சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….

  

ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.

 

கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.

 

ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து கொள்கிறதாம்.

 

அடப் பாவிகளா…. ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ”இனவெறி” என்று கூச்சல் போட்டால்..…. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட..…. மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்….  என்று எந்த இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?

 

ஆஸ்திரேலிய சாராயக்கடையில் குடித்துவிட்டு அலப்பரை செய்தபோது விழுந்திருக்கிறது முதல் உதை.

அதற்கே குய்யோ…. முறையோ என்று கூப்பாடுகள்….

பிரதமரின் எச்சரிக்கை….

உள்துறை, வெளியுறவுத் துறையின் அலறல்கள்….

தூதுவர்களின் கண்டனம்….

வட இந்திய தொலைக்காட்சிகளின் ஓலங்கள்…. 

 

இவற்றையெல்லாம் பார்த்தும் கொஞ்சம் கூட இரக்கம் வரவில்லை. மனம் இறுகிப் போயிருந்தது.

 

இதற்காக வேதனைப்படவுமில்லை.

கண்ணீர் வடிக்கவுமில்லை என்பதுதான் உண்மை.

 

காரணம்: எதை விதைக்கிறார்களோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

 

பத்துப் பதினைந்து நாட்கள்கூட ஆகவில்லை…. எம் இனத்தின் தளிர்களும்…. இளம் குருத்துக்களும் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது. ஒருவரும் வரவில்லை.

 

வாயைத் திறக்கவில்லை பிரதமர்.

வாயைத் திறக்கவில்லை தூதரகங்கள்.

வாயைத் திறக்கவில்லை உள்…. வெளி அமைச்சகங்கள்.

 

தமிழகத்தின் சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.

 

குடும்பம் குடும்பமாய் கூடி அழுதோமே நாம்.

 

தமிழகத்தின் தெருக்கள்தோறும் சந்தித்துக் கொண்டவர்கள் “என்னவாச்சு பிரபாகரனுக்கு? ”

“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின் கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.

 

’கதியற்றோருக்கு கடவுளே துணை’ என நம்பியவர்கள் கோயில்களில் குமுறித் தீர்த்தனர்….

மசூதிகளில் மனம் வெதும்பி மண்டியிட்டனர்….

ஆலயங்களில் அழுது புலம்பினர்….

 

மனிதரை நம்பியவர்களோ…. யுத்தத்தையே நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.

 

எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.

 

வாயும் வயிறும் எரிகிறது.

 

குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.

அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும் தமிழன்.

ஆனால்…. ஆஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.

 

எமது கண்ணீரைக் கூட கேலி செய்தது வடக்கத்திய மீடியாக்கள்.

தமிழர்களும் அவர்களது நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோது  பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி.

 

நாம் அழுது கொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால் நாம் அப்படியா இருந்தோம்?

 

குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம். கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.

 ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும்…. வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும் கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.

 கார்கிலில் போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.

 

அன்று அவர்கள் அழுதபோது நாமும் அழுதோம்.

ஆனால் இன்று நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,

என்ன கொடுமை இது?

 ஆனால் இந்தப் பாராபட்சம் இன்று மட்டுமில்லை. என்றும்தான்.

 வளைகுடாப் போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக் கிருஷ்ணன்.

 

பிஜித் தீவில் குஜராத்திகளுக்கு பிரச்சனை என்றபோது குமுறி எழுந்தது இந்திய அரசு.

 ஆஸ்திரியாவில் இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக பஞ்சாப்பே பற்றி எரிந்தது.

 அடுத்த கணமே ”காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என  தானாடா விட்டாலும் தன் தசை ஆடியது இந்தியப் பிரதமருக்கு

 

இவற்றையெல்லாம் பார்க்கும்போது

எனக்குள் எழும் கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:

எங்களைப்பற்றி இந்தியா கவலைப்படாத போது

எதற்காக நாங்கள் இந்தியாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?

 

அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி..

அது ”மாமா” நேரு காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை” இந்திரா காலமாக  இருந்தாலும் சரி…..

அது “அன்னை”யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி…..

அது ”அன்னை”யின் மருமகள் காலமாக இருந்தாலும் சரி…..

அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி..

 

 ஆக

தமிழனென்று சொல்லுவோம்.

தலை நிமிர்ந்து செல்லுவோம்.

தமிழர்களது தலையை மற்றவர்கள் விட்டுவைக்கும்பட்சத்தில்.

 

(நன்றி : தமிழக அரசியல் வார இதழ்)

22 thoughts on “சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….

 1. உதை வாங்கியது இந்தியந்தானே?
  வாங்கட்டும்…..

 2. பாமரன் கொஞ்சம் பகுத்தற்வுடன் பேசுவோம், நிச்சயம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு இந்தியா பூர்விகம் என்பதை காட்டிகொள்கிறார்கள். உதை வாங்கியவர்கள் இன்னும் இந்திய குடிமகன்கள்தான். (பின்னொரு காலத்தில் ஆஸ்திரேலிய குடிமகனாகலாம்!) மலையாளிகள் தங்களுக்குள்ளான இன உணர்விலும் சளைத்தவர்கள் அல்ல.. துபாயில் இருந்தாலும் மலையாளிக்கு கேரளாவுடனான உறவு தொடர்கிறது…கல்பனா சாவ்லா அமெரிக்க குடிமகள் ஆனால் தான் படித்த ஹரியான கல்லூரி மாணவர்களுடன் மின் அஞ்சல் மூலம் தொடர்பில் இருக்கிறார்.. மலேசியாவில் உள்ள மந்திரி டத்தோ சாமிவேல் தமிழ் நாட்டிற்கு வந்து கலைஞரையோ , ஜெ.வையோ ஆட்சியில் அவ்வப்போதிருப்பவரிடம் கும்மிடு போட்டுவிட்டு போகிறார்.

  ஈழத்தை பொறுத்த வரை நாம்தான் அவர்களுக்காக கதறுகிறோம், வரலாற்றில் அவர்கள் நமக்காக ஆறுதல் சொன்னதில்லை (அவர்களே சாகிறார்கள் என்று சப்பை கட்டாதீர்கள்). அரசியல் ரீதியில் போர், உதவி வேண்டும் என்கிற தருணங்களில் மாத்திரம்தான் அவர்கள் தொப்புள் கொடி உறவே என்கிறார்கள்.. இது வரை எம்ஜி ஆர் இறந்ததற்கும், முத்துகுமார் மரணத்திற்கும் ஒரு இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்கள், மற்றபடி அவர்கள் தங்களை தமிழ்நாட்டிடமிருந்து அன்னியபடுத்திக் கொண்டுள்ளனர்..

  1991 துன்பியல் சம்பவத்திற்க்கு பிறகு, தமிழ்நாட்டில் நடந்த எந்த நல்ல விஷயத்திற்கும் ஒரு தமிழினத்தை சேர்ந்தவர்களாக நம்முடன் கலந்து கொண்டதில்லை.. உலகின் மிக மெரிய ஜனநாய நாட்டிற்கு ஜனாதிபதியாக தமிழன்(ர்கள்) ஆனபோது முறையாக ஈழ தமிழர்கள் ஒரு வாழ்த்தாவது அல்லது ஒரு அறிக்கையாவது விடுத்திருக்க வேண்டும்…. நலமாக இருக்கும் போது கண்டுக்கொள்ளாமலும் அவதிபடும் போது தொப்புள் கொடி என்று சொல்லுவதும் பேத்தல்…

  இங்கு இனம் என்று சொல்லி யாரையும் பிரிக்கவோ வெறுக்கவோ வேண்டிய அவசியமில்லை அப்படி யாரவது தமிழர்களை வெறுத்தால் அது அவர்கள் பிரச்சனை, தாக்கினால் தற்காத்துக் கொள்வது மனிதனின் இயல்பு. இது உலகில் ஆண்டாண்டு காலமாக நடப்பது தான்..

