ராஜீவ் காந்தியும் நானும்…

(ஈழத்து இளைஞர்களும்… தமிழகத்துத் தாத்தாக்களும் – 2 )

(கட்டம் கட்டி ஆசிரியர்தான் முழங்க வேண்டுமா? என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன? ஆக…… இந்தக் கட்டத்துக்கான காரணம் யாதெனில்…… போன இதழில் என்னைக் கட்டம் கட்டிப் போட்டதில் மாபெரும் பிழை ஒன்று நடந்திருக்கிறது என்பதுதான். சொற்குற்றமாயின் பொருத்தருளலாம்…… ஆனால் பொருட் குற்றத்தை……?

ஒரு பேப்பருக்கு உலகெங்கிலும் உள்ள விரிவுரையாளர்கள் மீது என்ன கோபமோ நானறியேன். ஆனால்…… பி.காம். படிப்பையே இன்றைய நொடி வரை முடிக்காத என்னைப் போய்…… “விரிவுரையாளர்” என விளித்தது ஒட்டுமொத்த கல்வி மான்கள்……கரடிகள்…… கங்காருகள்…… என எல்லோருக்கும் ஆப்பு வைக்கும் செயல். வெட்கத்தை விட்டு சொல்வதானால் (அப்படி ஒன்று இல்லாவிட்டாலும்……) இன்னமும் இருபத்தி மூணு அர்ர்ரியர்ஸ் பி.காமில்.(வணிகவியல் எண்டும் சொல்லலாம்) மொத்தம் இருபத்தி ஐந்தில் இரண்டு மட்டுமே தேறிய “மேதையைப்” போய்…… “விரிவுரையாளர்” என்றால் அடுக்குமா? “அதுசரி…… அப்புறம் உனக்கெல்லாம் எப்படித்தான் கொடுத்தான் வேலையை?” என நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் நானும் ராஜீவ் காந்தியும் ஒரே ரகம்.

ஆம்.

அவர் அம்மா இறந்ததனால் பிரதமர் வேலைக்கு வந்தவர்.

நான் அப்பா இறந்ததனால் கிளர்க் வேலைக்கு வந்தவன்.

போதுமா? )

எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழக மண்ணைத் தொட்ட போராளிகளாகட்டும்…… புலம் பெயர்ந்தவர்களாகட்டும்…… யாருக்குமே “ஒழுங்காக” தமிழ் பேச வராது என்கிற “உண்மை” இன்னும் பலருக்குத் தெரியாது. தமிழகத்தில் அடைக்கலம் தந்த அநேகருக்கு ஈழத்தவர்கள் கதைத்த ‘இங்கிலீஷ்’ தலை சுற்ற வைத்து விட்டது. இவர்களும் அவர்களும் உரையாடிக் கொள்வதைப் பார்த்தால் ஏதோ இரண்டு வேற்று கிரகவாசிகள் உரையாடிக் கொள்வதைப்போல் தான் இருக்கும்.

இப்படித்தான் ஒருமுறை தோழன் குட்டி திருச்சியில் நின்றபோது ஒரு சம்பவம். ஏதோ அவசர நிமித்தமாய் பக்கத்து வீட்டுக்காரரின் கதவைத் தட்டி “அம்மா…… ஒரு பாரமான வாளி இருந்தா கொடுங்கம்மா” என்று கேட்க அந்த அம்மணி வெலவெலத்துப் போய்விட்டார்.

“ஏம்ப்பா…… நீ மலையாளத்துக்காரனா? சொல்லவே இல்லியே……” என்று பதிலுக்கு வினவ…… ஏற்கெனவே அவசரத்தில் இருக்கிற குட்டி என்ன செய்வது? ஏது செய்வது? என்று தடுமாறிய வேளையில் சட்டென்று பதில் தோன்றியிருக்கிறது பக்கத்தில் இருந்த தோழனுக்கு…… “அம்மா…… அவன் கிடக்கிறான்…… நீங்க ஒரு வெயிட்டான பக்கெட் இருந்தா கொடுங்க அவசரம்.” என்று விளக்கம் கொடுக்க……

“ஆங்…… அப்படித் தமிழ்ல கேட்டா குடுப்பனல்ல” என்றபடியே கொடுத்திருக்கிறார் அந்த பக்கத்து வீட்டுக்காரர்.

பாரமான வாளி இங்கிலீஷ் ஆகவும்
வெயிட்டான பக்கெட் தமிழாகவும் மாறிய
கதையைச் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள் தோழர்கள்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. கூட்டம் 6 மணிக்கு என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும் ஆரம்பிப்பதாய்க் காணோம். பொறுத்துப் பொறுத்து பார்த்த எனது ஈழத்து நண்பன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம்…… “அய்யா…… நிகழ்ச்சி எப்பத் துவங்கும்?” என்று கேட்க…… பெரியவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒருவேளை பெருசுக்கு காது கேட்காதோ என்னமோ என்கிற சந்தேகத்தில் கொஞ்சம் உரக்க “அய்யா…… நிகழ்ச்சி எப்பத் துவங்கும்?” என்று அடிவயிற்றிலிருந்து மறுபடியும் குரல் கொடுக்க…… கொஞ்சம் அசைந்து கொடுக்கிறது பெருசு. அப்பாடா இப்பவாவது காதில் விழுந்ததே என்கிற நிம்மதியில் நண்பன் மீண்டும் அந்தப் பெரியவரைப் பார்த்து புன்னகைக்க……

அவரோ சுற்றும் முற்றும் பார்க்கிறார். பின்னர் மெதுவாக நண்பனின் காதருகே குனிந்து மன்னிப்பு கேட்கும் தொனியில்  “தம்பி…… எனக்கு அவ்வளவாக இங்கிலீஷ் பேச வராது” என்று சொல்ல…… நண்பன் மயக்கம் போட்டு விழாததுதான் குறைச்சல். கர்மம்டா சாமி…… என்று தலையில் அடித்துக் கொண்டு “அய்யா…… நான் புரோகிராம் எப்ப ஸ்டார்ட் ஆகும்ன்னு கேட்டன்”  என “அழகு தமிழில்” விளக்கிச் சொல்ல……

“ஓ அதுவா தம்பி…… புரோகிராம் கரெக்ட்டா செவன் ஓ கிளாக் ஸ்டார்ட் ஆயிரும்” என்று பெருசு நெத்தியடியாய் போட்ட போட்டில் அன்றிலிருந்து நண்பன்  நிகழ்ச்சிகளுக்கு போவதையே கைவிட்டு விட்டான் என்பது வேறுகதை.

