தம்பி பாலாக்களும்…… பாபாக்களும்……

ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட…… அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்னப்பட்ட பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக ஷேமார்த்தமான ஸப்தங்களின்  மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். லோகோபகாரமாக வந்த ஸப்தங்களை வைத்தே அதற்கு grammer முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவ ஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள்.

– ஜகத்குரு சிறீ காஞ்சி காமகோடி சந்திரசேகேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாம்களின் “அருள்” உரை.

naan_kadavul_movie_photos-35  

ஆக அப்பேர்ப்பட்ட தேவஜாதியினர் கண்டெடுத்த ஸம்ஸ்கிருத சப் டைட்டிலோடு அதாகப்பட்டது “ அஹம் ப்ரம்மாஸ்மி ”  என்கிற துணைத் தலைப்போடு துவங்குகிறது “நான் கடவுள்”.

‘நந்தா’ ராமேஸ்வரத்தில் ஆரம்பித்தது என்றால் இது காசியில் ஆரம்பிக்கிறது. எந்த ஊரில் இறந்தாலும் இங்கு கொண்டு வந்து எரித்தால் நேரடி “மோட்சம்” என்பதால் பலநூறு பிணங்கள் குறுக்கும் நெடுக்குமாய் வந்து போகின்றன.

ஜோசியக்காரனின் பேச்சை நம்பி பதினாலு வருடம் முன்பு சாமியார்களிடம் விட்டுச் சென்ற மகனை கூட்டிப்போக வருகிறான் அப்பன்காரன். “ மிச்சம் சொச்சம் இருக்கிற பற்றுகளையெல்லாம் அறுத்தெறிந்து விட்டுத் திரும்பி வா” என்று ‘ஆசிர்வதித்து’ அனுப்புகிறார் ஒரு ஜடாமுடி சாமியார். ஊர் திரும்பிய மகனை வைத்து வீடும்…… நாடும் படும்பாடுதான் மீதிப்படம்.

காசியில் காட்டப்படும் காட்சிகளும், ஊரில் ஒரு வேளை சோற்றுக்குக்கூட வக்கற்று இரந்துண்டு வாழும் மனிதர்களது அவலமும் பாலாவின் உழைப்பைப் பறைசாற்றுகின்றன. அதிலும் பிச்சை எடுத்து வாழும் மனிதர்களைக்கூட ஊர்விட்டு ஊர் பட்டுவாடா செய்வதும்…… நல்ல உடல் நிலையில் உள்ள அவர்களது உடல் உறுப்புகளைக்கூட ஊனமாக்கி பிச்சை எடுக்கவிடும் கொடூரமும்…… தமிழ்த் திரைக்கு மிக மிகப் புதிதான களங்கள். ஆனால் பாலாவின் அத்தனை உழைப்பும் ஜெயமோகன் கதையின் ஒரு சில அபத்தமான உள்ளடக்கத்தால் வீணாகிப் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.. படத்தைப் பார்த்து சட்டையைக் கிழித்துக் கொள்ளாதது ஒன்றுதான் பாக்கி. படம் முழுக்க சமஸ்கிருத சுலோகங்கள். அந்தக் குறையைப் போக்கும் வகையில் படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக சமஸ்கிருத அகராதி ஒன்றினையும் கையில் கொடுத்திருக்கலாம்.

பல நாள் தவமிருந்து பெற்ற பிள்ளை மொதல் மொதலா வாயைத் தொறந்ததாம்…… “நீ எப்பம்மா தாலியறுப்பே?”ன்னு…… அப்படி காசியிலிருந்து கூட்டி வந்த தவப்புதல்வன் “எதுக்குடி பெத்தே……?” என்கிறான். அடுத்து அப்பனிடம் ஒரு போட்டோவைக் காண்பித்து “அவனா செத்தானா? இல்ல நீ கொன்னுட்டியாடா?” என்கிறான் இந்த “முற்றும் துறந்த முனிவன்.” பொதுவாக நாம் பார்க்கும் படங்களில் எப்படா கதாநாயகன் வருவான்? என்று காத்திருப்பது வழக்கம். ஆனால் இதில் கதாநாயகன் வந்துவிடக் கூடாதே என்று பயந்து கொண்டே படம் பார்க்க வேண்டியிருக்கிறது. வாயைத் திறந்தாலேயே சரம் சரமாய் சமஸ்கிருத சுலோகம், (இந்தத் “தமிழ்” படம் முழுக்க தமிழில் சப் டைட்டில் போடுகிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான விசயம்)

