஆதி தமிழர்களை வந்தேறிகள் போன்று சொல்லும் வசனங்களில் ஆரம்பித்து (எலேய் நாம தான்லே நமக்காக அவங்களை கூப்பிட்டு வந்து நம்ம இடத்தில குடிசை போட்டுக்க சொல்லி தங்க வைக்கிறோம், நம்ம கொடுத்த பாய்ன்னு நாமளே அதுல போய் படுத்துக்க கூடாது என்று விஜயகுமார் பேசும் வசனம்) என தாழ்த்தப்பட்டவர்களை வந்தேறி அளவுக்கு வசங்களால் வன்கொடுமை செய்திருப்பார் சேரன், சேரனின் தேசிய கீதம் என்ன சொல்ல முயன்றுள்ளது என பாமரனே எழுதி கிழிகிழியென்று கிழித்திருக்கிறார்…

  வெளிநாட்டில் வேலைக்கு செல்வதை பற்றி குற்ற உணர்ச்சி ஏற்படும் அளவிற்கு கிழி கிழியென கிழித்திருக்கும் சேரன் ஊரிலே மானம் மரியாதை கெட்டு சம உரிமை இல்லாமல், மனிதனாகவே மதிக்கப்படாமல் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த அமைப்பிலொரிந்து தப்பிப்போகும் ஒரு இடமாகவே வெளிநாட்டு வேலை இருக்கின்றது, இவர்கள் மாட்டு பண்னையும் ஓட்டல் கடையும் வைத்து எப்படி பிழைப்பது…. இன்னும் கூர்மையாக இந்த படத்தை விமர்சிக்க ஆரம்பித்தால் இந்த படம் யாருக்கு அறிவுரை சொல்ல எடுத்தது என புட்டு புட்டு வைக்கலாம்….

  கருத்து கந்தசாமியாகி சேரன் எடுத்தாரே மாயக்கண்ணாடி, முழுக்க முழுக்க சாதிய கூறு அதை பற்றிய விரிவான என்பதிவு http://kuzhali.blogspot.com/2007/04/blog-post_28.html

  சமூக அக்கறை என்ற பெயரில் நஞ்சை கலந்து எடுப்பது ச(ஷ)ங்கர் மட்டுமல்ல அந்த வரிசையில் சேரனுக்கும் ஒரு முக்கிய இடமிருக்கு….

 3. தல வழக்கம் போல் தங்களது கருத்துக்கள் சிறப்பாக இருந்தது..மேலும்
  தோழர் குழலியோடு நான் முழுமையாக ஒத்துபோகிறேன்..ஒரு விசயத்தை தவிர அது சேரனை ஷங்கரோடு ஒப்பிடுவது! சேரன் அவ்வளவு அயோக்கியனாக இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.
  –தங்கள் தோழன்..

 4. அன்பின் பாமரன்,
  எஸ்.ஜே.சூர்யா,சிம்பு லிஸ்டில் இயக்குனர் பேரரசுவ விட்டுட்டீங்களே.
  இனி அடுத்த படத்துல இதை வச்சு பஞ்ச் டயலாக் விடப்போறார் பாருங்க… 🙂

 5. /////உலக மயமாக்கல் என்றால் என்ன? தாராளமயம் நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தும்? என்பதையெல்லாம் மூன்றாம் உலக நாடுகள் உணர்வதற்குள்ளாகவே மொத்த கோவணமும் உருவப்பட்டு விடக் கூடிய எதார்த்த நிலையில் அப்பட்டமாக அதை நெற்றியிலடித்து காட்சிப்படுத்தியது கற்றது தமிழ்.////

  இல்லை அய்யா. தாரளமயமாக்கல் என்றால் என்னவென்றே சரியாக புரியாமல் அதை எதிர்பது மடமை. 1991க்கு முன் (நீங்கள் மாணாவராய் இருந்த காலத்தில்) வேலை வாய்ப்புக்களையும், தொழில் துறையின் அவலத்தையும், விலைவாசி உயர்வையும் நினைவு கூர்ந்து பாருங்கள். வறுமையின் நிறம் சிகப்பு (1980) போன்ற படங்கள் இப்போது ஏன் எடுக்கபடுவதில்லை. அதில் விவரிக்கப்பட்டுள்ள வேலை இல்லாத் திண்டாடம் பற்றிதான் சொல்கிறேன். 20 % வருட விலைவாசி உயர்வு இருந்த 60கள் நிலைதான் பரவாயில்லையா. உலகின் அனைத்து நாடுகளும் (முக்கியமாக சைனா, வியட்னாம், சிலி போன்ற முன்னாள் இடது சாரி நாடுகளும்) ‘தாரளமயமாக்களை’ இப்போது கடைபிடிப்பது ஏன் ? அனைவருமே கேனைகளா அல்லது பைத்தியமா ?

