”உலக நாயகன்” கமலுக்கு பகிரங்கக் கடிதம்-2

bush

நெசமாவே தசாவதாரம் மாதிரி ஒரு படத்தை என் வாழ்நாளுல பார்த்ததேயில்லீங்க….

அதுவும் ராமசாமி, பூவராகவன், நாயுடு, சிங்கு, புஸ்சு, அப்பறம் ….. அதென்ன புளிச்சரோ…….பிளிச்சரோ…… ன்னு நீங்க பத்து வேசத்துல கலக்குன கலக்கு இருக்குதே அதப் பாக்க கண் கோடி போதாதுங்க.

அதுவும் ஆராய்ச்சி பண்ணுற எடத்துல அநியாயத்துக்குச் சாகிற அந்தக் கொரங்கப் பாத்து கூட நீங்க படுற பாடு இருக்கே….. அடடா அதப் பாத்ததும் கண்ணுல தளுக்குன்னு தண்ணீ வந்துடுச்சுங்க. நீங்க வெறும் அந்தக் கதாபாத்திரம் மட்டுமில்ல……. நீங்க ஒரு வாழும் வள்ளலார்ன்னு அப்பவே புரிஞ்சு போச்சு.

ஆனா என்ன புரிஞ்சு என்ன பண்ண? வேட்டிக்குள்ள வீச்சருவாள சொருகுன மாதிரி ”மனித உரிமை” மார்த்தாண்டனும்….. ”அறிவொளி” அப்பாசும் நம்ம கூடவே இருக்கானுகளே….. படம் உட்ட உடனே இவனுக கிட்ட இருந்து எப்புடிடா தப்பிக்கறதுன்னு ஒரே கவலையாயிடுச்சு. எப்படியோ ஒருவழியா தப்பிச்சோம் பொழச்சோம்ன்னு எஸ்கேப் ஆகி சைக்கிள் பூட்டைத் தொறந்தா……. டோக்கனக் காணோம்.

”என்ன அரைவேக்காடு டோக்கனத் தேடுறாப்பல போலிருக்கு…..?”ன்னு அசரீரி மாதிரி பின்னால சத்தம் கேட்குது. திரும்பிப் பாத்தா அந்த ரெண்டு ஜென்மங்களும் பல்லை இளிச்சுகிட்டு நிக்குதுக.

“இடைவேளைல நீ வாயப் பொளந்துகிட்டு உங்காளு புராணம் பாடீட்டு இருந்தியே……. அப்ப நீ கீழ போட்டது……….. இந்தா”ன்னு டோக்கன நீட்டறானுக. சரி நாயோட படுத்தா உண்ணியோடதான் எந்திரிக்கணும்……ன்னு நெனச்சுகிட்டே அவனுகளோட வெளீல வந்தேன். வேற வழி?

“அப்பாசு எனக்கென்னமோ அந்த பல்ராம் நாயுடு கேரக்டர்தான் புடிச்சுது. நீ என்னாங்கற?” ன்னு ஆரம்பிச்சான் மனித உரிமை.

”இல்லப்பா எனக்கு அந்த பூவராகவன் கேரக்டர்தான் புடிச்சுது”ன்னான் “அறிவொளி”. இதென்னடாது ரெண்டுபேரும் கட்சி கிட்சி என்னாவது மாறீட்டானுகளான்னு நமக்கு சந்தேகமே வந்துடுச்சு.

”நெஜமாத்தான் சொல்றீங்களா?”ன்னு ”கற்றது தமிழ்” கதாநாயகி கணக்கா ஆச்சர்யத்தோட கேட்க…….

”இதிலென்ன சந்தேகம்? உங்க ஒலகநாயகன் மேல சத்தியமா”ன்னு என் தலைல கைய வெக்கறானுக ரெண்டு பேரும். அப்பவாவது நான் சும்மா இருந்திருக்கலாம். நமக்குத்தான் நாக்குல நர்த்தனம் ஆடுதே ”சனி”…… உடுமா?

’எனக்கென்னவோ அந்த புஸ்சு கேரக்டர்தான் புடிச்சுது’ன்னேன்.

