ராஜ ராஜ சோழன் நான்….

நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடபுத்தகத்தில் மதிப்பெண்களுக்காக “சோழர் வரலாறு” படித்ததோடு சரி.

சிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள “ராஜராஜ சோழன்” படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூட தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான்.

பின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.

பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பி.இ படிப்பும் இல்லை…… எம்.இ.படிப்பும் இல்லை…… பெற்றோரது அடிவயிற்றில் கட்டியிருக்கும் பணத்தைக் கூட அடித்துப் பிடுங்கும் பொறியியல் கல்லூரிகளும் இல்லை…… அப்புறம் எப்படிக் கை வந்தது இந்தக் கலை?

அதுதான் பட்டறிவுக்கும் பாட அறிவுக்கும் உள்ள வேறுபாடு.

பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அந்த மக்களது அயராத உழைப்பும்…. தொழில் நுட்ப அறிவும்…. கலை நயமும்தான் இன்று அது விண்ணுயர எழுந்து நிற்கக் காரணம். கூடவே மன்னனது ரசனையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கும்தான்.

சரி…… இப்படி சோழர் காலத்து அரண்மனைகள்…… வழிபாட்டுத்தலங்கள்…… சிற்பங்கள்….. ஓவியங்கள்……… அவர்களது வீர தீர பராக்கிரமங்கள் எல்லாம் அற்புதம்தான். ஆனால் மக்கள் எப்படி இருந்தார்கள் அவர்கள் காலத்தில்? அதுதானே முக்கியம்?

“மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரியாரே?” எனக் கேட்டுவிட்டு உப்பரிகையில் ஓய்வெடுக்கப் போய் விட்டார்களா? அல்லது மக்களோடு மக்களாக நின்று அவர்களது துயரங்களைத் துடைக்க துணை நின்றார்களா? இதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி.

தஞ்சை பெரிய கோவில் கம்பீரமாக நிற்கிறது வெளிப்புறத்தில். ஆனால் மக்கள் வழிபாடு நடத்துவதற்கும்….. வழிபடுவதற்கும் சமத்துவம் நிலவியதா உட்புறத்தில்?

இல்லை……. இல்லை……. இல்லை……. இல்லை……. இல்லவேயில்லை என்கின்றன சோழர் காலத்திய கல்வெட்டுகளும் ஆய்வு நூல்களும்.

சமயத்தலத்தில் சமத்துவமின்மை மட்டுமல்ல சோழப்பேரரசில் மக்கள் நிலை எவ்வாறிருந்தது? அவர்களது கல்வி எவ்வாறு இருந்தது? பெண்களது நிலை எவ்வாறு இருந்தது? நிலம் யார் வசம் இருந்தது? பாழாய்ப்போன சாதி என்ன பங்கை ஆற்றியது? இதுவெல்லாம் முக்கியமில்லையா நமக்கு?

சரி….. மக்கள் எப்படி இருந்தார்கள்? அதை முதலில் பார்ப்போம். சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காவிரி ஆற்றின் தென் கரையில் இருந்த இரு ஊர்களை தங்களின் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட அறிஞர்கள் அதிர்ந்து போனார்கள். ஊரே சாதியால் பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து.

ஒன்பதாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் தஞ்சையைக் கைப்பற்றி சோழப்பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இடுகிறான். அதன் பின்னர் வந்த சோழப் பேரரசர்களும் வைதீகம் செழித்து வளர பொன்னையும் பொருளையும் நிலத்தையும் தானமாக அள்ளி வழங்குகிறார்கள். எல்லோருக்கும் அல்ல. சிலருக்கு மட்டும். இதனை துல்லியமாகப் போட்டு உடைக்கிறார் கே.கே.பிள்ளை என்கிற வரலாற்று ஆய்வாளர்.

“வேத நெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடி புகுந்த பிராமணருக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினர். பிராமணர்களுக்குத் தனி நிலங்களும், முழு கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் என பல பெயரில் வழங்கின. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிர்வாகத்திற்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் கூட அவற்றினுள் செயல்பட முடியாது. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள்…. கட்டணங்கள்…… கடமைகள்….. ஆயங்கள்…… என அனைத்தில் இருந்தும் முழு விலக்கு அளிக்கப்பட்டன.” என்று சோழர்களது கல்வெட்டுக்களில் இருந்தே எடுத்துக் காட்டி அம்பலப்படுத்துகிறார் கே.கே.பிள்ளை.