கதாநாயகன் ருத்ரனின் குரு சாதா சாமியாரல்ல. “அகோரி” சாமியார். அது சரி…… அதென்ன “அகோரி” என்கிறீர்களா? அவர்கள் பிணங்களைக் கூட சாப்பிடும் சாமியார்களாம். அதுவும் கிடைத்த பிணங்களையெல்லாம் அல்ல. யார் யாரெல்லாம் “சொர்க்கத்துக்குப்” போக வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறார்களோ அவர்கள்தான் இவர்கள் சாய்ஸ். வாழ்க்கை குறித்து இந்த அகோரியின் வார்த்தைகளில் சொல்வதானால்…… “வசதி” என்பதும் “ஏழ்மை” என்பதும் “பூர்வ ஜென்மப் பலன்”. அந்த அகோரியின் வழியில் வந்த வளர்ப்பு மகன் ருத்ரனோ “எங்க துயரத்துக்கு விடிவே இல்லையா சாமி” எனக் கதறும் கதாநாயகியை “மரணத்தின் மூலமாக வாழ்வைக் காட்ட…… அவளின் குரல்வளையைக் கடித்துக் குதறி “துயர் துடைக்கிறான்”. “இந்த மரணம் அவர்களுக்குக் கிடைத்த வரம்” என்று பிளாஷ்பேக்கில் அகோரியின் அசரீரி ஒலிக்க…… வழக்கம்போல் தமிழ் சப்டைட்டில்..

படம் பார்க்கப் பார்க்க சின்ன வயதில் எனது அம்மாவுடன் சிவராத்திரிக்கோ…… வைகுண்ட ஏகாதசிக்கோ…… இரவு 1.30 மணிக்குப் போகும் படங்களெல்லாம் நினைவுக்கு வந்தது.

போதாக்குறைக்கு “என் தலை நிமிர்ந்தது இந்தப் படத்தைப் பார்த்து” என்று ரஜினிகாந்த்தின் சர்டிபிகேட் வேறு.

சரிதான்.
ஒகேனக்கல் கூட்டம் என்றால் நிமிரும் தலை……
தன் படம் கர்நாடகாவில் ரிலீஸ் என்றால் தானாகக் குனியும்.

காவிரி நீர்ப் பங்கீட்டுக்கான தனி ஆவர்த்தனம் என்றால் நிமிரும் தலை……
தனது படத்திற்கு மட்டும் விதிவிலக்கு கேட்டு தானாகக் குனியும்.

ரஜினிக்கு எப்போது தலை நிமிரும்…… எப்போது தலை குனியும் என்பதெல்லாம் பாலாவை விட தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

எல்லாம் சரி
ஆனால் மராட்டியத்தில் பிறந்த ரஜினிகாந்த்திற்கு வேண்டுமானால் தெரியாதிருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த பாலாவுக்கும் சித்தர்களை முதன்மைப்படுத்த எப்படித் தெரியாமல் போயிற்று ?.

வடக்கத்திய சாமியார்களைப் போல
சொர்க்கம்…… நரகம்……
இம்மை…… மறுமை……
முன்வினை…… பின்வினை…… செய்வினை…… என்றெல்லாம் உளறிக்கொண்டு திரியாமல்

சமூக அழுக்குகளைச் சுத்தப்படுத்தும் மீன்களாய்……
சாதியை, சமயத்தைச் சாடி……

சமூக விடுதலையை நாடி நின்ற சித்தர்களை முழுமையாகத் தெரியாததன் விளைவுதான் பாலா அகோரிகளைத் தேடி ஓட வேண்டி வந்திருக்கிறது. (அம்மாவிடம் பேசும் ஓரிடத்தில் மட்டும் சித்தரின் பங்களிப்பு இருக்கிறது)

தாடிவளர்த்து சடை வளர்த்து நல்ல
சந்நியாசியென்றொரு வேடமிட்டு
ஓடித்திரிந்த புலையாட்டை யிங்கே
யெப்பவதாரடா ஞானப்பெண்ணே?

