சுதந்திரம் என்பது……

(ஈழத்து இளைஞர்களும்…… தமிழகத்துத் தாத்தாக்களும்…… 4)

எம்மவர்கள் தமிழகத்தின் கரைகளில் தடம் பதித்தபோது எதிர்கொண்ட வினாக்களுக்கே ஒரு பெரும் நாவல் எழுதலாம்.

“இங்கிருந்து போயி……..நீங்க நாடு கேட்கலாமா?” என்பதில் தொடங்கி……..

“தம்பி…….. இடையில இந்தக் கடல் மட்டும் இல்லேன்னா……..அந்த ஜெயவர்த்தனாவை அப்படியே……..” என்பதில் தொடரும்.

கேப்டன் ஹென்றி பேர்ட் காலத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலித் தொழிலாளிகளாக அழைத்துச் செல்லப்பட்ட மலையக மக்களைத் தாண்டி…….. ஏற்கெனவே அங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து வரும் பல லட்சம் புராதனத் தமிழர்களைப் பற்றிய வரலாற்று அறிவை ஊட்டுவதற்கே படாத பாடுபட்டனர் எம்மவர்கள்.

அடக்குமுறைகளின் விளைவால் தாயகம் இழந்து ஏதிலிகளாக புலம் பெயர்ந்தவர்கள் யார்?
“ஒப்பந்தங்களின்” அடிப்படையில் சொந்த நாடு திரும்பியவர்கள் யார்?
என இரண்டுக்குமான வித்தியாசம் சாதாரண சனங்களுக்குப் புலப்படாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் நான் சந்தித்த ஓரிரு அரசியல் தலைவர்களுக்கே அந்த அடிப்படை வித்தியாசம் புரியவில்லை என்பதுதான் துயரம்.

அதன் விளைவாக அன்று ஈழமக்கள் எதிர்கொண்ட கேள்விகளையும்……..இடர்ப்பாடுகளையும்…….. இன்றைய வார்த்தைகளில் சொல்வதை விடவும்…….. 1988 ல் வெளிவந்த “அன்புத் தோழிக்கு” என்கிற எனது முதல் நூலின் வரிகளிலேயே சொல்வது பொருத்தமாகப் படுகிறது எனக்கு.

இனி,
எனது “அன்புத் தோழிக்கு” நூலில் இருந்து கொஞ்சம்……..

“அன்புத் தோழி!

ஈழத்திலிருந்து கியூபட் கடிதம் எழுதியிருந்தான். கடிதத்தை பிரிக்கும் முன்னரே கண்களை கண்ணீர் கைப்பற்றிக் கொண்டது. இவனையாவது விட்டு வைத்திருக்கிறார்களே என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. சற்றே நிம்மதி.

ஈழம் குறித்த உனது வினாக்கள் சில நியாயமானவைதான். ஆம், நமது மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தோழி! மூன்று அல்லது நான்காண்டுகள் இருக்கும்:

கோவைக்கு வெகு அருகிலுள்ள சிறு கிராமம். அங்குள்ள இளைஞர்கள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு அரிசி ஆலையில் நாங்கள் பேசுவதாக ஏற்பாடு. ஐந்தரை மணி சுமாருக்கு பேருந்தை விட்டு இறங்குகிறோம். என்னுடன் வந்த போராளிகளை விழிகளை இமைக்காது மேலும் கீழுமாக ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள் அக்கிராமத்து மக்கள்.

தோழி! இதில் என்ன வேடிக்கையெனில் அவர்கள் என்னையும் ‘ இவனும் இலங்கையோ?’ எனும் சந்தேகக் குறியோடு பார்க்கிறார்கள். நான் ‘ நான் நம்மூர் தாங்க…’ என்று முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன்.

