‘ஜீன்ஸ் சேவக்’குகள்…

‘தாஜ்மகாலைக் கட்டியது ஷாஜகான் அல்ல…’ என எனக்கொரு ஈ-மெயில் வந்திருந்தது.

இந்த ரீதியிலேயே போனால்…
அமெரிக்க ராக்கெட் விண்ணில் வெடித்தது திப்பு சல்தான் செய்த சதி…
டயானா சாவுக்கு பிடல் காஸ்ட்ரோதான் காரணம்…
என்றெல்லாம் கூட மின்னஞ்சல்கள் வரலாம்.

இத்தகைய மின்னஞ்சல்கள் மொட்டைக் கடிதாசிகளின் நவீன வடிவம்.

பெரும்பாலான மின்னஞ்சல்களில் கொடி கட்டிப் பறப்பது… ‘தேசம்’ குறித்த அதீத அக்கறைகள்தான். அமெரிக்காவில் வயிறு வளர்த்தாலும் இவர்களது ‘தேசம்’ குறித்த ‘அக்கறைகள்’ சொல்லி மாளாதவை.

காஷ்மீர்…
கோத்ரா…
லைன் ஆப் கண்ட்ரோல்… என வெளுத்து வாங்கி விடுவார்கள் இந்த ‘நியோ பேட்றியாட்ஸ்’கள். ஆனால்… உள்ளூர் திண்ணியத்தில் பீயைத் தின்ன வைத்தது குறித்தெல்லாம் மூச்சு கூட விடமாட்டார்கள் இவர்கள்.

சேச்சே… இந்த ‘சகோதர’ சண்டைகளையெல்லாம் பெரிதுபடுத்தலாமோ…? நமது ‘தலையாய’ பிரச்சனைகளே வேறு…

உலகக் கோப்பை இந்த முறை யாருக்கு…?
பில்கேட்ஸ் கொடுக்கும் டாலர்களை வைத்து என்ன செய்யலாம்…?
இந்தியாவை ஊடுருவிய ‘அந்நியர்கள்’ யார் யார்? என்றெல்லாம் அயல்நாட்டில் ஆற அமர உட்கார்ந்து கொண்டு ஆலோசிப்பார்கள் இந்த கம்ப்யூட்டர் டகோடியாக்கள்.

(கைபர் போலன் கணவாய் ஊடுருவல்காரர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு என்பது சொல்லத் தேவையில்லை).

ராமர் ஆலயம் கட்டுவதற்கான ‘நியாயங்களை’ டன் கணக்கில் அள்ளி வீசினாலும்… இவர்களது ஒரே ஆலயம் அமெரிக்கத் தூதராலயம்தான்.

உள்ளூரில் நெசவாளிகள் தெருவுக்கு வந்துவிட்டார்களா… மூச்.
விவசாயிகள் பட்டினிச் சாவா… மூச்.
தொழிலாளர்கள் வேலை இழப்பா… மூச்.
உள்ளூர் ‘சகோதரர்களை’ சேரியோடு சேர்த்துக் கொளுத்துகிறார்களா… மூச்.

இந்த ‘அற்பக்’ காரணங்களுக்காகவெல்லாம் பயன்படுத்தவா கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களை வடிவமைத்திருக்கிறார்கள் மைக்ரோ சாப்ட்டும்… சன்…னும்?

கார்சேவக்குகள் என்றால் சும்மா கடப்பாறையும் கையுமாக மட்டும் சுற்றும் ஆட்கள் என்று லேசாக எண்ணிவிடாதீர்கள். கம்ப்யூட்டரும் கையுமாக சுற்றும் ஜீன்ஸ் சேவக்குகளும் இருக்கிறார்கள். இவர்கள்தான் நமது ‘நவீன’ மாதிரிகள்.

