கத்தியின்றி…… ரத்தமின்றி…… வெட்கமின்றி……

காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான் மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்…… சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்…… உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. -தந்தை பெரியார் – 1927.

ஊருக்கு மூணே பேர் இருந்தாலும் இந்தக் காங்கிரஸ் அலப்பரைக்கு மட்டும் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காகிதப்பஞ்சமே வந்துவிடக் கூடிய அளவிற்கு அறிக்கைப் “போர்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதன் சர்வ கோஷ்டித் தலைவர்களும். சீமான் – கொளத்தூர் மணி – மணியரசன் கைது…… விடுதலைச் சிறுத்தைகள் பேனர் கிழிப்பு…… சத்தியமூர்த்தி பவனில் செருப்படி…… சிபிசிஐடி விசாரணை…… என அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது தமிழகம். ஆனால் சத்தியமூர்த்தி பவனைப் பொறுத்தவரையில் இந்த முறை மட்டும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இதுவரைக்கும் தங்களது சொந்தக் கட்சியின் தலைவர்களையே வேட்டியை உருவி ஓடவிடுவது…… தங்களது தலைவர்களின் கொடும்பாவிகளை தாங்களே கொளுத்துவது…… சரமாரியாய் செருப்பாலடித்து “முதல்” “மரியாதையை” அளிப்பது என்பதெல்லாம் தங்களுக்கே உரித்தான பிறப்புரிமை என்றிருந்தவர்களுக்கு மற்றவர்கள் இதில் பங்குக்கு வந்தால் கோபம் வராமல் என்ன செய்யும்?

ஆனால் காவிரியில் கர்நாடகம் நீர் விட மறுக்கும்போதோ…… தலித்துகளுக்கோ, பிற்படுத்தப்பட்டோருக்கோ சமூகநீதி மறுக்கப்படும்போதோ…… தங்களது சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிற இந்தப் பேரா(சை)யக் கட்சிக்காரர்கள் “ஈழம்” என்று வாயைத் திறந்தாலே போதும் எகிறிக்குதித்து வந்துவிடுகிறார்கள்.

அதைப் பார்க்கும்போது இவர்களுக்குத் தலைவர் சோனியா காந்தியா? அல்லது ராஜபக்சேவா? என்கிற நியாயமான கேள்வி ஆறறிவு உள்ளவர்கள் எவருக்கும் எழத்தான் செய்யும். அதுசரி…… இந்தப் பேராயக் கட்சி இப்போதுதான் இப்படியா……? அல்லது எப்போதும் இப்படியா? என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆக்டேவியன் ஹியூம் என்கிற வெள்ளைக்காரனது கருவில் உருவான இந்தக் காங்கிரஸ் முட்டை “வெள்ளையனே வெளியேறு” என்கிற சரணத்தோடு துவக்கவில்லை தனது “தேசபக்திப்” பாட்டை. “மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் மகாராணியார் நீடூழி வாழ்க” என்றே தனது அன்றாடப் பணிகளை ஆரம்பித்தது. ஆம். இந்திய “சுதந்திரப்” போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் காங்கிரசின் துரோக வரலாற்றையும் அறிந்து கொண்டால்தான் தற்காலத் தற்குறிகளின் தொடைதட்டல்களை விளங்கிக் கொள்ள முடியும்.

மாவீரன் பகத்சிங்கும் அவனது தோழர்களும் இந்தியாவின் உண்மையான சுதந்திரத்திற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டு bagat-singஇன்றோடு எழுபத்தி எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் அம்மாவீரன் தூக்கு தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில் மகா ஆத்மா காந்தி ஒரு கடிதம் எழுதினார் பிரிட்டிஷ் பிரபு எமர்ஸனுக்கு. என்னவென்று தெரியுமா நண்பர்களே……? “நீங்கள் தூக்கில் போடுவதென்று முடிவு செய்துவிட்டால் கராச்சியில் நடக்க இருக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரே அவரை போட்டு விடுவது நல்லது.” என்று.

