புத்தரும் சேர்த்துக் கொல்லப்பட்டார்…


தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை

கட்டுரை அனுப்பியாக வேண்டுமே என்கிற அவசரம்…
.
அடுத்த இதழில் கண்டிப்பாக எழுதுவேன்
என்று தந்திருந்த உறுதிமொழி………
.
மாலை ஆறு மணிக்குள் அனுப்பி விட்டால்
அச்சேற்றி விடுவார்கள் என்கிற பரபரப்பு…
.
சாலையின் ஒருபுறத்திலிருந்து
மறுபுறத்திற்கு  செல்ல
எனது இரு சக்கர வாகனத்தினை திருப்புகிறேன்.
.
கை காட்டாமல்………
.
ஆனால் பின்னால் வரும் அந்த மனிதனுக்குத் தெரியுமா…
இப்படி ஒரு கேணையன் முன்னால்
சென்று கொண்டிருக்கிறான் என்று?

தினத்தந்தி பாணியில் சொல்வதானால்
அடுத்த நொடியே “டமார்” என்றொரு சத்தம்.

அவ்வளவுதான் தெரியும்.

சாலையின் மத்தியில் விழுவதும்……
மக்கள் கூடுவதும்……
யாரோ இருவர் கை பிடித்து எழுப்பி விடுவதும்……
என ஏதேதோ என்னெதிரே நடந்து கொண்டிருக்கிறது.

சில நிமிடங்களிலேயே நண்பர்கள் வந்து சேர……
அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனை.

எக்ஸ்ரே……… ஸ்கேனிங்……… என நகர்கிறது நேரம். 

நண்பரும் மருத்துவருமான மகேந்திரன்
காலுடைந்ததை உறுதி செய்கிறார்.
மறுநாள் அறுவை சிகிச்சை..

நன்றாக கவனித்துக் கொள்ளச் சொல்லி
ஆபரேஷன் அறையில் உள்ள மருத்துவருக்கே
அலைபேசி வருகிறது இயக்குநர் மணிவண்ணன்
அவர்களிடமிருந்து.

மாற்றி மாற்றி மருத்துவர்கள் வந்து கவனித்துக் கொள்கிறார்கள்.

”முதுகுத் தண்டில் மயக்க ஊசி போட்டிருப்பதால்
எழுந்து உட்காராதீர்கள்………
மயக்கம் வந்துவிடும்………”

”சாய்ந்து படுங்கள்”

“இன்சூரன்சுக்கு சொல்லியாச்சு வந்துரும்”

”வலி சுத்தமா இருக்காது அதற்கான மருந்து குடுத்திருக்கு”

சுற்றிலும் புடை சூழ
நண்பர்கள்………
செவிலியர்கள்………
மருத்துவர்கள்………

ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கிறேன்.

அய்யோ என் மக்களே………

உங்களுக்கு யார் இருக்கிறார்கள்?
மருத்துவமனை உண்டா?
உண்டென்றாலும் அங்கு குண்டு விழாது
என்கிற உத்திரவாதம் உண்டா?

தொடையோடு துண்டாகிப் போன கால்களோடு…
தோளோடு பிய்த்தெறியப்பட்ட கைகளோடு……
மரண வேதனையில் தவிக்கும் உங்களுக்கு
ஒரு வலி நிவாரணி உண்டா?
அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உண்டா?
என்னைப் போல சோற்றால் அடித்த
பிண்டங்களுக்குக் கூட இருக்கிற இன்சூரன்சு உண்டா?

படுக்கையில் சரிந்தபடி அழுகிறேன்.

எங்கள் மக்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

ஏன் எங்கள் மக்களுக்கு மட்டும் இப்படி?