நிலமும் இலவசம்…..

வரிகளும் கிடையாது……

கட்டணங்களும் இல்லை…..

அரசன் கூட கேள்வி கேட்க முடியாது……

அதாவது இன்றைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்காக ஏகப்பட்ட வரிச் சலுகைகளுடனும், ஏகப்பட்ட வரி விலக்குகளுடனும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள  ”சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப்” (S E Z – Special Economic Zone) போல…..

அன்றைக்கு ராஜராஜ சோழன் அமைத்துக் கொடுத்தது ”சிறப்புப் பிராமண மண்டலங்கள்”.

அதாவது (S B Z – Special Bramanical Zone).

இதிலென்ன தவறு? தனக்கு எவரைப் பிடிக்கிறதோ அவருக்கு விருப்பமானவற்றையெல்லாம் வாரி வழங்குவதுதானே மன்னர்களது விருப்பம்? குற்றமில்லைதான்.

ஆனால் அதே சோழ சாம்ராஜ்ஜியத்தில் மற்ற மக்கள் எப்படி வாழ்ந்தார்களாம்? அதற்கும் இருக்கிறது கல்வெட்டு.

”வேதம்” ஓத வந்தவர்களுக்கு சோழ அரசு சலுகை காட்டிய அதே வேளையில் உழவர்கள், கைவினைக் கலைஞர்கள், பிறதொழில் செய்வோர் மீது கடுமையான வரிகளை விதித்தது. இவற்றுள் அடித்தள எளியமக்களான சலவையாளர்கள், குயவர், தறி நெய்பவர், தட்டார், ஓடங்களைச் செலுத்தியோர் மீது முறையே….. வண்ணார்பாறை பயன்பாட்டு வரி….. குசக்காணம்……. தறிக்கூரை….. தட்டார்பாட்டம்…. என வரி மேல் வரி போட்டுத் தள்ளியதோடு நிறுத்தாமல் உழவர்கள் ஒரு பயிருக்கு ஊடாக இன்னொரு பயிரை வளர்த்தால்கூட அதற்கும் ஊடுபோக்கு என வரி போட்டு பரிபாலனம் செய்தவர்கள்தான் இந்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ பராக்கிரம ராஜ கெம்பீர மன்னர்கள்.

நிர்வாகமும் நீதியும் இப்படியிருக்க….. பெண்கள் நிலை எப்படி இருந்ததாம்? அதற்கும் இருக்கிறது ஆப்பு. எண்ணற்ற பெண்கள் பொட்டுக் கட்டுதல் என்கிற பெயரால் கோயில்களில் தேவரடியார்களாக ஆக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.

அது சரி…. கல்வி?

அதுவும் குலத்துக்கொரு நீதிதான். அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?

இதையெல்லாம் பாமரன் சொன்னால் தப்பென்று சொல்லலாம். ஆனால் பண்டிதர்கள் சொன்னால்? அதுவும் இவைகளை தமிழக அரசே வெளியிட்டால்? ஆம் தமிழக அரசே வெளியிட்டது.. இப்போதல்ல. 1976 இல். அதுவும் தி.மு.க. அரசு.

தி.மு.க.ஆட்சியில் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனமே “தமிழ் நில வரலாறு” என்கிற நூலை வெளியிட்டது அதன் பதிப்பாசிரியர் கோ.தங்கவேலு. சோழர் கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கு எப்பேர்ப்பட்ட பொல்லாத காலமாக விளங்கியது என்பதை அக்குவேறாக அலசியது அந்த நூல். பிற்பாடு தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இது ”பிரம்மதேய ஆலோசகர்” குழுவால் தடை செய்யப்பட்டது.

மன்னர் காலத்தில் ஏன் மார்க்சீயம் வரவில்லை? ராஜராஜ சோழன் ஏன் பின் நவீனத்துவம் பற்றிப் பேசவில்லை? என்பது போன்ற கேள்விகளல்ல நமது கேள்விகள்.

