சகல வெறிகளுக்கும் எதிரான யுத்தம்….

michael-jackson-when-he-was-a-young-boy

ஆரம்பத்தில் மைக்கேல் ஜாக்சனைப் பிடிக்காது எனக்கு. ”என்னைய்யா மனுசன் ஜன்னி வந்த மாதிரி கையையும் காலையும் ஆட்டுகிறான்…இதெல்லாம் ஒரு டேன்சா….” என எரிச்சல் எரிச்சலாக வரும். போதாக்குறைக்கு நம்மூர் பிரபுதேவா வேறு. ஆனால் நண்பன் வெங்கட்டுக்கோ இதெல்லாம் அத்துப்படி. அவன் வாயைத் திறந்தாலேயே………

மைக்கேல் ஜேக்சன்………

பிரின்ஸ்………

பிங்க் பிளாய்ட்……… என்றுதான் வரும்.

நண்பன் ஆள் பேரைச் சொல்கிறானா………? அல்லது ஊர் பேரைச் சொல்கிறானா என முடிவு செய்வதற்குள் அவன் அடுத்த ஆளுக்குத் தாவியிருப்பான். “நண்பா உனக்கு நம்மூர் ஆட்களையே பிடிக்காதா………? அல்லது தெரியாதா………?” என்பேன் கோபத்தை அடக்கிக் கொண்டு.

“எனக்கு நம்மூர் இசையையும் பிடிக்கும். அதைப்போலவே இசையின் ஒலி உலகின் எந்த மூலையில் இருந்து ஒலித்தாலும் அதை ரசிக்கவும் தெரியும்” என்பான்.. நல்லவேளையாக நான் நம்ம வடிவேல் பாணியில் இசைன்னா……… மியூசிக்………

மியூசிக்ன்னா இசை……… என்று சொன்னதில்லை.

ஆனால் பொறுமையாக வெங்கட்தான் சொன்னான். ”நமக்கு நமது பாரம்பரியமான நடனங்களும், இசைக் கருவிகளும் இருப்பதைப் போல ஒவ்வொரு மண்ணுக்கும் அவரவர்களுக்குரிய இசையும், கலைகளும் இருக்கத்தான் செய்யும். நாம் அவர்களது நடனங்களைக் கேலி செய்வதோ……… அல்லது அவர்கள் நமது கலைகளை ஏளனம் செய்வதோ……… யாருக்குமே பயனளிக்காது. இப்படிப் புறம்தள்ளுவதால் கலைக்கு ஒன்றும் நஷ்டமில்லை. அனைத்து இழப்பும் நமக்குத்தான்.” என விரிவாகச் சொல்லுவான்.

அதன் பிறகுதான் நானும் கொஞ்சம் உலகத்தை உற்றுப்பார்க்க ஆரம்பித்தேன். அப்போதுதான் மைக்கேல் ஜாகசன் என்னும் கலைஞ்ன் வெறும் அங்க அசைவுகளுக்கு மட்டும் சொந்தக்காரனில்லை இந்த உலகத்தையும் அதன் மேம்பாட்டையும் நேசித்த சக மனிதன் என்பது ஓரளவுக்குப் புரிந்தது.

1958 இல் சிகாகோவில் பிறந்து  51 ஆவது வயதில் தனது ஓயாத நடனத்தை நிறுத்திக் கொண்ட மைக்கேல் ஜாக்சனது குழந்தைப் பருவம் கொடூரமானது. ஐந்து வயதிலேயே ஆடத் துவங்கினான் என்பது அப்பட்டமான பொய். ஆட வைக்கப்பட்டான் என்பதுதான் மெய். காரணம் மைக்கேல் ஜாக்சனது குடும்பமே  நடனத்திலும் , இசையிலும் தம்மைப் பிணைத்துக் கொண்ட குடும்பம். அவனது அப்பா ஜாக்சன் 5 (JACKSON 5) என்கிற குழுவை நடத்தி வந்தார். நினைத்த பொழுதெல்லாம் சரியாக ஆடச் சொல்லி தலையைத் தலைகீழாக தொங்க விட்டு துவைத்து எடுப்பார் அப்பா. அப்புறமென்ன தந்தை காட்டிய வழியில் தனையன் வேறு வழியின்றி தொடர தொலைந்து போயிற்று அவனது குழந்தைப் பருவம்.