”நெசந்தான் ஆப்பாயில்…… அந்த ”ஒலக மகா யோக்கியன” உங்க ஒலகநாயகனத் தவுற வேற யாரும் இப்படி நல்லபடியா காட்டுனதில்ல….. அதுக்கே உங்காளுக்கு நோபல் பரிசு குடுக்கலாம்.” ன்னான் மார்த்தாண்டன்.

நெஜமாத்தான் சொல்றியா?ன்னேன்.

“வெங்காயம்……. மொதல்ல உன் வாய ஆசிட் உட்டு அலசு. ஒலகத்துல ஒரு நாடு மிச்சம் இல்லாம அட்டூழியம் பண்ணுற புஷ்சு யோக்கியனாம்….. ஒலகத்த அழிவுல இருந்து காப்பாத்த படத்துல படாத பாடு படறாராம். பத்தாததுக்கு படத்தோட கடைசீ காட்சில புஸ்சே தமிழோட அருமை பெருமைகளையெல்லாம் அவுத்து உடறாராம். இத விட அயோக்கியத்தனம் வேற இருக்க முடியுமா?

கேட்கறவன் காமன்மேன்னா…… கழுதை கூட கப்பல் ஓட்டுதூம்பாரு உங்க கமலகாசன்”ங்குறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

”ச்சே…. என்னப்பா இப்புடி அமெரிக்காவத் திட்டுற.? அது எல்லா நாட்டு மேலயும் குண்டு போட்டதா சொல்றதெல்லாம் பச்சப் பொய்யு. அது குண்டு வீசாத நாடும் இருக்குது தெரியுமா?”ங்குறான் அறிவொளி அப்பாஸ்.

“எது?”ன்னான் கடுப்போட மார்த்தாண்டன்.

“எதுவா…… அமெரிக்காதான்”ன்னு சொல்லீட்டு சிரிக்கிறான் அறிவொளி.

“அப்பு அது ரொம்பத் தப்பு. வெளீல செய்யுற வேலைய சொந்த நாட்டுலயும் காமிச்சிட்டான் அமெரிக்காக்காரன். யோக்கியர் புஸ்சோட காலத்துல ரெட்டைக் கோபுரத்த தகர்த்தது அல்கொய்தாவுமில்ல அனகொண்டாவுமில்ல……. செஞ்சது எல்லாமே புஸ்ஸோட ஆளுகதான்ன்னு ஒரு கலக்கல் படம் புள்ளி விவரத்தோட வந்திருக்கு தெரியுமா உனக்கு?”ன்னு ஒரு பெரிய்ய குண்டாத் தூக்கிப் போடுறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

“என்னது அது அமெரிக்காவே சொந்த செலவுல வெச்சுகிட்ட சூனியமா? உன் கப்சாவுக்கு ஒரு எல்லையே இல்லையா?”ன்னு இணைந்த கைகள் மாதிரி ரெண்டு பேரும் கோரசா கேட்க……..

“அவந்தான் அரைவேக்காடுன்னா…… அப்பாசு உனக்குமா அறிவில்ல? உண்மையிலேயே லூஸ் சேஞ்ச்(Loose Change) ன்னு ஒரு சூப்பர் படம்

அவங்களே விமானம் மோதறதுக்கு முன்னாடி எப்படியெப்படி டுவின் டவர்ல பாம் செட் பண்ணுனாங்க……

அதுக்கு முன்னால எத்தனை கோடி டாலருக்கு அந்தக் கட்டடத்தை இன்சூரன்ஸ் பண்ணுனாங்க……

கீழ் தளத்துல டன் கணக்குல இருந்த தங்கம் எங்க போச்சு……

இதுக்கான திட்டம் எந்த வருசத்துல தயாராச்சு?ன்னு புட்டுப் புட்டு வெக்குது அந்த டாக்குமெண்டரி”.ன்னு பின்னிப் பெடல் எடுக்குறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

“மார்த்தாண்டா……. நல்ல காலத்துலயே நீ பேசுனா புரியாது. நீ ஆள் பேரச் சொல்றியா……? இல்ல ஊர் பேரச் சொல்றியா…..?ன்னு புரியறதுக்குள்ளயே பொறந்தநாள் கண்டுரும். எல்லாம் தெரிஞ்ச பண்டிதரு எங்காளு…… அவுருகிட்ட என்ன கொறை கண்டே அதச் சொல்லு மொதல்ல….ன்னேன் பொறுக்க முடியாம.