எனது அவலக்குரலும் சிங்கள அரசுக்குக்
கேட்டிருக்குமோ என்னவோ………
அடுத்த சில தினங்களிலேயே மக்கள்
இப்படி மருத்துவமனைகள்……
மயக்க மருந்துகள்……
வலி நிவாரணிகள் இல்லாது துயரப்படுகிறார்களே
என்கிற ”மனிதாபிமானம்” மேலிட……
கொத்துக் கொத்தாய் குண்டுகளை வீசி…
அம்மக்களுக்கு வலியிலிருந்தும்…
வாழ்விலிருந்தும் ”விடுதலை” அளிக்கிறது சிங்கள அரசு.

வன்னிக்காடுகளிலும்…
ஈழத்தின் முள்ளிவாய்க்காலிலும்
கொல்லப்பட்டது பல்லாயிரம் தமிழ் மக்கள் மட்டுமில்லை.

புத்தரும் சேர்த்துத்தான்.


( மே – 2009)

15 thoughts on “புத்தரும் சேர்த்துக் கொல்லப்பட்டார்…

 1. //மத்திய அரசு பச்சையாகச் சொல்ல வரும் விசயம் இதுதான்: ஆமாம். அப்படித்தான் செய்வோம்.உங்களால் என்ன புடுங்க முடியும்? மீறி மீறிப் போனால் ஒரு ஆர்ப்பாட்டம்……… ஒரு உண்ணாவிரதம்……… ஒரு நாள் கடையடைப்பு……… அவ்வளவுதானே. உங்களால் முடிந்ததைப் பாருங்கள். என்பதுதான்.//

  இது தான் என்னோட கருத்தும். உங்களால் என்ன செய்ய முடியும், எங்களால் உங்களுடைய ஓட்டை “வாங்க முடியும்”.
  பதிவை படிக்கும் போதே கண்கள் கலங்குகின்றன.
  புத்தர் அங்கே கொல்லப்பட்டார், காந்தி இங்கு கொல்லப்பட்டார் !!!
  வாழ்க இந்தியா வாழ்க தமிழன் !!!

 2. //இந்த ஈனச் செயலில் இறங்குவதற்கு முன்னர் இந்திய மக்களின் ஒப்புதலைப் பெற்றார்களா? அல்லது பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதித்து ஒப்புதல் பெற்று வாக்களித்தார்களா?//

  அதிகாரமையத்தை இங்கே கேள்வியே கேட்கமுடிவதில்லையே!

  பாரதிராஜா ஒரு புகழ் பெற்ற இயக்குனர், அவருக்கு நடந்த கொடுமையை பார்த்தீர்களா!

  தயவுசெய்து இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு எங்கேயும் சொல்லாதிங்க!

 3. வயிறு எரிகிறது.நெஞ்சம் துடிக்கிறது. என்ன செய்ய ஏது செய்ய ஒன்றும் புரியவில்லை. இந்தியாவுக்கு வரலாறு பாடம் புகட்டும். நல்ல தலைவன் கிடைத்தால் தமிழக மக்களும் கிளர்ந்து எழுவார்கள்.அதில் ஐயமில்லை. இதையும் வரலாறு செய்யும். ஈழ மக்களுக்கு நல்ல வாழ்க்கையும், விடுதலையும் விரைவில் கிடைக்கட்டும்.
  பாமரன் நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

 4. எனக்கு வந்த தகவல் படி. ராஜபக்சேயின் கோவணத்துணி தனிவிமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பபட்டிருக்கிறது. இந்திய அரசு அதை துவைத்து அனுப்ப தயாராகி கொண்டு இருக்கிறது. ,செவிடன் காதுல ஊதுன சங்கு…….