இதனை பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது அவரே சொன்னபோது துக்கம் தாளாமல் தேம்பித் தேம்பி அழுதார் ஜாக்சன்.

மழலையில் துவங்கிய அவரது ஆடலும் பாடலும் மேற்கத்திய உலகையே புரட்டி எடுத்தது. அதன் பின்னர் உலக சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் பலமுறை இடம்பெற்றதோ……… புகழ்மிக்க ”கிராமி” விருதுகளைப் பெற்றதோ……… அவரது இசை நிகழ்ச்சிகளை நடத்தி, இசைப் பேழைகளை உலகெங்கும் விநியோகித்து……… பலர் கோடிகளில் புரண்டதோ………அவர் 2700 ஏக்கரில்  தனது வீட்டை நிர்மாணித்ததோ……… எல்லாம் ஏறக்குறைய அறிந்த தகவல்கள்தான்.

ஆனால் மைக்கேல் ஜாக்சனை தங்களது நடை……… உடை……… பாவனைகளில் பின்பற்றுபவர்கள் பலரும் அந்த மனிதனுக்குள் துளிர் விட்டிருந்த மனித நேயத்தை……… சமூக அக்கறையை பின்பற்றினார்களா………? என்பதுதான் கேள்வி.

மைக்கேல் ஜேக்சனைப் போல் பாடியவர்கள்………

மைக்கேல் ஜேக்சனைப் போல் ஆடியவர்கள்………

மைக்கேல் ஜேக்சனைப் போல் கொஞ்சமாவது இந்த உலகைக் குறித்து கவலைப்பட்டிருக்கிறார்களா?

அவர் கெளதமாலாவின் குழந்தைகள் நலனுக்காக கொடுத்தது பலகோடி.

கொசாவாவின் அகதிகளுக்காக செலவிட்டது பலகோடி.

நெல்சன் மாண்டலே குழந்தைகள் நல நிதிக்காக அளித்தது பலகோடி.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்காக கொடுத்தது பலகோடி.

ஆனால் அவரைப் காப்பி அடித்த பலரும் மற்றவர்களுக்குக் காட்டியது தெருக்கோடியைத்தான்.

இவை போக ஏறக்குறைய 39 அறக்கட்டளைகளை ஏற்று நடத்தினார் மைக்கேல் ஜாக்சன்.

அவர் சமூக அக்கறை உள்ளவரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரே எழுதி இசையமைத்துப் பாடிய இந்த  ”பூமி”யைப்(The Earth) பற்றிய பாடலையும்……… நிறவெறிக்கெதிராகப் பாடிய ”நீங்கள் கருப்பரா? வெள்ளையரா?”(Black or White) பாடலையும் ஒரே ஒரு முறை கேட்டுப்பார்த்தால் புரியும்.

அவரைப் போல் இடுப்பசைவு வரவேண்டும் என்பதற்காக பிரயத்தனப்பட்டவர்கள்  என்றேனும் தங்களது வருமானத்தின் சிறு பகுதியையாவது குழந்தைகள் நலனுக்காக செலவிட்டிருக்க்கிறார்களா? (தங்கள் குழந்தைகளின் நலனுக்காக அல்ல……… உலகக் குழந்தைகளின் நலனுக்காக)

அவரைப் போல பாட வேண்டும் என்பதற்காக கடும் முயற்சிகளில் இறங்கியவர்கள்………

அவரைப் போல நிறவேற்றுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்களா?