இன்று காங்கிரசார் தபால்தலை உட்பட இன்னபிற இத்யாதிகளுடன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் மாவீரன் பகத்சிங் அன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு “தீவிரவாதி”. அதுவும் கராச்சி மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலேற்றப்பட வேண்டிய “பயங்கரவாதி.”

 “தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்காளர் தொகுதிதான் ஓரளவுக்காவது அம்மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற உரிய வழி” என முழங்குகிறார் அம்பேத்கர். அதன் தார்மீக நியாயம் புரிந்து 1932 இல் பிரிட்டிஷ் பிரதமரே தீர்ப்பு அளிக்கிறார் “அம்பேத்கரின் நியாயம் அங்கீகரிக்கப்படுகிறது” என்று. “இது எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடும்” என்று எரவாடா சிறையிலேயே “சாகும்வரை” “உண்ணாவிரதத்தை” அறிவித்து அம்பேத்கரை அல்லலுக்கு ஆளாக்குகிறார்கள் காந்தியும், ambedkar-sகாங்கிரசாரும். அப்போதுதான் இந்த “உண்ணாநோன்பு” குறித்து கிண்டலடித்து நீதிக்கட்சியின் நாளேடான திராவிடன் எழுதியது : “காந்தியார் எதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார் என்றால் இந்திய நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தாழ்த்தப்பட்டு…… ஒடுக்கப்பட்டு…… நாதியற்று…… நசுங்கிக் கிடக்கும் ஏழு கோடி பிணங்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதே காரணமாம் ! அந்தோ இக்காரணத்தை எண்ணும்போதுதான் காந்தியின் ஒரு உயிரை விட எமது ஏழுகோடி ஏழை மக்களின் ஏழு கோடி உயிர்கள் பெரிதல்ல என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.”

 தலித் மக்களின் விடுதலைக்காக சாகும் வரையிலும் போராடிய மாமனிதன் அம்பேத்கர் அன்றைய காங்கிரசாருக்கு “இந்து சமூகத்தைக் கூறு போட வந்த குழப்பவாதி”. இன்றைய கதர்சட்டைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வார்த்தெடுத்த மேதை.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ்காரர்களுக்கு கிலி மூட்டிய ஆனானப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போசே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குள் பட்டபாடும்…… ஆன பிற்பாடு கதர்க்குல்லாக்களிடம் பட்டபாடும்…… பிற்பாடு “உங்கள் சகவாசமே வேண்டாம்…… உங்கள் கதர்க்கொரு கும்பிடு…… உங்கள் காங்கிரசுக்கொரு கும்பிடு……” என்று வெறுப்போடு வெளியேறியதையும் வரலாறு தனது பக்கங்களில் அழுத்தமாகப் பதித்து வைத்திருக்கிறது. nethaji“சுபாஷ் போஸ் நம்பத் தகுந்தவரே அல்ல என்பதை நான் கவனித்து வந்துள்ளேன். எனினும் காங்கிரசின் அடுத்த தலைவராக வரக்கூடியவர் அவரைத் தவிர வேறு யாருமல்ல.” இது காந்தி வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதம். –நவம்பர் 1. – 1937.

ஆக அன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பத்தகாதவர். இன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பிக்கை நாயகன்.

சொந்த நாட்டின் விடுதலை வீரர்களுக்கே “தீவிரவாதி……” , “பயங்கரவாதி……” எனப் பட்டம் சூட்டியவர்கள்…… அண்டை நாட்டின் போராளிகளையா அங்கீகரிக்கப் போகிறார்கள்……? இது மட்டும் என்றில்லை. சமூக மாற்றங்களுக்கான அடித்தளம் எங்கெங்கெல்லாம் ஆரம்பிக்கப்பட்டதோ…… அங்கெங்கெல்லாம் அதன் அடிக்கல்லை உருவுவதே அதன் தலையாய “தேசபக்த”ப் பணியாக இருந்திருக்கிறது.