  40 ஆண்டுகால்ம் முதலாலித்துவத்தை எதிர்த்து கடும் போர் புரிந்த வியட்னாமியர், இன்று சந்தை பொருளாதராத்தை கடைபிடிக்க காரணம் என்ன ? போரின் கொடுமைகளையும், தியாகங்களையும், சித்தாந்த்ங்களையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா ? இன்று மாற்றத்திற்க்கான காரணம், இடதுசாரி சித்தாந்தங்களின் நடைமுறை விளைவுகள் எதிர்மறையானவை என்று உணர்ந்தால்தான். அமேரிக்க சதியால் அல்ல..

 6. //பாரதி கண்ணம்மா மேலோட்டமாக சாதியத்தை எதிர்ப்பது போன்றதொரு பார்வையை தரும், ஆனால் அதன் வசனங்களின் வழியாக தாழ்த்தப்பட்ட ஆதி தமிழர்களை ‘வந்தேறிகள்’ போன்று சொல்லும் வசனங்களில் ஆரம்பித்து (“எலேய் நாமதான்லே நமக்காக அவங்களை கூப்பிட்டு வந்து நம்ம இடத்தில குடிசை போட்டுக்க சொல்லி தங்க வைக்கிறோம், நம்ம கொடுத்த பாய்ன்னு நாமளே அதுல போய் படுத்துக்க கூடாது..?” என்று விஜயகுமார் பேசும் வசனம்) என தாழ்த்தப்பட்டவர்களை வந்தேறி அளவுக்கு வசனங்களால் வன்கொடுமை செய்திருப்பார் சேரன், சேரனின் ‘தேசிய கீதம்’ என்ன சொல்ல முயன்றுள்ளது என பாமரனே எழுதி கிழிகிழியென்று கிழித்திருக்கிறார்.

  குழலி ஸார்.. முதலில் தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் இன்றுதான் இதனை பார்த்தேன். கமெண்ட்ஸ் போட்டதே எனக்கு மறந்து போய்விட்டது.

  நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவை விஜயகுமார் என்ற கேரக்டர் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு கனத்தை ஏற்றுவதற்காகவும், கதைப் போக்கில் திரைப்படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் ஒரு கனத்தை ஏற்றுவதற்கும் எழுதப்பட்ட வசனங்கள். அதில் ஒன்றும் தவறில்லை..

  16 வயதினிலே படத்தில் ரஜினி SRIDEVI-யின் அழகைப் பார்த்து “இவ அம்மா எப்படி இருப்பான்னு நினைச்சுப் பார்த்தேன்” என்று சொல்வார்.. பார்த்தீர்களா..? அது அந்த கேரக்டரின் குணம் என்ன என்பதைக் காட்டுவதற்காக சொல்லப்பட்டது. அதே போலத்தான் இதுவும்.

  இது சினிமா.. அரசியல் அல்ல.. நீங்கள் எதையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்தே பழகிவிட்டதால் சினிமாவும், சினிமா என்கிற கலையின் படிக்கட்டுக்களும் உங்களுக்கு அக்கிரமமாகத்தான் தெரியும். ஆனால் சினிமாக் கலையில் இதுதான் ஒரே வழி.

  ஒருவன் எவ்வளவு கெட்டவன் என்பதை அதைப் பதிவில் காட்டிவிட்டு பின்புதான் அவனுக்குப் பாடம் புகட்டுவதைக் காட்டுவார்கள். இது சினிமா மரபு. இல்லையெனில் ஒண்ணுமே செய்யாதவனுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா என்று ரசிகர்ரகள் கூட்டம் குழம்பிப் போகும்..