ஈழம் வென்றதும்….. கடாரம் சென்றதும்……. வெற்றிக்கொடி நாட்டியதும் மகிழத்தக்கதுதான் ஆனால்……. தனது குடிமக்களுக்குள்ளேயே ஏன் பாகுபாடு காட்டினான்? ஒரு பக்கம் சுகத்தையும்….. ஒரு பக்கம் சுமையையும் ஏற்றியது ஏன்? இந்தக் கேள்விகள் நிறைகளைப் பற்றி சிலாகிக்கும் வேளையிலும் நெஞ்சில் உறுத்தும் கேள்விகள் அல்லவா?.

சோழர்கள் என்றில்லை பல்லவ மன்னர்களும், நாயக்க மன்னர்களும் இன்னபிற இத்யாதி மன்னர்களும்தான் என்ன கிழித்தார்கள்?

நாம் மன்னர் காலத்தை விட்டு வெகு நூற்றாண்டு வந்தாயிற்று. அப்புறம் எதற்கு அரசு செலவில் விழா?

என்பதுதான் நமது வினா.

இது……

”கோயில்கள் கூடாதென்பதல்ல. கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை.”

என்று இன்றல்ல……. ஐம்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவருக்குத் தெரியாதா……..

சோழர்கள் காலத்தில் கோயில்கள் யாருடைய கூடாரங்களாக இருந்தன என்பது.?

32 thoughts on “ராஜ ராஜ சோழன் நான்….

  1. பாமரன் அவர்களே, வயதான காலத்தில் கோவில் திருவிழாக்களிலும், தான தருமச் செயல்களிலும்(இலவசங்கள்) ஈடுபட்டு; புண்ணியம் தேடும் ‘பெரியவரை’ நீங்கள் சீண்டலாமா ? இது அந்தப் ‘பராசக்தி’க்கே பொறுக்குமா ?
    அவர்தான், தனக்கும் தனது குடும்பத்துக்கும், அந்தக் குடும்பங்களின் குடும்பங்களுக்கும், பேரப் பூட்டக் குழந்தைகளுக்கும் ‘பொருள்’ சேர்த்து ஆயிற்று, தனக்கு ஏதாவது ‘அருள்’ சேர்க்கும் ஆசையால் இப்படி ‘கோயில்; மஞ்சள் சால்வை’ என முயன்று பார்க்கிறார். அதற்கும் உங்களைப் போன்றவர்கள் விமர்சனம் எழுப்பினால் அவர் என்னதான் செய்வதாம். போகட்டும் விடுங்கள். அரசியல் “அறம் செய்தாயிற்று, பொருள் சேர்த்தாயிற்று, குடும்ப விழா எடுத்து அரசவைக் கவிஞர்கள் புகழ்பாட ‘இன்பம்’ கண்டாயிற்று. இனி அடுத்தது ‘வள்ளுவன்’ சொல்லாமல் விட்ட ‘வீடு’தானே. அதற்காகப் பாடுபடும் பெரியவரை வையாதீர்கள். அது கிடைக்க வாழ்த்துங்கள்!

  2. இந்த மாதிரி மன்னனுங்களோட டிரவுசருங்களை எல்லாம் கழட்டணும். பிற்காலச் சோழர்களின் ஆட்சி இன்றைய இந்தியாவின் விஸ்த்ரிபுக் கனவுகளுக்கு இணையானது. இந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் அயோக்கித்தத்தால் தமிழன் சேரித்தமிழன், பச்சைத் தமிழன் என்று பிரிந்து கிடக்கிறான். ஈழத்தில் இவன் செய்த சேவைதான் சாதி. //// இவன் டிரவுசரை இன்னும் உருவ வேண்டும் பாமரன்.