ஆனால் அவரிடமிருந்து பல பாடல்களை ”சுட்டவர்கள்” கூட அவர் சொன்ன அர்த்தத்தையே தலைகீழாக மாற்றி தமிழகத்துக்குத் தந்தார்கள்.  அந்தப் பெருமையில் “இந்தியன்” ஷங்கருக்கு பெரும்பங்கு இருக்கிறது.

”நீங்கள் கருப்பரா வெள்ளையரா என்பது பொருட்டே அல்ல” (It Doesn’t Matter if you are Black or white) என மைக்கேல் ஜாக்சன் நிறவெறிக்கெதிராய் நெத்தியடியாய் அடித்துச் சொன்னால்………

”நீங்கள் கருப்பரா வெள்ளையரா என்பதுதான் முக்கியமே” (Black or White its really matter)  என ”சிவாஜி”யில் ஒரு கூடை சன் லைட்டை தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார் ஷ்ஷ்ங்கர்.

அந்த மேற்கத்தியக் கலைஞனுக்கு இருந்த நிறவெறி எதிர்ப்பில்………

சுற்றுச்சூழல் குறித்த அக்கறையில்………

குழந்தைகள் நலன் குறித்த கவலையில்………

காலே அரைக்கால்வாசி பங்காவது உள்ளவர்கள் மட்டுமே மைக்கேல் ஜாக்சன் பெயரை உச்சரிப்பதற்குக் கூட யோக்யதை உள்ளவர்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

நீங்கள் மைக்கேல் ஜேக்சனைப் போல் நடக்கலாம்………

நீங்கள் மைக்கேல் ஜேக்சனைப் போல் இசைக்கலாம்………

ஆனால் நீங்கள் ஒரு போதும் மைக்கேல் ஜேக்சன் ஆகவே முடியாது என்பதுதான்.

ஆனால் இப்படி எல்லாத் திறன்கள் பெற்றிருந்தும் அந்தக் கலைஞன் மீடியாக்களால் பந்தாடப்பட்டான்……… அவமானப்படுத்தப் பட்டான்……… கூண்டிலேற்றப்பட்டான்………

காரணம்?

ஒரே காரணம்:

அவன் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் என்பதுதான்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அன்று கொலை வழக்கில் கூண்டிலேற்றப்பட்டதற்குக் காரணம் சாதி வெறி.

கலைஞன் மைக்கேல் ஜேக்சன் நேற்று பாலியல் வழக்கில்

கூண்டிலேற்றப்பட்டதற்குக் காரணம் நிற வெறி.

வெறிகளில் கிழக்காவது மேற்காவது?

சகல வெறிகளுக்கும் எதிரான யுத்தமே

கலையையும்……… கலைஞர்களையும் விடுவிக்கும்.

(நன்றி : ”தமிழக அரசியல்” வார இதழ்)

Advertisements

8 thoughts on “சகல வெறிகளுக்கும் எதிரான யுத்தம்….

 1. தோழர், அருமையான பதிவு.

  ஒரு கலைஞனின் மறுபக்கத்தை காட்டியிருக்கிறீர்கள் நன்றி.

  தவிர்க்க முடியாமல் இவ்வேளையில் “நமது” ராசையா நினைவுக்கு வருகிறார். இந்த இடத்தில் அவரை பற்றி பேசுவது சரியா என்று தெரியவில்லை, ஆயினும் எனது எண்ணத்தை சொல்ல விளைகிறேன். ராசாவின் இசையை பற்றி விமர்சிக்க எனக்கு தெரியாது, ஆனால் இசையை தாண்டி அவர் பல நேரங்களில் உதிர்க்கும் கருத்துக்கள் படுமோசம், குறிப்பாக மைக்கேல் போன்ற இசை கலைஞர்களின் பங்களிப்பை மிகவும் கொச்சை படுத்தியிருக்கிறார்.

  இசையின் மூலம் மக்களின் விடுதலைக்காக போராடிய பலரை அவர்” குப்பை” என்று எட்டி உதைத்திருக்கிறார், அது வண்மையாக கண்டிக்கத்தக்கது தானே? அதே சமயம் ராசாவின் இந்த கூற்றுக்காகவும் நக்கல்டிக்கும் சாரு போன்றவர்களின் நிலையில் இருந்து இதை நான் சொல்லவில்லை.