சில பெரியவர்களும் சிறுவர்களும், தோழர்கள் தோளில் தொங்கும் பையினையே உற்று உற்றுப் பார்க்கிறார்கள், ‘துப்பாக்கி’ ஏதேனும் தென்படுமோ என்று. அதில் ஒரு சிறுவன் உள்ளிருந்த புகைப்பட ஆல்பத்தினைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ‘டோய்! துப்பாக்கி டோய்’ என்று கூவுகிறான். தோழர்கள் சிரித்துக்கொண்டே உள்ளிருந்த புகைப்பட ஆல்பத்தினை எடுத்துக் கொடுத்து, ‘உங்கள் மத்தியில் நாங்கள் இருக்கும் போது துவக்கு (துப்பாக்கி) எங்களுக்கு தேவையில்லை தானே ? நாங்களும் உங்களைப் போலத்தான் ?. எங்கள் சூழல் எங்களை இப்படி ஆக்கியிருக்கிறது. எங்களை யாரும் வித்தியாசமாகப் பார்க்க வேண்டாம். ஆயுதங்களைக் கவர்ச்சிப் பொருளாக ஆக்க நாங்கள் விரும்பவில்லை. தயவு செய்து உங்களில் ஒருவராக எங்களைப் பாவியுங்கள்” என வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

தோழி! அந்த மக்களுக்குத்தான் எத்துணை மகிழ்ச்சி. தங்கள் மொழியைப் பேசும் ஒருவன் துப்பாக்கி ஏந்திப் போராடுகிறான் என்பதில் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை தோழி!

நண்பர் ஒருவர் வந்து, அனைவரும் கூடிவிட்டதாகவும் கூட்டத்தை துவங்கி விடலாம் எனவும் அழைக்கிறார்.

“’நடக்கலாமா குமரன்?” என்கிறேன்.

கலந்துரையாடல் துவங்குகிறது, அதற்கு முன்பாகவே நான் எழுந்து, தோழர்களுக்கு தர்மசங்கடத்தினை உருவாக்கும் எந்தக் கேள்விகளையும் கேட்க வேண்டாம் எனவும், அவர்களது கொள்கைகள், நடைமுறைகள் குறித்த வினாக்களை மட்டுமே வினவும்படியும் வேண்டுகோள் விடுக்கிறேன். ( உங்களுக்கு யார் அதிகமாக உதவுகிறார்கள் ? கலைஞரா ? எம்.ஜி.ஆரா ? எத்தனை துப்பாக்கிகள் வைத்திருக்கிறீர்கள் ? எங்கு வைத்திருக்கிறீர்கள் ? இப்படி, எப்படி எப்படியெல்லாமோ எழும் கேள்விகளைத் தவிர்ப்பதற்கே )

தோழர்கள் ஒவ்வொருவராய் ஈழப் போராட்டம் குறித்து விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். எதிரே ஒரு கரும்பலகை -வரைபடங்களுடன்.

திடீரென்று ஒரு குரல் எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டது தோழி!

‘நீங்க எப்ப தமிழ் ஈழம் வாங்குவீங்க?’

எனக்கு பகீரென்கிறது. அந்தக் குரலுக்கு உரியவரைத் தேடுகிறேன்.

‘ஒரு முதியவர்’

என்னையறியாமல் அவர் மீது மிகுந்த இரக்கம் ஏற்படுகிறது.

குமரன் சிரித்துக்கொண்டே ‘ ஒரு போராட்டத்தின் காலக்கட்டத்தைக் குறிப்பிட்டுக் கூற முடியாது. இது இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தொடரக்கூடிய சூழல்கள் உருவாகலாம். ‘ அடுத்த சித்திரையில் அடைவோம், வைகாசியில் கொடியேற்றுவோம் என்று உங்களை ஏமாற்ற தயாராயில்லை’ என்று மென்மையாக மறுக்கிறார்.

கூட்டம் முடிவதற்கு இரவு நெடுநேரம் ஆகிவிடுகிறது. அக்கிராமத்திலேயே ஒருவர் வீட்டில் சாப்பாடு. அங்கிருந்து புறப்பட்டு வரும்பொழுது ஒரு மூதாட்டி தோழர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘பாத்து சண்டை போடுங்க சாமீ. நீங்க நல்லாத் திரும்பி வரணும் கண்ணு” என்று கண்ணீர் விடுகிறார்.தோழர்கள் அக்கிராமத்து மக்களின் பாசமிகு உபசரிப்புகளைக் கண்டு கண் கலங்குகின்றனர்.