  3. தலைவா, தஞ்சாவூரில கோவில்… தஞ்சாவூர் திருவாரூருக்கு பக்கத்துல… அதுனால தஞ்சைக்கு “இதயத்தில் மட்டும் இடம் கொடுக்க” மனமில்லாததால் … இந்த விழா ! இன்றைய ”முடி’சூடா” மன்னராட்சிக்கு பழைய மன்னராட்சி எவ்வளவோ தேவலாம் ! இலவசங்களை பிராமணர்களுக்கு மட்டுமே அன்று அளித்த தவறை இன்று “அனைவருக்கும்” அளித்து சரித்திரத்தவறை நிவர்த்திசெய்த எம் தலைவருக்கு ’கல/ழகக்கண்மணிகள்” நிச்சயம் தொடர்ந்து ஆதரவளிக்கவே செய்வார்கள்!

  4. அருமையான கட்டுரை. ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் ஆரியம் தன் மனம் போன போக்கில் வாழ அனுமதிக்கப்பட்டது. இன்றும் அது வீரியத்துடன் பிறரை நசுக்கி வாழ் சூத்திர அரசுகள் துணை புரிகின்றன. வரலாற்றை மறந்த சமுதாயங்கள் வாழ்விழக்கும் அபாயத்தை உணர வே்டும். சமூக நீதியை அடைந்தவர்கள் அடையதவர்களுக்கு எதிராக மாறி ஆரியத்திற்கு காவடி தூக்கி அலைகின்றனர்.

  5. Pingback: ராஜ ராஜ சோழன் நான்….

  6. கங்கை கடாரம் கொண்டான்கள் அக்கால பிராமண சமய பயமுறுத்தல்களுக்கு பயந்தனர் பணிந்தனர் என்பது உண்மை.

  7. உங்கள் கட்டுரையில் ராஜராஜனின் வீரதீரப் பராக்கிரம அக்கிரமங்களைப் படித்தவுடன், “நல்லவன், வல்லவன்…. நீயொரு ராஜராஜ சோழன்” என்று இக்காலப் புலவர்களான வைரமுத்து, பா.விஜய், விவேக் போன்றவர்கள் பாடி நமது தாத்தாவின் ஆட்சி ‘அரசனின் ஆட்சி’தான் என்று மறைமுகமாக குத்திக் காட்டியிருக்கிறார்களோ (வஞ்சப் புகழ்ச்சி) என்று சந்தேகம் வருகிறது எனக்கு…(சந்தேகம் தவறானதே என்றாலும்).

  8. baba ,
    would u go deep to deal with things.plz dont compare today situvation to that time.in sense view of preception is different.
    love & grace

  9. சோழர்களை நான் மிக நல்லவர்கள் என்று நினைத்திருந்தேன். என் கண்களை திறந்ததற்கு மிக்க நன்றி பாமரன் அய்யா.

  10. A very nice arti cle on Rajaraja chozhan by Pamaran. The dravidian politics is always mired in contradictions. They captured power in tamilnadu through their communication skills in tamil. Their political culture is essentially feudal and I am not surprised to note that the rationalist dravidian leader karunanidhi is lavishing praise on these feudal kings. In this connection, I wish to state that when poet Inquilab wrote a poem on the so-called great chozha king condemning him for subjugating women as sex objects in the form of Devaradiyar and the peom was included in university tamil syllabus, he asked for the ban and it was immediately done by the govt. So much for the progressive character of these dravadian political parties.
    K.S.Sundaram

  11. கருணாநிதி சோழன், ராஜ ராஜ சோழன் போன்ற பணக்கார மன்னர்களின் விளையாட்டு அது….இந்த பய புள்ள அது தெரியாம எழுதிப்புட்டுதே….

  12. ஒரு மண்ணின் வாழ்வியல் முறையை,கலாச்சாரத்தை அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு நகர்த்திச் செல்லும் திறன் கட்டிடங்கள்,ஓவியங்கள்,சிற்பங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே உண்டு.அந்த விதத்தில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தஞ்சை பெரிய கோயில் தமிழகத்தின் பெயர் சொல்லி நிற்கும்.அந்த விதத்தில் இன்னும் பல காலம் நின்று நிற்கும் தஞ்சை பெரிய கோயில்,மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,மாமல்லபுர சிற்பங்கள்.

