யார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்?

ர்நாடகத்தின் கைகா அணுமின் நிலையத்தில் நிகழ்ந்த  “விபத்து”(?),  அல்லது                   ”நாசவேலையை”  ஏதோ பஸ் விபத்து……. ரயில் விபத்தைப் போல் சித்தரிக்கின்றன நமது பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும். ஆனால் அதன் உண்மையான தீவிரம் யாருக்கேனும் உரைத்திருக்கிறதா என்பதுதான் நமது கவலையே.

இந்த சம்பவம் ஒன்றல்ல…. ஓராயிரம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது பல்வேறு அறிஞர்களுக்கு. அதில் மிக முக்கியமானவர் சுரேந்தரா. இந்த சுரேந்தர் என்னைப் போல பி.காம் படிப்பைக் கூட உருப்படியாக முடிக்காத உதவாக்கரை அல்ல என்பதுதான் விசயமே.

சூரத்தில் பிறந்த சுரேந்தரா மெத்தப் படிக்கும் மேதாவிகளுக்கென்றே இருக்கும் ஐ.ஐ.டி.யில் தனது முனைவர் பட்டத்துக்கான படிப்பையும் பிற்பாடு அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலையில் மேற்படிப்பும் படித்தவர். அவர் இந்திய அணுசக்தித் து(ரை)றையினரைப் பார்த்து கேட்கின்ற கேள்விகள் நம்மை தலை சுற்றிக் கீழே விழ வைப்பவை.

 1. ”சம்பவம்” நடந்தது நவம்பர் 25. ஆனால் வெளியே தெரிந்தது நவம்பர் 28. எதற்காக இந்த அவகாசம்?
 2. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 இல்லை….. 40 இல்லையில்லை 55 என்று ஆளாளுக்கு ஒரு எண்ணிக்கையைச் சொல்கிறார்களே…… உண்மையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
 3. பாதிப்பு குறைந்த அளவுதான் என்றால் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களது சிறுநீரில் கண்டறியப்பட்ட உண்மையான கதிரியக்க அளவு எவ்வளவு?
 4. உச்சகட்ட பாதுகாப்புக் கொண்ட அணுசக்தி நிலையத்தில் குளிர் நீரில் கலக்கக் கூடிய அளவுக்கு கதிரியக்க அபாயம் கொண்ட டிரிட்டியம் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்ததா?
 5. ஒரே ஒரு கிராம் டிரிட்டியத்தின் அமெரிக்க விலையே 50 லட்சம். இத்தனை விலை மதிப்பு மிக்க அதனை அங்குள்ள ஒருவரே குளிர் நீரில் கலந்து ஊழியர்களுக்கு தீங்கு விளைவிக்கமுடியும் என்றால் வெளியில் உள்ள மக்களுக்கு யார் பாதுகாப்பு?

இப்படி எண்ணற்ற கேள்விகளை இந்திய அணுசக்தி துரைமார்களை நோக்கி வீசுகிறார் காந்தியவாதியான சுரேந்தரா.

இவர் மட்டுமல்ல இவரைப் போன்ற பல்வேறு அறிஞர்களது கேள்விகளெல்லாம் அதிஉச்சகட்ட பாதுகாப்பு கொண்ட அணுமின் நிலையத்துக்குள்ளேயே யாரோ ஒரு போக்கிரி புற்று நோயை உண்டாக்கும் டிரிட்டியத்தை குளிர் நீரில் கலந்து ஆபத்தை உருவாக்க முடியுமென்றால் சுனாமி….. பூகம்பம்…..போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது அவைகளை எப்படி எதிர் கொண்டு மக்களைக் காப்பாற்றப் போகிறது அணுசக்திக் கழகம்?

”உள்ளேயே பணிபுரியும் ஊழியரின் நாசவேலையாக இருக்கலாம்” என்கிறார் அணுசக்திக் கழகத்தின் தலைவர் ககோட்கர். ஆனால் உள்ளூர் ஆசாமிக்கே ஈடுகொடுக்க முடியாத அணுசக்தித் துறை  ஒருவேளை அணுமின்நிலையங்கள் மீது ஏதாவது அந்நியர் தாக்குதல் நிகழ்ந்தால் அதில் இருந்து எப்படி நம்மை காப்பாற்றப் போகிறது.? என்பவைகள்தான்.

இவை எல்லாவற்றையும் விட நமக்குள் கோபம் கொப்பளிக்கும் கேள்வியும் ஒன்றுண்டு. சமூக நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் சகல துறைகளிலும் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துங்கள் என்கிற நியாயமான கோரிக்கைகள் எழும்போதெல்லாம் ”அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் அதெல்லாம் கூடவே கூடாது……. ”தகுதி,” “திறமை”க்கு மட்டும்தான் இங்கு முதலிடம்” என்று  சண்டித்தனம் செய்து வருகின்றன அணுசக்தித் துறை உட்பட பல்வேறு “உயர்” நிறுவனங்கள். ஆனால் இவர்களது “தகுதி” ”திறமை” எல்லாம் இப்படி டிரிட்டியமாய்ச் சிரிக்கிறதே அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் இவர்கள்?

**********

ரு மாபெரும் அறிவியல் ஆராய்ச்சி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்துவிட்டு மயக்கம் போட்டு விழாதது ஒன்றுதான் குறைச்சல்.

யார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்?

யார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்காது? என்கிற மெகா மருத்துவ ஆராய்ச்சி அது.