  என்ற ஞானக்கும்மியை……

காலனைவென்ற கருத்தறிவாளர்க்கும்
கோலங்களேதுக்கடி குதம்பாய்
கோலங்களேதுக்கடி
  என்ற குதம்பைச் சித்தரை

பறச்சியாவதேதடா பணத்தியாவதேதடா
இறைச்சி தோலெலும்பிலும்
இலக்கமிட்டிருக்குதோ?
  என்ற சிவவாக்கியர்களிடம் எல்லாம்  இல்லாத ஞானமா இந்த அகோரிகளிடமிருக்கிறது?

புரிகிறது……
பாலாவுக்கு ரஜினியைப் பிடிக்கும்.
ரஜினிக்கு பாபாவைப் பிடிக்கும்.
அப்புறம் பாலாவுக்கு பாபாவைப் பிடிக்காமலா இருக்கும்?

ஏறக்குறைய ஐம்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வந்த “பராசக்தி” படத்தில் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்காக போராடுவார் ஞானசேகரனாக வரும் ஏஸ்.எஸ்.ராஜேந்திரன்……

பிச்சைக்காரர்களது மறுவாழ்வு இல்லங்களுக்காக குரல் கொடுத்தது 1952 இல் வந்த பராசக்தி……

ஆனால் 2009 இல் வந்த நான் கடவுளோ பிச்சைக்காரர்கள் தங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற மரணம்தான் வரம் என்கிறது,

நல்லவேளையாக ……
இந்த மானுடத்தின் விடுதலையை நேசித்த காரல் மார்க்சுக்கும், மாவோவுக்கும் இந்த அகோரிகளைப் பற்றி தெரியாமல் போயிற்று.

ஒருவேளை தெரிந்து தொலைத்திருந்தால்……
ஏழை மக்களின் விடிவுக்காக வழங்கிச் சென்ற பொதுவுடமைச் சித்தாந்தத்தை தந்ததற்கு பதிலாக ……
எதிரே நின்று அலறும் அபலைகளின் குரல் வளையைக் குதறி எடுத்து “மகத்தான விடுதலையை” வாரி வழங்கியிருப்பார்களோ என்னவோ?

மொன்னை நாத்திகம் பேசுவது வெகு எளிதானது.
ஆனால் சமத்துவத்தையும், சமூக விடுதலையையும் முன்நிபந்தனையாகக் கொண்ட நாத்திகமே முழுமையானது. வெறும் மொன்னை நாத்திகம் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்.

ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஊற்றுக்கண் முதலாளித்துவம்.
ஏழ்மையை ஒழிக்க வேண்டுமென்றால் சாகடிக்கப்பட வேண்டியது முதலாளித்துவம்.
ஆனால் ஏழ்மையை ஒழிப்பதற்கு ஒரே வழி
ஏழையையே ஒழிப்பதுதான் என்கிற புதிய தத்துவத்தைத் தந்திருக்கிறார் பாலா.

rajni-watches-naan-kadavul01

“ அஹம் ப்ரம்மாஸ்மி ”

26 thoughts on “தம்பி பாலாக்களும்…… பாபாக்களும்……

  1. நல்ல வேலை எங்க நீங்களூம் படத்தில் உள்ள சில நல்ல விஷ்யங்களை வைத்து மோசமான அந்த கொலையை ( மோட்சத்த தான்) ஆதரித்துவிடுவீர்களோ என பயந்துவிட்டேன்.

    பாமரன் ஸ்டியிலு அக்மார்க் விமர்சனம்

    அஹம் ப்ர்ம்மாஸ்மி

  2. அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

    உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே

    இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே
    இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின்
    இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
    இரண்டு கடாவும் ஒருகடா வாமே

    படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
    — தமிழர் வேதம் திருமந்திரம்

    உடம்பினைய் பெற்ற பயன் ஆவது எல்லாம்
    உடம்பினில் உத்தமனைக் காண்
    — மூன்றாம் ஓளவ்வையார்

