மிக நீண்ட நெடிய காலத்திற்குப் பிற்பாடு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டிருக்கிறது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில்.பிப்ரவரி 18 ல் வழங்கப்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம்.
மரணத்தின் நிழல் துரத்திக் கொண்டிருந்த மூவரும் தண்டனை குறைக்கப்பட்டு தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது.
மனித உரிமை வரலாற்றில் இத்தீர்ப்பு ஒரு மைல் கல். சந்தேகமேயில்லை. ஆனால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.
அளவிடற்கரிய கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் நாம் பொறுமையோடும் பொறுப்புணர்ச்சியோடும் நடந்து கொள்ள வேண்டிய வேளை இது. ஏறக்குறைய இருபத்தி மூன்றாண்டுகளுக்குப் பிற்பாடு தென்பட்டிருக்கிற இந்த நம்பிக்கை ஒளிக்கீற்று எப்படிச் சாத்தியமாயிற்று என்பதும்….
இது யார் யாரால் எல்லாம் சாத்தியமாகி இருக்கிறது என்பதும்… கடந்த கால வரலாற்றை அசைபோட்டுப் பார்ப்பதும் அவசியம்தான். ஆனால்அந்த அலசலும் நமக்குள் நாமே ஏற்படுத்திக் கொள்கிற விரிசலாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் அதிமுக்கியமானது.
அந்தக் காலகட்டத்தில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாதா?…
இவர் அப்போது எங்கே போயிருந்தார் என்பது புரியாதா? என்று ஒருவர் மற்றவர் மீது புழுதி வாரித்
தூற்றாமல் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.