”அட கமல்பித்தா……… கொஞ்சம் பொறு….. நடக்கக் கையாலாகாதவன் எங்கியோ பொண்ணு கேட்கப் போன மாதிரி ஏன் பறக்குற? சரி உன் ஆளு விசயத்துக்கே வருவோம். பத்து அவதாரத்துல ஒரு அவதாரமா “பிளிச்சர்”ன்னு வர்றாரே உன் ஆளு…….

அந்த ஆளை மட்டும் ”எக்ஸ் சி.ஐ.ஏ” ன்னு சொல்றாரே உங்காளு Why?”ங்குறான் திடீர்ன்னு.

வொய்?ன்னா என்ன சொல்றது.? ”எக்ஸ்”ன்னா அந்த அக்குறும்பு புடிச்ச பிளீச்சர் முன்னாள் சி.ஐ.ஏ,ன்னு அர்த்தம்……ன்னேன்.

“அப்ப இந்நாள் சி.ஐ.ஏ. எல்லாம் கையுல ராட்டையையும் காதுல பஞ்சையும் வெச்சுகிட்டு ’ரகுபதி ராகவ ராசாராம்’ன்னு அகிம்சா ராகம் பாடிகிட்டா இருக்காங்க? ஆனா……. அதில்ல பிரச்சனை இந்நாள் சி.ஐ.ஏ.ன்னு படத்துல சொன்னா அப்புறம் உங்காளுக்கு அடுத்த தடவை அமெரிக்கா போறதுக்கு விசா கெடைக்காதுன்னுதான் வெவரமா ”எக்ஸ் சி.ஐ.ஏ”.ன்னு அவுத்து உடறாரு.

போதாததுக்கு……. படத்தோட ஆரம்பத்துல வருதே உங்காளு வாயாலயே ஒரு வஜனம்……… “செப்டம்பர் 11 (தாக்குதல்)க்குப் பிறகு அமெரிக்கா தன்னை பயோ ஆயுதத் தற்காப்பிற்கு தயார்படுத்திக் கொள்கிற மும்முரத்தில் இருந்தது”ன்னு இது எப்படி இருக்கு?”ன்னு சொல்லீட்டு மொறைக்கிறான்.

ஏம்ப்பா……. அப்ப…….. அமெரிக்க மாமா நல்லவரா……. இல்ல கெட்டவரா? புரியலயேப்பா”ன்னேன் உங்க ’நாயகன்’ ஸ்டைலுலயே.

“எந்தக் கர்மம்தான் புரிஞ்சுது உனக்கு.? என்னமோ அமெரிக்கா ரெட்டைக் கோபுர தாக்குதலுக்கு முன்னாடியெல்லாம் ரொம்ப யோக்கியமா இருந்த மாதிரியும்……. அதுக்கப்புறம்தான்…… அதுவும் “தற்காப்புக்காக” மட்டும் ஆயுதம் தயாரிச்ச மாதிரியும் உங்காளு அளக்குறதக் கேட்டா அமெரிக்காக்காரனே அதுல சிரிப்பான். அமெரிக்கா எப்படிப்பட்ட நாடு…… அதோட ஜனாதிபதிக இதுவரைக்கும் பண்ணுன அட்டூழியங்க என்னென்ன ங்குறதெல்லாம் பச்சக் குழந்தையக் கேட்டாக் கூட சொல்லும்……அடச்சே…….ஆள உடுறா சாமி…… நீயாச்சு….. உன் ஆளாச்சு…… நான் கெளம்பறே”ன்னு சைக்கிள்ல ஏறி உட்கார்ந்துட்டான்.

ஆனா…… இந்த அப்பாசுதான் சும்மா இருக்காம போனவன தடுத்து நிறுத்தி “நீ பாட்டுக்கு சும்மா திட்டிகிட்டே போனா எப்படி? என்ன இருந்தாலும் நம்மாளு அவதார் சிங்கா வந்து கலக்குறாரே…… அதுகூடவா உனக்குப் புடிக்கல?”ன்னு நச்சுன்னு கேட்டான் ஒரு கேள்வி.