நடைவண்டி பழகும் நாட்களிலேயே பெண்குழந்தைகள் விதவைக் கோலம் பூணும் கோரம் சகியாமல் கொண்டுவந்த “இளம் வயது விவாக விலக்கு மசோதா”வை…… “பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை” என்று சண்டித்தனமாய் எதிர்த்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர் எம்.கே.ஆச்சாரியார்தான்.

கடந்த நூற்றாண்டின் துவக்க காலங்களிலேயே தான் நம்பிய கொள்கைக்கு உண்மையாய் கதர் உடுத்தி…… தனது குடும்பத்தவர்களையும் உடுத்த வைத்து…… கள்ளுக்கடை மறியல்களில் ஈடுபட்டு…… வைக்கத்தில் தெருநுழைவுப் போராட்டங்களில் கைதாகி…… வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி…… இறுதியில் தன் உழைப்பு அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் போனதைப் புரிந்து கொண்டு…… “இனி காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை.” என வெளியேறிய தந்தை பெரியாரையே ஆப்படித்துப் பார்த்தவர்கள் அல்லவா இந்தக் கதரின் பிதாமகர்கள்?

அவ்வளவு ஏன்……? நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இரத்தக்கண்ணீர், போர்வாள், தூக்குமேடை உட்பட பல நாடகங்களுக்குத் தடை விதித்தும்…… 144 தடை உத்திரவு போட்டும்…… நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தும்……சரமாரியாக கல்வீச்சு நடத்தியும் mrradhaகருத்துச் சுதந்திரத்தை “நிலைநாட்டிய” கண்ணியவான்கள்தான் இந்த அகிம்சையின் புத்திரர்கள்.

ஆனால், அந்தச் சேற்றிலும் காமராசர் என்கிற செந்தாமரை முளைக்கத்தான் செய்தது. எந்தக் காங்கிரஸ்காரர்கள் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை மீது ஏறி நின்று “அகிம்சையை” நிலைநாட்டினார்களோ…… அதே ஆட்கள் மத்தியில் “எம்.ஆர்.ராதா அவர்கள் என்னை எத்தனைதரம் திட்டி இருப்பார் என்று நினைக்கிறீர்கள். அவர் திட்டியதற்காக நான் ஒன்றும் வருத்தப் படவில்லை. அவர் திட்டியதில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பேன். நியாயம் kamarajஇருந்தால் எடுத்துக் கொள்வேன்.” என்று முழங்கினார் காமராசர். தன்னையே விமர்சித்தாலும் மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்த காமராசர் எங்கே……?

நியாயமான கருத்துக்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தங்கபாலுக்களும்…… இளங்கோவன்களும் எங்கே……?

எல்லாவற்றுக்கும் மேலாய்…… காங்கிரஸ் நண்பர்களிடம் கேட்பதற்கும் நியாயமான கேள்வி ஒன்றிருக்கிறது. “பொட்டுக்கட்டுதல்” என்கிற பெயரால் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டும் தேவரடியார்களாக சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தபோது அதைத் தடுக்கக் கொண்டு வந்ததுதான் “தேவதாசி ஒழிப்புச் சட்டம்”. ஆனால் அச்சட்டம் வந்தால் “எங்கள் பண்பாடு கெட்டுப் போகும்…… எங்கள் கலைகள் அழிந்துவிடும்……” என்று பெண் இனத்துக்கே எதிராக குரல் கொடுத்தவர்தானே சத்தியமூர்த்தி……

இன்னமும் அவர் பெயரால் உங்கள் “பவன்” இயங்குவது நியாயமா……?

அல்லது…… கடைக்கோடி மனிதனுக்கும் இந்தக் கல்வி போயாக வேண்டும் என்று வாழ்வின் இறுதிவரை கவலைப்பட்டாரே காமராசர்……

அந்தக் காமராசரின் பெயரால் உங்கள் “பவன்” இயங்குவது நியாயமா……?