  இந்தக் குழப்பம் சினிமா ரசிகர்களுக்கு வரக்கூடாது என்பதில்தான் அனைத்து இயக்குநர்களும் மெனக்கெடுவார்கள். காரணம் சினிமா ரசிகர்களால்தான் சினிமா வாழ்கிறது. அச்சினிமாவால்தான் இயக்குநரும் வாழ்கிறார். சினிமா ரசிகர்கள் என்பவர்களில் குழலியைப் போன்ற அரசியல் ரசிகர்கள் கொஞ்சம் பேர்தான். அவர்களுடைய ரசனை என்றென்றைக்கும் சராசரி சினிமா ரசிகனுக்கு ஒத்து வராது.

  //வெளிநாட்டில் வேலைக்கு செல்வதை பற்றி குற்ற உணர்ச்சி ஏற்படும் அளவிற்கு கிழி கிழியென கிழித்திருக்கும் சேரன் ஊரிலே மானம் மரியாதை கெட்டு சம உரிமை இல்லாமல், மனிதனாகவே மதிக்கப்படாமல் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த அமைப்பில் இருந்து தப்பிப் போகும் ஒரு இடமாகவே வெளிநாட்டு வேலை இருக்கின்றது, இவர்கள் மாட்டு பண்ணையும், ஓட்டல் கடையும் வைத்து எப்படி பிழைப்பது? இன்னும் கூர்மையாக இந்த படத்தை விமர்சிக்க ஆரம்பித்தால் இந்த படம் யாருக்கு அறிவுரை சொல்ல எடுத்தது என புட்டு புட்டு வைக்கலாம்.//

  சத்தியமான உண்மை குழலி ஸார்.. இல்லையெனில் நீங்களோ, நானோ இந்நேரம் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்க மாட்டோமா? நீங்கள் ஓரிடம், நான் ஓரிடத்தில் இருந்து எழுத்தால் பேசிக் கொள்வது எதற்கு என்று நினைக்கிறீர்கள்..?

  அப்படி ஒரு நினைப்புள்ள இரண்டு இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் என்ன பாடுபடுகிறார்கள். அவர்களது குடும்பம் என்ன நிலைமைக்குச் செல்கிறது. இறுதியில் அவர்கள் என்ன ஆகிறார்கள்? என்பதைத்தான் அவர் அப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய குறிக்கோள் அப்படத்தைப் பொறுத்தவரை சரியே.. ஒவ்வொருவரின் குடும்பச் சூழலுக்கேற்ப அனைவருமே தங்களது கடமைகள் எவை, எவை என்பதை தாங்களே நிர்ணயித்துக் கொள்கிறார்கள். அதில் இருவர்தான் இப்படத்தின் கதாநாயகர்கள்.

  நீங்கள் கேட்டிருக்கின்ற கேள்விகள் படத்தின் கதையையே மாற்றக் கூடியதாக உள்ளது. அப்படி ஏன் சிந்திக்கவில்லை என்கிறீர்கள்.. ஒரு திரைப்படத்தை வெளிக்கொணர எவ்வகை கதையாடலை, எவ்விதம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்வதற்கு பல காரணிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் யாரையும் பாதிக்காத கதை.. அல்லது குறைந்தபட்சம் கொள்கையுடைய. அதில் இதுவும் ஒன்று.

  நீங்கள் இதையும் அரசியல் நோக்கில் பார்த்தீர்களானால் அதற்கு அவர் எப்படி பொறுப்பேற்றுக் கொள்வார்?

  //’கருத்து கந்தசாமி’யாகி சேரன் எடுத்தாரே மாயக்கண்ணாடி, முழுக்க முழுக்க சாதிய கூறு அதை பற்றிய விரிவான என் பதிவு http://kuzhali.blogspot.com/2007/04/blog-post_28.html.//

  அப்போதே படித்துவிட்டேன் ஸார்.. அது பற்றிய எனது பதிவு இது : http://truetamilans.blogspot.com/2007/05/blog-post.html.

