எங்கே செல்லும் இந்தப் பாதை?

இன்றைக்கு இந்தியாவிலேயே தலையாய பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள் நீங்கள்….?

திசை மாறிப் போன விவசாயக் கொள்கைகளால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நிலையா?

“சுதந்திரம்” பெற்று 59 ஆண்டுகளாகியும் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நிறைவேறாமல் இழுத்துக்கொண்டு கிடக்கும் சமூக நீதி குறித்தா?

உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதிய கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு மகுடம் சூட்டுகின்ற “தாராள”தொழிற் கொள்கைகள் பற்றியா?

இப்படித் தேவையற்ற சாதாரணச் சிக்கல்கள் குறித்தெல்லாம் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு “தேசத்துரோகி”யாகத்தான் இருக்க முடியும். இன்றைக்கு இதுவா பிரச்சனை?

மேற்கத்திய நாடுகள்…குறிப்பாக அமெரிக்கர்கள் தூங்கும் நேரத்தில் தாமும் உறங்கி….அவர்கள் விழிக்கும் நேரத்தில் தாமும் எழுந்து…அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் நம் தகவல் தொழில் நுட்பத் துறையினர் படும் இன்னல்களை விடவா அதி முக்கியமானவை இந்த விவசாயிகள், தொழிலாளர்கள் படும்பாடுகள்?

8 மணி நேரம் உழைப்பு – 8 மணி நேரம் ஓய்வு – 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.

இப்படிப் படாத பாடுபட்டு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிடுவது முதல் பிரச்சனை.

இக்கண்ணியவான்கள் சாதாரண உழைக்கும் மக்களோடு சேர்ந்து டாஸ்மாக்கில் குடிக்க முடியாது என்பது இரண்டாவது பிரச்சனை.

அந்த டாஸ்மாக்கும் இரவு 11 மணிக்கு மேல் திறந்திருப்பதில்லை என்பது மூன்றாவது பிரச்சனை.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் திரும்பும் இந்த நடுநிசி நாயகர்களுக்குக் காத்திராமல் PUBS களை ஒரு மணிக்கே மூடி விடுவது நான்காம் பிரச்சனை.

அப்படியே கிடைத்தாலும் அருந்திவிட்டு வருபவர்களை சர்வ பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் வழி மறித்துக் கேள்விகள் வேறு கேட்கிறதே காவல்துறை என்பது ஐந்தாவது பிரச்சனை.
இப்படி ஒன்றா இரண்டா இச்”சமூக சேவகர்கள்” சந்திக்கும் இன்னல்கள்?
எதற்காக? காசய்யா காசு. நீங்கள் முப்பதாண்டுகள் முட்டி தேய உழைத்த பிறகு எண்ணிப் பார்க்கும் மொத்த காசையும் மூன்றே மாதத்தில் சுளையாக எண்ணிப் பார்ப்பதென்றால்…
இரவாவது பகலாவது?
சுதேசியாவது விதேசியாவது?
தான் சீரழிந்தால் என்ன சமூகம் சீரழிந்தால் என்ன?
அப்பன் சாவைக்கூட சி.டி.யில் பார்த்தால் போயிற்று.
சம்பளத்தை விடவா சமூகம்?

இப்படி பிற துறையினர் சம்பாதிக்கவே இல்லையா?
இவர்கள் மட்டும்தானா?
உங்கள் கேள்வி நியாயம்தான்.

உண்மை.
ஆனால் அவர்கள் எவரும் விடிய விடிய மதுபானக் கடைகளை தங்கள் “தியாகங்களுக்கு” ஈடாக திறந்து வைக்கச் சொல்லவில்லை.
” ‘இரவு வாழ்க்கை’ குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கவில்லை.
நடு இரவு வரை தார்ச் சாலை போட்டு விட்டு ஓரத்தில் உறங்கும் பணியாளர்கள் மீது காரை ஏற்றிக் கொல்லவில்லை.

நம்மைப் பொறுத்தவரை ….
நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட…
பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….
இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்.

ஏற்கெனவே இந்த மேதைகளுக்காக புகைக்கும் அறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள நிறுவனங்கள் அடுத்ததாக குடிக்கும் கூடங்களையும்(PUBS) கட்டிக்கொடுக்க இருப்பதாகத் தகவல்.
சபாஷ்.
ஊழியர்கள் கண்ணில் நீர் வழிந்தால்
எஜமானர்களுக்கு உதிரம் கொட்டாமலா இருக்கும்?

இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
தெரிந்திருக்கிறதோ இல்லையோ…
ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.
உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….
ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.

வெளியில்தான் ஆட்டம் என்றில்லை. உள்ளுக்குள்ளும் அப்படித்தான் என்பதைப் பறைசாற்ற பாலியல் வன்முறைகளை விசாரிக்கவென்றே இருக்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள்.

இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல இருக்கிறது.
குடிக்கட்டும்…
கும்மாளமிடட்டும்…
இரவு பகல் பொழுதுகள் புரிபடாமல் உடற்கூறின் தன்மைகள் சிதைந்து
கடவுள் பாதி – மிருகம் பாதி ஆளவந்தான்களாய் அலையட்டும்.
அது ஒரு கட்டம் வரை அவர்களது பிரச்சனை.
ஆனால் அவர்களது வளாகத்தைத் தாண்டி வீதிக்கு வரும்போது அது சமூகத்தின் பிரச்சனை.

மேற்கத்திய நாடுகளின் மனிதர்கள் எந்தெந்த வேளைகளில் கழிப்பறைக்குச்
செல்கிறார்கள்…..
வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியே தள்ளும் கழிவுகளுக்கான பணத்தை எப்படி முன் கூட்டியே செலுத்துவது…
போன்றவற்றிற்குக் கூட Pரொக்ரம்மிங் செய்து கொடுக்கும் நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.

அதுதான்:
முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.

அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.

சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.

சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.
கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோது
மிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்
சமூகமே கற்பிக்கும்.

நன்றி: த சண்டே இந்தியன்

70 thoughts on “எங்கே செல்லும் இந்தப் பாதை?

  1. பகிர்விற்கு மிக்க நன்றி… அய்யா

    முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.

    உண்மையான ,வரிகள்…

  2. உங்கள் எழுத்து நடை மிக அழகாக இருக்கின்றது. எள்ளலும் நக்கலும் உங்களுக்கு இயல்பாக வருகிறது. வாழ்த்துக்கள்.

    ************இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
    தெரிந்திருக்கிறதோ இல்லையோ…
    ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.
    உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….
    ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.************
    இக்கருத்துடன் நான் முழுவதும் ஒத்துப்போகிறேன்.

    அன்புடன்,
    நாகை சங்கர்.

  3. feel2001@yahoo.com | IP: 203.199.253.226

    அன்புமிகு உழைப்பாளி,

    தங்கள் பண்புமிகுந்த பதிலுக்கு
    எமது அன்புமிகு நன்றிகள்.

    தோழமையுடன்,
    பாமரன்.

  4. Paamaranna,
    Nethiadiganna, evanuga aattam thangale. chennai vilai vaasiya ethi putanungo, veetu vaadakaya ethi putanungo, auto vadakai ethi putanungo. ithukku vilai back painunkiran, kannadi maatikiran, sila per- ponnu kidaika mattenguthunkaran, BPO penkalukku ippo maapilai kita matengutham. intha kalachara seer alivu thevaya?
    But ithuku enna theervu. neenga athayum sollalaame.