யோசியுங்கள்.

ஆனால், அதற்கும் முன் தமிழ் மக்களும் தங்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றிருக்கிறது.

அதுதான் :

கதர்ச்சட்டைக்காரர்கள் இன்று யார் யாரையெல்லாம் தியாகிகள் என்கிறார்களோ

அவர்களெல்லாம் நாளைய துரோகிகள்.

அவர்கள் யார் யாரையெல்லாம் துரோகிகள் என்கிறார்களோ……

அவர்களே நாளைய தியாகிகள்.

அவர்களது அகராதிப்படியே.

நன்றி : “தமிழக அரசியல்” வார இதழ்.

Advertisements

29 thoughts on “கத்தியின்றி…… ரத்தமின்றி…… வெட்கமின்றி……

 1. காங்கிரசு கதரின் இரையான்மை பொச்சு அய்யோ அய்யோ
  வாங்கா ஈ.வி.கே.எஷ்,தங்கபாலு நாம சேலம் சித்த வைத்திய சாலைக்கு போவோம்

 2. தின்டிவனம் இராமமூர்த்தி உட்பட பல தேச பக்தர்கள் (?) காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் நான்காண்டு காலமாகத்தான், காங்கிரஸுக்கு நிரந்தரமான கட்டுப்பாடு மிக்க தலைவர் கிடைத்திருக்கிறார். அவர் பெயர்தான் கருணாநிதி.

  ஆட்சியில் பங்கு கேட்பது முதல் கொளத்தூர் மணியை கைது செய்வது வரையில் அவரிடம்தான் முறையிடுகிறார்கள். கருணாநிதி மிகச்சிறந்த காங்கிரஸ் கமிட்டி தலைவராக சோனியா மெச்சுமளவிற்கு நடந்து வருகிறார். உண்மையில் இராஜபக்சே ஆட்சி , காங்கிரஸ் ஆதரவுடன் தமிழகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது

  – சென்னைத்தமிழன்

 3. நாம பக்கத்துல இருந்தே இவங்க இப்படி பேசுறாங்க!!!!!..

  இதைதான் தந்தை பெரியார் சொன்னார்..தமிழைக் கொண்டு தமிழனை அடிமை ஆக்கினால் அந்த தமிழையும் தூக்கி எறிவேன் என்று..அதை இன்று நாங்கள் உணர்கிறோம்…

  நன்றி பாமரன் அண்ணா

 4. ஆளே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவையா?

 5. எவ்வளவு செருப்பாலடித்தாலும் சிரித்துக் கொண்டே வாங்கும் அகிம்சைவாதிகள் தான் இவர்கள்!!!

 6. SORRY to type in English.

  Dear Pamaran,

  Nice article. Lots of new informations for us. Specially about Congress history.

  I don’t want to say anything about Congress plitician.. nothing there to say…

  Thank U.

  –Eela Thamilan.

 7. ப்ரிண்ட் எடுத்து வைக்க‌ வேண்டிய‌ ப‌திவு. ந‌ன்றி நண்ப‌ரே!! இதற்கான‌ ஆதார‌ங்க‌ள் ஏதும் இருந்தால் (புத்த‌க‌ங்க‌ள்) த‌ந்தால் ப‌ய‌னுள்ள‌தாயிருக்கும்.

  பிர‌பா

 8. அன்புத் தோழன் பாமரனுக்கு…
  உங்கள் எழுத்தால் கதரின் சாயம் வெளுத்து போனது.
  அன்று- பெரியார்
  இன்று-பாமரன்

  வாழ்க உங்கள் தொண்டு.

 9. தலைவா,

  அட்டகாசமான கட்டுரை. காங்கிரசை ஒழித்தே ஆகவேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
  முழு மது விலக்கு கோரி ஒருத்தன் உண்ணாவிரதம் இருக்கிறானாம். நேற்று தான் மதுகடைகள் திறக்க பட்டது போல இன்று திடீரென்று உண்ணாவிரதம் இருக்குறார்.