  //சமூக அக்கறை என்ற பெயரில் நஞ்சை கலந்து எடுப்பது ச(ஷ)ங்கர் மட்டுமல்ல அந்த வரிசையில் சேரனுக்கும் ஒரு முக்கிய இடமிருக்கு.//

  அதற்குப் பெயர் நஞ்சு அல்ல.. ‘ஓமத்திரம் குடித்தால்தான் மிட்டாய் தருவேன்’ என்று வீட்டில் பெற்றோர்கள் மிரட்டுவதில்லையா.. அதே போலத்தான்.. ஒரு நல்ல கருத்தைச் சொல்வதற்காக அவர்களைக் கடைசி வரையிலும் உட்கார வைப்பதற்காக அவனுடன் செய்து கொள்கின்ற சமரசம்தான் இது.

  இந்த சமரசமே சில இடங்களில் அளவுக்கு மீறி போய்விடுகிறது. அப்படி போய்விடக்கூடிய திரைப்படங்கள் கலப்படப் பொருள் போலத்தான். அவைகள் சில முறைகளில் நன்கு விற்றிருந்தாலும் காலப்போக்கில் அடியோடு இல்லாமல் போனவை.

  இறுதியாக தங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவெனில், திரைப்படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைச் சொல்வதற்கு இப்போது தமிழ்நாட்டில் ஆட்கள் அருகி வருகிறார்கள். தைரியமாக தான் நலிந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக திரைப்படத்தின் மூலம் மெஸேஜ் சொல்லிக் கொண்டிருப்பது சேரன்தான்.. தயவு செய்து அவரை சாதிய கண்ணோட்டத்தோடோ அல்லது அரசியல் கண்ணோட்டத்துடனோ பார்க்காதீர்கள்.

  திரையுலகத்திற்கு வருகின்ற மக்களில் ஒருவர்தான் குழலி. அனைவருமே குழலிகள் அல்ல..

  வாழ்க வளமுடன்

  நன்றிகள்

 7. “நிபந்தனைகளுக்கு உட்பட்டது”என்று தலைப்பை போட்டு விட்டு எங்கள் கைகளை கட்டிபோட்ட நினைத்தற்கு முதலில் ஒரு நன்றி.
  நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் சிறந்தவர்கள். திரை துறையில் பல்வேறு
  இயக்குநர்கள் தங்களின் பார்வை மூலம் படைப்புகளை தந்து உள்ளனர். ஆனால், பார்த்திப்பபனை என்னால்
  ஏற்று கொள்ள முடியாது. காரணம், ஆரம்பத்தில் நல்ல கருத்து உள்ள படங்களை தந்து விட்டு தான் ஓட்டாண்டி
  ஆகிவிடுமோ என்ற பயத்தினால் தன்னுடைய ஒட்டுமொத்த மனத்தை விற்று எடுத்த படம்” உள்ளே வெளியே”
  மற்ற அனைவரும் தங்கள் கொள்கையை விட்டுகொடுக்காமல் உள்ளனர். “மகத்தான கலைஞர்கள்” விடு பட்டவர்கள் மணிரத்னம்,
  விசு, பாலஜந்தார், சொல்லி கொண்டே போகலாம். சரி இதேபோல் நடிகர், நடிகை பற்றி எழுதுங்கள்.

 8. “மணிரத்னம், விசு, பாலஜந்தார், சொல்லி கொண்டே போகலாம். சரி இதேபோல் நடிகர், நடிகை பற்றி எழுதுங்கள்”//

  அதுக்குத்தான் சாரு நிவெதா, அலம்பல் அன்துமணி (Dinamalar) போன்ற அர வேக்காடுகள் நெரைய வூர்ல இருக்க, அதுக்கு பாமரன் எதுக்கு Brother?

 9. Hi pamaran ,
  Please leave the cinema , it is not important to make comments, thing about our water problems , how we can solve with available our sources without depending others and call our money makers ( IT professionals ) to invest ( Support) our farmers to make healthy cultivation. why i am pointing the IT professionals , they are the one wasting the money without knowing, they are making lot of millioners like builders/realestate, automobile , malls owners and thier favorite clubs ( With alchocal and drugs , what you said earlier )

 10. vanakkam anna.inimelavathu intha thirunthumanu paarppom.’vilaiyum bair mulaiyilaiye theriyum’ enru iyakkunar misskinai sonnirkal itho therikirathu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s