  எமது அன்புக்குறியவரிடம் உள்ள எதிர்பார்பினாலே எழும் அவாவினால் தான், ராசாவிடம் இந்த கேள்வியை கேட்கிறேன்.

  சரி தானே தோழா?

  அன்புடன்,
  சுப்பன்

 2. ///Categories: எழுதுவதெல்லாம் எழுத்தல்ல… . ///

  நிச்சயமாக இது எழுத்தல்ல ஒரு இனத்தின் குரல்… மைக்கேல் ஜாக்ஸனை இந்த கோணத்தில் பார்த்ததில்லை

 3. today i saw 3 kings movie. in that an iraqi ask amarican solder, what happend to MJ. and then he says, he is a black, he chaned the color to white. because u white, made them change. It is a wonderful truth. this is happening to tamils also. in eelam and in TN.

 4. மைகேல் ஜாக்சனின் இசைக்கும் நடனத்துக்கும் அப்பால் ,அவரது வாழ்க்கையை பார்த்தால் ,அவர் மகிழ்ச்சியைத் தேடி அலைந்தார் என்பது புரிகிறது.
  அவர் தனது சிறுவயதைத் தொலைத்துவிட்டு பிற்காலத்தில் அதனை தேடியதின் காரணம்தான் சிலவிஷயங்களில் அவரை சிறு பிள்ளைத்தனமாக காட்டியது .
  அத்துடன் நிறவெறியால் பாதிக்கபட்டதன் தாக்கம்தான் அவரை வெள்ளையாக மாற்றவைத்து இருந்தது என்று சிலர் சொன்னாலும் அதற்கு காரணம் ஒரு தோல்நோய் -vitiligo என்று அவர் கூறி இருந்தார்.
  , கறுப்பாக இருந்தபோது எவ்வளவு அழகாக cute ஆக lively ஆக இருந்தவர் ஏன் இப்படி தனது உருவத்தை மாற்றினார் எனது வெள்ளை இன நண்பர்கள் பலர் என்று கருத்து கூறுவார்கள்.
  சிறுவயதில் ஏற்பாட்ட தாக்கம்தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்

  அன்றைய அமெரிக்காவின் நிறவெறி ,தந்தையின் கொடுமைகள் ,பணம் பணம் என்று மட்டுமே அலைந்த சமூகத்தின் முன்பு ,பணம் ,புகழ் எல்லாம் இருந்தும் மன நிம்மதி இல்லாமல் அவர் இருந்திருக்கிறார்.

  எப்படி இருந்தாலும் அவர் மிகுந்த திறமைசாலி ஒரு genius அதில் சந்தேகமே இல்லை.

  —வானதி

 5. Really true noone talks about his charity work . In the Memorial conducted for MJ , LA Lakers Captain Kobie Bryant clearly said that JAckson has created records for his charity work and no one can match that . Jackson became easy target for many people to loot money from him in the name of suits as he was scared to appear in public places due to his fame and body condition. . He Created his own style like Elvis Presley and his victory gave easy path and confidence to many blacks in all fields .

 6. thozhaare!
  if no MJ..no DISCO,no pop,no rock,no roll,no prabhudeva..nothing!
  coz of his real efforts the world is missing n worrying about him…
  see the blood is red for both black n whites..

  I`M MISSING KING OF POP(MJ)

  LET HIS SOUL REST IN PEACE!(atleast)

 7. இசையின் அரசன் என்றால் அவர் மைக்கேல் ஜாக்சன் மட்டும் தான்.. அவரை பற்றி என்ன எதிர் மறையான தகவல் வந்தாலும் அதை எப்பொதும் என்றென்றும் நம்புவது இல்லை.. அவர் புகழ் என்றும் நிலைக்கும் என்பது தான் மெய்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s