    சித்தர்களை செவ்வனே அறியாமல் பாத்திரங்களுக்கு “சித்தா” எனப் பெயரிடும் பாலாவிற்கு, “சித்தா”ர்த்தனைப் பற்றியும் அந்நாளத்தைய சாலமன் பாப்பையா நம்பி ஆண்டான் நம்பியால் சைவச் சாயம் பூசப்பட்ட சுந்தரநாத சித்தனாகிய திருமூலரையும் கூடவே தெரியப்படுத்தியிருக்கலாமே? இல்லையெனில், எதிர் காலத்தில் அத்வைதம் பற்றி பரமக்குடி பார்ப்பான் கமலுடன் படம் எடுத்தால் ஆதி ஸ்ஸ்ஸ்ஸங்கரன் விட்ட புதுக்கரடியை நம்பி ஆதி ஸ்ஸ்ஸ்ஸங்கரனைத் தேடி ஓட வேண்டாம் அதே போல், சாரு போன்ற அஃறினைக்கதாசிரியர்கள் கிடைத்தால் அத்வைதத்தை தேடி Non duality in Latin America என அலப்பறையடிக்கவும் வேண்டாம் மேலும் இந்த கன்றாவிகளைக் காணும் தொல்லுலக தமிழர்களைக் காயடிக்கவும் வேண்டாமே?

    சித்தார்த்தனும் வர்த்தமானனும் பண்டைத்தமிழனும் சேர்ந்ததால் உருவானதே சித்தர் மரபு. அத்தகைய தமிழ் மரபில் வந்த நாம் தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்க வேண்டாமா, தோழர்களே?

  3. “It doesn’t matter if a cat is black or white, so long as it catches mice” — Dirty Dog Deng Xiaoping

    //”ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஊற்றுக்கண் முதலாளித்துவம்.
    ஏழ்மையை ஒழிக்க வேண்டுமென்றால் சாகடிக்கப்பட வேண்டியது முதலாளித்துவம். ஆனால் ஏழ்மையை ஒழிப்பதற்கு ஒரே வழி
    ஏழையையே ஒழிப்பதுதான் என்கிற புதிய தத்துவத்தைத் தந்திருக்கிறார் பாலா”//

    அப்ப, பூனை வெள்ளயாயிருந்தா என்ன? கருப்பாயிருந்தா என்ன? எலியப்புடிச்சாப் போதும் அது நல்ல பூனைதான்னுல இந்த அறிவு ஜீவி பாலா சொல்றமாதிரி தெரியுது?

  4. தோழர் உங்களுக்கும் பாலாவுக்கும் ஒரு ஒற்றுமை என்னனா..நீங்க ரெண்டு பேரும் ரொம்ப லேட்டா வர்ர ஆளுங்க.. ஆனா எப்பவும் லேட்டஸ்டா வர்ர பாலா இம்முறை கடவுளா வந்து ஆப்பு வைத்து விட்டார். உங்கள் விமர்சனத்தை நூறு சதம் ஒப்புகிறேன்.

    என்ன செய்ய நம்ம பயகத்தான் இப்படி திரியிராய்ங்க..

  5. அருமையான அலசல்!

    ஸ்லம்டாக் மில்லியனர் பார்த்துவிட்டீர்களா?
    இந்தியாவில் பிச்சைகாரர்கள் எப்படு உருவாகிறார்கள் என்று உலகம் முழுவதும் தெரிந்து விட்டது இப்போது!

  6. அட..சும்மா நிறுத்துங்க ஸார்…
    யாராவது எதையாவது கஸ்டப்பட்டு செஞ்சா உடனே அதுல அது நொல்லை இது
    நொல்லைனுக்கிட்டு….
    எனக்கு இது ஒன்னுதாங்க ஏன்னே புரியல…பாலா படம் எடுத்தா,படத்தோட
    தயரிப்பாளர் தான கவலைப் படனும்..ஆனா அவர்த் தவிர மத்த எல்லாரும்
    கவலப்படுறிங்க…..