  5. அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.

    good point.

  6. சிரிக்க வைத்து சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள், இந்த அவலங்களை கேட்டு திருந்த போவது ஒருவர் கூட இல்லை என்றாலும் இத்தகைய அவலங்களை தட்டி கேட்க நீங்கள் ஒருவராவது இருக்கிறீர்களே, சமுதாயம் குறைந்த பட்சமாக நன்றியாவது செலுத்த வேண்டும் – நாகூர் இஸ்மாயில்

  7. I am a s/w engineer and worked in Tidel park.
    நீங்கள் கூறியாவாறு இவனுங்க அலம்பல் தாங்க முடியாது. பொண்ணுங்க மாச மாசம் ரூ 4000 கு துணி எடுக்கறாங்க. லிப்ட் ல் 5 நிமிடம் மின்விசிறி இயங்கவில்லை என்றால் கோவப் படுகிறார்கள். “Friday Night party”, “Saturday Night movie” என்று செல்கிறது இவர்களது உலகம். ரொம்ப புத்திசாலிங்க னு நெனைப்பு.
    Its gods grace that i wasnt carried away by all this.

  8. அன்பு தோழர் பாமரன் அவர்களுக்கு ,

    தங்களது இந்த பதிவு மிக அருமையாக உள்ளது . இந்த பதிவில் கிழே உள்ள கருத்துக்களையும் சேர்த்து இருக்கலாம் என்பது என் அவா .
    ஒரு சமுகத்தில் ஒரு சாரார் மட்டும் வளர்வது அந்த சமுகத்தை பதிக்கத்தான் செய்யுமே ஒழிய வளர செய்யாது . அப்படி பட்ட ஒரு வளர்ச்சியை விக்கமாக மட்டுமே கருதமுடியும் . அப்படி ஒரு சூழ்நிலையை தான் பார்ப்பனர்கள் அப்பொழுது உண்டு செய்தார்கள் . இப்பொழுதும் அதே சூழ்நிலை மீண்டும் இவர்களால் உண்டாக்கப்படுகின்றது . இது உடனடியாக தடுக்கப்படவேண்டிய ஒன்று. இல்லையென்றால் சமுக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்குமே ஒழிய குறையாது. நான் மென்பொருள் உழைப்பாளிகள் வேண்டாம் என்று கூறவில்லை .தனி வளர்ச்சி விழ்ச்சிக்கு தான் வித்திடும் . எல்லோரும் வளர வேண்டும் என்பதே என் கருத்து .

  9. //நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட…
    பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….
    இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்.//
    நெத்தி அடி
    மூளை உழைப்பும், உடல் உழைப்பும் இரண்டும் வேறு, கணினி இல்லாமல் நாம் வாழ முடியும், ஆனால் ஒரு துப்புரவுத் தொழிலாளர்கள் இல்லாமல் இந்த சமூகம் ஒரு இன்ச் கூட நகர முடியாது
    ‘ஜக்கி வாசுதேவ் ஒரு அமெரிக்க அடியாள்’ கட்டுரையை பற்றி உங்கள் விமர்சம் தான் என் என்பதை எழுதி இருந்தால் மிகவும் சந்தோஷா பட்டு இருப்பேன்.

  10. //சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.//

    ஐயா இந்த வரிகள் எப்படி உண்மை ஆகும் என்று கூற முடியுமா? அவர்கள் சந்தோஷமாக குடித்து கும்மாளம் அடிக்கிறார்கள், அது எப்படி அடுத்தவர்கள் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்?

  11. வணக்கம் மேற்கூறிய கோளாறுகளுக்கு எல்லாம் காரணம் கல்விமுறை கற்றலை விடுத்து பணத்தை குறியாக கொண்டு செயல்படுவதுதான். ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தைகள் நன்கு கற்க வேண்டும் என நினைத்தாலும் அதன் பிண்ணனியில் பணம் இருப்பது நாம் வருத்தப்பட வேண்டிய விசயம். மருத்துவமும் பொறியியலும் பணம் கொழிக்கும் துறைகள் என்பதாலேயே பெரிதும் விரும்பபடுகின்றன.இது போன்ற அவலங்கள் நிகழாமல் இருக்க கற்றலின் நோக்கம் பற்றி மாணவர்கள் அறிதல் அவசியம்.விளைவுகளோடு போரடுவதை தவிர்த்து இது போன்ற நிகழ்வுகளுக்கு இனியும் இடம் கொடாதிருக்க அடிமை கல்வி முறை தவிர்த்து சிந்தனையை தூண்டும் கல்வி முறைக்கு நமது குழந்தைகளை மாற்ற வேண்டியது அவசியம்

  12. அருமையான பதிவு!ஆனால் இந்த நிலைக்கு காரணம்..அவர்கள் மட்டும் இல்லை.நம் சமுகம்..கல்வி..நம் முட்டாள்தனமான ,அடிமைதனமான..எண்ணங்கள்…அவை மாறினால் அவர்களும் மாறலாம்!….

  13. நான் (என் அடையாளங்கள் உண்டாக்கும் அதிர்வுகளை தவிர்க்க) says:

    ஐயா,
    தங்கள் எழுத்துக்கள் எனக்கு ஒவ்வாவிடினும், நமது நோக்கங்களில் எள்ளளவும் இடைவெளி இல்லை.
    பார்ப்பனர் ஆவதற்கு தன்னை தகுதிப்படுத்திக்கொண்டிருக்கும் மேதாவிகற்கிடையில், தாங்கள் பாமரனாகவே இருப்பது மிக்க மகிழ்ச்சி. வாழவைக்க வாழ வாழ்த்துக்கள்

    இப்படிக்கு,
    நான் (என் அடையாளங்கள் உண்டாக்கும் அதிர்வுகளை தவிர்க்க)

  14. தங்களது வலைபதிவிற்கு புதியவன். உங்கள் எழுத்துக்கள் அத்தனையும் அருமை. தாங்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்கவும். நன்றி.

    அன்புடன்
    நந்தகுமாரன்.

  15. உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? Can you kindly study “Games Indians Play. Why we are the way we are?” It will give a good insight for you.
    It will really help. This will be an eyeopener for all of you who message here.
    (For Bangalore people, I saw these books in Forum, koramangala)

  16. Anbulla paamarare..
    Software engineers meethu enna ivalavu kobam? migavum podhuppadaiyaana kadum vimarsanamaaga padugirathau enakku. Enakku therintha S/W engineers yaarum aduthavarai mattamaaga naduthubavargal illai. neengal sandhitha, allathu kealvippatta silar appadai irunthirukkalaam.. Appadi paarthaal, thimirthanam enabthu endha thuraiyil iruppavarukku thaan illai…? Naan S/W engineer illai..! Suvaiyaaga ezhuthugireergall… paaraattukkal.

  17. Mr Paamaran,
    I totally agree with all of your views about the s/w community. I am ashamed to say that i am a part of it. I would say nearly 90% of the IT people are used to behave as netioned in the article. However I have some questions..