யான் பெற்ற துன்பம் பெறட்டும் இவ்வையகம்:

கண்டுபிடிப்பு நம்பர் 1. : ”சுக்கிரன், சந்திரன் 5 ஆம் வீட்டுக்காரன் ஆகியோர் 6 ஆம் வீட்டில் அமர்ந்து அந்த இடம் பெண் ராசியாகவும் இருந்தால் அந்த ஸ்திரீக்கு பெண் குழந்தையே பிறக்குமாம்.”

கண்டுபிடிப்பு நம்பர் 2 :ஐந்தாம் வீட்டுக்குடையவன் சந்திரனுடன் கூடினாலும் ஸ்திரி ராசியிலோ, ஸ்திரீ நவாம்சத்திலோ இருந்தாலும் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லையாம்.

கண்டுபிடிப்பு நம்பர் 3 : ஏழாம் வீட்டில் புதன், இருந்தால் பெண் குழந்தைகள் எக்கச்சக்கமாகப் பிறக்குமாம்.

கண்டுபிடிப்பு நம்பர் 4 : ஆண் கிரகங்களுக்கு வலுக்குறைந்து, பெண் கிரகங்களின் ஆதிக்கம் வலுவடையுமானால் அவர்களுக்கு 5 ஆம் வீட்டுத் தொடர்பு ஏற்பட்டு ஆண் குழந்தைக்கு வழி இல்லாமல் போய் விடுமாம்.

இதெல்லாம் நமது ஜோசிய சிகாமணிகள் அவிழ்த்து விட்ட உடான்சு.

நம்மைப் பொறுத்தவரை சந்திரன் 5 ஆம் வீட்டில் இருக்கிறானோ….

இல்லை சுக்கிரன் 3 ஆம் வீட்டில் இருக்கிறானோ……

அல்லது ரெண்டு பேரும் சேர்ந்து போயி பத்தாம் நம்பர் வீட்டைத் தட்டுறாங்களோ…….

புருசனும் பொஞ்சாதியும் ஒண்ணா ஒரே வீட்டுல இருந்தாலே போதும் ஆணோ பெண்ணோ ஏதோ ஒண்ணு பொறக்கும். மொதல்ல அதக்கு வழியப் பாருங்க அப்பு.

அத விட்டுட்டு ஜோசியக்காரன்…… சூனியக்காரன்…….ன்னு போனா அப்புறம் ஒரு டைனோசர்தான் வந்து பொறக்கும்.

3 thoughts on “யார் யாருக்கு ஆண் குழந்தை பிறக்கும்?

 1. அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களை உச்சகட்ட பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டியது நிர்வாகத்தின் தார்மீக, மனிதநேய, சமூக கடமைகளில் ஒன்று.

  தவிர இண்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேசன் ஆர்டிகிள் 16, சி155ல் நிறுவனத்தின் அடிப்படை கடமைகளையும் பொறுப்புகளையும் பற்றி எழுதப்பட்டுள்ளது.

  ஐ.எஸ்.ஓ. 14001 சுற்றுபுற நிர்வாக அமைப்பையும், ஓ.ஹெச்.எஸ்.ஏ.எஸ். 18001 பாதுகாப்பு நிர்வாக அமைப்பையும் நிர்வாகத்தில் கடுமையாக கடைபிடித்தாலொழிய பாதுகாப்பு கிடைக்காது.

  நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் அணுமின் நிலைய நிர்வாகத்தை நினைத்து பயமாக இருக்கிறது.

  ‘தகுதி’, ‘திறமை’ங்கற மண்ணாங்கட்டி எல்லாம் இருக்கிறதா சோ கால்ட் ‘உயர்’வானவர்களுக்கு இருப்பதாகவே ஒத்துக் கொண்டு நாசமா போனாலும் அதை அவர்கள் கடைபிடிப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

  ——————————————————————-

  சுக்கிரன், புதன், 5ம் வீட்டுக்காரன் இவர்களை பற்றி நீங்கள் எழுதியிருப்பதை படித்த போது எனக்கு ரத்த கண்ணீரில் எம்.ஆர்.ராதாவிடம் சுக்ரனோ, புதனோ அவன் வேற எடத்துக்கு மாறிடுவான் என்று சொல்லும் போது எம்.ஆர்.ராதா, ‘அவங்களை எல்லாம் நாளைக்கு வரச் சொல்லுங்களேன், அவங்கெல்லாம் யாரு, பொண்ணுக்கு சொந்தக்காரங்களா..?’ என்று கேட்பாரே அது தான் ஞாபகத்துக்கு வந்தது.

  (அத்தோடு விடாமல் அந்த ஜோசியக்காரர் சொல்லுவார், ‘இல்லை இல்லை கிரகங்கள்..’ என்று விளக்கும் போது எம்.ஆர்.ராதா, ‘ஓ..! பிளேனட்ஸ்..’ என்று ஒரு நடை நடப்பாரு பாருங்கள், என்ன மேனரிசம், என்ன நடிப்பு, என்ன் ஸ்டைல்..)

 2. “சுனாமி….. பூகம்பம்…..போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது அவைகளை எப்படி எதிர் கொண்டு மக்களைக் காப்பாற்றப் போகிறது அணுசக்திக் கழகம்?””
  நீர் ஒரு தீர்க்கதரிசி ஐயா!!
  இப்போ தொழில்நுட்பத்தில் எங்கையோ இருக்கிற ஜப்பானே ஆடிபோய் இருக்கு. அணு உலை பாதுகாப்பு தொழில் நுட்பம் எல்லாம் இங்க எந்த அளவு இருக்குன்னு, இரண்டு முறை நாம அனுப்பின ஜிஎஸ்எல்வி தீபாவளி பட்டாசு மாதிரி வெடுச்சு போனதிலியே தெரிஞ்சுருச்சு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s