  ஈழத்தில் மக்கள் துன்பப் படுகிறார்கள். வெறுத்தாலும் அரசிடம் முறையாக போராட்டங்கள் நடத்தியோ, மக்களை திரட்ட மக்களின் கவனயீர்ப்பை கொண்டு , தேவைபட்டல் நீதி மன்றம் ஏறியோ உதவி செய்யவேண்டும்.. இதையெல்லாம் செய்வதற்குள் அங்கிருப்பவர்கள் இறந்துவிடுவார்கள் என்று வாதத்தை முன் வைத்தாலும் , இணையத்திலோ, கூட்டம் போட்டோ, காங்கிரசையும் கலைஞரையும் திட்டிக்கொண்டிருந்தாலும் ,மற்ற இனத்தை சபித்து கவிதை பாடிக்கொண்டிருந்தாலும் கூட அங்கே செத்துக்கொண்டுதான் இருப்பார்கள்..

  நான் இவ்வளவு பேச காரணம் உங்களால் இந்த விஷயத்திற்கு சிறு அளவாவது உதவ முடியும் அதை செய்ய வேண்டும், மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்..செய்கிறீர்கள் தொடருங்கள்..

  மலையாளியையோ,மற்ற இனத்தையோ கேலி செய்யாதீர்கள். அவர்களுக்குள் இருக்கும் இனப்பற்று எள்ளளவாவது தமிழனக்கு இருந்திருந்தால்……

  • ///ஈழத்தை பொறுத்த வரை நாம்தான் அவர்களுக்காக கதறுகிறோம், வரலாற்றில் அவர்கள் நமக்காக ஆறுதல் சொன்னதில்லை (அவர்களே சாகிறார்கள் என்று சப்பை கட்டாதீர்கள்). அரசியல் ரீதியில் போர், உதவி வேண்டும் என்கிற தருணங்களில் மாத்திரம்தான் அவர்கள் தொப்புள் கொடி உறவே என்கிறார்கள்.. இது வரை எம்ஜி ஆர் இறந்ததற்கும், முத்துகுமார் மரணத்திற்கும் ஒரு இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்கள், மற்றபடி அவர்கள் தங்களை தமிழ்நாட்டிடமிருந்து அன்னியபடுத்திக் கொண்டுள்ளனர்..///

   மிகவும் பொறுப்பற்ற முறையில் எழுதியிருக்கிறீர்கள்….

 3. திரு.பாமரன் அய்யா அவர்களூக்கு,
  எனக்கு இப்பொழுது இன்தியன் என்ற உணர்வே மரத்து போய் விட்டது.தமிழன் என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது.அதனால்,

  தமிழனென்று சொல்லுவோம்.

  தலை நிமிர்ந்து செல்லுவோம்

 4. பிரமாதம் தோழர்! துயர்மிகு காலங்களில் இத்தகைய படைப்புக்களே துயர் நீக்கும் சஞ்சீவனிகளாகவும், நம்பிக்கையூட்டும் நன்மருந்தாகவும் அமைகின்றன. ஈழத்தமிழர் பற்றிய இவ்வகைக்கட்டுரைகள், தேசியம் பேசும் அத்தனை ஈனத்தமிழர்களையும் சென்றடைய்யச்செய்ய வேண்டும்.

  ஆனால் தோழர், கார்கிலுக்கு நாம் எங்கே நிதி கொடுத்தோம்?

  • என் ஒருநாள் சம்பளத்தை என் சம்மதத்தைக் கோராமலேயை தமிழக அரசு கார்கில் நிதியாக பிடித்தம் செய்து கொண்ட வயிற்றெரிச்சல் இன்னும் தீரவில்லை எனக்கு.

 5. அக்னிப் பார்வையை கீழ்ப்பாக்கத்திற்க்கு அனுப்புங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு நாடு இல்லாமல் எப்படி அவர்கள் தமிழகத்துக்காக குரல் கொடுப்பார்கள் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்க்கு ஈழத்தமிழர்கள் அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்தன. வட இந்திய வெறியன் ஒருவன் கருணாநிதியின் நாக்கைக்கேட்டபோது ஈழமும் கொதித்தது தினமலர் ஹிந்து மட்டும் படித்தால் போதாது வேறு நல்ல பத்திரிகைகளையும் ஈழத்தவர் இணையங்களையும் படியுங்கள்.

