வணக்கத்துடன் பாமரன்.

அன்பிற்குரிய “தமிழக அரசியல்” வார இதழின் ஆசிரியர் அவர்களுக்கு,

 

 

வணக்கத்துடன் பாமரன்.

 

தமிழகமும், தமிழக அரசியலும் நெஞ்சை விட்டு நீங்காமல்தான் இருக்கின்றன. கட்டுரை எழுத வேண்டும் என்கிற நினைவு இருந்தாலும் இங்கிலாந்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலுள்ள நேர மாற்றம் சட்டென்று நினைவுக்கு வராததால் இம்முறை எழுதுவது இயலாததாகி விட்டது. (தமிழகத்தில் இருந்தாலே சரியான நேரத்தை நாம் தொலைபேசியில் நினைவூட்டினால்தான் உண்டு. இந்த லட்சணத்தில் அயல் நாட்டிற்குப் போயா நீ நேரத்தைக் கடைபிடிக்கப் போகிறாய்? என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.)

 

எங்கெங்கு காணினும் நம் தமிழர் கூட்டம். வேற்று மண்ணாகவே தெரியவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் பெருத்த சோகங்களைச் சுமந்தபடி திரிகிறார்கள். நேற்று ஒரு இளைஞனை உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். “அம்மா வன்னீல இறந்துட்டாங்க. இப்பதான் தகவல் வந்துச்சு.” என்றார்.

 

தாய் “பயணப்பட்ட” தகவல் தெரிந்ததும் உடனே பஸ் பிடித்து ஊர் போய்ச் சேர இதென்ன நம்நாடா? இங்கு தட்டு கழுவியோ…. பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டோ உயிர் பிழைத்துக் கொண்டு உலவும் கூட்டத்துக்கு அம்மா இறந்தாலும் சரி…. அப்பா இறந்தாலும் சரி…. ஊர் போக காசும்…. அப்படியே போய் சேர்ந்தாலும் போனவர் உயிரோடு திரும்பி வருவதற்கான உத்திரவாதத்தையும் யார் தரப் போகிறார்கள்?

 

லண்டனில் இங்கு எங்கு அப்பமும் தயிர் வடையும் கிடைக்கும்? என பயணக்கட்டுரை எழுதுவதற்கு இது இன்பச் சுற்றுலா அல்ல. இது சோகங்களை மட்டுமே சுமந்து வந்திருக்கும் நமது சொந்தங்களைக் கண்டு துக்கம் விசாரிப்பதற்கான பயணம். பச்சையாகச் சொன்னால் நான் இழவு வீட்டிற்கு வந்திருக்கிறேன்.

 

இங்கு எண்ணற்ற சந்திப்புகளும்….

ஒரு தொலைக் காட்சிக்கான நேர்காணலும்….

எனக்கென காத்துக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

 

நமது வாசகர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பைச் சொல்லுங்கள்.

 

 

 

தோழமையுடன்,

பாமரன்.

 

 

 

10 thoughts on “வணக்கத்துடன் பாமரன்.

 1. தொப்புள்கொடி உறவுகளுக்கு எங்கள் உணர்வுகளை தெரியப்படுத்துங்கள் தோழா..

  தோழமையுடன்..
  ஓசை செல்லா

 2. ஓ…. லண்டனுக்கு போயாச்சா???

  /*
  பச்சையாகச் சொன்னால் நான் இழவு வீட்டிற்கு வந்திருக்கிறேன்.
  */

  :((

 3. வணக்கம் பாமரன்
  தங்களின் ஐரோப்பிய வரவு நல்வரவாகட்டும். பிரான்சிற்கு வரமுடியுமா? தங்களை நேரில் சந்தக்க அவா?
  நன்றி
  முகிலன்

 4. படையென வந்த தமிழர் கூட்டத்தில்
  இடையில் சந்திக்க முடியாவிட்டாலும்
  வடைக்கடையில் சந்தித்து
  விடைபெற்றது மகிழ்ச்சி….

  ஆகா.. கவிதை… கவிதை..

 5. திரு பமரன் ஆவ்ர்கலெ ,
  ஒருனால் முதல்வர் ஆனல் என்னா செவ்விர்கல் ஒரு கர்பனை

 6. இந்திய அரசியல் ஆட்டு மந்தைகளால் ஒன்றும் பயனில்லை என்பதை லேட்டானாலும் புரிந்து கொண்டீர்களே சந்தோசம்!

  இலவசங்கள் வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மக்கள் ஈழம் எந்த பக்கம் என்று கேட்கிறார்களாம்.

 7. திரு. நாராயன் அவர்களே..

  பாமரன் ஒரு நாள் முதல்வர் ஆனால் முதலில் உங்களுக்கு தமிழில் பிழையில்லாமல் டைப் அடிக்க கற்றுக்கொடுப்பார்..(சும்மா கிண்டலுகாக நண்பரே..)
  -குப்பன்

 8. ஈழப்பணியாற்றீ தாயகம் திரும்பிய பாமரனுக்கு வணக்கம்!

  தங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி!

  தாங்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் ஆசிரிய‌ருக்கு எழுதிய‌
  க‌டித‌ம் படித்தேன்.

  தாயின் இறப்பு ‍‍‍‍‍‍_ மகனின் குமுறல்….

  நாமெல்லாம் ….

  என்ன‌ சொல்ல‌?

  நா த‌ழு த‌ழுக்கிறது…

  நிச்சயம் ஈழப்பூ மல‌ரும்….

 9. சோகங்களை மட்டுமே சுமந்து வந்திருக்கும் நமது சொந்தங்களைக் கண்டு துக்கம் விசாரிப்பதற்கான பயணம். பச்சையாகச் சொன்னால் நான் இழவு வீட்டிற்கு வந்திருக்கிறேன் எனும் வாசகங்கள். படித்துவிட்டு வேதனைப் பட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s