“யப்பா…… அவுரோட நடிப்ப யாரும் கொறை சொல்லுல…….. உண்மையிலேயே மகா தெறமைசாலிதான். அவுருக்கு வேணும்னாலும் அவுரோட நடிப்பு மேல சந்தேகம் இருக்கலாம். ஆனா நமக்கு இல்ல. நம்ம ஆசையெல்லாம் இப்படிப்பட்ட கலைஞருக சொல்ற கதையுலயும் கொஞ்சமாவது உண்மையா இருக்கணும். வரலாற்றை திரிக்கற மாதிரி இருந்தறக் கூடாதுங்குறதுதான் நம்ம ஆதங்கம்” ன்னு சொல்லீட்டு பெருமூச்சு விடறான் ”மனித உரிமை”

சரி இதுதான் நாலு வார்த்தையாவது இவன் நல்லா பேச கிடைச்ச ஒரே சந்தர்ப்பம்…….ன்னு நெனச்சுகிட்டு…….. அது சரி மார்த்தாண்டா நம்ம அப்பாஸ் கேட்ட அவதார்சிங் கேரக்டரு எப்புடீ? ன்னேன்.

”கேரக்டர் என்னமோ நல்ல கேரக்டர்தான். உங்காளு நடிப்பும் வழக்கம் போல சூப்பர்தான்…… ஆனா……”ன்னு இழுக்குறான் ம.உ.மார்த்தாண்டன்.

ஏம்ப்பா…… உன்னால இந்த “ஆனா” போடாம பேசவே முடியாதா?ன்னேன் எரிச்சல் தாங்காம.

”நானா வெச்சுகிட்டே வஞ்சகம் பண்ணுறேன். அதுவா வருது என்ன பண்ண? உங்காளு படத்துல “அவதார் கண்ணத் தெறந்து பாருங்க. நீங்க நல்லாயிட்டீங்க…… நாங்க சர்ஜரி பண்ணீருந்தாகூட இவ்வளவு பர்பெக்ட்டா பண்ணீருக்க முடியாது . அந்த புல்லட்டு உங்க குரல உட்டுட்டு அந்த கேன்சர எடுத்துட்டுப் போயிருச்சு”ன்னு டாக்டர் சொல்லுறதக் கேட்டாத்தான் கொடுமையா இருக்கு. இப்புடி ஒரு ஐடியா இருக்குறது தெரிஞ்சிருந்தா இருபத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சுட்டாவது எங்கப்பனைக் கேன்சர்ல இருந்து காப்பாத்தீருப்பேன்”ங்குறான் அந்த வெவகாரம் புடிச்சவன்.

கொழப்பாதே…….. கடைசியா என்ன சொல்ல வர்றே……….

தசாவதாரம் நல்லா இருக்குன்னு சொல்ல வர்றியா……..இல்ல நல்லா இல்லேன்னு சொல்ல வர்றியா……..ன்னேன் மண்டை காஞ்சுபோயி.

”படம் நல்லா இல்லன்னு சொல்ல வர்ல.

ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமேன்னுதான் சொல்ல வர்றேன்.” ன்னு அவன் சொல்லச் சொல்ல தலை சுத்துற மாதிரி இருந்துச்சு. கண்ண இருட்டிகிட்டு வர்றமாதிரி ஒரு ஒணர்வு. அவ்வளவுதான் தெரியும். முழிச்சுப் பாத்தா ஆசுபத்திரி பெட்டுல என்னச் சுத்தி ஒண்ணுக்கு ரெண்டு உபத்திரவத்துக்கு மூணூங்குற கதையா இவனுகளோட கலாரசனையத்த கந்தனும் பல்லக் காட்டீட்டு நிக்குறான்.

இதென்னடாது……

ஆசைக்கு அவளக் கட்டி…….

கூடிப் பொழைக்கலாம்ன்னு கொளுந்தியாளக் கட்டி…..

சேர்ந்து பொழைக்கலாம்ன்னு சின்னாயாளைக் கட்டி…….

கடைசீல மூணும் கடைநாசமாப் போன மாதிரி இவனுக வேறையான்னு பயந்து மிரண்டவனப் பாத்து

“பயப்படாதே நானும் உன்னைப் போல ஒருவன்தான்”ன்னு பொடி வெச்சுப் பேசறான் கந்தன்.