    \\படம் முழுக்க சமஸ்கிருத சுலோகங்கள். வாயைத் திறந்தாலேயே சரம் சரமாய் சமஸ்கிருத சுலோகம், (இந்தத் “தமிழ்” படம் முழுக்க தமிழில் சப் டைட்டில் போடுகிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான விசயம்)\\
    ஏன் ஸார் தமிழ் படம்னா காசியில் தமிழிலும் படத்தின் கதாபாத்திரங்களும் தமிழில் பேச வேண்டும் என‌
    மருத்துவரோ கலைஞரோ சட்டமா போட்டுறிக்கின்றார்களா என்ன?
    ‘சாமி’யார்கள் என்றாலே சமஸ்கிருதம் தான் என உங்கள் “ஜகத்குரு சிறீ காஞ்சி காமகோடி சந்திரசேகேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாம்கள்” கூறவில்லையா என்ன?
    \\பாலாவின் அத்தனை உழைப்பும் ஜெயமோகன் கதையின் ஒரு சில அபத்தமான உள்ளடக்கத்தால்வீணாகிப் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.. \\

    என்னை பொறுத்தவரை ஜெயமோகன் படத்திற்கு அப்படியொன்றும் அபத்தமான உள்ளடக்கத்தை கொடுக்கவில்லையே.
    அப்படியே அபத்தமான உள்ளடக்கத்தைகொடுத்திருந்தாலும் அடியேனுக்கு புரியும் வகையில் அதை எழுதியிருக்கலாமே…! நடைமுறை வழ்க்கையில் உணர ,காண , நடக்க இயலாததுதானே சினிமா.

    \\“எங்க துயரத்துக்கு விடிவே இல்லையா சாமி” எனக் கதறும் கதாநாயகியை “மரணத்தின் மூலமாக வாழ்வைக் காட்ட…… அவளின் குரல்வளையைக் கடித்துக் குதறி “துயர் துடைக்கிறான்”. “இந்த மரணம் அவர்களுக்குக் கிடைத்த வரம்” என்று பிளாஷ்பேக்கில் அகோரியின் அசரீரி ஒலிக்க…… வழக்கம்போல் தமிழ் சப்டைட்டில்..\\

    அதாவது நீங்கள் கருணைக் கொலையை கூறுகின்றீர்கள். வலியில் துடித்த கன்றுக் குட்டியை கருணைக் கொலை
    செய்யச் சொன்னார் காந்தி .(சத்தியசோதனை நோலில் இருந்து…).தற்போது கூட மூளைச்சாவு அடைந்தவர்களை
    மருத்துவர்களின் உதவியோடு கருணைக் கொலை செய்து அவர்களின் உறுப்புகளை மற்றவ்ர்களுக்கு
    பொறுத்துகிறார்களே அது தவ்றூ என்கிறீர்களா ? திரு. பாமரன் அய்யா அவர்களே….

    \\சமூக அழுக்குகளைச் சுத்தப்படுத்தும் மீன்களாய்……
    சாதியை, சமயத்தைச் சாடி……சமூக விடுதலையை நாடி நின்ற சித்தர்களை முழுமையாகத் தெரியாததன் விளைவுதான் பாலா அகோரிகளைத் தேடி ஓட வேண்டி வந்திருக்கிறது.\\

    நீங்க சொல்றதப் பாத்தா எல்லாருக்கும் சித்தர்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் போலிருக்கின்றதே…
    எல்லாருக்கும் எல்லாமும் தெரியாததது நித்ர்சனம் தனே….பாமரன் அய்யா…

    \\ஏறக்குறைய ஐம்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வந்த “பராசக்தி” படத்தில் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்காக போராடுவார் ஞானசேகரனாக வரும் ஏஸ்.எஸ்.ராஜேந்திரன்……
    பிச்சைக்காரர்களது மறுவாழ்வு இல்லங்களுக்காக குரல் கொடுத்தது 1952 இல் வந்த பராசக்தி……
    ஆனால் 2009 இல் வந்த நான் கடவுளோ பிச்சைக்காரர்கள் தங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற மரணம்தான் வரம் என்கிறது,\\

    இது என்னாடா வம்பாப் போச்சு…ஒரே மாதிரிதான் யோசிக்க வேண்டுமா எனன ?..

    பாலாவின் ரசிகன் என்ற முறையில்
    டக்ளஸ்

  7. டக்லஸ் அய்யா,

    //படத்தோட தயரிப்பாளர் தான கவலைப் படனும்..ஆனா அவர்த் தவிர மத்த எல்லாரும் கவலப்படுறிங்க…..//

    எனச்சொல்வது, ஈழத்தில் ஹிந்திய தோட்டாக்களுக்கும், காசுமீரத்தில் ஹிந்திய பீரங்கிகளுக்கும் பலியாகும் பச்சிளம் சிறார்களைக் கண்டு மனம் குமுரும் போது, “குழந்தைகளின் பெற்றோர் அல்லவா கவலையுறவேண்டும், ஆனால் நீங்க எல்லாம் ஏன் கவலை கொள்கிறீர்கள்” என்பது போல் உள்ளது, திரு. டக்லஸ் அய்யா.