  சுதந்திரம் வாங்கி அறுபதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதில் ஐம்பதாண்டுக்கும் மேல் இந்த காங்கிரஸ் ***** மகன்கங்கள் தான் ஆட்சி. தாத்தா, அம்மா, பொண்டாட்டி, எல்லரும் சேந்து. நாட்டில் முப்பது கோடி மக்களுக்கும் அதிகமாக வறுமை கொடுக்கு கீழே, குழந்தைகள் இறப்பு விகிதம் எதியோப்பியாவை விட இந்தியாவில் அதிகம்… மக்களுக்காக ஒரு மயிரையும் புடுங்காத சுயநல ராட்சசன்கள் இந்த காங்கிரஸ் .

 10. இவ்வளவு துரோகப்பாரம்பரியம் கொண்ட கட்சியினை தோழர். சீமான் போன்றோர் கூட ஏன் இன்னும் “காங்கிரஸ் பேரியக்கம்” என்றே அழைக்கின்றனர்?

 11. காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் “இனிமேல் காங்கிரசியை ஒழிப்பது தான் என் முதல் வேலை” என்று சூளூரைத்த பெரியாரின் பணி இன்றும் முடியவில்லை.

 12. அண்ணா இவனுகலாளையும் போராடமுடியாது ,மத்தவனையும் போராட விடமாட்டானுக,இவனுகள விமர்சிப்பதும் ஒன்னு ,வடிவேல் படம் பார்ப்பதும் ஒன்னு ,எல்லாம் திராவிட கட்சிகள் கொடுக்கிற இடம் ,ஒத்தையா நின்னா ஒரு இடம் வாங்க மாட்டனுங்க ,

 13. காங்கிரசு கதரின் இரையான்மை பொச்சு அய்யோ அய்யோ
  வாங்கா ஈ.வி.கே.எஷ்,தங்கபாலு நாம சேலம் சித்த வைத்திய சாலைக்கு போவோம்

 14. எங்கே காமராஜரையும் போட்டு தாக்கிடுவீங்கலோன்னு பயந்தேன்???
  ஆமா இந்த தமிழ்நாடு காங்கிரஸ் காரங்க தமிழர்கள் தானே…..?
  ஈழம் னு பேச்சு எடுத்தாலே ஆசன வாய்ல வெடி வச்ச மாதிரி ஆளுக்கொரு அறிக்கை விடுறானுங்க ?

 15. காங்கிரஸ் அறிவுஜீவிகளின் கோமாளி தனங்கள் என்னில் அடங்காதவை, வாஸ்து பார்த்து சத்யமூர்த்தி பவனை இடிப்பது, ஈழ பிரச்சனை என்றால் வீட்டுக்குள் ஓடுவது.
  ஈபோவே கண்ண கட்டுதே…..
  காங்கிரஸ் அறிவுஜீவிகளை வைத்து புதிதாக ஒரு வலை பூவையே திறக்கலாம்.

  இப்படிக்கு,
  பிரசாத்.

 16. காங்கரஸ் தலைவர் உருவ பொம்மைகளை செருப்பால் அடிக்கிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். தாராளமாக அடியுங்கள். நேரில் அடித்தால் கூட டில்லிக்கு ஃபோன் போட்டு பதில் வந்தவுடன்தான் திருப்பியடிப்பார்கள். அதுதான் காங்கிரஸ் பாரம்பரியம்.

  ஒருமுறை தமிழக காங்கிரஸ் ஜெ வுடன் கூட்டணி என்று சொன்னவுடன், தமிழக காங்கிரஸ் காரர்கள் நரசிம்மராவ் படத்தை செருப்பால் அடித்தார்கள். அதன் பிறகு உருவானதுதான் த.ம.க.

