சும்மா இருங்க தோழரே….. இதெல்லாம் ஒரு ’யுத்த தந்திரம்’……..

 

(முந்தைய பதிவை காண….)

திடீர்னு ஒரு கை தோள் மேல விழுந்ததும் ‘அய்யோ நானில்லை…. எல்லாம் நம்ம மார்த்தாண்டன்தான்’…..ன்னு கத்தீட்டேன்.

”பயப்படாதீங்க தோழரே! யாரு கூட என்ன பேசறதுன்னு கெடையாதா…. இந்தத் ‘தந்தரோபாயம்’ எல்லாம் தெரியாம கண்டபக்கம் கண்டதெல்லாம் பேசக்கூடாது. வாங்க… உங்க மார்த்தாண்டனை எங்க ஆபீசுலதான் படுக்க வெச்சுருக்கோம்” ன்னாரு ’தோழரு’.

அய்யோ….. மறுபடியும் “ஆபீசா”…. நான் வரமாட்டேன்னு அலற….

“புரியாமப் பேசாதீங்க தோழரே….! இது அந்த ‘ஆபீசு’ மாதிரி இல்ல…. இது எங்களோட ‘மத சார்பற்ற கூட்டணி’ ஆபீசு…. CPI_JJவாங்க….”ன்னார்.

இதென்னடாது…. ஊருக்கெல்லாம் சகுனஞ் சொன்ன பல்லி கழுநீர்ப் பானைல உளுந்து உசுர உட்ட கதையாப் போச்சே நம்ம கதைன்னு நெனச்சுக்கிட்டே கூட நடந்தேன்.

‘ஆபீசுக்குள்ள’ நம்ம மார்த்தாண்டனுக்கு பிளாஸ்த்திரி போட்டு…. கைக்கு தொட்டல் கட்டி படுக்க வெச்சிருந்துச்சு. என்னப் பார்த்ததுமே எந்திரிச்சு ஏதோ பேச ஆரம்பிச்சான்.

“மனித உரிமை….! இப்ப நீ எதையும் பேச வேண்டாம். நீ பேசித்தான் இவ்வளவு சிக்கலும்….. எதுவானாலும் இனி நான் பேசிக்கிறேன்…. நீ சும்மா படு…ன்னுட்டு ‘கட்சி ஆபீச’ லேசா நோட்டம் உட்டேன்.

காரல் மார்க்சு….

லெனினு….

மாவோ….

சேகுவேரா….

ஜெயலலிதா….ன்னு எல்லாம் புரட்சித் தலைவர்களோட படங்க.

“அவுங்க கூட என்ன பிரச்சனை தோழரே…..? எதுனால உங்களப் போட்டு இப்படி அடிச்சிருக்காங்க…..?”ன்னு கேட்டாரு ‘தோழரு’.
ஓட்டுப்போட மாட்டோம்…..ன்னு சொன்னோம்…. அதான் இப்படி….ன்னு சொல்லச் சொல்ல……

“இது நியாயமா?” ன்னு ஒரு குரல்…..

திரும்பிப் பாத்தா எவனோ ஒரு கேமராவப் புடுச்சுகிட்டு நிக்கறான்.

“பயப்படாதீங்க தோழரே….. இவுரு நம்ம தோழமைக் கட்சியோட டீ.வீ.க்காரரு…. தெருவுல போற ஒருத்தன் தும்முனாக்கூட விடமாட்டாரு. அத அப்படியே லபுக்குன்னு படம் புடுச்சுட்டு வந்து ‘கருணாநிதியின் அராஜகம் பாரீர்’ன்னு அம்பலப்படுத்தீருவாரு.”

ஏனுங்க…. அப்ப….. மகாமகத்துல இருந்து மண்ணென்னை மகம் வரைக்கும் அந்த மகராசியால படாதபாடு பட்டமே அது jayalalitha_vajpayee_20110321.jpgமட்டும் நியாயமுங்களா….?ன்னு நான் பேசப் பேச….. பென்ச்சுல இருந்த நம்ம ‘மனித உரிமை’ எந்திருச்சு ஏதோ சைகை காட்டறான்…. அதெல்லாம் நமக்கு வெளங்குனாத்தானே….? நம்முளுக்குத்தான் நாக்குல நர்த்தனம் ஆடுதே சனி.

”ச்சு….ச்சு…. சும்மா இருங்க தோழரே….. இதெல்லாம் ஒரு ’யுத்த தந்திரம்’தான்…. அமைதி….. அமைதீ…..”ங்குறார் ‘தோழர். கேமரா வெச்சிருந்தவன் திரு திருன்னு முழிக்கிறான்.

“சரி…. அவுங்குளுக்கு ஓட்டுப் போட மாட்டோம்ன்னு சொன்னீங்க சரி…. அப்புறம் எப்ப உங்கள அடிச்சாங்க….? நீங்க ’மதசார்பற்ற கூட்டணிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்….’ன்னு சொன்ன பிறகா?”ன்னு கேட்டார் ’தோழர்’.