    //நீங்க சொல்றதப் பாத்தா எல்லாருக்கும் சித்தர்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் போலிருக்கின்றதே… எல்லாருக்கும் எல்லாமும் தெரியாததது நித்ர்சனம் தனே….//

    எல்லார்க்கும் எல்லாமும் தெரியாதது நிச்சயமாக நிதர்சனம் தான். அதற்காக, தன் தகப்பன் பெயரே தெரியவில்லை எனில் எப்படி திரு. டக்லஸ் அய்யா?

    // \\ஏறக்குறைய ஐம்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வந்த “பராசக்தி” படத்தில் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்காக போராடுவார் ஞானசேகரனாக வரும் ஏஸ்.எஸ்.ராஜேந்திரன்……
    பிச்சைக்காரர்களது மறுவாழ்வு இல்லங்களுக்காக குரல் கொடுத்தது 1952 இல் வந்த பராசக்தி……
    ஆனால் 2009 இல் வந்த நான் கடவுளோ பிச்சைக்காரர்கள் தங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற மரணம்தான் வரம் என்கிறது,\\

    இது என்னாடா வம்பாப் போச்சு…ஒரே மாதிரிதான் யோசிக்க வேண்டுமா எனன ?..//

    டக்லஸ் அய்யா, ஓரே மாதிரி சிந்திக்க வேண்டாம், even if we want to think alike it is not possible unless and otherwise we get our brains cloned. இந்த 50 ஆண்டு காலத்தில் நமது சிந்தனை செழுமையடைந்திருக்கிறதா, இல்லை பழமையடைந்திருக்கிறதா? பழமையை விரும்புவோர் பிற்போக்குவாதிகள் தானே? இதைத் தானே அண்ணல் காந்தியாரும் விரும்பினார்? நீராவி நூற் உற்பத்தி இயந்திரங்கள் வந்த பின்னரும் இராட்டயை தனது சாட்டையாக்கினாறே?

    பாமரனின் தோழன் என்ற முறையில்
    Il

  8. அப்படி என்ன தமிழ் வெறியோ உங்களுக்கு? அகோரிகள் இன்றும் இருக்கிறார்கள் காசியில், இன்னும் சித்தர்கள் இருக்கிறார்களா என்ன தமிழ் நாட்டில்? காசியில் அகோரிகள் மத்தியில் வளர்ந்த ஒருவன் சமஸ்க்ருதமும் இந்தியும் பேசாமல் தமிழா பேசுவான்………..அவர்கள் போய் ரஜனிகாந்த்தை பார்த்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது படத்தை மட்டும் பார்த்து விமர்சனம் செய்யுங்களேன்…….

  9. பராசக்தி படத்திற்கு வசனம் எழுதி புர்ச்சி (புரட்சி அல்ல புர்ச்சி தான்) பண்ணியவரின் குடும்பமே இன்று தொலைகாட்சி சேனல், FM ரேடியோ, சினிமா தயாரிப்பு என கொடி கட்டி பறக்கிறார்கள். இவர்கள் தொலைகாட்சி இவர்கள் கேபிள் ஐ பார்க்க இலவச தொலைகாட்சி பெட்டி. இலவசங்கள் கொடுத்து மக்களை நவீன பிச்சை காரர்கள் ஆக்கிய அண்ணா / கருணாநிதி பற்றி ஏன் எழுத மறுக்கிறிர்கள். இதுதான் பகுத்தறிவா?

    அவர்கள் தயாரிக்கும் தீ படத்தின் வசனங்கள் செம்ம காமெடி. spectrum ஊழல், நெஞ்சம் இனித்தது கண்கள் பணித்தது காமெடி காட்சிகள், இவற்றை பற்றி ஏன் வாயே திறப்பது இல்லை ஆட்டோ வரும் என்று பயமா?