    பிரமிடுகள் கூட இப்பொழுதும் மேற்கத்திய நாட்டவர்களின் தேடலாக இருக்கிறது.கூடவே கட்டிட காலத்து மக்களின் அவலங்களையும் கொண்டு வருகிறது.இறுதியில் வெல்வது மனித வளத்தின் திறமையே என்பதால் கலாச்சார சின்னங்கள் மட்டுமே பெயர் சொல்லும்.

  13. போட்டுத்தாக்குங்க தலைவா…இந்த ரரஜராஜனுக்குப் பின்னாடிதான் தமிழ் மன்னர்களுக்கும்,தமிழ் மாக்களுக்கும் அந்நியப் பெயரின் மீதான மோகம் வந்தது.இன்றும் நாம் தமிழ்ப் பெயர் வைங்கடா என்று கூவிக்கொண்டிருப்பதற்கு இந்த ராஜராஜந்தான் காரணம்.

  14. கடந்த சில மாதங்களில் வந்த மிகச் சிறந்த கட்டுரை.
    வாழ்த்துக்கள் நன்றி.

  15. A VERY DIFFERENT THOUGHT.
    THERE ARE VERY FEW TO THINK AS PAMARAN
    LET UR WRITINGS CONTINUE TO ENLIGHTEN THE MASS
    MARVELLOUS

  16. ”கோயில்கள் கூடாதென்பதல்ல. கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை.”

    என்று இன்றல்ல……. ஐம்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவருக்குத் தெரியாதா……..”

    சரியான கட்டுரை ,இவர்கள் ஒட்டு வாங்குவதற்காக யாருக்கு வேண்டுமானாலும் விழா எடுப்பார்கள் .”கொள்கையாவது மண்ணாவது ”
    வாழ்த்துகள் தோழரே

  17. கே.கே. பிள்ளையை மட்டும் படித்துவிட்டு எழுதுகிறீர்கள். பல்லவர்கள் பார்ப்பனர்களுக்கு அளித்த அதிகாரத்தை குறைக்கவே ராசராசன் முயன்றான். ஸ்டெய்ன், நீலகண்ட சாஸ்திரி, நொபுரு கரசிமா போன்ற ஆய்விகளையும் கல்வெட்டுகளையும் படித்துவிட்டு எழுதவும். சோழர்களின் வரி விதிப்பு இன்றை அரசைவிடச் சிறந்ததாகவே இருந்தது. சற்று ஆழமாக படியுங்கள் பாமரன்.

  18. இன்னாப்பா பாமரா… சும்மா கம்னு கெடெக்கெறத்த விட்டுப்புட்டு எதையும் எப்பயுமே கிழிச்சிக் கொட்டிக்கிறே?

    கய்தே ஒனக்கு மற கழண்ணு போய்டீச்சா? ஆ அஸ்கு புஸ்கு…

    அப்ப்டீன்னு இதப் படிச்சுனுக்கிட்டு ஒன்னெய அந்தக் கெழம் கறுணாணிதி திட்டினாக்கினும் செரியா?

  19. They also started the habit of going for fair skinned ladies from North and lost every thing in the process. That is why Tamil Cinema is full of heroines from the North.
    Easwaran

  20. கலக்கறீங்க எப்போதும் போல உங்க மேலோட்டமான அரசியல் நையாண்டித்தனம் ரசிக்கும் படியாய் இருந்தது.. சரி பாமரன் எல்லாம் புத்திசாலிதனமா எழுதிட்டா கருணாநிதி எல்லாம் சி.எம் ஆக முடியுமா? வாழ்க ஜனநாயகம்.. அவருக்கு தெரிந்ததை அவர் செய்கிறார்..உங்களுக்கு தெரிஞ்சதை நீங்க உளர்றீங்க.. புரட்சி ஓங்குக..

