“வாழும் பக்தவச்சலங்கள்”

muthukumar01

 உலகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். இப்பூவுலகை விட்டுப் புறப்படுவதற்கு முன் தான் பயணப்படுவதற்கான காரணங்களை மிகத் தெளிவாக அச்சிட்டு……. நிதானமாக ஒவ்வொருவர் கையிலும் அளித்துவிட்டு……. மூடியைத் திறந்து ஊற்றினால் பெட்ரோல் பரவலாகத் தன் உடலில் பரவாது என்று அதன் அடிப்பகுதியை அறுத்து தன்னை முழுதாகக் குளிப்பாட்டிக் கொண்டு பற்ற வைத்திருக்கிறான் தோழன் முத்துக்குமார்.

அந்தத் தோழனின் மரண சாசனத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரியும் இதயமுள்ள எவரையும் கண்ணீர் விட்டு அழ வைக்கும். உள்ளூர் அரசியலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி ஆராய்வதிலிருந்து……. சர்வதேச அரசியலின் ஆணிவேரையும் அடையாளம் காட்டியிருக்கிறது அவனது மரண சாசனம். இது இந்த நூற்றாண்டின் மக்களுக்கான இலக்கியமாக என்றென்றும் வீற்றிருக்கும்.

“வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை…….” எனத் தொடங்கும் அந்தத் தோழனின் மடல் தமிழக – இந்திய ஓட்டுப் பொறுக்கிகளின் யோக்யதை……. தமிழக மாணவர்களது போராட்ட உணர்வு……. காவல்துறையில் எஞ்சியிருக்கும் ஓரிரு நேர்மையாளர்களும் மக்களுக்காகப் அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியம்……. காலத்தின் கட்டாயமாகிப் போன ஈழத்தின் விடியல்……. என எண்ணற்ற திசைகளில் பயணிக்கிறது அக்காவியம். அத்தோடு நில்லாமல் முத்துக்குமார் தான் நேசிக்கும் சர்வதேச சமூகத்தை நோக்கி வீசியிருக்கும் வினா……. அறிவு நாணயமுள்ள எவரையும் சிந்திக்க வைக்கும் வினா.

அதை அத்தோழனது வரிகளிலேயே சொல்வதானால்……. ” வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன் படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?” முத்துக்குமாரின் வரிகளில் உள்ள சர்வதேச அரசியல் பார்வையையும்……. சர்வதேச சமூகத்தின் சகிக்கமுடியாத மெளனம் குறித்த கவலையையும்……. வாசிக்க வாசிக்கவே……. இத்துணை அற்புதமான தோழனை இழந்திருக்கிறோமே எனக் கண்ணீர் விட்டு அழுதேன். ஒருமுறை அல்ல. பலமுறை.

தான் வெறுமனே தமிழ் வெறியனல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஓருயிர் என்பதை உணர்த்தும் விதமாய்…….” படுகொலை செய்யப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர் லசந்தாவின் சாவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…….

தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதிகளாக வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்…….” என்கிற வரிகளை வாசிக்கும்போது விண்ணுக்கும் மேலாய் உயர்ந்து நிற்கிறான் அம்மானுடன்.

“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” என்கிற தம்பியின் வேண்டுகோளை ஏற்று……. போலீசை மட்டுமல்ல……. ஓட்டுப் பொறுக்கிகளையும் ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள்.

காங்கிரசின் கிளைக் கழகமாகிப் போன தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வுக்கு உதை…….

போயஸ் தோட்டத்தில் “போர்த்தந்திரம்” வகுக்கும் வை.கோவிடம் “ஜெ.கிட்டே இருந்து வெளீல வந்துட்டு ஈழத்தைப் பத்திப் பேசு” என்கிற எச்சரிக்கை…….

என ஓட்டுத் தலைவர்கள் எவரும் தப்பவில்லை இந்த இளைஞர்களிடம். காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் இந்தித் திணிப்பிற்கெதிரான மாணவர்களது மொழி உணர்வுகளை தங்களுக்காக அறுவடை செய்து கொண்ட தி.மு.க.வினருக்குத் தெரியாதா……. எதை எப்படிச் சமாளிப்பதென்று? அதுவும் அப்படியே செய்தது…….. கல்லூரிகள் அனைத்தையும் இழுத்து மூடி, மாணவர்களை வெளியேற்றியது. ஆனால் அதையும் உடைத்தெறிந்து இந்தக் கணம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது மாணவர்களது யுத்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பகதவச்சலம் மாணவர்களை ஒடுக்க எதை எதையெல்லாம் செய்தாரோ……. அவைகளை அச்சு பிசகாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் “வாழும் பக்தவச்சலமான” முத்தமிழறிஞர்.

இந்த லட்சணத்தில் இருக்கின்ற அமைப்புகள் போதாதென்று “இலங்கை தமிழர் நல உரிமை பேரவை” என்று இன்னொரு புது அமைப்பு வேறு. பெரியாருக்கு ஆப்படிக்கும்போது “தலைவர்” பதவியைக் காலியாக விட்ட மாதிரி…….