    தமிழ் தமிழின தலைவர் என்று கூறிக்கொள்ளும் தலைவரின் மகள் படித்தது சர்ச் பார்க் ல். அவர்கள் குடும்பத்தின் குழந்தைகள் அனைவரும் படிப்பது எப்போதும் ஆங்கில வழி கல்வியில், லயோலா வில், அரசு பள்ளியிலோ அரசு கல்லூரியிலோ அல்ல.

    எங்கும் குடும்ப ஆதிக்கம்…………..

    ஆட்சியில் …….. மாறன், ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி,…………..
    தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன், பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன்…..
    கட்சியில் அழகிரி, கயல்விழி,…………………..

    இதையெல்லாம் ஏன் எழுத முடியவில்லை உங்களால்? சும்மா மணிரத்னம் பாலசந்தர் பாலா என்று ஏன் இயக்குனர்களையும் ரஜனிகாந்த் போன்றவர்களையும் விமர்சித்து கொண்டு இருக்கிறீர்கள். 1952 இல் வந்த பராசக்தி……..

    ஒன்றே ஒன்று தெளிவு அன்றும் பிச்சைகாரர்கள் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள் …….காங்கிரஸ், தி மு க, அ தி மு க ஒன்றும் கிழிக்க வில்லை……………..

    இதையெல்லாம் ஏன் எழுத முடியவில்லை உங்களால்?

  10. டக்ள்ஷ் அய்யா

    ”//அதாவது நீங்கள் கருணைக் கொலையை கூறுகின்றீர்கள். வலியில் துடித்த கன்றுக் குட்டியை கருணைக் கொலை
    செய்யச் சொன்னார் காந்தி .(சத்தியசோதனை நோலில் இருந்து…).தற்போது கூட மூளைச்சாவு அடைந்தவர்களை
    மருத்துவர்களின் உதவியோடு கருணைக் கொலை செய்து அவர்களின் உறுப்புகளை மற்றவ்ர்களுக்கு
    பொறுத்துகிறார்களே அது தவ்றூ என்கிறீர்களா ? திரு. பாமரன் அய்யா அவர்களே….////”

    எதை எதோடு ஒப்பிடுகிறிர்கள்….
    மூளைச்சாவு அடைந்தவர்களை
    மருத்துவர்களின் உதவியோடு கருணைக் கொலை செய்து அவர்களின் உறுப்புகளை மற்றவ்ர்களுக்கு
    பொறுத்துகிறார்களே அப்படியானால் தமிழக காங்கிரஸ் தலைவர்களை அப்படி செய்யலாமா ?
    நான் (பெரியார் பேரன்)
    பாலாவின் ரசிகன் என்ற முறையில்

    சிவா

  11. படம் பார்க்கலாம்னு இருந்தேன். உங்க விமர்சனத்த படிச்ச பிறகு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.நன்றி.

  12. பொதுவாக நமது மக்கள் மட்டும் சிறிது பெயர் வந்து விட்டாலே ந்வீன பிராமணர்கள் ஆகி விடுகிறார்கள். இளைய ராஜாவுக்கு நிகழ்ந்தது இன்று பாலாவுக்கு நிகழ்கின்றது. நாளை யாருக்கோ . வாழ்க நவீன பிராமண குலம். எல்லாம் பிரமை என்பதை புரியாத நம் போன்றவர்கள் வியாபாரம் தெரிந்த தோழர்களை விமர்சிக்காமலிருக்க எந்த அகோரியை அனுப்பப் போகிறார்களோ.

  13. பாண்டியன்..
    காசியில் வாழுற அகோரி சம்ஸ்கிர்ர்ர்ர்மோ..இந்தியோ..என்ன எழவையோ பேசட்டும்..என்ன மயிருக்கு தமிழ் படத்தில உளறணும்? என்பது தான் கேள்வி? அது சரி நீங்க”பாண்டியன்” தானே…

    படத்தை பற்றி..எழுதனுமா? படத்தின் பைனான்சியரை பற்றி எழுதனுமா? னு பாமரன் முடிவு பண்ணிகட்டும் நண்பரே.. ரஜினி மாதிரி முட்டாப்பயக பேச்சை கேட்டு தானேயா நாறி கிடக்கு பொழப்பு..

    தி.மு.க., அ.தி.மு.க,., என எல்லோரையும் தனது விமர்சனங்களால் நாரடித்தவர் எமது தோழர்..அதற்கு சமீபத்திய உதாரணம்..”வாழும் பகதவசலங்கள்”…

    உணர்வாரா பாண்டியன்?

