புத்தர் சிரித்தார்…..

ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மற்றொரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது  கூடங்குள மக்களது வாழ்க்கையில். 90 களில் இம்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த அநேகம் பேர் ஓசையின்றி காணாமல் போனார்கள். (அதில் நானும் ஒருவன்).

தமிழ்ச் சமூகத்திற்குத்தான் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றனவே…. சமூக நீதி, சாதீயம், ஈழம் என…… அதில் ஏதோ ஒன்றில் ஒன்றிப்போயிருக்கலாம் நம்மவர்கள். அவற்றைப் போலவே இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது கூடன்குள மக்களது அவலமும்.

தலித் மக்கள் மீதான பரமக்குடி படுகொலைகள் எப்படி இன்னமும் பலரது கேளாச் செவிகளை எட்டவில்லையோ…. அப்படி கூடங்குள மக்களது கூக்குரலும் தமிழகத்தின் பிற பகுதி மக்களது மனதை உலுக்கவில்லை.

1986-1987 வாக்கில் ”வேண்டாம் மரணதண்டனை” என தமிழகம் முழுக்க கருத்தரங்கம்…. கையெழுத்து இயக்கம்….. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறைகளில் நுழைந்து பரப்புரைகள்….. என நமது தோழர்கள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்(சர்வதேச பொது மன்னிப்பு இயக்கம்) வாயிலாக செயல்பட்டபோது ஏறிட்டும் பார்க்கவில்லை எண்ணற்றோர். 90 களின் பிற்பகுதியில் நம்மவர்களுக்கே அத்தண்டனை என்றபோது எழுந்த எழுச்சியில் எம் கரங்களையும் அதனோடு இணைத்துக் கொண்டோம்.

“புத்தர் சிரித்தார்” நூலினை 1990 ஆம் ஆண்டு வெளியிட்டபோது அதைக் கண்டுகொண்ட பத்திரிக்கைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று : கோவை ஞானியின் “நிகழ்”. மற்றொன்று : ”கணையாழி”.

திருட்டு வி.சி.டி.கூட ப்ளாப் ஆகிப் போன தமிழ் சினிமாவைப் போல எவராலும் கண்டு கொள்ளப்படாத அந்த “புத்தர் சிரித்தார்” இனி ஒவ்வொரு திங்களும், வியாழனும்  இணையத்தில் உங்களை வலம் வரும்.

(அதுக்கு நாங்களாடா கெடச்சோம்? எனப் புலம்பிப் பயனில்லை. நாயோட படுத்தா உண்ணியோடதான எந்திரிக்கணும்?  

”எல்லாம் வல்ல” நம் அணு விஞ்ஞானிகள் உம்மை காப்பாற்றக் கடவார்களாக!.)

இனி…..

 

வசர அவசரமாக வந்தார் அந்த நண்பர்.

வந்த வேகம் அவரது மூச்சிறைப்பில் தெரிந்தது.

”உங்களுக்குத் தெரியுமா? வி.பி.சிந்தன் இறந்து விட்டாராம். பேப்பரில் போட்டிருக்கு” என்றார்.

அப்படியா? எப்படி? என்றேன்.

சொன்னார். அத்தோடு நில்லாமல்

”பாத்தீங்களா எவ்வளவு நல்ல சாவுன்னு?”

புரியாமல் நிமிர்ந்து பார்த்தேன். சொன்னார்.

“இங்கிருந்து போய் மாஸ்கோவுல செத்திருக்கார். நினைக்கவே சிலிர்க்கிறது” என்றார்.

மாஸ்கோவில் சாவதற்கும் சிலிர்ப்பதற்கும் சம்பந்தம் என்ன இருக்கிறது என்றேன்.

கேட்டதுதான் தாமதம்.

“புரியாம பேசாதீங்க தோழர். ஒவ்வொரு தோழரும் சாவைக் கண்டு அஞ்சல. ஆனா அப்படிப்போற உயிர் சோவியத் யூனியன் மடியில போற மாதிரி இருந்தா எவ்வளவு சந்தோஷத்தோட போகும்….. இது புரியாம….”

