வாலிப வயோதிக அன்பர்களே…..
இல்லறக் கடமைகள்….
அலுவலகக் கடமைகள்…..
அந்தரங்கக் கடமைகள்….
அனைத்தும் முடிந்த பிற்பாடு கூட நேரம் ஏதாவது மிச்சம் இருப்பின்…. சன்நியூஸ் தொலைக்காட்சியில் நான் பங்கேற்ற இந்நிகழ்ச்சியைப் பார்க்கக்கடவீர்களாக :
வாலிப வயோதிக அன்பர்களே…..
இல்லறக் கடமைகள்….
அலுவலகக் கடமைகள்…..
அந்தரங்கக் கடமைகள்….
அனைத்தும் முடிந்த பிற்பாடு கூட நேரம் ஏதாவது மிச்சம் இருப்பின்…. சன்நியூஸ் தொலைக்காட்சியில் நான் பங்கேற்ற இந்நிகழ்ச்சியைப் பார்க்கக்கடவீர்களாக :
எத்தரையும் பெகுமானப்பட்ட தமிழ் நாட்டுட முக்ய மந்திரி கலைஞர் கருணாநிதிக்கு….
அநேக கோடி நமஸ்காரங்கள். நிங்கள் கேரளத்தின்டே ஏட்டன்மாருட ஓப்ளிகேஷனுக்கு செவிஓர்த்து ஓணம் பண்டிகைக்கு லீவ் அறீக்கிச்சதுனு வளர நன்னியானு.
மதராஸ் மாகாணத்தில் இரின்னு ஏட்டன்மார் எனிக்கும் நினக்கும் ஆகாதெண்டு பறைஞ்சு பிச்சுக் கொண்டு போயெங்கிலும்… பட்ஷே நிங்கள் பழைய ஓர்மைதான் பேராண்டிங்கிற கதையாய் இப்போள் சென்னைக்கும் ஓணத்தினு லீவு பறைஞ்சது விஜாரிச்சு புல்லரிச்சுப் போயி.
முல்லைப் பெரியாறு அணைக்கெட்டிலு வெள்ளம் விடுல்லான்னு வாஷி பிடிச்சாலும் செரி…
தமிழ்நாட்டு பாண்டிமாருக்கு நியாயமாயிட்டு கிட்டானுள்ள சேலம் ரெயில்வே டிவிஷன் கிட்டாம் பாடில்லான்னு ஒருபாடு அகங்காரம் காணிச்சாலும் செரி…
ஓணத்தினு கோவை, நீலகிரி, கன்யாகுமரி, சென்னைன்னு லீவ் அறிவிச்சதின்னு தமிழன்மாருடைய இளிச்சவாயத் தனத்த விஜாரிச்சா எந்து பறையனும்னே அறியாம்பட்டில்லா.
பொங்கலுக்கு கேரளாவில் லீவ் விடுன்னோ இல்லியோ… நம்மள் ஓணத்தினு லீவ் விட்டு ஓருமப்பாட்டயும்… எருமப்பாட்டயும் காட்டியாகணும் அல்லே…?
நல்ல காலம்
தமிழ்நாட்டுப் பாண்டிமார் ஒரு கையில் குடையும் மற்றொரு கையில மலையாள மனோரமேயும்தான் பிடிச்சு நடக்கணும்… தமிழ்நாட்டு ஸ்த்ரீகள் முண்டு கெட்டிக் கொண்டுதன்னே இனி நடக்கணும்னு ஓடர் போடாம விட்டீங்களே அத்தரமாத்தரம் வளர சந்தோஷம்.
அநேக நன்னிகளுடன்,
இளிச்சவாயப் பாமரன்.
(நன்றி : ”குமுதம்” வார இதழ் – 29.8.2007)
எங்கியோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா…. என்கிற கதையாய் எவரெவர்தான் திராவிட இயக்கத்தை விமர்சிப்பது என்பதற்கு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இந்த உலகில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது எதுவுமேயில்லை என்பது வேறு விசயம். ஆனால் திராவிடர் இயக்கத்தைத் தோலுரித்து தொங்கவிடுகிறேன் பார் என்று களத்தில் குதிக்கும் பல ஞானசூன்யங்களுக்கு திராவிடர் இயக்கம் என்பது எது? திராவிட கட்சி என்பது எது? என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாததுதான் இந்த நூற்றாண்டின் சூப்பர் நகைச்சுவை.
திராவிடர் இயக்கத்திற்கும் திராவிட கட்சிகளுக்கும் இடையே
பண்பாட்டுத் தளத்தில்….
செயல்பாட்டுத்தளத்தில்…..
அணுகுமுறைகளில்….
என எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு. சுற்றிவளைக்காமல் சுருக்கமாகச் சொன்னால்….
மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள் நண்பர்களே….http://andhimazhai.com/news/view/sothappal-pakkam-2013.html