இதென்ன தோழரே புது வம்பு…..? நாங்க அவுங்குளுக்கும் இல்ல…. உங்குளுக்கும் இல்ல…… யாருக்கும் போடப் போறதில்லைன்னுதானே சொன்னோம்…..ன்னேன்.

அதக் கேட்டதும் தோழரோட முகமே மாறீடுச்சு.

‘இது நியாயமா?’ப் பார்ட்டி தலைல அடிச்சுக்கிட்டே… கேமராவ ஆப் பண்ணிட்டு போயி ஒரு ஓரமா உக்காந்துகிச்சு.

“யாருக்கும் போட மாட்டீங்க. சரி… அப்படீன்னா நீங்க ML ஆளுங்களா…?” ன்னு கேட்டாரு ‘தோழரு’.

அதெல்லாம படிக்கிறதுக்கு நம்முளுக்கு ஏதுங்க வசதி? நான் பி.எல்.லும் இல்ல… எம்.எல்.லும் இல்ல… வெறும் எட்டாங்கிளாஸ் பெயிலூ….ன்னேன்.

”யோவ்….! அதில்லையா… நான் கேட்டது…… நீங்க மார்க்ஸிட் லெனினிஸ்ட் கட்சிக்காரங்களா? அதாவது…. நீங்க
நக்சலைட்டா?ன்னு கேட்டேன்…”ன்னாரு.

நான் வெறும் டியூப்லைட்டுங்க தோழரே. நீங்க பேசற பெரிய பெரிய விசயமெல்லாம் எதுவும் தெரியாது… உங்கள மாதிரி போயஸ் அரண்மனைக்கும்….. கோபாலபுரத்துக்கும்…. மாறி மாறி காவடி எடுத்துட்டு ‘வர்க்கப்புரட்சி’……., ‘சொர்கப்புரட்சி’……ன்னெல்லாம் பேச நம்முளுக்கு வராது. ஐக்கிய முன்னணி ஆட்சியப்ப….. இதே லல்லு பிரசாத் மேல வெறும் குற்றச்சாட்டு வெச்சப்பவே நீங்க என்ன குதி குதிச்சீங்க…… இப்ப என்னடான்னா ஜெ. குற்றவாளீன்னு தனிக்கோர்ட்டுல நிரூபணமே ஆனப்புறமும் இப்படி மௌன விரதம் இருக்கீங்களே. இது நியாயமா…”ன்னேன்.

“தோழரே….! கொஞ்சம் அடக்கிப் பேசுங்க. மொதல்ல நாம பாக்க வேண்டீது ஊழலா? மதவாதமா?ன்னா… எங்களப் Jayalalitha,A.B.Bardhan,Prakash Karatபொறுத்த வரைக்கும் மதவாதம்தான்”ங்கிறாரு தோழரு.

 

அதாவது சுருக்கமாச் சொன்னா…..

கழுதை போடற விட்டைல

முன் விட்டை நல்லதா…….

இல்ல பின் விட்டை நல்லதா…… ங்கிற மாதிரி இருக்கு நீங்க பேசறது. சோத்துக்கே லாட்டரி அடிக்குற மக்களுக்கு இந்த ரெண்டுமே எமன்தான்……ன்னு சொல்லீட்டு பெருமிதமா மார்த்தாண்டனப் பாக்கறேன்……

பகீர்ன்னு ஆயிடுச்சு.

அவன் படுத்திருந்த பென்ச்சு காலியாக் கெடக்குது.

‘நெலம’ தெரிஞ்சு அவன் ஏற்கனவே கம்பி நீட்டீட்டான்னு அப்பறந்தான் புரியுது.

அப்புறம் என்ன.……..

”வழக்கம் போல”  ‘பொற்கால ஆட்சிக்காரங்க’ வழியிலேயே ஒருத்தன் நான் பேசப் பேச… “இது நியாயமா?”ன்னு கேட்டுகிட்டே போட்டான் ஒரு போடு மண்டைல……

“புரட்சி தலைவி வாழ்க’ன்னு சொல்றா”ன்னு சொல்லி இன்னொருத்தன் முட்டியப் பார்த்து போட்டான் ஒரு போடு.

“ஐயோ தோழரே..…! காப்பாத்துங்க”ன்னு சொல்லிக் கதறக் கதற…..

“நீ ஒரு நவீன வலதுசாரி”ன்னு சொல்லிகிட்டே ‘தோழர்’ உட்டாரு ஒரு குத்து மூஞ்சில……

கண்ணு லேசா சொருகறமாதிரி இருட்டிகிட்டு வந்துச்சு.

அதுக்கப்பறம் என்ன நடந்துச்சு…..? ஏது நடந்துச்சு…..? ஒரு எழவும்  தெரியல…….

vadi

(இதன் கிளைமேக்ஸ்….. செவ்வாய் கிழமையன்று……)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s