    “இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
    தெரிந்திருக்கிறதோ இல்லையோ…
    ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.
    உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ..……….” My job required that. It is a part of our day to day activities. Ask about a problem in Europe to a person working in US based company. He will not know anything about that. so It is required as a part of my employement.

    If a superstar wears a yellow colur shirt, the entire tamilnadu is rushing to stores to buy a yellow one.. If an actor whose movie is just 3 hours can make such an impact on a middle class man, think of us who work nearly 20 hours a day with a foreigner. You can realise that obvisously we will be impressed by their culture.

    Because of s/w engineers rent has increased, Prices of common provisions increased etc.. cannot be agreed.. Almost everybody in Tamil nadu has mobile phone.. Everybody is willing to watch Sivaji, on the first day by paying Rs.1000/- +… So people are caring much about the luxury than the necessity..It is the case everywhere..

    I am again reiterating that I totally agree with your comments on S/W community. But some comments are not acceptable.

    I am sorry if my comments hurts you / any one in the thread.
    (p.s) I typed my comments in English becase my computer doesnt supprt tamil fonts.

    Thanks,
    Aravind
    (Pub-kku pogatha, mariyathai therintha, Office vittu vantha odane Company ID kalattiitu vera vela paakara oru satharana s/w engg.)

  18. Sir.. ungalae nenachaa iyoo paavamaa iruku…..
    All your knowledge abt S/w professionals are base on
    1)Films (Tamil M.a, Alaypayuthae…)
    2)Over peela S/w guys .

    ///மேற்கத்திய நாடுகள்…குறிப்பாக அமெரிக்கர்கள் தூங்கும் நேரத்தில் தாமும் உறங்கி….அவர்கள் விழிக்கும் நேரத்தில் தாமும் எழுந்து…அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் நம் தகவல் தொழில் நுட்பத் துறையினர் படும் இன்னல்களை விடவா அதி முக்கியமானவை இந்த விவசாயிகள், தொழிலாளர்கள் படும்பாடுகள்?////

    Humour is essential for the essays… But not with the help of huge lies / ignorance.

    Karthi

  19. Sir.. ungalae nenachaa iyoo paavamaa iruku…..
    All your knowledge abt S/w professionals are base on
    1)Films (Tamil M.a, Alaypayuthae…
    2)Over peela S/w guys .

    ///8 மணி நேரம் உழைப்பு – 8 மணி நேரம் ஓய்வு – 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.

    இப்படிப் படாத பாடுபட்டு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிடுவது முதல் பிரச்சனை.

    இக்கண்ணியவான்கள் சாதாரண உழைக்கும் மக்களோடு சேர்ந்து டாஸ்மாக்கில் குடிக்க முடியாது என்பது இரண்டாவது பிரச்சனை.////

    Humour is essential for the essays… But not with the help of lies / ignorance.

    Karthi

  20. பாமரன் அண்ணா, நீங்கள் எனது இந்த பதிவுகளை படித்து மறுமொழி இட வேண்டும். தங்களிடம் மறுமொழி கேட்பதில், தங்க்ளைக் கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கம் துளியும் இல்லை. எழுதவேண்டும் என்று எனக்குள் ஆர்வத்தை உருவாக்கியவர்களுள் நீங்களும் ஒருவர். உங்களது கருத்துக்களை அறிந்துகொள்வது மட்டுமே எனது விருப்பம்.

    நன்றியுடன்
    விஜய்கோபால்சாமி

    இணைப்புகள்:

    அய்யா காம்ரேடுகளே – I (http://vijaygopalswami.wordpress.com/2008/04/05/%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/)
    அண்ணா, இதற்கான மறுமொழிகளையும் படிக்கவும்.

    அய்யா காம்ரேடுகளே – II
    (http://vijaygopalswami.wordpress.com/2008/04/18/%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-ii/)

  21. Kumudam vaangiyavudan, naan mudhan mudalil padipapthu pamaran pakkam thaan…..well going………….keep it up..[konjam paathu ezudhungo…illattu sambandha pattavangakitta adi vaanga poereenga.]

  22. அருமை…ஆழமான வரிகள். பாமரனுக்கும் தெரிந்த இவ்விசயங்கள் ஏன் படித்த மேதாவி ப.சிதம்பரத்திற்கு புரியவில்லை. தகவல் தொழில்நுட்பத்துறையில் லாபமில்லை என்றால் கவலைப்படுகிறார். டாலர் மதிப்பு இறங்கினாலும் பதறுகிறார்.

  23. அண்ணன் பாமரன் அவர்களுக்கு..

    பட்டிக்காட்டில் பிறந்து பட்டணத்தில் படித்து பொட்டி (தகவல் தொழில் நுட்பத் துறை) தட்டி பிழைப்பு நடத்தும் எண்ணற்ற இளைஞர்களில் நானுன் ஒருவன்.

    தோழரே உங்களுக்கு ஏன் எங்கள் மேல் இந்த கொலை வெறி?

    “8 மணி நேரம் உழைப்பு – 8 மணி நேரம் ஓய்வு – 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.”

    மற்ற துறையில் வேலை செய்யும் எத்துனை பேர் இந்த சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்கள்? எத்துனை பேர் இரட்டை குவளை முறையை எதிர்த்தார்கள்? எத்துனை பேர் தேர்தலின் போது தங்களின் கருத்துக்களை பதிந்தார்கள்?
    என்னமோ நாங்க மட்டும் தான் சமுகத்தை பற்றி கவலை படாமல் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் வேலை செய்கிற மாதிரி சொல்கிறீர்கள்? யாரும் விருப்பப்பட்டு இத்துணை நேரம் வேலை செய்ய முடியாது.. எங்களுக்கு அப்படி ஒரு கட்டாயம், அதனால் செய்கின்றோம். கொத்தடிமைகளாக ராஜஸ்தானுக்கு கல் உடைக்கும் போகும் மக்களை போல தான் நாங்களும்.. என்ன எங்களுக்கு பணம் பை நிறைய கிடைக்கிறது, அவ்வளவு தான் வேறுபாடு. பிடிக்கவில்லை என்றால் தூக்கி போட்டுட்டு வரவேண்டியது தானே என்று கேர்க்கலாம் ? வந்தால் என்ன வேலை செய்வது? “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைப்பவர்கள் வேறு என்ன தொழிலுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.. கிராமத்தில் நெல் அறுப்பின் போது, காலையில் நெல் அறுத்து இரவு நெல் அடித்து, மீண்டும் மறு நாளில் வேறு ஒரு தோட்டத்தில் இதே வேலையை நெல் அறுப்பு காலம் முடயும் வரை தொடர்ச்சியாக செய்வார்கள்.. இவர்கள் ஏன் ஒய்வு இல்லாமல் வேலை செய்து பணம் சேர்க்கிறார்கள்? ஏன் வேலை செய்யும் நேரத்தை குறைத்து மற்ற விவசாய கூலிகளுடன் பகிர்ந்து செய்யலாமே? வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்தி கொள்வது தான் முன்னேற்றத்திற்கு உதவும், அதனால் தான். இவர்களை போல தான் நாங்களும் மற்றவர்களை கீழே தள்ளி நாங்கள் முன்னேற முயற்சிக்கவில்லை.
    சினிமா டிக்கெட்டுக்கு 50 ரூபாய் என நிர்ணயம் செய்த அரசு கரும்புக்கு, நெல்லுக்கு என ஒரு விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையை நிர்ணயம் செய்தால் ராசா மாதிரி இருப்போமே.. இந்த பாழா போன நகரத்தில் வாழனும்னு தலை எழுத்தா என்ன .