  21. மன்னராட்சியில் பல கேடுகள் இருப்பது எல்லாரும் அறிந்ததே. மக்களாட்சி, பொதுவுடைமை ஆட்சிகள் மட்டும் என்ன வாழ்கின்றனவாம்? குணம், குறை இவற்றின் (பிறரொடு) ஒப்பீட்டு அளவே சரியான கோலாகும்.
    கொங்கு நாட்டில் வேலை வெட்டி இல்லாதவன் வெட்டிவேலை என்ற வழக்குகள் உள்ளன. வேலை என்பது கூலிக்குப் பாடுபடுவதும் வெட்டி என்பது உணவுக்காகப் பாடுபடுதல் என்றும் பொருள் கொள்ளலாமா? தஞ்சையில் ஆறு மாதப் பயிரிடுங் காலத்தில் முதல் ஒரு மாதத்திற்கும் முடிவில் ஒரு மாததிற்கும்தான் வேலை உண்டு. மற்ற காலஙளில் வெட்டி வேலைதான் உன்டு. அதாவது பொருளாதார நோக்கில் தேவையற்ற வேலைகள் தரப்பட்டால்தான் உண்டு. இதனை அரசு செய்யும் போது அதுவும் வரிச்சுமையை அதிகப்படுத்துமல்லவா? இந்த வேலையைப் பெறுவதற்கே போட்டி, பூசல் என்றால் அதிலிருந்து தெரிவது என்ன?
    ஊடுபயிர் வரி ஏன்? ஆமணக்கு மஞ்சளில் ஊடு பயிரா, மஞ்சளில் ஆமணக்கு ஊடு பயிரா? முடிவு கையூட்டின் கையிலா? பூனையை ஆயிரம் தங்கக் காசுக்கும், யானையை ஒரு காசுக்கும் விற்ற தெனாலி ராமன் கதையை, அதற்குப் பல நூற்றாணடுகளுக்கு முன்பே அறிந்திருந்தது தவறா? தகுதியா?
    நெல்லில் ஊடுபயிரும், தஞ்சையில் (வண்ணான்) பாறையும் எங்கிருந்து வந்தன? அதற்கு உரிமை உடையவர்களை அடையாளப்படுத்தவும் , பாறையை உடைக்காமல், மாடு, வீடு கட்டாமல் காக்க, அதன் குழியில் (பாழி) சேரும் மழை நீர் அவர்களுக்கே பயன்பட இந்த அடையாளம் தேவையே. இதே காரணத்திற்காக நிலவரி நீக்கவும் எதிர்ப்பு தற்காலத்திலும் தெரிவிக்கப்பட்டதே?
    சோழர்கள் பல்லவர்களோடு போட்டி போட வேண்டி இருந்தது. பல்லவர்கள் காஞ்சியில் வடமொழிப் பல்கலைக்கழகம் நிறுவியும், அரசர்களே வடமொழி நூல்கள் எழுதியும் வந்தார்கள். ஒன்றாக நல்லது கொல்லாமை என்ற கருத்தும் வலுவோடு இருந்தது. சைவத்தை ஆதரித்தும் (வெட்டியும்), ஐயர்களை அர்ச்சகர்களாக ஆக்கியும் (ஒட்டியும்) மக்களிடம் சோழர்கள் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொண்டனர். நிறுவணங்கள் தொடக்கத்தில் அறத்தோடு செயல் படுகின்றன. செல்வமும், செல்வாக்கும் மிகும்போது அவை கொடியவர்களின் கூடாரமாய்ச் சீரழிகின்றன. அதனால்தான் காந்தி அடிகள் தொண்டு நிறுவனங்கள் அப்போதைக்குத் தரப்படும் அன்பளிப்புகளைக் கொண்டு நடை பெற வேண்டும், நிரந்தரச் சொத்துக்கள் கூடாது என்றார். இன்றைய நிலையை வைத்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையை அறிய முடியாது. அரசன் ஆணை செல்லும்,செல்லாது என்று முடிவு செய்வதும் அரசன்தானே? படைதானே? பிரான்சு நாட்டில் பத்து சதவீத நிலங்கள் மத போதகர்களிடம் இருந்தன என்றும் , அவர்கள்மட்டுமே முதல் தரக் குடிமக்களாகக் கருதப்பட்டு எல்லா வரி விலக்குகளும் பெற்றனர் என்பதும் வரலாறு
    ராஜராஜன் இல்லாவிட்டால், காஞ்சிக்கு வடக்கேயுள்ள பகுதிகளைத் தமிழ் இழந்திருக்கலாம். அதை விரும்புவர்கள் , “அரசே கூறுவது போல்” என்று நீங்கள் குறிப்பிடுவது போல், பாமரனே கூறுவதுபோல் என்று உங்களை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. அவர்கள் இதை அறிவார்கள். தமிழ் ஆர்வலர்கள் படிக்கும் வலையில் வெளியிட்டு அதற்கன பதிலை அனைவரும் அறிந்து கொள்ள வழி செய்துள்ளீர்கள். இன்னும் விரிவான விளக்கம், தரவுகளோடு வேறொரு வலையில் வேரொறுவரால் பதிவாகியுள்ளது. மறு பார்வைக்குக் கிடைக்கவில்லை
    சோழத் தூதுவர்கள் ஸங் (சீன) அரசவைக்கு வணிக விரிவாக்கம் செய்யப் போயிருக்கிறார்கள், அதற்காக சீன அரசுக்குத் திறை ( காப்புக் கட்டனம்?) செலுத்தியிருக்கிறார்கள் , இந்தோனேசியா வரை இருந்த கடல் வணிகத்தை சீனாவுடன் நேரடி வணிகமாக விரிவு படுத்த ஒரு நூற்றாண்டுப் போரில் ஸ்ரீ விஜயப் (விஜயநகரம் அல்ல) பேரருசுடன் சண்டையிட்டார்கள் என்பவற்றை திரு செந்தில்நாதன் தன் நூலில் ( டிராகன், ஆழி வெளியீடு, பக் 39) பதிவு செய்துள்ளார். ஆதாரம் தரவில்லை. இது நம் நெஞ்சை நிமிர்த்தவில்லையா?
    முறையாகச் செலவு செய்யப் பட்டால் என் வரியில் ஒரு பகுதியை இந்த விழாவிற்கு ஒதுக்க நன் உடன்படுகிறேன். நன்றி.