  சில நேரத்தில் காங்கிரஸ் காரனுக்கு கூட ரோசம் வந்துவிடுகிறது. சிபிஎம் காரர்களுக்கு பொலிட் பீரோ கூட்டம் நடத்திய பிறகு சூடு , சொரணையெல்லாம் பறந்து விடுகிறது. அதைப்பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்

  – சென்னைத்தமிழன்

 17. தோழர் பாமரனக்கு

  உங்கள் எழுத்துகள் பெரியார் சிந்தனைகளின் அடுத்த கட்டத்திற்க்கு கொன்டு செல்பவையாக இருக்கிறது.
  இதில் காங்கிரஸ்காரர்களுக்கு “பாரம்பரியிம் மிக்க கட்சி” என்று பெறுமை வேறு. தாங்கள் சரியாக அவர்களின் முகமுடியை கிழித்து எறிந்துவிட்டிர்கள்.
  நன்றி.
  இரா.கண்ணன்

 18. tamil type theriyala athanal…………………..
  thiru pamaran avarkaluku,
  nan intha katturai paddikumpothu muthukumar enkira nam nanban namitam illai,
  avanin irrupu pattri nengal elutha ventum endru nan kattayappaduthvillai, eluthuninal innum oru kasaiyadi intha concressuku pogum endu ninaikiren. tayavittu en karuthai erkaum.

  Ganthi enum ematru pervaliyaithan nam mahathma entru paddikinroma, innum avarin ematru velaikal ethunum irrunthal sollunkal nan en kulanthaikalukku unamiyai solli valarka asaipadukinren. please

 19. கடந்த 1 வாரமாக உங்கள் ப்ளாக்குக்கு வந்து, ஐயா பாமரன் அவர்களே கொஞ்சம் அத பத்தி எழுதுங்களேன், இதப்பத்தி எழுதுங்களேன் என்று எழுத முற்ப்பட்டு, இந்த காங்கரஸ்காரங்க பற்றிய பதிவை படிச்சிட்டு நொந்து நூலாகி போயிடுவேன்.

  ஆனா பாருங்க இன்னிக்கு இன்னிக்கு இந்த கலைமாமணி விருதுகள் அறிவிச்சிருக்காங்க! தாங்க முடியலீங்க! வழக்கமான கோமாளித்தனத்தையெல்லாம் மிஞ்சிட்டாங்க! வயித்தெரிசலையும், கோபத்தையும் வெளிப்படுத்த தொகுப்பா வார்த்தைகள் கிடைக்கலீங்க!

  தயவு செய்து எழுதுங்க! பத்திரிக்கைகளில் எழுதுங்க! ப்ளாக்ல எழுதுங்க!

  முடியலீங்க!

 20. miga arumai thozhar…

  sariyaana nerathil ezhuthiya maigach sariyaana katturai ithu……

  congress enroru katchi tamizh naatil iruntha idam theriyaamal pogak kadavathae nam anaivarathu viruppam aagum……

  ithae ponru dravi katchigalaiyum virattum poluthuthaan unmaiyaana viduthalai kidaikkum…….

  naiyaandi kalantha ungal eluthup pani thodara vaalthukkal

 21. Dear Pamaran,
  Ungalukkum enakkum ulla otrumai : Thamizh mozhi meedhulla theera kaadhal. Thamilinathinpaal ullamum udalum urugum eerpu, patru, paasam. Ungalai sasndhikka, ungaludan uraiyaada, ungaludan thodarbu vaithukolla mihavum viruppam. Naan Potrum thalaivargal :Thanthai Periyar, Arignar Anna, Perunthalaivar Kaamarasar.
  Nam iruvarukkum ulla vetrumai : Maatraan thottathu malligaikum manamundu enbathai maranthu, ungalukku pidikkadha thalaivargalaiyum, katchigalaiyum neengal kanmoodithanamaaga saaduvathu.

