ஈழத்து இளைஞர்களும்……..தமிழகத்துத் தாத்தாக்களும்….

 

1983 ல் நடந்த யூலைப் படுகொலைகள் உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி உலுக்கிக் கொண்டிருந்த நேரம் அது. கல்லூரி மாணவர் தலைவன் நான் அப்போது. அப்பா ஊட்டிய அடிப்படை தமிழ் உணர்வு…….. தமிழ் சினிமா புகட்டிய தறுதலைத்தனம்…….. கொஞ்சம் சமூக அக்கறை…….. என எல்லாம் கலந்த கலவையாக இருந்தேன்.

உளறல் நாயகனின்……..ச்சே…….. “உலக நாயகனின்” வார்த்தைகளில் சொல்வதானால் : கடவுள் பாதி. மிருகம் பாதி.

முதன் முதலில் சந்தித்த ஒரு ஈழத்துச் சகோதரனிடம் நான் கேட்ட “அறிவுபூர்வமான” கேள்வியே “சார் நீங்க கேரளாவா?” என்பதுதான். அவர்கள் பேசும் அழகான தமிழ் எனக்கு மலையாளமாகப் பட்டிருக்கிறது என்பதில் இருந்தே நாங்கள் ( இது தமிழகத்து “நாங்கள்” ) எந்த லட்சணத்தில் இருந்திருப்போம் என்பது புரிந்திருக்கும்.

 அலைகளுக்குத் தப்பி அலை அலையாக வந்திறங்கிய எமது தொப்புள் கொடி உறவுகள் சுமந்து வந்த சோகமும், கண்ணீரும் எமக்கு உலகத்தின் இன்னொரு முகத்தை அறிமுகப்படுத்தின.

வந்தவுடனேயே வாரி அணைத்துக் கொண்டவர்கள்……..
ஓடி ஓடி அடைக்கலம் தந்தவர்கள்……..
உணவுக்கான பாத்திரங்கள் தொடங்கி
உடுத்துவதற்கான உடைகள் வரைக்கும் உதவி செய்த உள்ளங்கள் ஏராளம்.

ஆரம்பத்தில் அப்படித்தான் ஆரம்பித்தது எனது சமூகக் கடமையும். வீதி வீதியாக…….. வீடு வீடாகப்…….. படியேறி பழைய உடுப்புகளை வாங்கி வந்து துவைத்து இஸ்திரி போட்டு ஏதேனும் ஏதிலிகள் முகாமில் அளிப்பது எமது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று.
எமது ஏதிலிகளுக்கு உதவுகிறோம் சரி.
ஆனால் ஏதிலிகளே இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி? என்கிற அரசியல் சிந்தனை என்னுள்ளே முகிழ்த்தபோது முன்னே வந்து நின்றதுதான்………..

தோழர்களே….தொடர்ந்து வாசிக்க

http://www.orupaper.com/files//issues/96/K_london_pages__31.pdf

 

Advertisements

3 thoughts on “ஈழத்து இளைஞர்களும்……..தமிழகத்துத் தாத்தாக்களும்….

  1. அலைகளுக்குத் தப்பி அலை அலையாக வந்திறங்கிய எமது தொப்புள் கொடி உறவுகள் சுமந்து வந்த சோகமும், கண்ணீரும் எமக்கு உலகத்தின் இன்னொரு முகத்தை அறிமுகப்படுத்தின.
    pls visit http://www.islandtrust.org

  2. 1983indru 2008 25aandukal pinnum en sakodharanin sogam theeravillai.en sakodharikal samaintha visayangalai maraithu kollum moosamana nilai.thunbamum,koduramum innum arankerikondu irukku ingo nadikaikalin marbukku mathdhiyil uliyin oosayai sedhikki kondullanar- MUTHARINAR(HI HI HI) PORADUVOM THAMIZH MAKKAL VIDUTHALAI PERUM VARAI

  3. தொடர்ச்சி எப்பொழுது வரும் பாமரன்? எவ்வளோ நாள் காத்திருக்கிறது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s