  22. I NEVER ACCEPT YOUR COMMENT MY DEAR PAMARAN. RAJARAJA CHOLAN IS THE ONE OF THE GREATEST EMPEROR FROM DHRAVIDARGAL. DONT SPREAD UN ETICAL MESSAGE TO OUR PEOPLES.

  23. என் மறியாதைக்கு உரியவராக நேற்று வரை இருந்த பாமரனுக்கு,
    நீங்கள் சோழ வரலாறு இன்னும் முழுமையாகப் படித்து விட்டு எழுதுவது தான் சரி. அறைகுறையாகப் படித்து விட்டு வந்து இது போல் உலரிக்கொட்டுவது அல்லது எழுதுவது உங்களைப் போன்ற எழுத்தாளர்கலுக்கு அழகல்ல.
    பெறிய கோயிலின் அடுக்கு 13 அல்ல, 15 அடுக்கு ஆகும். மேலும் நீங்கள் கே.கே.பிள்ளை என்று குறிப்பிட்ட சுரேஷ்.கே.பிள்ளையையும், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ”லு” போன்றவர்கள் எழுதிய வஞ்சக வரலாற்றையும் படித்துவிட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்.
    ராஜராஜன் சோழன் தன்னுடைய பட்டப் பெயரான ராஜராஜனை எத்துனை பெயருக்கு வழங்கியிருக்கிறான் தெரியுமா? தலைமை பெருந்தச்சன் குஞ்சர மல்லனுக்கும், தலைமை சேனாதிபதிக்கும்,ஏன் மருத்துவருக்கும் ,சிறப்பு மிகு சலவைத் தொழிலாளி வரை தன் பட்டப் பெயரை சூட்டி மழ்ந்தனன். என்பது உங்களைப் பேன்ற ஒற்றைப் புத்தகத்தைப் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரும் விதண்டாவாதிகளால் புரிந்து கொள்ள முடியாது.
    நீங்கள் குடவாசல் பாலசுப்பிரமணியன் எழுதிய ”ராஜராசேச்சுவரம்” என்ற நூலைப் படித்து விட்டு பிறகு எனக்குப் பதில் எழுதுங்கள்.

  24. அற்புதமான பகிர்வு. யோசிக்கத்தான் வைக்கின்றீர்கள்.

Leave a reply to Osai Chella Cancel reply