  14. as per my knowledge chinema is just a entertainment. If we take that as a entertainment then everything is in normal or otherwise we only loss somthing……..just like time,money,energy,etc…

  15. பாமரன் அய்யா, உங்கள் விமர்சனம் பெரும்பாலும் சரியாக இருந்தது. பாலாவின் பிராமண நாட்டம் அவருடைய சேதுவில் சிறிது தெரியும். அவர் அதை உணர்ந்து செய்தார், செய்கிறார் என்று நான் நினைக்கவில்லை.

    நான் கடவுள் ஒரு எதிர்மறையான படம். கடவுளை நம்ப வைக்கும் படமல்ல. நாம் நம்பும் கடவுள் நமக்கு மரணத்தையே தீர்வாகத் தரும் போது அது வலிக்கும். அந்த வலி தான் குருட்டுப் பிச்சைக்காரியின் மரணத்தின் போதும் நமக்கு ஏற்படுகிறது.
    படத்தின் நீளம் 5 மணி நேரத்திலிருந்து 2.15 மணி நேரமாகக் குறைக்க நேரிட்டது என கேள்விப்பட்டேன். அதனால் படத்தின் நிஜமான போக்கு வெளிவராமல் போய்விட்டது. நடுவில் குருட்டுப்பிச்சைக்காரி ஒரு சரச்சின் பிண்ணணியில் பெண் பாதிரியார் ஒருவரிடம் உபதேசம் கேட்பது போன்ற காட்சி வரும். எல்லா கடவுள்களும் அவளை கைவிட்டுவிட்டனர் என்பதன் குறியீடே அது.

    அகோரிகள் சிவ பக்தர்களாக இருந்தபோதும் அவர்களை இந்துக்கள் என்று “ஆரிய இந்துக்கள்” ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அகோரிகளின் மது அருந்துதலும், பிணம் திண்ணுதலும் போன்ற பிற பழக்கங்களே காரணம். எவ்வாறாயினும் “ருத்ரன்” ஒரு பிராமண அடையாளமாக கண்டிப்பாக காட்டப்படவில்லை என்பது தெளிவு.

    மற்றபடி பாலாவின் சமூகத்தின் விளிம்பு நிலைகளை நெருங்கிப் பார்க்கும் எண்ணம் மட்டுமே படத்தில் பிரதானமாக உள்ளது என நினைக்கிறேன். அத்தோடு கொஞ்சம் ஹீரோயிசமும்.

  16. ஆக மொத்தத்தில் படம்னா அது சமுதாயத்தை சீர்திருத்தணும் நடக்கிறத அப்படியே காட்டினா அது சினிமா இல்ல அப்படித்தானே?

  17. எங்க பாலா படத்துல எல்லா பிச்சைகாரர்களையும் கொன்னுடார? இல்ல ஏதோ பிச்ச காரர்களை ஒழித்தால் எழ்மை இருக்காது என்று பாலா சொல்லவந்தது போல் உள்ளது உங்கள் விமர்சனம்!

    குணா என்ற ஒரு படம் வந்தது.. எல்லோரும் ரசித்த படம்.. அதில் கமல் தற்கொலை செய்து கொள்வதால், கமல் தற்கொலாவயை ஆதரிக்கிறார் என்று அர்த்தமா?

    பாலா சொன்னது போல், அவர் அகோரி என்ற கதாபாத்திரத்தை வைத்து பின்னிய கதை தான் இது!! மக்கள் அவரிடம் வித்யாசமான கதாபாத்திரங்களை எதிர் பார்கிறார்கள் என்பாதால் அவர் இப்படி Unusual Characters ஐ வைத்து கதை பின்னுகிறார்..

    சித்தர்கள் unusual Characters இல்லை.. சித்தர்கள் தாங்கள் சித்தர் என்றோ, சாமி என்றோ சொல்லி கொள்ளமாட்டார்கள்!! அகோரி அப்படி இல்லை!!

  18. தாங்கள் எழுதுவதை இன்று தான் படித்தேன். இனி படித்து நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை., என்பதை உணர்த்திவிட்டீர்கள்.

Leave a reply to rajanatarajan Cancel reply