நாட்டை அந்நியர்களுக்கு அடமானம் வைக்கும் உலகமயமாக்கலைக் கண்டித்து பல லட்சம் பேர் ஊர்வலம் போய் ஒப்பாரி வைத்தாலும் சரி… ஒரு கோடி பேர் கையெழுத்துப் போட்டு மனு கொடுத்தாலும் சரி…

அத்தனையும் வாக்மேன் கேட்பவன் காதில் ஊதிய சங்குதான்.

ஆனால்…

ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க ஐக்கியக் குடியரசிலும் பஞ்சம் பிழைக்கப் போன இந்த ‘இந்தியர்களது’ குரலுக்கு இவர்களது செவி நிச்சயம் சாய்க்கும்.

இந்தியாவில் டாலர் மழையைப் பொழிய வைக்கும் இவர்களை அல்லாட வைக்கலாமா?

உள்ளூர் இந்தியன் ஒப்பாரி வைத்தால் நமக்கென்ன?

ஓடுகாலி இந்தியனுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?

‘அம்பேத்கர் சொன்ன தலித்துகளுக்கான இரட்டை வாக்குரிமை எல்லாம் சும்மா உடான்ஸ்…

நாங்கள் கொண்டுவருகிற ‘இரட்டைக் குடியுரிமை’ திட்டம் இருக்கிறதே… அது இரட்டை டம்ளர் முறையைக்கூட ஏப்பம் விட்டு விடும்… பாருங்கள்…’ என்கிறது இந்திய அரசு.

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.

சம்பளம் கட்… போனஸ் கட்… வேலைய வாய்ப்பு கட்… வேலையே கட்… என்றிருக்கும் மத்திய, மாநில அரசுகள்.

இந்த லட்சணத்தில் ‘புலம் பெயர்ந்த இந்தியர்கள்’ பிறகு வேறு எதைத்தான் சாட் செய்வார்களாம்…?

ஓசாமா பின் லேடனைச் சொல்லி ஆப்கானிஸ்தான் மீது குண்டு போடுகிறதா அமெரிக்கா…

மெளனமாய் இரு.

ஆந்த்ராக்ஸ் பீதியைக் கிளப்பி உலக நாடுகளையெல்லாம் நடுங்க வைக்கிறதா அமெரிக்கா…

மெளனமாய் இரு.

‘கம்யூனிச பயங்கரத்தைத் தடுப்பதாகக் கூறி கியூபாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறதா…

மெளனமாய் இரு.

வேதியியல் ஆயுதங்களை வைத்திருப்பதாகச் சொல்லி ஈராக்கைக் கபளீரம் பண்ணத் துடிக்கிறதா அமெரிக்கா…

மெளனமாய் இரு.

அமெரிக்காவைப் போலவே நமக்கும் தந்தை சந்தைதான்.

மெளனமாய் இரு.

மெளனம் மெத்தச் சரிதான்…

ஆனால் எதுவரை…?

புஷ்ஷின் கோவணத்தைக் களவாடிவிட்டு வந்தவனுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறி அமெரிக்க ஏவுகணைகள் இந்தியாவைக் குறி பார்க்காதவரை.


நன்றி : தீராநதி.

Advertisements

23 thoughts on “‘ஜீன்ஸ் சேவக்’குகள்…

 1. தங்கள் எழுத்துக்களை எங்கள் தமிழ்மானம் வலைசிற்றிதழில் இணைத்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

  அன்புடன்
  நறுமுகய்
  http://tamilmaanam.blogspot.com

 2. புஸ்ஸின் கோவணம் எவ்வாறு களவாடப்படும்? அதை போற்றிப்பாதுகாக்கத்தான் புலம் பெயர் இந்தியர்களும், தென்னாட்டு நியொபேட்ரியாட்களும், கனவுத்தாத்தாவும், மதியிழந்த மாமன்னன் மன்மோகனும் உள்ளனரே? ஒரு வேளை இக்கும்பல் அழிந்தொழிந்தால், புஸ்ஸின் கோவணம் களவாடப்படும்.

 3. உள்ளூர் இந்தியன் ஒப்பாரி வைத்தால் நமக்கென்ன?