  Vaazhga ungal thamizh thondum, thamizh ina patrum ! Ippadipatta uyarntha ullamum. seeriya sinthanaiyum ulla thaangal, innum konjam perunthanmaiyum, innum adhigamaana parantha nenjum valarthukondaal en nenjam alavilla poorippu adayum, anbarey.

 22. உங்கள் வார்த்தை ஜாலங்களால் வரலாற்றை இருட்டடிப்பு செய்யாதீர்கள்

  // சுபாஷ் போஸ் நம்பத் தகுந்தவரே அல்ல என்பதை நான் கவனித்து வந்துள்ளேன். எனினும் காங்கிரசின் அடுத்த தலைவராக வரக்கூடியவர் அவரைத் தவிர வேறு யாருமல்ல.” இது காந்தி வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதம். –நவம்பர் 1. – 1937. //

  ஆம் நம்பத்தகுந்தவர் அல்ல என்றால் அவர் எப்போது வேண்டுமானால் ஆயுதமேந்தி போராளி ஆகலாம் என்று, காந்தி நம்பிய ஸத்யாக்ரஹ அகிம்சை வழிக்கு நம்ப தகுந்தவர் அல்ல என்று தான் பொருளே தவிர சுபாஷ் வெள்ளையனுடன் சேர்ந்து கொள்ளுவார் என்று அல்ல. உங்களுக்கு காந்தியின் அடுத்த வரி கண்ணில் படவில்லையா………….

  காங்கிரஸ் இன் செயல் பாட்டுக்குள் ஏன் காந்தியை இழுக்கிறீர்கள். காந்தியின் தனிப்பட்ட கருத்துக்கள் எப்படி காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு ஆகும். சுதந்திரம் வாங்கிய பின் காங்கிரஸ்ஸை காந்தி கலைத்து விட சொன்னார். அதை ஏன் இருட்டடிப்பு செய்கிறிர்கள்.

  // “நீங்கள் தூக்கில் போடுவதென்று முடிவு செய்துவிட்டால் கராச்சியில் நடக்க இருக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரே அவரை போட்டு விடுவது நல்லது.” //

  காந்தி ஒன்றும் தூக்கு தண்டனை கொடுக்க சொல்லி recommend செய்ய வில்லையே ” நீங்கள் தூக்கில் போடுவதென்று முடிவு செய்துவிட்டால் ” இந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள். காந்தி சொன்னால் மட்டும் வெள்ளையன் சும்மாவா விட்டு இருக்க போகிறான். அன்றைக்கு இருந்த அரசியல் சூழ்நிலை என்னவோ யாருக்கு தெரியும். தன்னுடைய அஹிம்சை கொள்கைக்கு எதிரான பகத் சிங் கை எப்படி அவர் ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

  சுதந்திரத்திற்கு பிந்தைய காங்கிரசை விமர்சிக்க ஏன் சுதந்திரத்திற்கு முன்தைய காங்கிரசை ஏன் இழுக்கிறீர்கள்? காங்கிரசை விமர்சிக்க ஏன் காந்தியை இழுக்கிறீர்கள்?

  உங்கள் வீரப் புலி thanai thalaivan பிரபாகரன் மற்றும் அவர் இயக்கத்தினர் என்ன செய்தார்கள், அமிர்தலிங்கம், ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா என்று மற்ற தமிழ் ஈழ விடுதலை போராட்ட வீரர்களை கொல்ல வில்லையா………அதை பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட உங்கள் வாய் கிழிக்க மாட்டேன் என்கிறது……..அதை பற்றி கிழித்தால் நீங்கள் கிழி பட்டு விடுவீர்கள்……….. ஆனால் காந்தியை பற்றி கிழித்தால் உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது……… இவர்களையும் ராஜீவையும் கொன்ற உங்கள் பிரபாகரனுக்கு ஏன் டபுள் ரோல் செய்த ஜெயவர்தனாவை , சந்திரிகா வை கொல்ல வேண்டும் என்று தோன்ற வில்லையா………..