    “இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
    தெரிந்திருக்கிறதோ இல்லையோ…
    ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி. ”

    என்ன செய்வது இந்திய பொருளாதாரம் அமெரிக்கா சந்தையை நம்பி இருக்கிறதே..
    சமீபத்தில் இந்தியாவின் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது கூட அமெரிக்காவில் நடந்த வீழ்ச்சியின் தொடர்ச்சி தான்.
    அமெரிக்காவின் டாலர் மதிப்பு குறைந்தால் இங்கே திருப்பூர் பின்னலாடை தொழிலில் இருப்பவர்களுக்கு வேலை போகிறதே..
    பிறந்த மண்ணை விட்டுவிட்டு அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ தங்களது வீடுகளை மொத்தமாக மாற்றும் எண்ணம் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது பொருந்தும்..

    “வெளியில்தான் ஆட்டம் என்றில்லை. உள்ளுக்குள்ளும் அப்படித்தான் என்பதைப் பறைசாற்ற பாலியல் வன்முறைகளை விசாரிக்கவென்றே இருக்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள்.”

    பாலியல் வன்முறைகள் எங்கு தான் இல்லை? வலியவன் எளியவர்களை பாலியல் கொடுமைக்கு உள்ளகுவது நம் காவல் துறையில் இருந்து, கோவை நூற்பலைகளில் இருந்து, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் இருந்து.. தோட்டத்தில் வேலை செய்யும் இடத்தில் இருந்து.. சாமியார் மடம், தேவாலயம் எல்லா இடத்திலும் உள்ளது.. நான் சொல்லவருவது அறிபெடுத்தவன் எங்கள் துறையில் மட்டுமில்லை.. எல்லா இடத்திலும் இருக்கான். குறைந்த பச்சம் நீங்கள் சொல்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள் எங்களுக்கு இருக்கு ஆனால் திருப்பூரில் வேலை செய்வோருக்கு எந்த குழு இருக்கு?

    “நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.அதுதான்:
    முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.
    அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.
    சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக் கொள்ளட்டும்.
    சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.”

    மனிதனுக்கு மனிதன் ஏற்ற தாழ்வு பார்க்க கூடாது.. பணம் மட்டுமே மரியாதையை கொடுத்துவிடாது.அனைவரையும் நேசிக்கவேண்டும்.
    நீங்கள் சொல்வதை முழுமனதுடன் ஏற்றுகொள்கிறேன்.. ஏற்ற தாழ்வுடன் நடப்பவன், மற்றவர்களை நேசிக்கதவன் மனிதனாக இருக்க முடியாது.. கண்டிப்பாக சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் ஆனால் அதை எங்கள் துறைக்கு மட்டும் ஏன் கூறுகிறீர்கள் ?

    கடைசியாக…
    ஒரு சில இடத்தில், ஒரு சிலர் செயுய்ம் தவறுக்கு ஒட்டு மொத்த தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்வோரையும் குறை சொல்ல வேண்டாம்.
    நீங்களும் எழுத்தாளர் தான், ஞானியும் எழுத்தாளர்(?) தான்.
    அவர் எழுதும் கிறுக்கல்களுக்கு உங்களலையும் சேர்த்து ஒட்டு மொத்த எழுத்தாளர்களையும் திட்டினால் எப்படி இருக்குமோ அது போல இருக்கிறது உங்கள் இந்த கட்டுரை.

    எங்கள் இதயத்தில் பாமரனுக்கு என்று ஒரு இடம் எப்போதும் உண்டு.
    உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கும் அன்பு தம்பி.

    சக்தி

  24. இது நம்ம நண்பர் ஒருத்தர் எழுதுனது

    நாங்களும் மனிதர்கள் தான்
    சாப்ட்வேர் வல்லுந்ர்களை சபிகாதீர்கள்
    நாங்களும் மனிதர்கள் தான்

    நாங்கள் வாங்கும் முழுசம்பள பணத்திற்கும்
    அரசிற்கு வரிகட்டுகிறோம்….
    நாங்கள் மேசைக்கு கீழே கீம்பளம்
    வாங்குவது கிடையாது…..

    எங்கள் அலுவலகங்களில் அரசு அலுவலகங்கள் போல்
    வேலை நேரபலகை இல்லை

    இந்தியா வேலை அமைப்பு சட்டத்தின்
    சாதி,மதம் என்னும் கட்டத்தை
    எங்கள் அலுவலகங்களில் உபயோபடுத்துவது இல்லை

    எங்களுக்கு வெயிலின் அருமை தெரியாது
    ஆனால் மன அழுத்தத்தின் வலி தெரியும்

    எங்களுக்கு சம்பளம் அதிகம் என்று எண்ணுகிறோர்கள்
    ஆனால் உங்களை போல் சாகும்வரை
    ஓய்வு ஊதியம் இல்லை

    மற்ற துறைகளால் இந்தியனின் அறிவு மதிப்பு
    அந்நியனுக்கு தெரிந்ததைவிட
    எங்களால் தெரிந்தது அதிகம்

    எங்கள் அருமை உங்களுக்கு தெரியவில்லை
    உங்களின் பொறமைபிடித்த கண்களுக்கு
    நாங்கள் அந்நிய அடிமைகள் என்று எண்ணலாம்

    குழந்தையின் மழலை பேச்சு தாய்க்கு புரியாதது
    குழந்தையின் குற்றம் இல்லை

    நாங்களும் மனிதர்கள் தான்

    http://charlesantony.blogspot.com/
    http://charlessmiles.blogspot.com/

  25. சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்

    ITHU ONRE POTHUM UNGAL ELUTHUKALLUKKU

  26. Good Day, Paamaran, I am commenting from the office hence i dont have a tamil font. I am happy that you read “The Sunday Indian”. It is something to appreciate that people who have the social thought able to find the right magazines to read. Unfortunately i am also working in the same industry in fact i want to live life with family and friends which is not at all possible in this Industry. I took 20 days leave and i enjoyed “Panamarathu Kallu” and had good tummy, good sleep and now i am missing so many things. Though i type in English, my heart and soul beats for the cause of Tamils around the world. Keep doing this good job forever. Cheers, Nagarajan

  27. “இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
    தெரிந்திருக்கிறதோ இல்லையோ…
    ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.
    உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….
    ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.”//

    இவர்களைத்தான் தோழர் அசுரன் படித்த புழுக்கள் என்கிறார். தோழர் அசுரனின் கட்டுரையில் இரு ந்து ஒரு பகுதி.

    அடிமை நாடும் போலி சுத ந்திரமும் — தோழர் அசுரன்

    1947 – இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளையன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசமான கையாட்களிடம் அவன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மும்பை கடற்படை வீரர்களின் எழுச்சியும் தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டமும் நாடெங்கும் பற்றிப் படர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், அன்று காங்கிரசு – முஸ்லிம் லீக் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன.

    ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.