  ஓடுகாலி இந்தியனுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?
  adi sakka …

 4. ungalin ezthukalin tivira rasikai nan totranthu ezthungal.engali pol pancam pizikka vanthavankalukku ungalin ezthukal than sapptu.akila.australiya.

 5. பமரன் அவர்கு
  இனிய வனக்கம்,
  எதெச்சையா தான்
  குமுதம் படிக்கிரப்பொ நிங்க படிச்சு கிழிச்சத படித்தேன், அப்போ இருந்து தொடர்ந்து படிக்கின்ரென்.
  உங்க கருத்துக்கலில் எனக்கு உடன்பாடு நிரய உண்டு. இப்பொதான் தமிழ் டய்ப் கத்துகிறேன். அப்புறம நிறய எழுதுறேன்.

 6. dont prejudice pamran.its dangerous.

  i liked ur write ups before i started reading litrature.Now after come across many .. Lasara to jeyamohan
  vanna nilavan to vannadhasan
  Fanz kafca to Leo tolstoy..
  your writeups seems little amature.and speareded with chuvanism.
  I personally feel you are wasting your skill and potential..
  Im expecting more from u..not this kind of ameature perspectives..

 7. Mr. Prabhuraj,

  He is Franz Kafka, not Fanz Kafca. I am surprized to see that you have not included Agatha Christie, Joanne Rowling, or even George Nivetha oops, sorry Charunivetha, or Balakumaran in your mature writers list. If you give the whole list, that will be of an immense help!

  I am sure you know the following famous quotes, since you have already read Tolstoy, but for the sake of fellow readers I am quoting a few:

  “The sole meaning of life is to serve humanity”– Leo Tolstoy

  “There is no greatness where there is no simplicity, goodness and truth” — Leo Tolstoy

  “Government is an association of men who do violence to the rest of us” — Leo Tolstoy

  “One of the first conditions of happiness is that the link between Man and Nature shall not be broken” — Leo Tolstoy

  “The greater the state, the more wrong and cruel its patriotism, and the greater is the sum of suffering upon which its power is founded” — Leo Tolstoy

  and finally on Friedrich Nietzche (whom the Czeck and German literatures regard as Franz Kafka came from the same paradigm as Nietzsche)

  “Nietzsche was stupid and abnormal” — Leo Tolstoy

  Except the last quote on Nietzsche, I am sure everybody can find stong evidences on Mr . Pamaran’s writing that it has got the same epitome.

  இவண்
  வருத்தப்படாத வாலிபர் சங்கம்

  “கொணுசி விக்கிறவன், கூண்டுசி விக்கிறவெல்லாம் தொழில் அதிபர். நாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்க முடியலடா சாமி” — நேற்று

  “ஓடு காலி இந்தியன், ஊர் முதலடிக்கிற இந்தியன், ஜீன்ஸ் செவக்கெல்லாம் தேச பக்தன். இந்த தேச பக்தனுக தொல்ல தாங்க முடியலடா சாமியோவ்” — இன்று

 8. வருத்தப்படாத வாலிபர் சங்கம்..wonderful reply…intha maathiri film kaattura paartykalai elaaam ippadi mokkai adi adikanUm..

  sorry for posting in english..

 9. @வருத்தப்படாத வாலிபர் சங்கம்..

  நீங்க‌ள் சொல்வ‌து உண்மை.

  என் வ‌ருத்த‌மெல்லாம் .. பாம‌ர‌னின் பொதுப்புத்தி சார்ந்த‌ பார்வைதான்.

 10. மு.மேத்தா,வைர‌முத்து போன்ற‌வ‌ர்க‌ளின் போலி முழ‌க்க‌ம்போல‌ மாறிவ‌ருகிற‌து பாம‌ர‌னின் எழுத்தும்..

 11. Pamaran will you ever grow up. Can you write something sensible at least for once.
  NRI’s are involved in many developmental projects.Many NRIs support projects run by left oriented NGOs. We know about your ignorance. There is no need to prove it again and again.