சாதாரணமாக வழக்குத் தமிழில் பேசினாலேயே “சார் உங்களுக்கு ரொம்ப தமிழ் பற்றா?” என்று எங்களையே ஒரு கை பார்க்கும் சனத்திடம் நமது ஈழத் தோழர்கள் பட்ட பாட்டை நினைத்துப் பார்கிறேன்…… ம்ம்ம்ம்ம்ம்ம்…… அந்தப் பாட்டுக்கு பதிலாக வெறும் காத்துதாங்க வருது.

என்னைப் பொறுத்தவரை……

சிங்களனுக்குத் தப்பி தமிழகத்தின் கரைகளில்
ஒதுங்கியவர்களை விடவும்

‘சிங்களன் கையாலேயே செத்தாலும் பரவாயில்லை’ என்று
தமிழனுக்குத் தப்பி படகேறியவர்களின் எண்ணிக்கை அதிகம்
என்பது எனது நம்பிக்கை.

(உளறல் தொடரும்)

Advertisements

12 thoughts on “ராஜீவ் காந்தியும் நானும்…

 1. அருமை, அருமை

  எதையும் விரிவா சொல்பவர் தானே விரிவுரையாளர்!
  அப்படி பார்த்தா நீங்கள் அது தானே

  வால்பையன்

 2. Dear pamaran, i tried the subordinate link to post my comments in tamil but that link is not helps me. paamaran please change your name you are not a paamaran you are a person who knows everything about your brothers and sisters.

 3. பார்த்தீங்களா.. முருகன் யார், யாருக்கு எங்கனயெல்லாம் பியூஸை புடிங்கிருக்கான்னு..?

  23 அரியர்ஸா..? வாழ்த்துக்கள்.. பதிவுலகில் நிறைய அரியர்ஸ் வைத்திருக்கும் ஒரே தலைவர் நீங்கதான்.. அதையும் இப்படி ஒளிவுமறைவில்லாம வெளில சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..

 4. ஒர் அம்மா செத்ததால் ராசிவ் பிரதமர்!

  ஒராயிரம் முஸ்லிம்கள் குஜராத்தில் செத்ததால் கலாம் ஜனாதிபதி!!

 5. தோழர் பாமரன்…
  கொஞ்சம் அதிர்ச்சியா தாங்க இருக்கு இன்னும் இருபத்து மூணு அரியர்ஸ்(தமிழ்ல என்னங்க) இருக்கா நம்ப முடியலை. உங்களை சந்தித்த என் நன்பர்களில் ஒருவனும் நீங்க விரிவுரையாளர்ன்னு தான் சொன்னான். சரி எதுவா இருந்தா என்ன, நம்ம வால் பையன் சொன்னது மாதிரி நீங்களும் ஒரு விரிவுரையாளர் தாங்க. இப்பொ அடுத்த விஷயத்துக்கு வருவோம்.

  நம்ம மக்களோட அறியாமைய அருமையா சொல்லி இருக்கீங்க. நான் திருச்சியில இருந்தப்போ எனக்கும் ரெண்டு ஈழத்தை சேர்ந்த நன்பர்கள் இருந்தாங்க. அவங்க கூட நான் பேசுறதையே சில பேர் அப்படி ஆச்சரியமா பார்ப்பாங்க.. முதல்ல கொஞ்சம் கடினமா இருந்தது அவங்க கூட பேச.. அப்புறமா சரளமா ‘கதைக்க’ பழகிட்டேன். இன்னும் என் நன்பர்கள் பல நான் கவிதைன்னு சொல்லி கிறுக்கிறதை என்னவோ பெரிய அதிசயமா பாக்குறாங்க. என்னத்த சொல்ல? நம்ம மக்கள் இப்படி ஆனதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் நம்ம தனியார் தொலைகாட்சிகளோட “தொகுப்பாளினிகளும்”, “தொகுப்பாளன்களும்” தான்.. என்ன நான் சொன்னது சரிதானே??

 6. உங்கள் கருத்துகளை எனது வலைபுவில் உல்வவிடமா அனுமதிகாக படிகாட்டான்

 7. தோழா வணக்கம்,
  ரொம்ப நாளா ஒன்னும் காணோமே? எழுதுங்க தோழா.

 8. Dear Pameran,
  I have come across your Weblog a few days before.But I have read your articles in ‘Theeranathi’ and wanted to contact you earlier.Anyway,I take this opportunity to convey my greetings.
  Carry on with your writings with youthful vigor and awake those are pretending to be in sleep.
  With kind Regards,
  ‘Sarvachitthan’

 9. சிம்ப்ளி சூப்பர்ப் சார். ரியலி ஐ லைக் இட். டெய்லி இது மாதிரி பிளாக் போஸ்ட் போடுங்க சார்.

 10. First time i red your words….really its very good…KATHI MUNAYAI VIDA PANA MUNAI KURMAIYANATHU…..
  REGARD
  R.selvam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s