    இன்று, வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான். நமது நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் தேவையையோ நாட்டு நலனையோ கணக்கில் கொண்டு வகுக்கப்படுவதில்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆணையைத்தான் எல்லா அரசாங்கங்களும் பணிவுடன் அமல்படுத்தி வருகின்றன.

    இந்தக் கொள்கைகளால் இந்தியத் தரகு முதலாளிகளின் லாபம் விண்ணை முட்டுமளவு உயர்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ மரணக் குழிக்குள் சரிகிறது. இது தெரிந்தும் “இந்தியா ஒளிர்கிறது” என்று குதூகலிக்கிறார்கள் ஏகாதிபத்திய அடிமைகள். உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் போர்வெறி பிடித்து அலையும் அமேரிக்க வல்லரசின் எடுபிடியாகவும் ஆசியப் பகுதிக்கான அடியாளாகவும் இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த அடிமைகளோ, “இந்தியா வல்லரசாவதற்க்கு இதுதான் சிறந்த வழி” என்று குதூகலிக்கிறார்கள்.

    இவர்கள் சுதந்திர உணர்வற்ற பிழைப்புவாதிகள், நாட்டுப்பற்றும் சுயமரியாதை உணர்வுமற்ற புழுக்கள் – ஆனால் படித்த புழுக்கள், “ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் எனப் படித்துப் பட்டம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளாகி லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்; குடும்பத்தோடு அமேரிக்காவில் குடியேறலாம்; பன்னாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டாக இந்தியாவைக் கொள்ளையிடலாம்” என்றெல்லாம் கனவு காணும் இத்தகைய அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள்.

    அன்று பகத்சிங் முதலான போராளிகள் நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த போது இத்தகைய மானமற்ற புழுக்கள் பிரிட்டிஷ் அரசின் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். கலெக்டராக, ஜட்ஜாக, போலீசு அதிகாரியாக, அமைச்சராக, துரைமார்களுக்கு தொண்டூழியம் செய்யும் விசுவாசமான அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு வெள்ளைக்காரனின் நிர்வாகத்திறனை மெச்சி, அவன் ஆட்சி நீடிக்க வேண்டுமெனப் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார்கள்.

    அன்றைக்கும் இன்றைக்கும் வேறென்ன வேறுபாடு? அதிகார நாற்காலியில் அந்நியன் நேரடியாக அமர்ந்திருந்தால்தான் காலனியாதிக்கமா? கல்லாவில் அமர்ந்திருந்தால்தான் கடைமுதலாளியா?

    “பிரிட்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நிற்க வேண்டுமென்றும், தன்னை மீறி வேறு அரசுகளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் வெல்லெஸ்லியின் துணைப்படைக் கொள்கை அன்று இந்திய மன்னர்களை நிர்பந்தித்தது. இன்றைய அமேரிக்க – இந்திய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கேல்லாம் இந்திய இராணுவம் அடியாள் வேலை செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறது, இரானுடன் உறவைத் துண்டிக்குமாறு உத்தரவிடுகிறது, இந்திய அணு ஆயத உற்பத்திக்குத் தடை விதிக்கிறது.

    அன்று டல்ஹவுஸியின் வாரிசிலிக் கொள்கை, வாரிசு இல்லாத மன்னர்களின் நாட்டை இணைத்துக் கொள்வதாகக் தொடங்கி, பின்னர் எல்லா சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதில் முடிந்தது. இன்றோ, ‘நட்டமாகும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்’ எனத் தொடங்கிய தனியார்மயக் கொள்கை, லாபமீட்டும் பொதுத்துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசிக்கு விருந்தாக்க வேண்டும் என்று வளர்ந்திருக்கிறது.

    அன்று ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகள் மூலம் விவசாயிகளைப் பிழிந்து கஜனாவை நிரப்பியது பிரிட்டிஷ் அரசு. இன்று அரசுக் கொள்முதல் ரத்து, மானிய வெட்டு, தானியக் கொள்முதலில் அன்னியக் கம்பெனிகள், அதிலும் ஊகவணிகம், விவசாயிகளின் பாரம்பரிய விதைகளையே அன்னியன் உடைமையாக்குவது போன்ற சதிகள் மூலம் விவசாயியைக் கடனாளியாக்கி விவசாயத்தை விட்டே துரத்துகிறது அரசு.

    அன்று கந்து வட்டிக்குக் கடன் பட்ட தமிழ்நாட்டின் விவசாயிகளை ஏமாற்றிக் கப்பலேற்றி, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் அவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இன்றோ கடன்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள், ‘கொத்தடிமையாவோம்’ என்று தெரிந்தே மலேசியாவுக்கு ஓடுகிறார்கள். பஹரைனில் தீக்கிரையாகி சவப்பெட்டியில் வீடு திரும்புகிறார்கள்.

    எதுவும் பழங்கதையல்ல. கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண் முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராட தூண்டும் உந்துவிசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக, 200 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள், தமிழகத்தின் வீரர்கள்

    நன்றி — தோழர் அசுரன்

  28. மேற்கத்திய நாடுகள்…குறிப்பாக அமெரிக்கர்கள் தூங்கும் நேரத்தில் தாமும் உறங்கி….அவர்கள் விழிக்கும் நேரத்தில் தாமும் எழுந்து…அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் நம் தகவல் தொழில் நுட்பத் துறையினர்…
    //////////////

    திருமிகு பாமரன் அவர்களுக்கு,

    தாங்கள் சொல்வது போல், அவர்கள் காலால் நமக்கு பணியிடவில்லை. நமக்காக கால் கடுக்க காத்திருக்கிறார்கள். நம்மை மனிதராக பாவிக்கிறார்கள். நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள். எந்த நோக்கத்தில் தாங்கள் இப்படி கூறி இருக்கின்றீர்கள் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.

    தகவல் தொழில்நுட்பத்துறையினர் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் ஏராளம்.மேலும் அவர்கள் குறித்த எண்ணங்களையும் தவறாகவே பதிந்திருக்கிறார்கள்.

    ஆரம்பத்திலேயே ஆயிரங்களில் சம்பளம்..அதனால் பலதரப்பட்ட கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமை ஆகின்றனர் என்பது போன்ற எண்ணம். ஒரு மாயை.

    ஒழுக்கம் கெடாமலும், நம் பாரம்பரியம் மாறாமலும் எவ்வளவோ மக்கள் அதே துறையில் இருக்கின்றார்கள். ஒரு சில விழுக்காடு தான் தாங்கள் சொன்னது போல் இருக்கிறார்கள்…

  29. 8 மணி நேரம் உழைப்பு – 8 மணி நேரம் ஓய்வு – 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.
    /////////

    இதனை பற்றி அவசியம் பேசித்தான் ஆகவேண்டும். தாங்கள் சொல்வது போல் 20 மணி நேரம் உழைப்பதாக சொல்வதெல்லாம் நம்பும் படியாக இல்லை. ஒரு சில இக்கட்டான நேரங்களில் அதிக நேரம் செலவிடுகிறோம் என்பது உண்மை தான். இதற்கு சில காரணங்கள்

    இயலாமை. விளக்கமாக வேண்டாம். சுருக்கமாகவே சொல்கிறேன். தொடக்க காலத்தில் நிறைய நேரம் செலவிட வேண்டித்தான் ஆகிறது. ஓரளவுக்கு அதில் புலமை பெறும் போது, தொழில் நுட்ப வளர்ச்சி, போட்டி காரணமாக அதிக நேரம் செலவிடத்தான் தோன்றுக்கிறது.

    தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வது வெறும் பணி மட்டும் இல்லை. தொடர்ந்து கற்றலும் தான். இரண்டும் சேரும் போது கூடுதல் நேரம் அலுவலகத்தில் இருக்கத்தான் நேரிடுகிறது. இதற்கும் மேல், orkut, chat போன்ற சமாச்சாரங்களும் நமது நேரத்தை வீணடிக்கிறது என்பதை ஒப்பு கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

    தாங்கள் சொல்லும் காலால் வேலை தரும் அமெரிக்கரோ, ஐரோப்பியரோ நம்மை 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய சொல்வதில்லை. அதனை அவர்கள் விரும்புவதும் இல்லை. இப்படி நாம் அதிக நேரம் உழைப்பதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம்

    “இந்தியர்கள் தெரியாவிட்டாலும், தெரியாது என்றோ, முடியாது என்றோ சொல்வதே கிடையாது”. கடைசி நேரத்தில் முடியாது என கைவிரிப்பது வேறு விசயம்

  30. எதற்காக? காசய்யா காசு. நீங்கள் முப்பதாண்டுகள் முட்டி தேய உழைத்த பிறகு எண்ணிப் பார்க்கும் மொத்த காசையும் மூன்றே மாதத்தில் சுளையாக எண்ணிப் பார்ப்பதென்றால்…
    இரவாவது பகலாவது?
    சுதேசியாவது விதேசியாவது?
    தான் சீரழிந்தால் என்ன சமூகம் சீரழிந்தால் என்ன?
    ///////////////

    உழைப்பதை தவறு என்று சொல்கின்றீரா? 30 ஆண்டுகளில் சம்பாதித்ததை 3 மாதத்தில் ஊதியமாக பெற்றால் அது வளர்ச்சி தானே? ஏமாற்றி சம்பாதிக்க வில்லையே.

    இரவு பகல் பாரமால் உழைப்பதால் வரும் கேடுகளை அறியாமல் இல்லை. அதற்காக ஆயுள் முழுவதும் அப்படியே இருக்கிறோம் என்பதையும் ஏற்று கொள்ளத் தயாராக இல்லை
    /////////////

    அப்பன் சாவைக்கூட சி.டி.யில் பார்த்தால் போயிற்று.
    சம்பளத்தை விடவா சமூகம்?

    நாங்கள் அவ்வளவு கல்நெஞ்சம் கொண்டவர்கள் இல்லைங்க. வயது முதிர்ந்த பெற்றோருக்காக எவ்வளவோ நல்ல வாய்ப்புகளை எல்லாம் உதரியவர்களை பார்த்திருக்கிறேன்.

  31. ஏற்கெனவே இந்த மேதைகளுக்காக புகைக்கும் அறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள நிறுவனங்கள் அடுத்ததாக குடிக்கும் கூடங்களையும்(PUBS) கட்டிக்கொடுக்க இருப்பதாகத் தகவல்.
    சபாஷ்.
    ஊழியர்கள் கண்ணில் நீர் வழிந்தால்
    எஜமானர்களுக்கு உதிரம் கொட்டாமலா இருக்கும்?
    /////////////

    மேலை நாடுகளிலேயே புகைக்கும் அறைகளை மூடிக்கொண்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை.

    அவர்கள் இது போன்ற சலுகைகள் எதை வேண்டுமானலும் செய்யட்டும். தனிமனித ஒழுக்கத்திற்கு முன்னால், இவற்றால் ஒன்றும் செய்ய முடியாது.

    PUBS க்கு செல்வதை நியாயபடுத்த வில்லை… இருந்தாலும் கேட்கிறேன்… தகவல் தொழில் நுட்பத்துறையினர் மட்டு்ம் தான் அங்கு செல்கின்றனாரா? அப்படியே சென்றாலும் அவர்கள் கருப்பு பணத்தையோ (உதாரணம்: திரைத்துறையினர்) மக்கள் வரிபணத்தினையோ (அரசியலர்கள்) உபயோகபடுத்துவதில்லையே.

    இது பொதுவான பிரச்சனை. இதனையும் எங்களோடு இணைத்து விடாதீர்கள்

  32. முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.

    அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.

    சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
    கொள்ளட்டும்.
    ////////////

    இது சமூகத்திற்கு சொல்ல வேண்டியது.

    சக மனிதர்களை நாங்கள் நேசிப்பதில்லையா? எந்த அர்த்தத்தில் சொல்கின்றீர்கள் என்பது சரியாக விளங்கவில்லை.

  33. தாங்கள் சொன்னதையே இறுதியாக நானும் முடிக்கிறேன்

    சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

  34. பாமரன் அய்யாவிற்கு ஏனது வணக்கம் நான் உங்களது படித்ததும் கிழித்தும் வாசகன் நான் மிகவும் விரும்பி படிப்பென் கிழிப்பது தொடர வென்டும்

    தங்களின் கைப்பெசி என் கிடைத்தால் மிகவும் மகில்வென்

    பாலாஜி

  35. Dear Orkut Pamaran and others,

    There are few things in your article which is true and I agree. But most of them are not true.
    For your kind information, there are few people who behave like they are the king or so as you said but not majority. And this is not only happening with S/W field. If you go to a Police Station, u can see this. If you happen to meet any industrialist (small or large), you can see this kind of attitude.. But again not all in all fields are with attitude problems. In the same way, this S/W field is also not far from that.

    Coming to the hike in prices – Rent: It is not because of S/W engrs. Its because of teh people who own the house and rent to people. Do you know what the house owners are telling IT people? “Ennappa S/W Engr nu sollare – oru 200 rupee entha masathula erunga vadagai athigama kuduthru.” If we deny that, the next thing, “seri rooma eppo kali panrey..”
    There is no other go other than giving the money, because the IT ppl are staying far off from their home. They dont have any body to help them to solve the issue. If you take it police, teh same is response.So, please change your views.

    Also, entha tholilum kevalamanathu kidaythunga.. It is must to know abt your job and the people with whom you are working.. So its duty of an IT person to know about the economy or bank related laws or anything for that matter of a particular company with which he is working. Ethule ennanga thappu…

    I feel that you are carried away by few films like Tamil M.A. As far as I know, IT people thanga olunga Tax pay panranga.. Avanganala India vukkum, samugathukkum profit e thavira loss kidaythu.. Avangalum kundu chatikulla kothirai ottinal – entha Tax amount varathu…
    Dont say that IT people are workign for the betterment of other country… Yes, they do but understand that there is no harm in doing that when u dont have enough opportunities here. Do you want those people alos to sit in the long queue wiating before the gates of employment exchanges. Dont argue that they can start their won business. Do you know how many people entring IT are from very poor and middle class family with huge bank loans.

    I would liek to request you to knidly consider the entire community and judge and not by looking at few people, who showcase.

    PS: I am a S/W from a very small village in TamilNadu.

  36. Dear Pamaran,

    All your problem is because you are envy about the salary the software professionals getting.

    First I request you to understand the application of software in day to day life.