திரும்பும் வழியில் குமரனிடம் கேட்கிறேன்.

‘ தோழர், அந்தப் பெரியவர் கேட்டாரே ஒரு கேள்வி நினைவிருக்கிறதா….?”

‘ம்….இருக்கிறது…’

‘தமிழ் ஈழம் எப்ப வாங்குவீங்கன்னாரே. அவரோட அறியாமையைப் பார்த்தீர்களா ?

விழிகளை உயர்த்தி வினவுகிறார்.

“எங்களோட சனங்களுக்கு சுதந்திரம் என்கிறது பிச்சை கேட்டு வாங்குவது என்ற எண்ணம்தான் இருக்கிறதேயொழிய பறித்து எடுப்பது என்ற அடிப்படை உண்மைகூட புரியவில்லை பார்த்தீர்களா ?

உலகில் சுதந்திரம் எங்கேயும் கொடுக்கப்படவில்லை. எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

FREEDOM NOT TO BE GIVEN;
IT MUST BE TAKEN.

என்பது கூடப் புரியவில்லை பார்த்தீர்களா ?

சுதந்திரம் என்பது போராடிப் பெறுவது தானேயன்றி பிச்சைகேட்டுப் பெறுவது அல்ல என்பதை எம்மக்கள் அறியாததற்குக் காரணமே பிர்லா மாளிகையில் பால்குடித்துக் கொண்டு பராரி வேஷமிட்ட மகாத்மாக்கள்தான்.

சோவியத் மக்கள்
ஜார் மன்னனிடம் மனுப்போட்டா
அடைந்தார்கள் அவர்களது
அமைதி பூங்காவை…?

வியத்நாம் மக்கள் வீரஞ்செறிந்த
போரின்றி விரட்டியிருக்க முடியுமா
அமெரிக்க ரேம்போக்களை ?

உலகில் எங்கும் – எவராலும் –
கொடுக்கப்படவில்லை – எடுக்கப்பட்டது
என்பது தானே வரலாறு, என்கிறேன்.

மெளனமாய்ப் புன்னகைக்கிறார்கள் குமரனும் மற்ற தோழர்களும்.

தோழி! நமது மக்கள் இப்படியிருக்கும் வரைதான் ‘அவர்களது’ வாழ்க்கை அப்படியிருக்கும். கத்தியின்றி..ரத்தமின்றி…என்று வெட்கமின்றிப் பேசும் சில ஜென்மங்களைப் பற்றி நீயும் அறிவாய்.’சுதந்திரம்’ என்பதன் முழு அர்த்தத்தினையும் அடுத்த மடலில் எழுதுகிறேன்.’பகத்சிங்’கின் புத்தகத்தினைப்படித்து முடித்திருந்தால் ஊருக்கு வரும்போது எடுத்து வா.

தோழமையுடன்
பாமரன்

12 thoughts on “சுதந்திரம் என்பது……

 1. “இங்கிருந்து போயி……..நீங்க நாடு கேட்கலாமா?” என்பதில் தொடங்கி……..

  என்னைப் பார்த்து சிலர் ஆச்சரியப் பட்டிருக்கின்றார்கள் ‘அட தமிழ்ல பேசிறீங்க’. நான் சொன்னேன் தமிழ் மட்டும் தாங்க பேசுவேன். அது என் தாய் மொழி என்று. பாரதியும் சிங்களத்தீவு என்றுதானே பாடியுளார். எப்படி அமெரிக்காவின் மூத்தகுடியான செவ்விந்தியர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டார்களோ அதே போன்றே நாமும் ஆக்கப்ப்ட்டோம்.