 12. @Prabhu
  தொழர் பாமரன் அவர்களின் எழுத்துகளை வெறும் போலி என்று மட்டும் சொல்ல வேண்டாம் பிரபு. இன்றைய நிலைமை இதுதான். பாமரன் என்ன மத்தவங்களை போல இடுப்பு பத்தியோ, மாரை பத்தியோ பாட்டு எழுதி சம்பாதிக்கிறாரா.. உண்மைய சொன்னா சுடத்தான் ஐயா செய்யும். எதை வச்சு நீங்க வாசிக்கும் எழுத்தாளர்களை பன்பட்டவர்கள் பட்டியலில் சேக்குறீங்கன்னு தெரியலை? அதை சொன்னீங்கன்னா கொஞ்சம் உதவியா இருக்கும்
  @Periyarcritic
  ஐயா சுமாரா எவ்வளவு என்.ஆர்.ஐ இருப்பாங்க. அதுல எவ்வளவு பேர் நீங்க சொல்ற மாதி சமூக சேவைல இருக்காங்க. உண்மையிலேயே அந்த பணம் சமுகத்துக்காதான் பயன்படுதா இல்லை அரசாங்கத்தை ஏமாத்தி வரி இல்லாம தங்களோட பணத்தை கொண்டு வராங்களா. சும்மா அதை செய்யுறாங்க இதை செய்யுறாங்கன்னு சொல்லாதீங்க.. அதுல எவ்வளவு உண்மையான செவைன்னு பாருங்க

 13. The role of NRIs dates back to Ghadar party formed during 1930s . This revolutionary movement formed by students and worker in Canada and North America which fought to dethrone the British by weapon. But his neo-software proletariats thought themselves as capitalists. Whenever it comes to social work why they are talking about NGOs when it is the Government to do the work, why NGOs should do that?
  Is it to passify, to divert or to release the building mass discontent which might one day turn to a revolution?

 14. Vanakkam Annachi.
  Unmaya urakka cholluhindrom. unarnthavan ethanaiper. evarkalukkellam vijayakanth aachikku vantha theernthuvidum, athayum thandi rajini aachikku vantha theernthuvidum endru nambum kostigal. irunthum naam koovi koovi sollikkonde iruppom.

 15. பொதுவாக மக்களிடம் பரவலாக இருக்கும் ஒரு எண்ணம் சினிமாவும் அரசியலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லதவை என்று. ஆனால் தமிழகத்தை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் சினிமாக்கார்கள் தான் ஆண்டிருக்கிரார்கள். அப்படி சினிமா பார்த்தே பலவீனமான கூட்டம் இருக்கும் வரைக்கும் (அல்லது) அப்படி ஒரு கூட்டத்தை உருவாக்கி வரும் மற்றொரு கூட்டம் இருக்கும் வரக்கும், இது போன்ற மதத்தின் பெயரால் மக்களை விழுங்கும் கும்பல் வாழத்தான் செய்யும்.

 16. Marc Faber comment on US economy.

  Investment analyst and entrepreneur Dr. Marc Faber concluded his monthly bulletin (June 2008) with the Following:

  ”The federal government is sending each of us a $600 rebate. If we spend that money at Wal-Mart, the money goes to China . If we spend it on gasoline it goes to the Arabs. If we buy a computer it will go to India . If we purchase fruit and vegetables it will go to Mexico , Honduras and Guatemala . If we purchase a good car it will go to Germany . If we purchase useless crap it will go to Taiwan and none of it will help the American economy. The only way to keep that money here at home is to spend it on prostitutes and beer, since these are the only products still produced in US. I’ve been doing my part.’

  Anyway this might be true, but the benefits goes to USA.(rather)

 17. “பங்குச் சந்தைக்கும், பால்காரனுக்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு தெரியாது. அது போலத்தான் முதலாளித்துவம் எப்படி தம்மை பயன்படுத்தி விட்டு தூக்கியெறிகின்றது என்பது கணிப்பொறி நிபுணர்களுக்கு தெரியாது”

  Courtesy:http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_23.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s