 6. திரு.அக்னிபார்வை,

  முடிவாக நீங்கள் சொன்னதில் நான் புரிந்துகொண்டது இது தான், அறவழியில் போராட வேண்டும், அவரவர்க்கு அவர்களே போராட வேண்டும், நமக்காக குறல் கொடுக்காதவர்களுக்கு நாம் ஏன்? இது தானே. ஆம். ஈழத்தமிழன் உங்களுக்காகவும் எனக்காகவும் போராடவில்லை, ஆதரவு கூட தெரிவிக்க வில்லை, அதனால் அவன் கொல்லப்படும் போது நாமும் சும்மா இருக்க வேண்டுமா? அப்புறம் எதற்கைய்யா நாம் மனிதர்களாக இருக்க வேண்டும்?

 7. தமிழர்கள் தமிழருக்காக குரல் கொடுத்தால் அது ஏன் சில தமிழருக்கு பிடிப்பதில்லை என்பது எனக்கு எப்போதுமே புதிர்தான்
  பிரஞ்சுக்காரர் இன்னொரு பிரஞ்சுக்காரருக்காக குரல் கொடுத்தால், பஞ்சாபிக்காரர் இன்னொரு பஞ்சாபிக்காரருக்காக குரல் கொடுத்தாலோ ,நிறத்தாலும் நாட்டாலும் மொழியாலும் மாறுபட்ட ஆனால் மதத்தால் மட்டுமே ஒன்றுபட்ட முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக குரல் கொடுத்தாலோ அதனை ஒருவரும் விமர்சனம் செய்வதில்லை.அது ஒரு இயல்பான வெளிப்பாடு என்று ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால் தமிழர்கள் தமது இன மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப் படுவதற்காக குரல் கொடுத்தால் வேதனைப் பட்டால் அது இன வெறி என்ற அபத்தமான ஒரு கருத்தை கூறுவதில் தமிழர்கள் சிலர் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு நிற்கிறார்கள்
  ஏன்?

  ஈழத்தமிழர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழகத்தோடு உணர்வு பூர்வமான உறவைக் கொண்டுள்ளோம் ,அக்னிப்பார்வை என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.நாங்கள் சிறுவயதிலிருந்தே தமிழ்நாட்டு நூல்களையும் சஞ்சிகைகளையும் படித்தும் தமிழ் சினிமாவைப் பார்த்தும் தமிழ் நாட்டுக்கு சுற்றுலா வந்தும் ,தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் ஆர்வம் காட்டியும் தான் வளர்ந்தோம் ,வாழ்ந்தோம் ,தமிழ் நாட்டு மக்களோடு எமக்கு இருக்கும் பிணைப்பு உணர்வு பூர்வமானது ஆத்ம பூர்வமானது ,தமிழர் ஜனாதிபதியான போது நாம் எல்லோருமே பெருமைப் பட்டோம்
  எங்களுக்கு இந்தியா என்றால் அது தமிழ்நாடுதான்
  கேரளா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கமறுத்தால் எங்களுக்கும் வேதனையாக இருக்கிறது ,
  இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நாங்கள் எப்போதும் சென்னை அணிக்குத்த்தான் ஆதரவு கொடுக்கிறோம் ,
  தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தால் ,தமிழ் நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்தால் நாங்களும் வேதனைப் படுகிறோம்
  அதிர்ஷ்ட வசமாக இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களை ,சிங்கள அரசு ஈழத்தமிழரை நடத்துவது போன்று இன்னும் மோசமாக நடத்தத் தொடங்கவில்லை
  தமிழ்நாட்டு மகளுக்கு இந்திய மத்திய அரசு மீது சிலபல விஷயங்களில் மனத்தாங்கல் குறைகள் இருந்தாலும் , தமிழ் நாட்டு மக்கள் மீதி இந்திய ராணுவம் குண்டுகளை வீசிக்கொல்லவில்லை ,அவர்களை அவர்களது நிலங்களில் இருந்து விரட்டி அடிக்கவில்லை ,தமிழ் நாட்டு அரசு சில தமிழ் உணர்வளார்களை கைது செய்து சிறைக்குள் போட்டாலும் அவர்களை கொலை செய்யவில்லை
  ஆனால் ஈழத்தில் நடந்தது ,நடப்பது என்ன என்பது உங்கள் யாவருக்குமே தெரியும்தானே.
  தமிழ்நாட்டு மக்களுக்கு இப்படி நடந்தால் ஈழத்தமிழர்கள் எங்கிருந்தாலும் குரல் கொடுப்பார்கள் ,குடி உரிமை ,நாடு என்ற வேறுபாட்டைத் தவிர எங்களுக்குள் வேறு எந்த வேறுபாடும் இருப்பாதாக நான் கருதவில்லை

  இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழி தமிழருக்காக ஈழத்தமிழர் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் வைக்கிறார்கள் , ,அன்றைய சில தமிழ் தலைவர்கள் அக்கறை காட்டாமல் இருந்தார்கள் என்பது உண்மைதான் ,ஆனால் தந்தை செல்வா அவர்கள் இந்திய வம்சாவழி தமிழருக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்த சட்டங்கள் எல்லாவற்றுக்கும் எதிராக குரல் கொடுத்தார்.பிற்காலத்தில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் தமக்குள்ளேயே ஒரு தலைமையை உருவாக்க விரும்பியதால் ஈழத்தமிழ்த் தலைமைகள் அவர்கள் அரசியலில் தலையிட விரும்பவில்லை.

  கடல் வந்து எங்களைப் பிரிக்காமல் இருந்திருந்தால் நாங்கள் ஒரு நாட்டு மக்களாகவே இருந்திருப்போம் .
  இப்போது கூட ஈழத்தமிழ் பிரதேசத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் இருக்கும்
  கடல் ஆழம் குறைந்துதான் .அதுவே முன்பு இருந்த தொடர்பையும் இடையில் இயற்கையால் பிரிக்கப் பட்டதற்கும் சாட்சி சொல்கிறது.

  –வானதி

  பாமரன் அவர்களே ,
  உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான். நீங்கள் லண்டன் வந்தபோது உங்களை சந்திக்க
  நினைத்தேன் .முடியவில்லை. ஒரு பேப்பர் பத்திரிகையில் உங்கள் கட்டுரைகளை படித்து ரசித்து சிரித்தேன்

 8. எனக்கு நிச்சயம் தெரியும் என்னை லூசு என்பீர்ள் என்று, இனம் என்ற சொல்லுக்கான அர்த்தபட் இருக்க வேண்டும் என்கிறேன், ஈழத்தை சேர்ந்தவர்கள் தங்களை தனிமை படுத்திக்கொண்டார்கள் என்று தான் சொல்ல வருகிறேன், உங்கள் யாரையும் உத்வி செய்யாமல் இருங்கள் என்று சொல்ல்வில்லை.. இனி வரும் நாட்களிலாவது உலக தமிழர்கள் ஒரு இன்மாக இருந்து ஒவ்வொருவருக்கொருவர் உதவி புரிந்து விமர்சித்து செயல்படுங்கள் என்று தான் சொல்ல் வருகிறேன்..

  தமிழர்க்குள்ளான ஒற்றுமை எந்த லட்சனம் என்று நமக்கு தெரியாத நாம் ஏன் நம்மை ஏமாற்றிகொள்ள வேண்டும்.

  ஒன்றுபடுங்கள் உண்மையாக..ப்ரச்சனை என்று ஒன்று இல்லை என்றால் தமிழன் அடுத்து ஜாதி என்று பிளவு படுவான், மத்ம் என்று பிளவு படுகிறான்..

  அது மற்ற இனத்திடம் இல்லை .. மளையாலி ஒன்ரு படுகிறான்,குஜாராத்தி ஒன்றுபடுகிறான் அவ்ர்களை பார்த்து ப்ரு மூச்சுவிடாதீர்கள்..