 2. புத்தகம் எங்கே கிடைக்கும்.
  முகவரி கிடைக்குமா

  உண்மையில் ஈழத்தமிழர்களை பற்றி அறியாமையில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
  அதில் நானும் ஒருவன். தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  விரைவில் நேரில் சிந்திப்போம்

 3. உங்க எழுத்து அருமை… இப்போ தான் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்…. அரியாமை எனக்கும் அதிகமாவே இருக்கு… மொழிபெயர்ப்பு வசதி ரொம்ப நல்லா இருக்கு… மொழி பெயர்ப்பு ரொம்ப நல்லா இருக்கு… இதுலயே நல்லா தமிழ் படிக்கலாம்னு இருக்கு… எப்படி இன்னொரு லகரம் ரகம் எழுதுவது?

 4. Bullshit…. Why donot you go to srilanka and fight for whatever cause that you are writing about? tamil naaatla ukkandhu , mooka pidikka moonu velaiyum thinnuttu idhuvum pesuvinga innamum pesuvinga… unakkellam oru website, adhai padikka nalanju velaiyilladha somberinga. Pamaran… you should simply quit writing… you cannot even write anything original once a month… you are simply copying and pasting your old writings which are crap as usual….

  i know you will not let this comment appear on your website… but you cannot change what my friends and I think of you….

 5. நமது அரசாங்கம் மக்களுக்கு புகட்டும் வரலாற்றில் எவ்வளவு புரட்டு என்பதை எவரும் அறியவில்லை. என் முதல் ஈழ நன்பன் ஜோசப்பை பற்றி சொல்லியாக வேணும்… முதன் முதலில் அவனுடன் பேசிய போது “நீங்க தமிழ் ஏன் வித்தியாசமா பேசுறீங்க”ன்னு கேட்டேன். அவர் சொன்னார் ” பேச்சு வழக்கு மட்டும் தான் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். நாமா எல்லாரும் தமிழங்க தான் சிவா”ன்னு சொனார். இன்று அவர் உயிரோடு இல்லை. போராளியாகி இறந்த விட்ட தாக மட்டும் செய்திகிடைத்தது.

  அவன் யாருங்க அவனா பத்து நமக்கு சுதந்திரம் அளிக்க … நாம்லே எடுத்துக்கனும்.. அது கான் உண்மையான சுதந்திரம்

 6. Lookup IP Address: 206.83.53.249

  General Information

  Hostname: 206.83.53.249
  ISP: The Methodist Hospital
  Organization: The Methodist Hospital
  Proxy: None detected
  Type: Corporate
  Blacklist:

  Geo-Location Information

  Country: United States
  State/Region: TX
  City: Houston
  Latitude: 29.7079
  Longitude: -95.401
  Area Code: 713

  Geo-Location Map

  Map data ©2008 LeadDog Consulting, Tele Atlas – Terms of Use
  20 mi
  50 km

  Last Updated Friday, October 03 2008 @ 04:57 pm UTC

 7. சரியான கருத்து. சொல்லிகாட்ட சோறூ அனுப்ப போகிறார் கருணாநதி.வாழ்க

 8. Hello subhashini,
  USA is not going to be friendly to “outsiders” like u for ever!…if its ecomony crashes then one day or other the “native americans”(!) would drive you away. Then we will see where you run for cover.. appo naanga inga “mookku pidikka moonu velai thinnuttu” neenga america veedhiyila alayaradha paappom…
  .if Paamaran has to go to Srilanka for supporting eelam tamils then u shud COMEBACK to india to FIGHT with paamaran!..how can you sit in USA and COMMENT about someone in TAMILNADU?…Afterall u shud be from a community which was(is) “talking” with GOD( in heaven) sitting on EARTH on behalf of the devotees…in a similar way Paamaran can sit in TN and comment about EELAM…
  “Methodist hospital” enna paithiyakaara aaspathiriyaa?..its fitting that u r in a hospital…

 9. தோழரே,

  FREEDOM NOT TO BE GIVEN;
  IT MUST BE TAKEN.

  உம் போன்றவர்கள் நம் மக்களுக்கு இதற்க்கான விளக்கம் கொடுப்பிர்கள் என்ற நம்பிக்கை உண்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s