உண்மையில் எனக்குப் புரியவில்லைதான்.

ஆனால் இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எப்படியோ சோவியத் யூனியனுக்கே எட்டியிருக்கும் போலிருக்கிறது.

உண்மையிலேயே உலகெங்கும் உள்ள மக்களின்

உள்ளத் துடிப்பினை சோவியத் யூனியன்

உணர்ந்திருந்ததனை உணரவில்லை நான்.

இப்படி ஒவ்வொருவரும் சோவியத் யூனியனுக்கே வந்து “சொர்க்க லோகம்” போக வேண்டும் என ஆசைப்பட்டால் சோவியத் யூனியனே சுடுகாடாகிவிடுமே எனும் அச்சத்தில் ஆலோசனைகள் நடத்தி அறிஞர்களுடன் அளவளாவி அரிய வழியினைக் கண்டு பிடித்தனர் அணுகுண்டு அறிஞர்கள்.

அதுதான் :

உலகெங்கும் உள்ள மக்களின்

உன்னத வேண்டுகோளுக்கு இணங்கும்

அதே நேரத்தில் அவர்கள்

சோவியத் யூனியனுக்கு வந்து சிரமப்பட்டுச் சாவதைவிட            

மிக எளிய முறையில் அங்கே

பழைய இரும்புக் கடைகளில் போட வேண்டிய

அணு உலைகளை எல்லாம் ஆங்காங்கே

உள்ள நாடுகளுக்கு அனுப்பி வைத்தால்

“சமத்துவமான சாவு” அனைத்து மக்களுக்கும்

பரவலாகப் போய்ச் சேரும் என முடிவு செய்ததன்

விளைவே :

“கூடங்குளத்திலும் அணு உலைகள்.”

Advertisements

8 thoughts on “புத்தர் சிரித்தார்…..

 1. புத்தர் சிரித்தார்…புத்தகத்தின் உள்ளடக்க பிரச்சனை ..தீர்வாகாமல் தொடர்வது துயரமே…இருந்தாலும் தங்கள் எழுத்தை மீண்டும் ..அதுவும் இணையத்தில் படிப்பது மகிழ்ச்சியே….காலத்தின் தேவையான பதிவு…இடையில்லாமல் தொடர வாழ்த்துகள்….

 2. “கூடங்குளத்திலும் அணு உலைகள்.”
  இப்பொழுது சோவியத் யூனியன் இல்லை எனவே ரசியா மட்டுமே உள்ளது.தவறாக குறிப்பிடவேண்டாம்.

  • இனிய புது நிலா….

   “புத்தர் சிரித்தார்” நூலினை 1990 ஆம் ஆண்டு வெளியிட்டபோது….”

   “திருட்டு வி.சி.டி.கூட ப்ளாப் ஆகிப் போன தமிழ் சினிமாவைப் போல எவராலும் கண்டு கொள்ளப்படாத அந்த “புத்தர் சிரித்தார்” இனி….” என்கிற வரிகளை கவனிக்கவில்லை போலும்.

   இருப்பினும் தங்களைப் போலவே வேறு யாரேனும் இப்படிக் கருதி விட வாய்ப்பு உள்ளது.

   இப்போது நாம் இவ்வலையில் வெளியிட்டு வருவது சோவியத் யூனியனது சிதைவுக்கு முன்னர் வெளிவந்த(1990 தை) நூலின் பக்கங்களைத்தான்.

   தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

   தோழமையுடன்,
   பாமரன்

 3. என் இனிய பாமரனுக்கு,
  மீள்பதிவுக்கு நன்றி
  கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி 15,000 பேர் உண்ணாவிரதம்-போராட்டம்
  100 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கையில்
  கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று இன்னமும் நம்ப வைக்க துடித்துக் கொண்டிருக்கிறார்களே
  ஆட்சியாளர்களும்,விஞ்ஞானிகளும் என்ன செய்வது………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s