இந்த அமைப்புக்கும் இப்போது “தலைவர்” கிடையாதாம்…….

அதன் துணைக் குழுவுக்கு அமைப்பாளராக துரைமுருகனாம்…….

செயலாளர்களில் ஒருவராக இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழாயான கி.வீரமணியாம்…….

இப்படி நகர்கிறது இவர்களது நகைச்சுவை நாடகம். இதற்கு பதிலாக…….

தலைவராக “வழக்கம்போல்” கலைஞரும்…….

பொதுச் செயலாளராக ராஜபக்சேவும்…….

பொருளாளராக சோனியாவும்…….

செயலராக ஜெயலலிதாவையும்…….

துணைச் செயலாளராக சுப்ரமண்யன்சாமியையும்…….

சேர்த்துப் போட்டிருக்கலாம்.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.

கொஞ்ச காலம் முன்பு வட மாநிலத் தொலைக்காட்சி ஒன்று “கருணாநிதி” என்பதற்குப் பதிலாக “கருணா” என்று அழைத்ததைக் கண்டு கடும்கோபமும்……. எரிச்சலும் கொண்டேன்.

ஆனால்…….

நடந்து வரும் நாடகங்களயும்…….

நயவஞ்சகங்களையும்……. பார்க்கும்போது…….

ஈழத்துக் “கருணா”விடம் இருந்து மட்டுமில்லை…….

இந்தியக் “கருணா”க்களிடம் இருந்தும்

ஈழப்பிரச்சனையை மீட்டால்தான்

தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட

தம்பி முத்துக்குமாரின் கனவு நனவாகும்

என்பது மட்டும் உறுதி.

17 thoughts on ““வாழும் பக்தவச்சலங்கள்”

 1. meendum our enaurimai porai thodangi ullar thozhar muthukumar. saakinray thamizha saakinraye unnai saka seythaarai saaka seyeeyaamal saakinrai -paaventher.

 2. தோழா …..ஈழத்து சிக்கலின் அடிப்படையை வைத்து ஒரு கவிதை,முத்துக்குமாருக்கு வீர வணக்கம்……..

  எங்கள் காடு
  விசித்திரமானது …
  எப்போதோ தோகை
  வெட்டப்பட்ட மயிலுக்காய்…
  மறக்காத பெண் மயில்

  பக்கத்து காட்டில்
  புலிக்கும் சிஙகத்துக்கும்
  சண்டையாம்…
  சிங்கத்துக்காய் முக்கை நிட்டும்
  மயில் குள்ளநரிகளுடன் …
  சிங்கம் காட்டுக்கு ராசாவாம்…

  புரிவதெயில்லை அறிவியல் உண்மை
  சிங்கம் சிங்கிளா வராது
  புலிதான் சிங்கிளா வரும்…

  புரியவைக்கனும்
  மயில்களுக்கும்…
  மயிரான்டிகளுக்கும்…

  மயிரான்டிகள் ஓட்டு பொறுக்க வரும் போது…ரொம்ப மரியாதையாக நடக்கனும்

 3. அருமையான கட்டுரை!
  சவுக்கடி கேள்விகள்!
  தோழர் முத்துகுமாரை நடந்து முடிந்த ஒரு விபத்தை போல் மூடி மறைக்க நினைகிறது ஆளும் அரசு!

  வரும் தேர்தலில் ஈழ மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கும் கட்சிக்கே எனது வாக்கு என முடிவு செய்துவிட்டேன்.

 4. எனக்குத் தெரிந்து “கருணா” என்ற பெயரில் இருக்கும் ஒரு நல்ல மாந்தன் நான் தான.

 5. இனிமேல் தமிழில் கருணா என்றால் துரோகியை குறிக்கும் சொல்லாகப்போகிறது..

  உங்கள் பகிர்விற்கு நன்றி தோழா..

  வேதனையுடன்

  முகமது பாருக்

 6. அண்ணாச்சி … இன்னைக்கி தங்கபாலு திமுக கூட பேச்சு நடத்தராங்களாம். வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, வசத் அன் கோ கோஷ்டி, ஆசாத் கோஷ்டின்னு மொத்தமா தமிழ் நாட்டுல மட்டும் 154 சீட்டு கேட்டாங்களாம். கிட்ட தட்ட ஓ.கே ஆயிடுமா…

  எல்லா தொகுதியிலயும் காங்கிரஸ் கூட்டணி ஆமோக வெற்றி பெரும்னு தங்க பாலுவே சொல்லிட்டார்.

  இதுக்க நடுவுல.. வாசனுடைய செருப்பு கிழிஞ்சிடுச்சாம்.. அத தைக்கலாமா? வேணாமான்னு சோனியாகிட்ட கேக்க டெல்லிக்கு போயிருக்காராம். வந்த உடனே தேர்தல் பிரச்சாரம் ஆரம் ‘பிச்சிடுவாங்களாம்’

  – சென்னைத்தமிழன்

 7. ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ

  சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். தமிழக அட்டைக்கத்தி அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கைகள் விட்டு ஈழத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனது உயிரை அழித்து தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறான் ஒரு போராளி. இறுதி வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை, பதவியைத் துறப்போம் என தமிழக ஆளும்கட்சி நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தனது உடலை தீக்கிரைக்காக்கி இந்தியாவின் துரோகத்தை எதிர்த்திருக்கிறான் ஒரு தமிழன். ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென அகமகிழும் பார்ப்பனப் பத்திரிகையுலகின் கொழப்பைத் தனது இன்னுயிரைத் தந்து அம்பலமாக்கியிருக்கிறான் ஒரு பத்திரிகையின் தொழிலாளி. அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

  முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும். முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.

  ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

  நன்றி : வினவு, வினை செய்(http://vinavu.wordpress.com/2009/01/29/eelam13/)

 8. அன்பு பாமரன் அவர்களுக்கு
  என்னுடைய முந்தைய பின்னூட்டம் தங்கள் மனத்தைப் புண்படுத்தி இருக்குமானால் அதற்காக வருந்துகிறேன்

  இன்றைய காலகட்டதில் சராசரித்தமிழன் குழம்பிக்கிடக்கிறான்.அவனை சுற்றி ஒருபுறம் தமிழ் இன துரோகிகளும் மறுபுறம் தமிழ் இன விரோதிகளும் மலிந்து கிடக்கின்றனர்.ஊடகங்களும் தங்கள் பங்குக்கு மேலும் குழப்புகின்றன.இந்த தேர்தல் ஈழ மக்களுக்கு பயனளிக்கும் நல்ல துருப்பு சீட்டாக மாற வாய்ப்பு உள்ளது.ஆனால் யாரை ஆதரிப்பது? யார் வெற்றி பெற்றாலும் மக்களையும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு 5 வருடங்களுக்கு சம்பாதிப்பதை மட்டும் பார்க்க போகின்றனர்.
  இந்த சூழலில் தங்களை போன்ற சமூக சிந்தனையாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.எனவே இப்பொழுதெ,தேர்தலுக்கு முன்பே எதாவது ஒரு அணியிடம் மிக உறுதியான உறுதிமொழி பெற்று ,இன உணர்வாளர்கள் அனைவரும் அவ்வணியயை ஆதரிப்பது மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும்கூட.இது எவ்விதம் சாத்தியம் என தெரியவில்லை.ஆனாலும் இது நடக்க வேண்டும்.

 9. திரு.பாமரன் அவர்களுக்கு,
  தமிழகத்தில் வர போகும் தேர்தலுக்காக ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தினம் ஒரு நாடகத்தை அரங்கேற்றி கொண்டு இருக்கையில் எங்கே நீங்களும் ஈழத்தை மறந்து விட்டீர்களோ என்று மிகவும் ஆதங்கப்பட்டேன்.ஆனால் இப்பதிவின்மூலம் இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான சாட்டையடி கொடுத்து எங்கள் மனப்புண்ணுக்கு மருந்து போட்டுள்ளீர்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள்.

 10. கருணாநிதி குடும்ப சண்டையே சந்தி சிரிக்குது.. இவர் எங்க ஈழ பிரச்சனையை தீர்க்க போறார்.. காங்கிரஸ்காரர்கள் சோனியாவின் காலடி நாய்கள்.. தங்கபாலு மயிர புடுங்க தான் லாயக்கு.. ஆனா அவருக்கு அவருக்கு அது கூட இல்லை..

 11. தோழர். அருமையான பதிவு. நினைக்க நினைக்க நெஞ்சு வலிக்கிறது. இதற்கான பதிலை தேர்தல் சொல்லுமா… தியாகி முத்துக்குமாரின் தியாகம் மக்களை எந்த அளவிற்கு அறிவுடையவர்களாய் ஆக்கியிருக்கும். கேள்விகளை மட்டும் தான் உள்ளம் தாங்கி இருக்கிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

 12. தோழர் பாமரன்,
  பட்டுக்கோட்டையார் சொன்னது போல் “அழுது என்ன, புலம்பி என்ன ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா”. ஒரு இளம் தோழர் தன் உயிரை ஈந்தும் கூட அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. ஒட்டுக்கள் மூலமாக நம் எதிர்ப்பை பதிவு செய்தாலும் கூட இந்த மதி கெட்ட அரசியல்வாதிகளுக்கு உரைக்குமா என்று தெரியவில்லை. ஈழத்தில் நடக்கும் யுத்தத்தில் எதோ ஒரு தரப்பினர் முழுவதுமாய் செத்து ஒழிந்தால்தான் தீர்வு கிடைக்குமோ என்னவோ ?
  செந்தில் குமரன்

 13. எனது அப்பாவின் கொலைக்கு எதிரான நடவடிக்கை தற்போதும் இலங்கையில் தொடர்கிறது என்று ராகுல்காந்தி இன்று சொன்ன கருத்து, வெளிப்படையாக பல உண்மைகளைப் போட்டுடைத்துள்ளது.

 14. பதிவிற்கு கால தாமதமாக வந்து தமிழக தேர்தல் அரசியல் நிகழ்வுகளை நினைத்து வலிகளுடன் மவுனத்துடன் திரும்பப் போகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s