(மிச்சம் சொச்சம் எல்லாம் அடுத்த வாரம்)

Loose

16 thoughts on “”உலக நாயகன்” கமலுக்கு பகிரங்கக் கடிதம்-2

 1. ”படம் நல்லா இல்லன்னு சொல்ல வர்ல.

  ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமேன்னுதான் சொல்ல வர்றேன்.”

  இதுதான் பாமரன் touch

 2. Dear Pamaran,
  I understand that you are criticizing Kamal. The movie has shown lots of misconceptions. But Kamal will say that its just an entertainment movie and not to look for message in such a movie. At least if he had shown that as a disclaimer in the beginning of the movie, you would not be writing this now. So, I think you have all the right to bring out his misconceptions.

  Apart from that I noticed that you are talking about ex-CIA character. I don’t think anything wrong with that character’s depiction. CIA people get trained very well to do anything. Hence, most of the people who retire from CIA take jobs like that character. Hence, it’s an usual hollywodd way of showing a criminal.

  I live in the USA and I analysed what the hell happened during 911. Looking at many conspiracy theory videos and witnesses one would conclude that 911 was an inside work. But look at the consequences of that. The country is in big trouble. Economy collapsed and what not. I am sure they would not be doing that to themselves. Its not logical. The way the US government was answering or not answering the questions about 911 really triggered all the conspiracy theories. But actually the world witnessed on 911 day that how ineffective the USA governemnt was when it comes to domestic terrorism. Most of the world watches Hollywood movies and think that USA goverment responds to catastropic events like in those movies. Sadly, its not true. When the planes were hitting the towers, no fighter jets were sent to intercept them. That was no conspiracy. It showed how inefficient the system or the government was. But I can say onething. After 911, lots of people benefitted by going to all these wars. That might make things look like the US goverment was behind all those atacks. But its impossible to carry out so co-ordinated attacks which would involve many hundreds of people working together and not leaking any information at all. Its practically impossible.

  I also want to point out about the mentioning of ‘chaos theory’ in that movie. Chaos theory talks about butterfly effect. Kamal compares that to the ‘swami sculputre’ creating the Tsunami in the ocean. Actually, that is nothing related to Chaos theory. Its logically equivalent to “kaakkai utkaara panam pazham vizhuntha kathai” only. That one dialogue itself is enought o prove that he started believing in Hindu Gods. I always thought he belived in a supreme power but not those Hindu Gods and Godesses. This movie made me think he started believing in those meaningless Hindu Gods and Godesses. If he is a non-believer, even for a story he would not have introduced God in that movie. Note that the story is by Kamal himself.

  The point is that the tamil people outside India very well know who is kamal and what’s his intentions. Even though he thinks that he is reaching out to the whole world, he is actually still in the “kundu chatti” only.

 3. There is something called constructive criticism.The author of the article does not even know the meaning of this it seems. These days the so called writers are trying to prove themselves outside by criticising kamal and thinks that others will think this guy is speaking about Kamal so he must be big but its not the case. Grow yourself. Kamal never said his movies were cult classic but they become one when compared to other actors who either does the same thing again and again and say this is the first time a movie of this kind had released.

  To the other guy @ Balki

  “The point is that the tamil people outside India very well know who is kamal and what’s his intentions. Even though he thinks that he is reaching out to the whole world, he is actually still in the “kundu chatti” only ”

  you are in one part of US not the whole of US so please make sure you know everything about kamal and US tamil speaking people. My family have been in US for more than a decade and I have been to US as well so I know about the reach of so called actors in Foreign countries.

  You are asking for an disclaimer at the start of the movie itself shows that other Kamal movies not only entertained but also had message.

  Coming to Hindu GOD you must be one of the guy who PARTICIPATED in religious riots.He never said he started believing but you say he started beleiveing in Hindu GOD – only god can save you.

 4. While you are giving review it self you not on your own modifying the dailogues of Kamal

  படம் நல்லா இல்லன்னு சொல்ல வர்ல.
  ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமேன்னுதான் சொல்ல வர்றேன்

  athula ourthar comment vera ithuan Pamaran tochnu

  you dont have any qualites to be a writer & to critic a genius like Kamal Haasan

  I accept the film has some logical flaws but on the whole it is good movie.

  only people like you open your eyes to say negative about good films.

  there are lot of stupid movies coming each year in tamil where were you during those times

 5. அய்யா புண்ணியவானுகளே…….