  மேலே பாமரன் சொல்லியிருப்பதில் அது நன்றாகவே தெரிகிறது, மானவர்கள் தாக்கபட்டவுடன் அனைத்து மீடியக்களும் அதை செய்தியாக்கின, ஈழ பிரச்ச்னையை ஏன் இன்னும் ஜெயா டீவியும் சன் டீவியும் பொருட்படுத்தவில்லை.. மக்கள் டீவியிலும் ஜீ டிவியுலும் இது எந்தளவிற்க்கு காட்ட படுகிறது? அந்த சேனல்களை நடத்துபவர்கள் தமிழர்கள் தானே அவர்கள் ஏன் ஒதுங்குகிறார்கள்…

  தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு அமைப்பின் லட்சனம் தேர்தலில் தெரியவில்லை..திமுகாவிற்க்கு ஓட்டு போடாதீர்கள் (நியாயம்) கோமளவிள்ளிக்கு ஓட்டு போடுங்கள் என்று தமிழன் மானத்தை அடகுவைத்தாவ்ர்கள் தானே …

  கடந்த 30 வருடங்களாக தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அமைப்பு எந்தளவிற்க்கு இந்த பிரச்சணையை மகக்ளிடம் எடுத்து சென்றிருக்கிறது என்ற லட்சனம் தேர்தலில் தெரிந்த்து…

  நான் மொத்த தமிழகத்தின் மத்திய வர்க்க மக்கள் பற்றி பேசுகிறேன் நீங்கள் இல்லாத மாய உலகை பற்றி பேசுகிறீகள் உங்களுக்கு நான் பைத்தியமாக் தான் தெரிவேன்.

  சரி இருந்துவிட்டு போகட்டும்….

 9. திரு. அக்னிப்பார்வை.
  உங்கள் ஆதங்கம் புரிகிறது, நீங்கள் சொல்லுவது போல் மற்ற இனத்தவர் எல்லோரும் எல்லா நேரங்களிலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை முழுவதுமாக எற்றுக்கொள்ள முடியாது. அது சாத்தியமும் இல்லை. மேலும், ஓட்டரசியல் கட்சிகளை நம்புவதை நிறுத்தினால் தான் நாம் ஈழ மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்ய முடியும், என்பதே எமது கருத்து. அது வைகோ வானாலும், திருமா, ராமதாசானாலும் சரி. முதலில் நாம் ஈழத்தையும், அதன் தேவையையும் புரிந்துகொண்டு பேசத்துவங்கலாம் நம் வீட்டிலிருந்து..

 10. இன்னும் ஒரு இந்தியன் கூட ஆஸ்திரேலியாவில் உதை வாங்கி சாகலையேங்கற வருத்தத்தில் இருக்கேன் நீங்க வேற…

 11. தலைவா ஒன்னு நம்ம இனமக்களை மாத்தனும் ,இல்ல நாம எதாச்சும் நல்ல இனமா பார்த்து மாறிக்கனும் ……..

 12. அக்கினி பார்வையே!

  ஐயா! நீங்கள் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க வேண்டாம்! குரல் கொடுத்தால் தான் குரல் கொடுப்பேன் என்பது வாணிபம். குரல் கொடவிட்டாலும் குரல் கொடுப்பேன் என்பது நல் மாந்தன் குணம். இன்று கொல்லப்பட்ட மீனவனுக்காக நான் குரல் கொடுக்கின்றேன். அவன் ஈழத் தமிழன் இல்லை தானே. அவனுக்காக நீங்களும் குரல் கொடுங்கள். நான் ஈழத் தமிழனாக கேட்கின்றேன். ஏன் எமக்காக நீங்கள் கண்டனக்கூட்டங்கள் நடாத்தியது போல் மீனவர்களுக்காக நடாத்தியதில்லை.

  எப்பொழுது உங்கள் பிரைச்சினைகளுக்காக மத்திய அரசையும் மாநில அரசையும் அடி பணிய வைக்கும் வலுப் பெறுகின்றீர்களோ அன்று தான் அயலவன் பிரச்சினைக்கும் உங்கள் அரசை செவி சாய்க்க வைக்க முடியும்.

 13. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இந்திய மத்திய அரசை செருப்பால் அடித்தது போல இருக்கு இந்த கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள்.துணையாக நாங்களும் இருக்கிறோம்

 14. Ennanga pamaran
  Manithaneyam mikka Elangai endu oru naadu erukka?? appitnu yar sonnanga brother….
  En enam en pakkam endu madra manilathor pesuvanga..
  Anaa En enam (tamilan) mannukku pakkam than nan solluven..
  1000 pamarans vanthalum engalukku putthi varathu thozhare..
  Athukka neenga eluthurathan niruthavenaum thozhare……
  Vanakkam hozhare
  Anbudan
  Ramesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s