    For your use I list down some application a common man using in day to day life.
    1. Watching satellite TV. (It is possible because of the work includes software engineer)
    2. Speaking in cell phone also playing games in it.
    3. Banking. (Without software you will not able to manage ATMs)
    4. Reserving railway ticket or any ticket.
    5. More than that for your “pamaran.com”.

    The above are only a small list. If it completes, you will realize that without software the world will not survive today. So software engineers are not useless to the society as described by you. Also please come out with the perception that software engineer means they are working only for America. Even your Russia, Cuba and more than that our “Mother India” needs software today. Please imagine without software applied equipments, how you could manage all the business and activities in today’s world. So software engineers are must need for society today.

    Then you said they are writing software to clean the shit for Americans. It may be right and there is nothing wrong in assisting to design those instruments. You are feeling bad that a man is cleaning other man’s shit. But if somebody comes out with a solution for that and if they paid highly you won’t agree with them. Here you can understand the conflict in your thoughts. So to satisfy you the only solution is the man should never shit. Can you?

    Then you are telling that they are working like slaves to the Americans. It is completely wrong. They are working with complete liberty and as per consequences than any other Indian companies. If you are really care about the employee welfare and their
    Self-respect, then you need to visit the small industries owned by Indians in sipcots near by Chennai. They are very free to make any comments in their company than any other Indian companies. So they are definitely not slaves.

    Then you are telling that they are working for long hours. Dear Sir it is common for all. I hope you will work for long hours if two are three magazines are ready to pay for your articles. There is O.T existing in all industries and even in forms. Even mason will do night work if he paid higher. So they know to keep their health and you don’t need to worry about it.

    Then you are talking about sex abuse. It is not only in software industry dear friend. It exists in all the industries where ever women working with man.
    It is not only in industries but also with mason and their helpers. So this is not because of software profession.

    Then you are telling that they are killing the platform people by drunken drive.
    It is exaggeration and not real. What is about the disciplined lorry drivers who drive the vehicle always drunken? You are very partial in your views.

    Then for your information, the world will always pay more money to the people who are working in latest technology. In the older days the accountants use to earn more.
    It is always common. Not the term is for software engineers. Tomorrow there will be some group who are working with more advanced technology. They will be paid high.
    It is unwritten rule and nobody can change it.

    You are only talking about the price hike. What about the hike in salaries. Today people earn also more. But the price hike is definitely a problem even for software engineers. There is lot of factors in price hike and not only because of software engineers.

    Finally,
    We know that we are like any others. We are not superior to any other. At the same time we have our own rights to seek ways for our livelihood. It is our option to work where ever we want. I hope you will not let your daughter to marry a software engineer.

    There is no need to the society to teach a lesson for software engineers. Because they are also part of our society and without them it is difficult to sustain today’s life in this planet like any other professionals.

    Thank you very much for your understanding.

  37. தோழர் பாமரன் அவர்கட்கு,

    07/05/08 குமுதம் கண்டு விரக்தி அடைந்த வாசகர்களில் நானும் ஒருவன். ஏற்கனவே, அத்தி பூத்தாற்போல் நமது வலைப்பூ பூக்கிறது. தயவு செய்து, தோழர்களை வருத்தபடும் வாசகர்களாக்காதீர்கள்!

    விரக்திவுட்ற வாசகன்

  38. //நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட…
    பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….
    இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்.//

    good thoughts

  39. நல்லா கருத்து சொன்னீங்க சார், உங்க வயித்து எரிச்சலுக்கு ஜெலூசில் சாப்பீடீங்கன்னா சரியா போவும். அப்படியே வருங்காலத்துல உங்க பையனை ஐடி துறை சார்ந்த எதற்க்கும் அனுப்பாம உங்க ஆசை படியே துபபுறவு தொழிலுககோ அல்லது வேற ஏதாச்சுக்கோ துட்டு சம்பாதிக்க முடியாத தொழில் செய்ய சொல்லுங்க.
    வார வார குமுதத்துல தான் காசு கொடுத்த கருமதுக்கு இந்த பாமரன் எழுதும் வயித்தெரிச்சல் குப்பை எல்லாம் படிக்கனும்னா இங்க தனியா ப்ளாக் ஆரம்பிச்சு வேற அதே குப்பை காபி பேஸ்ட் தாங்கமுடியலை

    உங்களுக்கு இந்த நாடு புடிக்கிலியா உங்க பேவரை ஈழத்துக்கு போவ வேண்டியது தானே ஏனுங்க இங்க குந்தின்னு முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யாம சும்மா புலம்பறதே வாடிக்கையா போச்சு

  40. பாவம் யார் பெத்த பிள்ளையோ இப்படி உள‌றுது. கூப்புட்டு போய் மந்திரிங்கப்பு! ஏன்யா, தெரியாமத்தான் கேக்குறேன், அவிங்களாவது, வேல செஞ்சு சம்பாதிக்கிறாங்க. நீங்க குத்தம் சொல்லியே சம்பாதிக்குரீங்களே, ரொம்ப கஷ்டம்தான். எல்லோரும் சமம்தான்னு சொல்ற நீங்க ஏன் இவிங்கள் மத்தும் குத்தம் சொல்றீங்க. ஏன், சினிமால ஹீரோயினி என்ன பண்றாங்கன்னு இவ்ளோ சம்பளம் தர்றாங்கன்னு சொல்லுங்க. அவிங்க ஆடுறத விடவா இவிங்க ஆடிட்டாங்க. மத்தவங்க சம்பளத்த குறைக்க சொல்றத விட்டுட்டு, எப்படி எல்லோரும் நிறைய சம்பாதிக்கலாம்னு யோசிங்கப்பு. உக்காந்து எடத்துல உக்காந்துக்கிட்டு நோகாமா கடுதாசி எழுதிட்டு இருக்காமா, உருப்படியா அதயாவது செய்ங்க.

  41. பாமரனின் எஙகே செல்லும் இந்த பாதை? கட்டுரை அருமை! இன்னும் செயல்படும் அளவிற்கு நம் எழுத்து வீரியம் ஆகட்டும்.
    அன்புடன் செந்தமிழ்.

  42. I have so far read and heard that pamaran is a neutral writer who really has got brains.

    I hate to disagree with pamaran that how naively he has written this article. Shame on him that he is using generalization to accuse a community of educated indians who are making india proud in global scenario.
    I know of some writers who are really bad to society. can i use paamara’s generalization theory and say that all tamil writers are writing bull-shits. Please stop this hate campaign and do some research before u write. after all u r paid for that.

  43. Mr. Beer Mohammed, you have heard wrong that Mr. Pamaran is a neutral writer, he is not, and I don’t think he will ever be. He always supports, writes and laments only for poor and penurious working class people. He never appreciates or regards our (educated or middle Indian’s like you, me or Dr. Abdul Kalam’s) contribution to India, or our economic growth, or technological growth or the respect we get in the global scenario.

    I think educated people like us should not read his naive writings. Instead of wasting our precious time reading his believes and worrying about poor people we can write some more computer programmes or spend more time with our precious overseas clients, or serve our American or Western customers better. Atleast, this will help India to get her Super Power status faster than Dr. Abdul Kalam’s dream.

  44. Thats well said.

    He echoes the very apt superficial left ideology which always thinks that modernization and globalisation are evils. Its hight ime these comrades need to go to tuition in china.