 5. இதோ இன்றும் கூட ஐ.நா வில் சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளனர்.

  http://www.puthinam.com/full.php?2b24OOy4b33q6Dhe4d45Vo6ca0bc4AO24d3SSmA2e0dC0MtHce03f1eW0cc3mcYAde

  ஆனால், இன்று இலங்கையின் அதிகாரபூர்வ இராணுவதளத்தில்,

  to Mr. Krishna “Who are you to tell us, a sovereign nation how to run our country? You just mind your own business or wind up like that woman Navi Pillai. The choice is yours.

  http://www.defence.lk/new.asp?fname=20090601_07

  என அருமையாக மூக்குடைபட்டுள்ளனர் இந்த தேசிய வியாதிகள்…

 6. நம்மால் இப்போது முடிந்தது இன்றைய ஊர்வலத்தில் (மன்றோ சிலை, மாலை 3.30மணி) கலந்துகொள்வது. நான் எப்போதோ வெறும் தமிழனாகிவிட்டேன். மற்ற இந்திய தமிழர்களையும் தமிழனாக்க, மனிதனாக்க முயற்சிப்போம். இளைய தலைமுறையினிடத்து மனிதத்தையும், இனபற்றையும் வளர்க்க முற்படுவோம். இதன் வழியாக இந்திய, தமிழக அரசுகளை பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகாவது மனிதநேயமுள்ள, பொறுப்பான அரசுகளாக்கலாம்.

  பாமரன், நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

  -பா.இரா.

 7. என்னத்த சொல்ரது???! கவர வாங்கிட்டு ஓட்டு போடுர மக்கள் இருக்கும் வரை இந்திய அரசு எதை வேண்டுமானாலும் நம் முகத்தில்பூசும். இந்தியன்னு சொல்ரதுக்கு அசிங்கப்படுகிறேன். இதில் கியூபாவும் சேர்ந்து கொண்டது வருத்தமாக உள்ளது..!

  தாங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள்…

 8. முடியல சார்… வேதனை தாங்க முடியல… இந்திய அரசின் அயோக்ய தனமும் “தமிழ் தலைவரின் ……தனமும்” முடியலங்க… இவங்க குடும்பத்துக்கு பதவி வேணும்னா தமிழ் நாட்டு தமிழர்களை கூட கொல்ல தயங்க மாட்டார்கள் நம் “தமிழின தலைவர்கள்” ஆனால் ஒன்று உறுதி இப்பொது சீனாவுடைய செல்லப்பிள்ளையாக மாறிவிட்டது இலங்கை… இனி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூன்டால் சீனா முதலில் இலங்கையில் தன் ராணுவ மையத்தை நிறுவி அங்கிருந்துதான் அடிக்கும் பாதிப்பு நிச்சயம் தமிழ்
  னாட்டுக்குதான்… சீக்கியர்கள் கலவரம் என்றால் உடனே ஓடுகிறார்கள்.. ஆஸ்திரேலியாவில் வட நாட்டு மாணவன் தாக்கப்பட்டால் உடனே பதறுகிறார்கள்…தமிழ்னுக்கு குரல் கொடுக்கதான் வக்கில்லை..இந்த நிலையிலும் எனக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால்… ராசாத்தி அம்மாளுக்கும், தயாளு அம்மாளுக்கும் கேபினட் மினிஸ்டர் போஸ்ட் கேக்கலைங்கறதுதான்… அய்யா பாமரன் அவர்களே தயவு செய்து உங்கள் உடலை கவனியுங்க… உங்க பேனாவை வைத்து நீங்கள் போராட வேண்டியது நிறைய உள்ளது.. உங்களை போல் சிலரும் இல்லையென்றால்.. குரல் கொடுக்க கூட நாதியற்றவனாகி விடுவான் தமிழன்… நிறைய எழுதுங்கள்… நீங்கள் பூரண குணமடைய வாழ்த்துகள்…

 9. நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இலங்கைக்கு வக்காலத்து வாங்கும் இந்தியா, என்னத்தை புடுங்கப் போகிறதோ தெரியவில்லை.

 10. ராஜபக்ஷே இந்திய பார்லிமென்டில் நிச்சயதார்த்தம் நடத்தினாலும்
  நடத்துவார். பொருத்தமானவர் உச்சநிலைப் பெண்ணா?
  சேச்சே! இப்படியேல்லாம் கேவலமாப் பேசாதிங்கப்பா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s