  நீங்க கமலகாசனை கக்கத்துலயே வெச்சுகிட்டு சுத்துற ஆளோ…..

  இல்ல அவுரோட கருத்துக்கள கவுத்துப் போட்டு அடிக்கணும்னு நெனைக்கிற ஆளோ…

  எதுவா இருந்தாலும் தமிழ்ல எழுதுங்க சாமி……
  உங்குளுக்குக் கோடி புண்ணியமா போகும்.

  கெஞ்சலுடன்,
  பாமரன்.

 6. ”ச்சே…. என்னப்பா இப்புடி அமெரிக்காவத் திட்டுற.? அது எல்லா நாட்டு மேலயும் குண்டு போட்டதா சொல்றதெல்லாம் பச்சப் பொய்யு. அது குண்டு வீசாத நாடும் இருக்குது தெரியுமா?”ங்குறான் அறிவொளி அப்பாஸ்.

  “எது?”ன்னான் கடுப்போட மார்த்தாண்டன்.

  “எதுவா…… அமெரிக்காதான்”ன்னு சொல்லீட்டு சிரிக்கிறான் அறிவொளி.

  – இது அல்டிமேட் நகைச்சுவை.

 7. Hi Paamaran, sorry for writing in english, I would like to say some think outside the topic, that is —- Paamaran I always enjoy your writings but in this two episode I very much enjoyed your SENCE OF HUMAR, Thanks Paamaran,

  This is for Ashok ——– Where were you man,

  This is to Rajash——— Come out of ” typical Indian” mind set.

  For both of you —————————- Wether you are in US or in INDIA but you guys must OPEN YOUR EYES first.

 8. பாமரன்…..
  உலகநாயகன் தசாவதாரம் தாண்டி பதினொன்னாவது அவதாரம் எடுத்துருக்காருங்களே. அதே பத்தி கொஞ்சம் உங்க பாஷைல எடுத்து உடுங்க.

  மேல ஒருத்தரு இங்கிலிபீஸ்ல கன்ஸ்ட்ரக்டிவ் கிரிட்டிஸிஸம், அப்படி இப்படின்னு நீயெல்லாம் எழுத்தாளரான்னு சொல்லிருந்தாரு. கன்ஸ்ட்ரக்டிவ்வா எதுனாச்சும் இருந்தா சொல்லமாட்டாங்களா என்ன?

  அன்பே சிவம் வந்தப்போ எல்லோரும் கமலைக் கொண்டாடத்தான் செஞ்சாங்க, படம் ஓடாமப் போனாலும். நம்ம தமிழ்நாட்டின் தலைவிதி நம்ப உலகநாயகன்கள்லாம் சி.ஐ.எ. ஏஜெண்டா மாறிட்டு இருந்தா நாம்ப என்னத்த கன்ஸ்ட்ரக்ட், டீகன்ஸ்ட்ரக்டுன்னு பண்ணுருதுங்கோன்னா…

 9. படத்தின் முடிவில், தன்னை கடவுள் மறுப்பாளனாக காட்டிக்கொள்ளும் கமல், “கடவுள் இல்லையின்னா சொன்னேன் இருந்தா நல்லா இருக்குமே என்று தானே சொல்றேன்” என்னும் கமலின் கயமைத்தனத்திற்கு (அயோக்கியத்தனம்) அவர் வழியிலயே பாமரன் சொன்னதை தான் பாமரன் டச் என்று சொன்னேன். அதை புரியாத அசோக்கை நான்…………… எப்பவோ மன்னித்துவிட்டேன்.

 10. I saw of ‘Loose challenge’. All the claims created in the movie are guess works, powercut is rare in US, but administrative power cuts in those areas are not.

  About the ‘reflection of white “thing”‘ in the belly of the aircraft’ before it hit the tower : It is very common that flights in the morning time, will reflect sunlight from east naturally with chromatic abberession it will look exactly like in the ‘loose claims’ movie. I can take photos and send you if needed. Even you can go to near by airport and see such strong shining reflection by 8:00 AM in the morning.

  Next leftists can write these : It was not muslims that were bombarding 100ft huge , 1000s of yrs old budhdha statues in Afhganistan, but it was Bush. He wanted to get gold under the statues.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s