    They talk loudly about gujarat but not about singur or nandigram. For any educated indian both modi and buddhadeb would be the same.

    I hope if pamaran also reflects these then, as u suggested its better to keep off from this shit and concentrate on delivery quality and six sigma.

  45. ஆண்கள் எல்லாரும் குடிகாரர்கள், குழந்தைகள் எல்லாம் தொல்லைகொடுப்பவர்கள், பறவைகள் எல்லாம் உங்கள் மீது எச்சம் போடும், பெண்கள் எல்லாம் டி.வி சீரியல் பார்ப்பவர்கள், அரசு பணியாளர்கள் எல்லாம் ஊழல் செய்பவர்கள்… ஏழைகள் எல்லாம் ஏமாற்றப்படுபவர்கள்…. நம்மள நூறு இல்ல ஆயிரம் ஆண்டவர்கள் வந்தாலும் காப்பாத்த முடியாதையா….

    அழகான மொழிநடையில் (பாராட்டுக்கள்) தவறான சிந்தனைகள்.

  46. ஐ.டியில வேலை பார்குறவன் எல்லாம் லட்ச லட்சமா வாங்கி குவிக்கிறான்,
    மத்தவன் எல்லாம் கஷ்டப்படுரான். சரிட கொய்யாலே, எல்லா ஐ.டி கம்பெனியையும் இழுத்து மூடு , சாவட்டும் எல்லாரும். இப்டித்தான்யா இருக்கு உங்க வாதம்.
    சமூகத்துல ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கிறது உண்மைதான் இல்லைன்னு சொல்லலை. ஆனா ஐ.டி வேலைக்கு போறது எல்லாம் பணக்காரன் மட்டும்தானா? ஏழை வீட்டுல பொறந்தவன்கூடத்தான் போறான். எல்லாரும் குடிக்கிறானா? இல்ல ஐ.டியில இருக்கவன் மட்டும்தான் குடிக்கிறானா? அவ்வளவு அப்பாவியாடா நீங்க எல்லாம்? அடங்கொய்யாலே, ஊருக்கு இளிச்சவாயன் புள்ளையாரு கோயில் ஆண்டிங்கிறமாதிரில இருக்கு.

    அரசாங்க ஆபிசுல எல்லாம் ஒரு சின்ன கையெழுத்துக்கு கூட 100 ரூவாய் இல்லாம வேலை பார்க்கமாட்டய்ங்களே, அவனுங்கள நொட்டை சொல்றது? நாங்க என்ன லஞ்சம் வாங்குறோமா? இல்லை லஞ்சம் கொடுத்து வேலை வாங்குறோமா?
    ஏழைகள எப்டி பணக்காரனாக்குறதுனு யோசிங்க, அத விட்டுட்டு பணக்காரன ஒழிச்சா எல்லோரும் சமமா ஆயிடலாம்னு பேசாதீங்க. அது தானே உங்க கம்ப்யூனிச சிந்தனை ?

  47. thinniyathil aathikka saathiyinaral thalithukalukku…. indru ungalaal ivargalukku…. mikka nandri… thangal sevai kandippai thodaravendum….

  48. அன்று ……திண்ணியத்தில் ஆதிக்க சாதியினரால் தலிதுகளுக்கு
    இன்று…….உங்களால் இவர்களுக்கு, மிக்க நன்றி. தங்கள் சேவை கண்டிப்பாய் தொடறவேண்டும்.

  49. dear sir,
    this artical is very good.but this problem is not only I T field .now all field is like this,civil,aeronatical,medical,etc .now this problem producedfull response for hole community,political,country only, no one patr of people.

  50. Muttal thanamana ninaippu. It is showing that how much knowlodge , Pamaran is having about day today life and technology. One of the worst thinking in Tamils that earning more money is sin. He is reflecting that.

    After all he also pamaran who needs to improve…..

  51. [ஏழைகள எப்டி பணக்காரனாக்குறதுனு யோசிங்க, அத விட்டுட்டு பணக்காரன ஒழிச்சா எல்லோரும் சமமா ஆயிடலாம்னு பேசாதீங்க. அது தானே உங்க கம்ப்யூனிச சிந்தனை ?]

    NRI…Fitting reply to these people who are naive against IT people and their growth

    இப்படி கம்யூனிசம் பேசித்தான் இந்தியாவுல இரண்டு மாநிலங்கள் வீணாப்போனது அதிகம் படித்த கேரளாவும் மேற்ர்க்குவங்கமும் தான்

    தானும் உருப்படாமல் அடுத்தவனும் வளரவிடாமல் செய்தவர்கள் இந்த கம்யூனிச கோமாளிகள். இதில் பாமரன் மட்டும் விதிவிலக்கா என்ன?

  52. //மேற்கத்திய நாடுகளின் மனிதர்கள் எந்தெந்த வேளைகளில் கழிப்பறைக்குச்
    செல்கிறார்கள்…..
    வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியே தள்ளும் கழிவுகளுக்கான பணத்தை எப்படி முன் கூட்டியே செலுத்துவது…
    போன்றவற்றிற்குக் கூட Pரொக்ரம்மிங் செய்து கொடுக்கும் நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.//

    பிரச்சனை என்ன என்பதை துளி கூட ஆராயமல் இப்படி கொடூர எழுத்துக்களால் எழுதியுள்ளது வெறும் வெறுப்பையும் வன்மத்தையும் மட்டுமே காட்டுகிறது. பத்திரிக்கையாளருக்கான பொறுப்பு எழுத்தில் எங்குமே தென்படவில்லை

  53. patthathu sir,sattaiya ennum vekama sulattunga…..
    sehwaga 100 run adika vittalayam sangakarava hang up pannanumam…
    laskham peru sethu ponappa enntha ponthula erunthanga sir evannunga…….

    appa rajapakse va patthi enna nenaikara avanai enna pannalanu ketta nai onuku pona mathiri serikiran oru 2 lakhs rs slary holderu……

    evanukalai enna paana sir thakum????????

  54. First, I would ask you to visit all the PUBS and the tasmak outlets and count to see how many IT professionals you can see there. More than 90% of the customers in tasmak are earning daily wages and spend more than 75% of their earnings there. PUBS are full of pimps and film stars, fashion models, college students and very rarely IT professionals. How do you generalize so much with all the jealousy and incapability of yours to come up in life to an extent to earn a few pennies? If your attitude is to see your dads funeral in CD, that doesnt mean that every other person does the same. Do you know the level of pain the IT professional goes through, even in the west without proper food, clothes for the winter and proper transportation? All this pain is to come up in life and bring the family up. The govt doesnt care and so they work hard for another country that atleast pay for their efforts. I know so many people who didnot even have a proper house to stay, have built a good place to live for their family and helped their parents out of all the debts created by the great rich ojnes and the govt.

    Even the webpage that you are blabbering in now is a hard work of a so called “drunkrad” according to you. ITs easy to talk out of jealousy and incapability looking at others progress. It is a cheap stunt by the cheap writers like you to attract the ignorant crowd who is lost in the middle of nowhere and put no effort to comeup in life and mock at the ones who really work hard for 16 years of the life studying and another 20 years of their life working hard. Anyone can do physical work. Not every one can use their brains and perform a job. You are far behind to understand that… and we only know why….

Leave a reply to maruthu Cancel reply