  // “தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்காளர் தொகுதிதான் ஓரளவுக்காவது அம்மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற உரிய வழி……………………………………..”

  முதலில் அந்நியனிடம் இருந்து விடுதலை பெறுவோம் பிறகு நம் பிரச்சனையை நாம் தீர்த்துக்கொள்ளலாம் என்பதற்காக, விடுதலை போராட்ட கனல் உள்நாட்டு சாதீய பிரிவுகளால் முடங்கி விடக்கூடதே என்பதற்காக, உண்ணாவிரதம் இருக்க தொடங்கி இருக்கலாம்.

  எல்லா விடயத்திற்கும் இருப்பக்கம் உண்டு இருப்பக்கமும் சீர் தூக்கி பார்த்து எழுதுங்கள். உங்களுக்கு நடுநிலைமை என்றால் என்னவென்றே தெரியாதா? நீங்கள் வார்த்தை ஜாலங்களை கொட்டி எழுதி பிழைப்பவர் ஆனால் காந்தியோ களப்போராளி அவரை விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. வன்முறையை ஆதரிக்கும் நீங்கள் ஈழம் சென்று துவக்கு தூக்க வேண்டியது தானே……..அதற்கெல்லாம் உங்களுக்கு தெகிரியம் இருக்குமா என்ன? வார்த்தை ஜால மன்னன் அல்லவா நீர்………….

  sooriyanai பார்த்து எதோ ondru ennamo seyyumaam …………

 23. Hi… Pandiyan…

  // sooriyanai பார்த்து எதோ ondru ennamo seyyumaam ………//

  உங்களுக்கு சூரியன் என்று வேற நினைப்பு இருக்கிறதோ?…

  ஒண்ணுக்கும் உதவாத வேஸ்ட் ……. காங்கிரஸ் !!

  ஒரு தாலி போனதுக்கு ஓராயிரம் தாலி வேணுமா உன் தலைவிக்கு ?

  உங்கள மாதிரி மனிதர்களை திருத்த முடியாது…

  By…
  Gee

 24. TAMIL NADU CONGRESS IS UNDER THE CONTROL OF KALAIGNAR KARUNA.
  DMK IS UNDER THE CONTROL OF SOKKA THAGAM SONIA.
  PLEASE DONT WASTE TIME FOR CONGRESS WHICH IS ACTUALLY NON EXISTING IN TAMIL NADU.
  GOPALASAMY.

 25. பாண்டியன் அவர்களே..
  நீங்க காமெடி தான பண்றீங்க..

 26. சத்யமூர்த்தி பவனுக்குள் வேட்டி உருவ தாய் காங்கிரஸ்கார்கள் லாயக்கு..

 27. Vanakkam Thozharey,

  Naan thangalai ezhumboor moores salaiyil santhithai, angu thaangal intha valaithala muhavariyai thanthathaiyum, ippozhuthu makilchiyodu ninaithuparkiren. yenenraal, thangal ulla kobam vaarthayenum savukkaai sodukkum nerthiyai padithu unarum vaaippu antha santhippin moolam kedaikka petrathanaal.

  oru congress utkootathil nethaji meedhu nehruji thindai yeduthu adikkum arithaana pugaipadam oru murai NANDHAN ithazhil velivara kanden. atahan nagal onrai petrukolla muyarchikkavum.

  Thanthai Periyaar thevayatra congressai ozhippathuthaan en muthal velai endru oru sabathathai yeduthuvitaar. Athai athan thalaivargale niraivetruvaargal. Congress VENGAYAM uriya thodangi vittadhu. Nalla velai Periyarin sabathathai niraivetrum kadamayil Periyarin vaarisugalum ( uravil mattum ) pangeduppathu avarukku avargal tharum ninaivaanchali.

  Thanthai Periyaarin sabathathai niraivetrum anaithu CONGRESS THALAIVARGALLUKKUM nam manamaarntha nanriyai therivithukolvom.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s